மான்சிக்காக – பாகம் 21 – மான்சி கதைகள்

FB_IMG_1466872988954“ ஆனாலும் மீனா அந்த பய முறையா வந்து பொண்ணு கேட்டுருந்தா கூட… வயசு வித்தியாசம் பார்க்காம என் மகளை அவனுக்கு குடுத்திருப்பேன், இந்த மாதிரி ஊரறிய பண்ணதுதான் மனசுக்கு பிடிக்கலை மீனா… சரி விடு நடந்ததைப் பத்தி பேசி என்னப் பிரயோஜனம் இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்” என்றார் தர்மன்

மீனாவும் பேச்சை மாற்றும் விதமாக “ ஆமாங்க கல்யாணத்துக்கஷ தேவையானதை நாளைக்கு மதுரைக்குப் போய் வாங்கிட்டு வந்துடலாம்… நகையெல்லாம் இருக்கு.. இன்னும் என்ன வேனும்னு மான்சைகிட்ட கேட்டுட்டு வாங்கனும்” என்றாள்

காரை தனது பண்ணைக்குள் திருப்பிய தர்மன் “ ஆனா ஒன்னு மீனா இந்த பொண்ணு செல்விக்கு நம்ம கதை கொஞ்சூண்டு தெரிஞ்சிருந்தாக் கூட பஞ்சாயத்துல வச்சு என்னையும் நாறடிச்சிருப்பா,, நல்லவேளையா தப்பிச்சேன்” என்று சிலிர்த்தவரைப் குழப்பமாகப் பார்த்த மீனா “ என்ன நம்ம மேட்டர்” என்று கேட்டாள் ..“ அதான்டி செத்த முந்தி சொன்னான்ல அதுதான்… அது மட்டும் அவளுக்கு தெரிஞ்சிருந்தா… யோவ் வயசான உனக்கே நெதமும் பொஞ்சாதி கேட்குது.. எங்கய்யா இளவட்டம் அவரும் மட்டும் சன்யாசி மாதிரி இருக்கனுமான்னு’ பஞ்சாயத்துல என் மானத்தை வாங்கியிருப்பா” என்று பயந்தவர் போல் அவர் சொல்ல…

அவர் சொன்னது புரிந்ததும் “ அய்ய ச்சீ என்ன இதெல்லாம் பேசிகிட்டு” என்று முகத்தை கார் ஜன்னல் பக்கமாக திருப்பியவளை இழுத்து தன்மேல் சாய்த்துக்கொண்டார் தர்மன்

அவர் நெஞ்சில் சுகமாக சாய்ந்தபடி “ ஆமா அதென்ன அப்பப்ப நீங்க வயசானவருன் சொல்றீங்க… அதை நான்தானே சொல்லனும்” என்று வெட்கமாக சொல்ல..

“ அப்போ நான் வயசானவன் இல்லைன்னு சொல்றியா மீனா?” தர்மன் சரசமாக கேட்டார்

அவர் நெஞ்சிலேயே இல்லையென்று வேகமாக தலையசைத்தவளை நெருக்கி அணைத்து “ அப்போ பண்ணையில இருக்கு குடிசைல கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாமா?” என்று காதலாய் கேட்க…

“ ம்ம்” என்றவள் சட்டென்று நிமிர்ந்து “ அய்யய்யோ ம்ஹூம் மொதல்ல வீட்டுக்கு சீக்கிரமா போங்க சாப்பாடு செய்யனும்… இல்லேன்னா அந்தப்புள்ள செல்வி அருவாளை எடுத்துகிட்டு நம்ம வீடு தேடி வந்துரும்” என்று செல்விக்கு பயந்தாள் மீனா..விலகியவளை இழுத்து அணைத்தவாறு “ எல்லாம் சீக்கிரமா போயிடலாம்” என்றவாரு பண்ணை குடிலுக்கு காரைத் திருப்பினார் தர்மன்

மலையாய் நினைத்தப் தங்கள் மகளின்ப் பிரச்சனை பனியாய் விலகிய நிம்மதியும் சந்தோஷமும் இந்த இருவருக்கும்…. அந்த சந்தோஷத்தை தங்களுக்கு தெரிந்த வகையில்.. பிடித்தவகையில் கொண்டாட விழைந்தார்கள்

மதிய உணவுக்கு பிறகு தூங்கப்போறேன் என்று அறைக்குள் சென்ற மான்சி கொஞ்சநேரத்தில் கால்களை உதறிக்கொண்டு “ வீடா இது ச்சேச்சே” என்றபடி வெளியே வந்து சோபாவில் பொத்தென்று அமர…

See also  மான்சிக்காக - பாகம் 52 - மான்சி கதைகள்

வாசலில் செவலையனுடன் பேசிக்கொண்டிருந்த சத்யன் சத்தம் கேட்கு உள்ளே வந்து “ என்னம்மா?” என்று கேட்க …நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்த மான்சி “ நான் உனக்கு அம்மாவா?.. முன்னாடி மாதிரி மான்சின்னு கூப்பிடு.. இல்ல மானுக்குட்டினனு கூப்பிடு.. இந்த அம்மா கும்மாலாம் வேனாம் ஆமா ” என்று அதட்டினாள்

“ சரி இனிமே மான்சின்னே கூப்பிடுறேன்,, சொல்லு மான்சி என்னாச்சு?” என்று சமாதானம் செய்தான்…

“ அந்த ரூம்ல ஏசி இல்ல,, அதனால எனக்கு தூக்கமே வரலை..அப்புறம் அந்த பாத்ரூம்ல ஹீட்டர் இல்லை, ஷவர் இல்லை… இதெல்லாம் வேனும்,, என்று மான்சி சண்டைக்காரனிடம் பேசுவதுபோல சொல்ல…“ சரி இன்னைக்கு தேனி போய் ஏசி… வாங்கிட்டு வந்து ரெடி பண்ணச்சொல்றேன், பாத்ரூமையும் ரெடிப் பண்ணச்சொல்றேன்” என்ற சத்யன் தனது செல்லை எடுத்து வழக்கமாக வரும் எலக்ட்ரீசியனுக்கு போன் செய்து உடனே வரச்சொன்னான்

“ மாமோவ் அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேனே…. எப்பப்பார்த்தாலும் வாந்தி வருது, அதை நிப்பாட்டனும்,, நிறைய சாப்பிடனும்.. ஆனா முடியலையே அதுக்கும் ஏதாவது பண்ணு மாமா ” என்று முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு சொன்னவளை சத்யனுக்கு உருகிவிட்டது

“ அம்மாச்சி கிட்ட சொல்லு மான்சி… அவங்க ஏதாவது வைத்தியம் சொல்வாங்க” என்று மெல்லிய குரலில் சொன்னவனைப் பார்த்து முறைத்து விட்டு வேகமாக அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டாள்..

‘ நான் இப்ப என்ன சொன்னேன்னு இப்படி முறைச்சிட்டு போறா?’ என்று நினைத்து மான்சி போன அறையின் அருகே நெருங்கியவன்.. ‘ இப்ப போனா ஏதாவது ஏடாகூடமா பேசுவா’ ம்ஹூம் என்று தலையசைத்து விட்டு வெளியேப் போனான்

அன்று இரவுக்குள் அறை ஏசி செய்யப்பட்டு, பாத்ரூமில் சகல வசதிகளும் செய்யப்பட்டது,, அன்று இரவு மான்சி ஏசியில் தூங்கியப் பிறகுதான் சத்யன் ஓய்ந்து உட்கார்ந்தான்…அதற்கு மறுநாளும் ஆயிரம் புகார்கள் வாசித்தாள்,, சத்யன் எல்லாவற்றுக்கும் தலையாட்டினான்… அவளுக்காக வீட்டையே மாற்றியமைத்தான்,, தோட்டத்தில் இருந்த வெங்காயம் வெள்ளப்பூண்டு எல்லாம் எடுத்தெரியப்பட்டு மான்சிக்குப் பிடித்த அழகான மஞ்சள் ரோஜா செடிகள் நடப்பட்டது,, அந்த செடிகளின் நடுவே காலையில் அவள் நடப்பதற்காக சிமிண்ட் பாதை அமைக்கப்பட்டது,, இரண்டு மரங்களுக்கு நடுவே அவள் படுத்துக் கொள்ள நூல் ஊஞ்சல் அமைக்கப்பட்டது , அவள் சொன்னதையெல்லாம் செய்தான்.. அவள் எப்படி இருக்கவேண்டும் என்ற தன் ஆசைப்படியும் கொஞ்சம் மாற்றி அமைத்தான்…

கல்யாண நாளும் வந்தது,, மான்சி தங்க விக்ரகமாக அலங்கரிக்கப்பட்டாள்,, சத்யன் பட்டு வேட்டி சட்டையில் அவளுடன் நின்ற போது மீனா அழுதேவிட்டாள்… எல்லோரும் ஒரு வேனில் குலதெய்வம் கோவிலுக்குப் போனார்கள்,

See also  மான்சிக்காக - பாகம் 45 - மான்சி கதைகள்எப்படி அழைத்தும் வீரேன் மட்டும் தங்கையின் திருமணத்திற்கு வரவேயில்லை,, தேவன் மனநிறைவோடு வந்தாலும்’ சத்யனின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டான்.. அதிகமாக அவன் கண்கள் செல்வியைத்தான் தேடியது…

Leave a Comment

error: read more !!