மனசுக்குள் நீ – பாகம் 03 – மான்சி தொடர் கதைகள்

அவளை பார்த்தும் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்க மறுபடியும் கம்பியூட்டர் பக்கம் திரும்பிக்கொண்டான் சத்யன்.,, காலையில் ரயில்நிலையத்தில் பார்த்து சத்யனின் கவனத்தை கவர்ந்த அதே பெண்தான் அனிதாவுடன் வந்திருந்தாள்

‘அய்யோ இவளா அனிதாவோட ப்ரண்ட்,, ச்சே முதல்லயே இவளோட பைலை பார்த்திருக்கலாம்” என்று லேட்டாக யோசித்த சத்யன் “ ம் குட்மார்னிங், உட்காருங்க” என்றான்

“ தாங்க்யூ சார்” என்று சொல்லிவிட்டு அவனுக்கு எதிரே அனிதாவின் அருகில் இருந்த இருக்கையில் அவள் அமர்ந்தாள்,,சத்யன் நிதானமாக அவளுடைய பைலை புரட்டினான்.. பெயர் மான்சி பரமேஸ்வரன் என்று இருந்தது,, படிப்பு தகுதி என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இன்டர்காமில் கார்த்திக்கை அழைத்தான்

உள்ளே வந்தவனிடம் பைலை கொடுத்து “ கார்த்திக் டிசைனிங் பிரிவில் இருக்கும் சூப்பர்வைசர் சுகன்யா டெலிவரிக்காக மூனு மாசம் லீவு கேட்டு இருந்தாங்களே, அவளுக்கு லீவை சாங்ஷன் பண்ணிட்டு இவங்களை சூப்பர்வைசரா அப்பாயின்மென்ட் பண்ணிரு,, சுகன்யா ஒரு வாரத்திற்கு இவங்க கூட இருந்து வேலையை கத்துக்கொடுக்க சொல்லு கார்த்திக்” என்று சத்யன் சொல்ல

கார்த்திக் மான்சியை பார்த்து புன்னகை “ வாங்க மேடம் அப்பாயின்மென்ட் ஆர்டர் டைப் பண்ண சொல்லிட்டு எல்லாருக்கும் உங்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் ” என்று செல்லிவிட்டு வெளியே போனான் ,,

‘சூப்பர்வைசர் வேலையா’ என்று அனிதா வாய் பிளக்க,, மான்சி கலவரமாக அனிதாவை பார்த்தாள்,,

‘இரு நான் பேசுறேன்’ என்று சைகையில் சொன்ன அனிதா சத்யனை பார்த்து “ அண்ணா நானும் இவளும் இந்த வருஷம்தான் படிப்பு முடிச்சோம்,, மான்சிக்கு வேறெந்த கம்பெனியிலும் வேலை செய்த முன் அனுபவம் இல்லை,, முதல் போஸ்ட்டிங்கே சூப்பர்வைசர்னா இவளால மெயின்டைன் பண்ணமுடியுமான்னு பயமாயிருக்கு அண்ணா” என்று மான்சியின் பயத்தை தெரியப்படுத்தினாள் அனிதாசட்டென்று நிமிர்ந்து பார்த்த சத்யன் “ அதனால என்ன இதே முதல் அனுபவமா இருக்கட்டுமே,, சூப்பர்வைசர் போஸ்டிங்கை தவிர இங்கே வேறெந்த போஸ்டிங்க்கும் காலியா இல்லை,, ஒருவாரத்துக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும் அப்புறம் சரியாபோயிரும்,, ஏதாவது சந்தேகம்னா கார்த்திக்கிட்ட கேட்டுக்க சொல்லு” என்று அனிதாவுக்கு பதில் சொன்னவன் …..

மான்சியை பார்த்து “ நீங்க போய் ஆர்டரை வாங்கிக்கங்க,, மத்ததெல்லாம் கார்த்திக் சொல்வான் அதன்படி செய்ங்க போதும்” என்று சொல்ல

சரியென்று அவசரமாக தலையசைத்த மான்சி அனிதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை நோக்கி நகர்ந்தாள்

“ சரி அண்ணா நானும் கிளம்புறேன்” என்று அனிதாவும் திரும்ப…. “ நீ கொஞ்சம் இரு அனிதா” என்றான் சத்யன்

See also  பொம்மலாட்டம் - பாகம் 15 - மான்சி தொடர் கதைகள்

கதவருகே காத்திருந்த மான்சியை பார்த்து “ சரி நீ முன்னாடி போ மான்சி நான் இதோ வர்றேன்” என்று சொல்ல,, மான்சி சரி என்றுவிட்டு கதவை திறந்து வெளியேறினாள்அனிதா மறுபடியும் சேரில் வந்து அமர்ந்து “ என்னண்ணா” என்றாள்

என்ன கேட்பது என்று புரியாமல் தவித்தான் சத்யன்,, ஆனால் அவனுக்கு காலையில் மான்சியுடன் வந்தது யார் என்று தெரிந்தே ஆகவேண்டும்,, வேறு வழியில்லை அனிதாவிடம் கேட்டுவிட வேண்டியதுதான்
மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியபடி “ இந்த பொண்ணுக்கு சொந்த ஊர் எது?” என்றான்

“ ஆம்பூருக்கு பக்கத்தில் ஒரு வில்லேஜ் அண்ணா,, ஆனா இவ பத்து வருஷமா ஈரோட்டில் ஹாஸ்டலில் தங்கிதான் படிச்சா,, படிப்பு முடிஞ்சதும் கிரமத்தில் போய் நாலு மாசம் இருந்தா,, அதுக்குள்ளே என்னனமோ நடந்து போச்சு,, அதான் நேத்து அவளை பத்தி சொன்னேனே அண்ணா,, அவ நிலைமை ரொம்ப பரிதாபம் அண்ணா” என்று மான்சியை

சத்யனுக்கு நேற்று அனிதா போனில் சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது,, ச்சே பாவம் எனக்குத்தான் இந்த நிலைன்னா இவளுக்குமா’ என்று மனதுக்குள் வருந்தினான்,, “ அங்கேருந்து தனியாவா வந்தாங்க?” என்று தனது அடுத்த கேள்வியை வீசினான்

“ இல்லண்ணா அவளோட அண்ணண் ஜெகன் அவளை கூட்டி வந்து விட்டுட்டு உடனே போய்ட்டான்,, நான்தான் காலையில ரயில்வேஸ்டேஷன் போய் கூட்டி வந்தேன்,, என் ப்ரண்ட் காயத்ரி வீட்டு மாடியில் ஒரு ரூம் இருந்தது அங்கே தங்க வச்சிருக்கேன்” என்று தனது அண்ணனுக்கு கூடுதல் தகவலை சொன்னாள் அனிதாஇந்த தகவல்கள் போதும் சத்யனுக்கு,, மான்சிக்கு அந்த பையன் அண்ணன் என்றதும் கன்னத்தில் யாரோ அறைந்தது போல் வலித்தது,, ச்சே கொஞ்ச நேரத்தில் இந்த பொண்ணை இப்படி தவறா நெனைச்சுட்டமோ,, ஏன் கூட இருந்தவன் அண்ணனாக இருக்கலாம்னு நான் யோசிக்கவே இல்லை,, என்று மனதுக்குள் வருந்தினான்

” சரி நீ கிளம்பு அனிதா” என்று சொல்லிவிட்டு எழுந்தவன் சற்று தள்ளியிருந்த போர்டில் இருந்த எம்டி கேன்வாஸில் பென்சிலால் ஏதோ ஒரு டிசைனை வரைந்தான்

எழுந்து நின்ற அனிதா சிறிது தயக்கத்திற்கு பிறகு ” அண்ணா வீட்டுக்கு வந்து ஒரேயொரு முறை அப்பாவை பாருங்களேன்,, ப்ளீஸ் அண்ணா உங்களை நினைச்சு நினைச்சு அப்பா அழாத நாளே இல்லை” என்று கண்ணீர் ததும்பும் குரலில் சொன்னாள் ..

” உன்னை போகச்சொன்னேன் ,, நீ இன்னும் போகலையா?” என்று திரும்பி பார்க்காமலேயே இறுகிய குரலில் சத்யன் கூற

See also  கூதி நீர் - பாகம் 04 - மச்சினிச்சி காமக்கதைகள்

” இதோ போறேன்ண்ணா,, நாங்க அங்க இருக்கிறதாலதானே நீங்க வீட்டுக்கு வரலை நாங்க வேனா வேற எங்கயாவது போயிடுறோம் அண்ணா,, அப்புறமாவது நீங்க வருவீங்களா?” என்று பொங்கிய கண்ணீரை அடக்கிய வாறு அனிதா பேச” ஆபிஸ்ல பர்ஸனல் பத்தி பேசாதேன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது அனிதா,, மத்தவங்களை போல உன்னையும் ஆரம்பத்திலேயே ஒதுக்காமல் உள்ளே சேர்த்தது என் தப்புதான்” என்று சத்யன் சொல்லி முடிப்பதற்குள்

” சரி இதோ போய்ட்டேன் அண்ணா பை” என்றுவிட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவசரமாக அறையைவிட்டு வெளியேறினாள்

கண்களை துடைத்தபடியே பக்கத்தில் இருந்த கார்த்திக்கின் கேபினுக்குள் நுழைந்து அங்கே இருந்த சேரில் தொப்பென்று அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குமுறியவளை பார்த்து கார்த்திக் அவசரமாக எழுந்து அவளருகில் வந்தான்சேரில் அமர்ந்திருந்தவள் தோளில் கைவைத்து ” என்னம்மா என்னாச்சு,, பாஸ் ஏதாவது திட்டிட்டாரா ,, அவரோட குணம் உனக்கு தெரியும் தானே அப்புறமா ஏன் எதையாவது பேசிட்டு இப்படி திட்டு வாங்குற” என்று கேட்டவனின் நெஞ்சில் தன் முகத்தை வைத்துக்கொண்ட அனிதா அழுதாள்

error: read more !!