மான்சிக்காக – பாகம் 39 – மான்சி கதைகள்

FB_IMG_1466853373976தர்மனும் தேவனும் அவனை சமதானம் செய்யமுடியாமல் தவித்தனர்… ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த தயாளன்.. சற்று நேரத்தில் வெளியே வந்து தரையில் அமர்ந்திருந்த சத்யனை எழுப்பி சேரில் உட்கார வைத்துவிட்டு

“ சத்யன் மான்சிக்கு பலத்த காயம் இல்லை… நான் சொல்றதை நம்புங்க சத்யன்… வெட்டு வெறும் சதைப்பகுதியில் தான் ஆழமா விழுந்திருக்கு… உள் சதையில் சில தையல்களும் வெளிப்புறம் சில தையல்களும் போட வேண்டியிருக்கும்.. மான்சி கர்ப்பிணி என்பதால் நாங்க ரொம்ப ஜாக்கிரதையா செயல்பட வேண்டியிருக்கு சத்யன்…அதேசமயம் ரத்தம் நிறைய வேஸ்ட்டாயிருக்கு அதனால் ரெண்டு யூனிட் அளவுக்கு ரத்தம் தேவைப்படும்” என்று சத்யனை சமாதானப்படுத்தி நிலைமையை தெளிவுபடுத்தினார். அதன்பின் டாக்டர் மறுபடியும் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் போய்விட்டார் சத்யனுக்கு அவர் சொன்னது காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.. அவன் சிந்தனைகளை மொத்தம் சிதறடித்துவிட்டு ஒருத்தி உள்ளே படுத்துகிடடந்தாள்…

தனக்காக அவள் வந்து விழுந்து காயத்தை ஏற்றுக்கொண்டதை சத்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை… அய்யோ எவ்வளவு ரத்தம் … என் கண்ணம்மாவால் இதை தாங்க முடியுமா? எனக்காக உயிரைக்கொடுக்கும் அளவுக்கு அவளுக்கு நான் என்னப் பண்ணேன்? சேரில் இருந்து எழுந்த சத்யன் சுற்றில் கைகளால் குத்திக்கொண்டு “ என்னால இதை தாங்கவே முடியலையே மாமா?” என்று மறுபடியும் கலக்கத்துடன் கதறினான்.. தர்மன் இரண்டே எட்டில் அவனை அடைந்து சத்யனை தோளோடு அணைத்துக்கொண்டார்

“ வேனாம் மாப்ளே நீயே இப்படி கலங்கினா அப்புறம் எங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருடா இருக்கா? அவளுக்கு ஒன்னுமில்லடா இன்னும் கொஞ்சநேரத்தில் மாமா மாமான்னு கத்தி உன்னை கூப்பிடப் போறா பாரு” என்று தர்மன் ஆறுதல் சொல்லும்போதே …. ராமைய்யாவுடன் பஞ்சவர்ணமும் மீனாவும் கத்திக்கொண்டே ஓடிவர அவர்களைப் பார்த்ததும் சத்யன் தன் அம்மாவை விடுத்து அக்காவிடம் ஓடி அவள் கால்களில் விழுந்து காலைப்பிடித்துக் கொண்டு“ எல்லாம் என்னாலதான் அக்கா…. பூ மாதிரி வாழவேண்டியவளை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேனே? அவளுக்கு எதுனான்னா நான் அவளுக்கு முன்ன போயிடுவேன் அக்கா” என்று கத்தினான் … மீனா அப்படியே மடிந்து தரையில் அமர்ந்து தம்பியின் தோளைப் பிடித்து தூக்க..

தேவன் ஓடிவந்து மீனாவுக்கு உதவினான்.. சத்யனை சுவற்றில் சாய்த்து உட்கார வைத்துவிட்டு அவன் பக்கத்தில் அமர்ந்து தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு “ டேய் தம்பி இப்ப அவளுக்கு என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கத்துற.. இப்போ அவ உன் பொண்டாட்டிடா ரொம்ப தைரியசாலி… நீ இப்படி அழுவுறதைப் பார்த்தா உன்மேலயே கோபப்படுவா.. அதனால அழாம நிமிர்ந்து உட்காருலே தம்பி”

See also  மான்சிக்காக - பாகம் 49 - மான்சி கதைகள்

என்று தன்நிலை மறந்து தம்பியை தேற்றுவதற்கு முனைந்தாள்… மீனாவுக்கு தன் மகள் மறந்து போனாள்.. அவள்ப்பட்ட காயத்துக்காக கதறும் தம்பி மட்டுமே ஞாபகத்தில் இருந்தான் சத்யன் முன்பு தங்களது துயரத்தை காட்டினால் அவன் மேலும் உடைந்து போய்விடுவான் என்று எல்லோருக்கும் தெரியும்,,அதனால் எல்லோரும் இயல்பாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டனர்… பஞ்சவர்ணம் மகன் முகத்தைப் பார்க்கவே அஞ்சியவர் போல ஒரு மூளையில் அமர்ந்து முந்தானையை வாயில் அடைத்து அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார்…. மீனா தம்பியின் கையைப் பற்றிக்கொண்டு அவனைவிட்டு அங்குலம் கூட நகராமல் அவனைத் தேற்றிக்கொண்டிருந்தாள்,,

குமுறலை அடக்கியபடி மருமகனைப் பார்த்து அடிக்கடி குலுங்கும் தர்மனின் கையைப் பற்றி தேறுதல் சொல்லிகொண்டு இருந்தார் ராமைய்யா.. தேவன் மட்டும் மருத்துவமனை ஊழியர்கள் வந்து கொடுக்கும் சீட்டை எடுத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான் அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண் மருத்துவர்

“ மான்சியோட குரூப் ரத்தம் யாருக்கு இருக்கோ அவங்க உடனே லேபுக்கு போங்க,, எங்ககிட்ட இருந்த ஒரு யூனிட் பிளட் ஏத்திட்டோம், இன்னும் தேவைப்படுது, அதனால குயிக்கா லேபுக்கு போங்க” என்று சொல்ல… தேவன் அந்த டாக்டரை நெருங்கி “ எனக்கும் மான்சிக்கும் ஒரே ப்ளட் குரூப் தான் மேடம்” என்றதும் “ அப்போ சீக்கிரமா லேப்புக்கு போய் பிளட் டெஸ்டுக்கு குடுங்க சார்” என்று சொல்லிவிட்டு சத்யன் பக்கம் திரும்பி“ யாராவது இவருக்கு வேற டிரஸ் குடுங்களேன்… இப்படியே உட்கார வச்சு வேடிக்கைப் பார்க்குறீங்களே? ” என்று அதட்டிவிட்டு மறுபடியும் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் போய்விட்டாள்..தர்மன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்து ராமைய்யாவிடம் கொடுத்து

“ பக்கத்துல ஏதாவது கடையில ஒரு கைலியும் சட்டையும் வாங்கிட்டு வாங்க ராமு” என்றார்.. அவர் கொடுத்த பணத்தை மறுத்து “ என்கிட்ட இருக்குங்க. இதோ போய் வாங்கிட்டு வர்றேன்” என்று வெளியே ஓடினார்… இவர்களெல்லாம் அல்லாது அந்த மருத்துவமனையின் வராண்டாவில் அமர்ந்தபடி இன்னொரு ஜீவனும் தங்கைக்காக கதறிக்கொண்டிருந்தது….

ஆப்ரேஷன் தியேட்டர் செல்லும் வராண்டாவின் மறு திருப்பத்தில் அமர்ந்து அழுதவனை யாருமே கண்டுகொள்ள வில்லை… அதே வழியில் நூறு முறை போய் வந்த தேவன் அவனை ஒரு மனிதனாகக் கூட மதிக்கவில்லை.. அழுதழுது கண்ணீர் வற்றி அந்த வராண்டாவிலேயே சுருண்டு விட்டான் வீரேன் ராமைய்யா வாங்கி வந்த உடைகளை மாற்றிக்கொள்ள மறுத்த சத்யனை வலுக்கட்டாயமாக பாத்ரூம் அழைத்துச்சென்று உடை மாற்றி அழைத்து வந்தனர் தர்மனும் ராமைய்யாவும்…

See also  மனசுக்குள் நீ - பாகம் 32 - மான்சி தொடர் கதைகள்

வந்து மறுபடியும் மீனாவின் அருகில் அமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டான் .. சிறு குழந்தை போல் ஆகிவிட்ட தம்பியைப் பார்த்துக் குமுறினாள் மீனா… வீரேன் மீது பயங்கர ஆத்திரம் வந்தது… “ இவனைப் பெறாமலேயே இருந்திருக்கலாமே?” என்று கலங்கினாள் சற்றுநேரத்தில் மறுபடியும் வெளியே வந்த அந்த லேடி டாக்டர்… தர்மனிடம் வந்து“ சார்.. மான்சிக்கு ஆப்ரேஷன் முடிஞ்சுது.. அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. இன்னும் நினைவு திரும்பலை… கர்ப்பிணி என்பதால்… ட்ரக்ஸ் எதையும் ஹெவி டோஸ் குடுக்க முடியாது… அதனால அவங்களை இரண்டு நாள் ஐசியூவில் வச்சிருக்கனும்… அவங்க வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்றனுமே” என்று சொல்லி முடிக்கவும் அமர்ந்திருந்த சத்யன் சரேலென எழுந்து அந்த டாக்டர் முன்பு கைகூப்பி

“ அய்யோ எனக்கு என் மான்சி மட்டும் போதும்.. குழந்தை வேனும்னு அவசியமில்லை” என்று சொல்லும்போதே பஞ்சவர்ணமும் எழுந்து வந்து “ ஆமா தாயி எங்களுக்கு எங்க பேத்தி மட்டும் போதும்… அவ பழையபடி எழுந்து நடமாடினா போதும்… குழந்தை என்னாம்மா குழந்தை… அவளே எங்க எல்லாருக்கும் குழந்தைதான் ” என்று கண்ணீருடன் சொன்னார்.. தர்மன் தன் மாமியாரை ஆச்சர்யமாக பார்த்தார்..

அன்று தங்கள் வீட்டு வாரிசுக்காக எல்லோர் காலிலும் விழுந்தவர்… இன்று எங்களுக்கு வாரிசு வேண்டாம்.. என் பேத்திதான் வேண்டும் என்று சொல்வது அவர் மனசுக்கு இதமாக இருந்தது.. டாக்டர் சத்யனிடம் திரும்பி “ நீங்க சுலபமாக சொல்லிடுவீங்க சார்… எங்களுக்கு இரண்டு உயிருமே முக்கியம்… ஆனா நீங்க பயப்படும் அளவுக்கு எதுவுமில்லை சார்…உங்க மனைவியின் ஆரோக்கியம் கூடிய விரையில் மீண்டு விடும் கவலைப்படாதீங்க… அப்புறம் ஒரு விஷயம் ஐசியூவில் விசிட்டர்ஸ் யாருக்கும் அனுமதியில்லை.. அதனால நீங்க எல்லாம் ரிசப்ஷனில் ஒரு ரூம் கேட்டு அங்க தங்கிக்கங்க…” என்றுவிட்டு வெளியே போகும் வழியில் வேகமாக நடந்தாள்..

டாக்டர் என்றதும் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போல அதிகாரத் தோரணையில் இருப்பவர்கள் மத்தியில் இந்த இளம்பெண் ரொம்ப வித்தியாசமாக இருந்தாள்,,மனிதாபிமானத்தோடு … மனித மனவுணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதல் வழங்கிவிட்டு சென்றாள் அந்த பெண் டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டர் வராண்டாவில் திரும்பும் போது.. வேகமாக அவள் முன் எழுந்து நின்ற வீரேன்

“ மேடம் என் தங்கச்சிக்கு இப்போ எப்படியிருக்கு” என்று கண்ணீருடன் கேட்டான்.. அவ்வளவு உயரமான ஆண் கண்ணீருடன் தன் எதிரில் நின்றதும் ஒருகணம் தடுமாறியவள் பிறகு“ ஆப்ரேஷன் முடிஞ்சதுங்க.. இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரலை.. இப்போ ஐசியூவுக்கு மாத்தப் போறாங்க அதுக்கு முன்னாடி கொஞ்சநேரம் அவங்களைப் எல்லாரும் பார்க்கலாம் ” என்று கூறினாள்..

error: read more !!