பொம்மலாட்டம் – பாகம் 05 – மான்சி கதைகள்

ybதிருமணத்திற்கு வந்திருந்தக் கூட்டம் மட்டுமல்ல ….. சத்யனும் அயர்ந்து போய் நின்றிருந்தான் … என்ன மாதிரியான குரல்? ராகமும் தாளமும் தப்பாமல் பாடிவிட்டாளே ? அத்தனை பேரும் வியந்து நிற்கையில் தான் அது நடந்தது ….

மான்சி அதேப் பாடலை மீண்டும் முதலிலிருந்துப் பாட ஆரம்பித்தாள் …. மிகவும் பிடித்தப் பாடலென்று பாடுகிறாளோ என்று சத்யன் நினைத்த நிமிடம் பவானி ஓடிவந்து ” போதும்டா செல்லம்மா ” என்று மகளிடமிருந்து மைக்கை வாங்கிக் கொண்டாள் …..



” போய் மாப்ளை கூட நில்லும்மா ” என்றதும் மீண்டும் சத்யனின் அருகே நின்றுகொண்டாள் மான்சி …. ரிஸப்ஷன் முடிந்தது …. எல்லோரும் கலைந்து செல்ல …. மான்சி சத்யனின் அருகிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டாள் ….அந்த நிமிடம் அவனே ஒளியிழந்தது போல் உணர்ந்தான் …. இனி அதிகாலை வரைக் காத்திருக்க வேண்டுமே என்ற விரக்தியுடன் தனது அறைக்குச் சென்றவனுடன் ஆதி வந்து ஒட்டிக் கொண்டான் …..

” டேய் மச்சி … அதென்னடா அப்புடியொரு சிரிப்பு ? வந்து நின்னதிலிருந்து கிளம்பிப் போற வரைக்கும் சிரிப்பு மாறவேயில்லை ” என்று கேட்க …. ” ம் ம் … லவ்லி ஸ்மைல் ” என்றான் சத்யன் ரசனையுடன் …. ” ம்ஹூம் … எனக்கென்னவோ ரெடிமேட் மாதிரி தெரிஞ்சது ” என்று ஆதி கூற …. திரும்பிப் பார்த்து முறைத்த சத்யன்

” பின்ன போட்டோவுக்கும் வந்திருந்தவங்களுக்கும் முன்னாடி அழுதா வடியமுடியும் ? எனக்கே இளிச்சு இளிச்சு வாய் வலிக்கிது ” என்றான் … ” பார்த்துடா மாப்ள … வாய் வலிக்கிதுன்னு நாளைக்கி ராத்திரி சொல்லித் தொலைச்சிடப் போற … அப்புறம் …” என்று அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் வாயை அடைத்த சத்யன் …. ” தயவுசெஞ்சி கல்யாணம் முடியிற வரைக்கும் என் கண்ணுல பட்டுடாத ” என்று கூறி வேறு பக்கமாக ஆதியைத் தள்ளிவிட்டு தனது அறைக்குச் சென்றான் ….



இரவு எப்படி இனிமையாக இருந்ததோ அதேப்போல் விடியலும் இனிமையாவே இருந்தது …. மாப்பிள்ளைக்கான சடங்குகள் முடிந்து மணமகனாக அழைத்துவரப் பட்டான் சத்யன் ….. கண்கள் தேடியது ….அவனது கவனத்தை தனது கண்ணிமைக்குள் வைத்துக் கொண்டு கலவரப்படுத்தியவளை கண்கள் தேடியது … சத்யனது இடுப்பில் கிள்ளிய ஆதி ” மேடம் ரெடியாகுறாங்க …

நீ மான்சியைத் தேடுறேன்ற சாக்குல கல்யாணத்துக்கு வந்த பொண்ணுங்களையெல்லாம் சைட் அடிக்காம போய் மணவறையில உட்காரு மாப்ள ” என்றான் …. கடுப்பான சத்யன் அருகே வந்த வாசுகியிடம் ” அக்கா இவனுக்கு ஏதாவது வேலை குடுத்து வெளிய அனுப்புக்கா ” என்றதும் ….

See also  மனசுக்குள் நீ - பாகம் 28 - மான்சி தொடர் கதைகள்

” ஏன்டா அப்பு ? அவன்தான் உனக்கு மாப்பிள்ளைத் தோழனா நிக்கனும்னு பயங்கர காம்பிடேஷனுக்கு மத்தியில ஜெயிச்சு வந்திருக்கான் … அவனைப் போய் போகச் சொல்றியே ?” என்றாள் … சத்யன் திகைப்புடன் ஆதியைப் பார்க்க …..



” ஹிஹிஹிஹி விடமாட்டோம்டி நாங்க … பலலட்சம் செலவு பண்ணி உனக்கு மாப்பிள்ளை தோழனா போஸ்டிங் வாங்கி வந்து நிக்கிறோம்ல … போடி கண்ணு … போய் தாலி கட்றது எப்புடினு ஐயர் கிட்ட டெமோ பண்ணி காட்டு ” என்று குறும்புடன் கூறியபடி தள்ளிக் கொண்டுப் போனான் …

” அக்கா … காப்பாத்துக்கா … இவன் வேணாம் …. ” என்று சினுங்கியவனை தோளோடு அணைத்து … ” கண்ணா இது கல்யாணம் … இங்க சிரிக்கோனும் … காதுகுத்துல தான் அழுவோனும் … நீ இப்புடிலாம் பண்ணேன்னு வையி வாழைப்பழத்தை உரிச்சு வாய்ல வச்சுடுவோம்டி ” என்றான் ஆதி ….

ஆதி எப்போதும் இப்படித்தான் …. அவனிருக்குமிடத்தில் குறும்பும் சிரிப்பும் கொண்டாடும் …. சத்யனின் உயிர் நண்பன் …. சத்யன் மணவறையில் அமர்ந்ததும் மறுபக்கமாக அமர்ந்த ஆதி …. ” எனக்கொரு சந்தேகம் மாப்ள …. மூனு நாளைக்கு முன்னாடியிருந்தே மாப்பிள்ளைத் தோழனா கூடவே சுத்துறோம்ல? கல்யாணம் முடிஞ்சதும் ராவுல மட்டும் கழட்டி விட்டுடுறீங்களே அது ஏன்டா?” என்று கேட்க …. கடுப்பான சத்யன்

” ம் … உனக்கு கல்யாணம் ஆகி நைட் ரூமுக்குள்ள போகும் போது எல்லாரையும் உள்ளக் கூட்டிட்டுப் போய் காமன்வெல்த் மாநாடு நடத்தலாம் கவலைப்படாத மச்சி ” என்றான் …. ” சரி சரி கடுப்பாகாம மந்திரத்தைச் சொல்லு … அப்புறம் தப்பா மந்திரம் சொல்லி ரெட்டைப் புள்ளை பொறந்துடப் போகுது ” என்று ஆதிக் கூறியதும் …. புரியாமல் பார்த்த சத்யன்



” தப்பா மந்திரம் சொன்னா ரெட்டைப் புள்ளைப் போறக்குமா ? நிஜமாவாடா ?” என்று ஆர்வமாகக் கேட்டான் …. ” அய் ஆசையைப் பாருடா பயபுள்ளைக்கு ? ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே நம்பி வெம்புறானே ?” என்றான் ஆதி …. தாங்கமுடியவில்லை சத்யனுக்கு ” சத்தியமாச் சொல்றேன்டா … உனக்கு கல்யாணம் ஆனதும் பர்ஸ்ட்நைட்ல கரண்ட் போயிடனும்னு சாபம் விடுறேன் ” என்றதும் …

” பரவால்ல … நாங்க பெட்ரோமாக்ஸ் லைட் வச்சுக்குவோம் …. இல்லேன்னாக்கூட மாமனாரை தீப்பந்தம் கொலுத்திப் பிடிக்கச் சொல்லி பர்ஸ்ட்நைட் கொண்டாடுவோம் ” என்றான் ஆதி அசராமல் …. ” அதென்ன கூட்டுப் பிரார்த்தனையா ? இல்ல குடும்பத்தோடப் போக கோயில் யாத்திரையா? இம்சைடா ” என்ற சத்யன் ” கெட்டப் பையன்டா நீ ” என்றுகூறி சிரித்து விட்டு ஐயர் கூறிய மந்திரத்தைக் கவனமாகத் திருப்பி உச்சரிக்க ஆரம்பித்தான் ….

See also  மனசுக்குள் நீ - பாகம் 44

மந்திரம் சொல்ல ஆரம்பித்த மூன்றாவது நிமிடம் மெல்லிய தென்றல் வந்து அவனது தேகம் தீண்டிய சிலிர்ப்பு …. நிமிர்ந்துப் பார்த்தான் …..இவனுக்காகத் தேவன் கொடுத்த தேவதை …. இப்போதும் மிதந்துதான் வந்தாள் … இவளுக்கு எல்லாம் சரியாகச் செய்த பிரம்மன் ஏன் இறகுகளை மட்டும் படைக்கவில்லை ? இறகினமெல்லாம் இவளால் தான் தாங்கள் இனம் காணப்படவில்லை என்று இறைவனிடம் முறையிடுமென்றா ? வந்து அமர்ந்தவளின் அருகே குனிந்த பவானி மகளின் காதுகளில் ஏதோக் கூற …..



சரியென்று தலையசைத்தாள் …. அதன் பிறகு சத்யன் தாலி கட்டும் வரை அந்த இடத்தைவிட்டு பவானி நகரவேயில்லை …..

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks