மனசுக்குள் நீ – பாகம் 34

“ ஆமாம் ரஞ்சனா,, அனிதாவுக்கு அவர்தான் இனிமேல் அப்பா, நீ அவரை புருஷனா ஏத்துக்கனும்,, என் வீட்டுக்கு அனிதாவோட அவர் மனைவியா, எனக்கு தங்கையா வரனும்,, இது நான் எடுத்த முடிவு ரஞ்சனா,, நீ மறுக்கக்கூடாது,, அவருக்கும் உன்னை பிடிக்குது,,

என் அளவுக்கு உன்னையும் நேசிக்கிறார்,, ஆனா அதை வெளியே சொல்ல பயப்படுறார்,, இப்ப மட்டும் இல்ல நான் இறந்த பிறகுகூட அவர் அதை வெளியே சொல்லமாட்டார்,, ஏன்னா அவருக்கு எனக்கு துரோகம் செய்றதா நெனைப்பு,, இது எப்படி எனக்கு துரோகம் ஆகும் ரஞ்சனா? இனிமேல் என்னால படுக்கையறையில் அவருடன் இணைய முடியாது,,



பூஜையறையில் போட்டோவில் இருந்து ஆசிர்வதிக்க மட்டும்தான் முடியும்னு தெளிவா தெரிஞ்சுபோச்சு,, இனிமேலும் அவர் எனக்குத்தான்னு சொல்லுமளவுக்கு நான் சுயநலவாதி இல்ல ரஞ்சனா,, என்னைப்பொருத்தவரை எனக்கு பிறகு நிச்சயமா அவர் வாழ்க்கையில் ஒரு பெண் வேனும், அது நீயாக இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம்,, இந்த இரண்டு வருஷத்தில் அவரை ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டு இருப்ப,, அவர் ஒரு குழந்தை மாதிரி ரஞ்சனா,,

பிசினஸில் பெரிய அளவில் ஜெயிச்சிருந்தாலும், சொந்த வாழ்க்கையில் தனக்கு என்ன தேவையின்னு அவருக்கே சொல்லத்தெரியாது, எதை எப்படி முடிவு பண்றதுன்னு குழம்பி தவிப்பாரு,, என்னோட யோசனைகள் இல்லாம அவரால எதுவுமே செய்யமுடியாது ரஞ்சனா,, அப்படிப்பட்டவர் இனிமேல் எப்படியிருப்பார்னு கொஞ்சம் யோசிச்சு பார் ரஞ்சனா,,

நாங்கள் உனக்களித்த உதவிக்கு நீ செய்யும் கைமாறாக இதை எதிர்பார்க்கலை, நீ அவரை விரும்பி ஏத்துக்கனும் ரஞ்சனா,, எனக்கு உன்னோட பதில் இப்பவே தெரியனும்” என்று வசந்தி திக்கித் திணறி ஆனால் சொல்லவந்ததை தெளிவாக கூறிவிட்டு ரஞ்சனாவின் பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்தாள்

ரஞ்சனா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் விழிகள் விரிய வசந்தியை பார்த்துக்கொண்டிருந்தாள்,, அவளைப்பொருத்தவரையில் கிருபா கடவுளுக்கு சமமானவன் அந்த கடவுளுக்கு ஊழியம் செய்ய அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்,, ஆனால் அந்த தகுதி தனக்கிருக்கிருக்கிறதா என்று அவள் உள்ளம் நொந்தது,, தன்னுடைய கடந்தகாலம் எந்தவகையிலும் கிருபாவை பாதிக்கக்கூடாது என்று எண்ணினாள்

சிறிதுநேரத்திற் பிறகு “ இல்லை மேடம் அந்த தகுதி எனக்கில்லை,, வேற நல்ல குடும்பத்து பெண்ணை மனந்து அவர் சந்தோஷமா இருக்கட்டும் மேடம்,, அந்த நல்லவருக்கு நான் வேண்டாம்” என்று கண்ணீர் ததும்பும் குரலில் ரஞ்சனா சொல்ல



“ இதோபார் ரஞ்சனா,, ஏற்கனவே என்மேல் அளவுக்கதிகமான அன்பு வச்சவர்,, இப்போ கொஞ்சம் கொஞ்சமா உன்னையும் நேசிக்க ஆரம்பிச்சுட்டார்,, இப்படிப்பட்டவர் நாம இரண்டு பேரும் இல்லாத இன்னொரு பெண்ணை ஏத்துக்குவார்னு நீ நினைக்கிறயா?” என்றாள் வசந்தி

See also  மான்சிக்காக - பாகம் 61 - மான்சி கதைகள்

ரஞ்சனாவுக்கு கிருபா தன்னையும் நேசிக்கிறான் என்ற விஷயம் ஒரளவுக்கு புரிந்து வைத்திருந்தாலும்,, வசந்தியை மறந்து கிருபா தன்னுடன் இணைவான் என்று அவள் நம்பவில்லை,, அதையே வசந்தியிடமும் சொன்னாள் “இல்லைங்க மேடம் அவர் உங்க மேல ரொம்ப அன்பு வச்சுருக்காங்க உங்களை மறந்து வேற யார்கூடயும் வாழமாட்டார்” என்று உறுதியாக கூறினாள்

“ அது எனக்கும் தெரியும் ரஞ்சனா,, அதைத்தான் நீ மாத்தனும்னு சொல்றேன்,, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ரஞ்சனா,, அவர் இரவில் தூங்கி பலநாட்கள் ஆயிருச்சு,, நல்லா சாப்பிடுறது இல்லை,, நல்ல உடைகள் உடுத்துவது இல்லை,, சேவ் கூட பண்ணாம எப்பவுமே எதையோ பறிகொடுத்தவர் மாதிரியே இருக்கார்,, இதுக்கெல்லாம் என்னோட இந்த நிலைமை மட்டும் காரணம் இல்லை,,

உன்னை நேசிக்கிறதை வெளிப்படையா சொல்லமுடியாமல்,, உன்னை பிரிஞ்சு போகவும் முடியாமல் இருதலைக்கொள்ளி அவர் தவிக்கிற தவிப்பு எனக்குத்தான் தெரியும் ரஞ்சனா,, அவரை நான் சித்தரவதை பண்றதே போதும், நீயும் அதையே செய்யாதே,, இப்படியே போனா என் மகனுக்கு தகப்பனும் இல்லாம போயிடும்,, அந்த நிலையை உருவாக்காதே ரஞ்சனா,, எனக்காக நீ அவரோட சேரனும்” என்று கண்ணீருடன் கைகளை நீட்டி ரஞ்சனாவிடம் யாசகம் கேட்டாள் வசந்தி..

வசந்தி கூறிய அத்தனை விஷயங்களும் ரஞ்சனாவின் கண்முன்னே வந்து போனது,, தன்னையுமறியாமல் ரஞ்சனாவின் உடல் நடுங்கியது,, பட்டென்று வசந்தியின் கைகளை பற்றிய ரஞ்சனா “ நான் என்ன செய்யனும் மேடம்,, சொல்லுங்க செய்றேன்” என்றாள் உறுதியுடன்



நோயால் வாடிய முகத்தில் சந்தோஷம் வந்து அமர ரஞ்சனாவின் கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட வசந்தி “ இன்னும் எத்தனை காலம் ஆனாலும் அவர் மனசை வெளிப்படையா சொல்லி உன்னை ஏத்துக்க மாட்டார்,, அதனால நீதான் அந்த முயற்சியை செய்யனும்,, அதாவது அவர் உன்னை கல்யாணம் செய்யுமளக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தனும் ரஞ்சனா,, நான் சொல்றது உனக்கு புரியும்னு நெனைக்கிறேன்,, இதை நீ சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நடத்திக்கனும் அவ்வளவுதான் ரஞ்சனா” என்று வசந்தி கூற

அவள் சொன்னது ரஞ்சனாவிற்கு புரிந்தது,, ஆனால் ச்சீ என்று கிருபா ஒதுக்கிட்டா என்னப் பண்றது என்று அவளுக்கு பயம் வந்தது,, ஆனால் அந்த பயத்தை வசந்தியிடம் சொல்லி மேலும் அவளை பேசவைக்காமல் “ சரிங்க மேடம் நான் முயற்சி செய்றேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள்

“ ம்ஹூம் சொன்னா மட்டும் போதாது ரஞ்சனா,, நீதான் அவர் மனைவின்னு எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு” என்று ரஞ்சனா முன்பு கையை நீட்டினாள் வசந்தி

See also  மனசுக்குள் நீ - பாகம் 55

ரஞ்சனாவுக்கு கிருபாவின் உண்மை முகம் தெரியாமல் சத்தியம் எப்படி செய்வது என்று தயக்கமாக இருந்தது,, ஆனால் நோயுற்ற வசந்தியின் பரிதாப நிலை அவளை சத்தியம் செய்ய தூண்டியது, அவளின் மெலிந்த கையில் தனது கையை பதித்தவள் “ அவரோட மனசை மாத்த கண்டிப்பா முயற்சி செய்வேன் மேடம்” என்றாள்

“ ரொம்ப சந்தோஷம் ரஞ்சனா, இந்த நிமிஷத்தில் இருந்து என்னை மேடம்னு கூப்பிடாதே, அக்கான்னு கூப்பிடு” என்று புன்னகையுடன் கூறினாள்

அதன்பிறகு வசந்தி தன் கணவனைப் பற்றி நிறைய சொன்னாள், அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது என பலவற்றையும் பேசிய வசந்தி தன் மகனை மறந்தாள்,, ரஞ்சனா என்ற புதிய உறவை தன கணவனுக்கு ஏற்படுத்தியவள், அந்த உறவை மகன் ஏற்றுக்கொள்வானா என்று சிந்திக்க தவறினாள்,, தன் கணவனின் சந்தோஷத்தை முக்கியமாக கருதியவள் தன் மகனைப் பற்றி நினைக்க மறந்தாள் , மகனை சிறு குழந்தையாக நினைத்தாள் வசந்தி ,, ஆனால் பதினொரு வயது எந்தளவுக்கு விபரம் புரியக்கூடிய வயது என்பதை அவள் யோசிக்கவில்லை,, அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்பதை யாருமே சிந்திக்கவில்லை..



வெளியே குழந்தை பாலுக்கு அழுததும் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்த கிருபா குழந்தையை ரஞ்சனாவிடம் கொடுத்துவிட்டு “ நேரமாச்சு போகலாமா,, உன்னை விட்டுட்டு நான் மறுபடியும் வரனும்,, மழை வேற பலமா இருக்கு,, சீக்கிரம் வா போகலாம்” என்றவன் வசந்தியிடம் திரும்பி “ நான் கொண்டுபோய் விட்டுட்டு வந்துர்றேன் வசந்தி” என்றான்

“ சரி போய்ட்டு வாங்க,, கிளம்புறதுக்கு முன்னாடி பீவருக்கு இன்ஜெக்ஷன் போட்டுகிட்டு போங்க இல்லேன்னா பீவர் அதிகமாயிடப் போவுது” என்று வசந்தி அக்கரையுடன் கூற

“ அய்யய்யோ உங்களுக்கு பீவரா,, இதோட ஏன் என்னை கூப்பிட வந்தீங்க,, போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே” என்று பதட்டமான ரஞ்சனா சூழ்நிலை மறந்து அக்கரையுடன் அவன் நெற்றியில் கைவைத்து பார்த்தாள்…

அவளின் பூங்கரத்தால் தொட்டவுடன் கிருபா கண்களை மூடிக்கொண்டான்,,

அவன் நெற்றி நெருப்பாக கொதிக்க சட்டென்று பதட்டமான ரஞ்சனா “ அய்யோ கடவுளே இப்படி கொதிக்குதே, வாங்க டாக்டரை பார்க்கலாம்” என்ற ரஞ்சனா குழந்தையை தரையில் இறக்கிவிட்டு அவன் கையை பற்றிக்கொண்டு.. “ மேடம் பாப்பா இப்படியே விளையாடட்டும், நான் சாரை டாக்டர்கிட்டே கூட்டிப்போய்ட்டு வர்றேன்” என்றாள்



வசந்தி ரஞ்சனாவின் முகத்தை பார்த்தாள்,, ரஞ்சனாவின் கண்களில் கண்ணீர் தழும்பியது,, கிருபாவை கவனிக்கும் வேகத்தில் இடுப்பிலிருந்த குழந்தையை அவள் இறக்கிவிட்ட வேகம் வசந்தியின் மனதை தொட்டது,, இதுபோதும் இந்த அக்கரையான கவனிப்பு போதும், இனிமேல் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று எண்ணினாலும் மனதில் ஒரு வெறுமை சூழ்ந்தது

1 thought on “மனசுக்குள் நீ – பாகம் 34”

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks