மான்சிக்காக – பாகம் 55 – மான்சி கதைகள்

img-20161101-wa0270ஜோயல் அமைதியாக இருந்தாள்… பிளாஸ்க்கை திறந்து இரண்டு கப்பில் காபியே ஊற்றி அவன் பக்கமாக நகர்த்தினாள் “ எடுத்துக்கங்க?” என்றாள்… வீரேன் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை காபியை எடுத்துக்கொண்டான்…

ஆனால் ஜோலையும் சேர்த்து சிறுகச்சிறுக பருகினான் .. அவன் குடித்து முடித்தபோது “ அதுககாக கூடப்பிறந்த தங்கச்சியோட ஹஸ்பண்ட்யா வெட்ட வருவாங்க? என்னால இதை ஏத்துக்கவே முடியலை?” என்று ஜோயல் சொல்ல… அவள் குரலில் முன்பிருந்த கோபம் இப்போது இல்லை “அதுதான் நான் முட்டாள்னு சொல்லிட்டேனே? மறுபடியும் மறுபடியும் ஏன் அதையே சொல்லி என் மனசை குத்தி கிழிக்கிறீங்க… மான்சியை வெட்டுன அதே அருவாளால நானும் வெட்டிகிட்டு செத்திருக்கனும்…

உயிரோட இருக்கிறதே தப்பு” என்று கொதிப்புடன் பேசிய வீரேன் “ அப்போ என்னை மன்னிக்க மாட்டீங்க?” என்று இறுதியாக கேட்பது போல் கேட்டான்…. தலைகுனிந்து இருந்த ஜோயல் “ எனக்கு இதையெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் டைம் வேனும்… அதுவரைக்கும் நீங்க என்னை தொந்தரவு செய்யாதீங்க..

என்னோட ஒர்க் பார்க்கவிடுங்க ப்ளீஸ் ” என்றாள்.. இதாவது சொன்னாளே என்ற நிம்மதியுடன் எழுந்த வீரேன் “ நான் அதுவரைக்கும் காத்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியேப் போனான்.. அவன் போவதையேப் பார்த்திருந்த ஜோயல் முகத்தில் புதிதாய் பூத்த புன்னகையுடன் அவன் குடித்த காபி கப்பை எடுத்தாள் கழுவுவதற்காக..அதில் வீரேன் குடித்த மிச்சம் சிறிது இருக்க.. ஜோயல் அவளையும் அறியாமல் அதை தனது தொண்டையில் சரித்தாள்மறுநாள் காலை எல்லோருமே இயல்பாக விடிந்தது… வீரேன் மட்டும் பரிட்சையின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனின் நிலையில் இருந்தான் …

அன்று காலை வழக்கம்போல டியூட்டி முடித்து வெளியே வந்த ஜோயல் வேகமாக தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப… வீரேன் தனக்கு பதில் கூறாமல் போகும் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்… ஜோயல் வீடு போகும் நேரம் வரை காத்திருந்து பிறகு தனது மொபைலை எடுத்து அவள் நம்பருக்கு கால் செய்தான்… எடுத்தவுடனேயே “ யாருங்க?” என்றாள் ஜோயல்.. “ நான் வீரேன்” என்றான் மொட்டையாக… சிறிதுநேர அமைதிக்கு பிறகு

“ என்ன வேனும்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்… “ மன்னிப்பு வேனும்… அதுக்கு டைம் வேனும்னு கேட்டீங்க.. சொல்லி கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஆச்சு” என்றான் வீரேன் .. எதிர்முனையில் மறுபடியும் அமைதி பிறகு “ நான் இன்னிக்கு நைட் வரும்போது சொல்றேன்” என்று கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது..

வீரேன் தனது செல்போனை பரம்பரை எதிரியை பார்ப்பது போல் பார்த்தான்.. பிறகு வெறுப்புடன் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.. அன்று அம்ருதா பேசும்போது கூட இவ்வளவு வலிக்கவில்லை.. இன்று ஜோயலின் மறுப்பு அவனை கொல்லாமல் கொன்றது.. படிப்பறிவு அற்ற எனது தகுதியைப் பார்க்கிறாளோ? என்று எண்ணியவன்.. ஒரு முடிவுடன் ரிசப்ஷன் நோக்கிப் போனான் கொஞ்சநேரத்தில் ஜோயல் தங்கியிருக்கும் முகவரியோடு ஒரு ஆட்டோவில் ஏறி அவள் வீட்டுக்கு அருகில்ப் போய் இறங்கினான்…

அழகான சிறிய வீடு.. கேட்டில் இருந்த கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே போனான்… முன்புறம் சிறு தோட்டம் அதை கடந்து வீடு.. வீட்டின் ஒரு கதவு மூடி ஒரு கதவு திறந்தே இருக்க… எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்தான்… ஜோயல் குளித்துவிட்டு தனது ஈரக் கூந்தலை விரித்துவிட்டு பிரம்பு சேரில் கண்மூடி அமர்ந்திருந்தாள்…

See also  பொம்மலாட்டம் - பாகம் 34 இறுதி - மான்சி தொடர் கதைகள்

எந்தவித ஒப்பனையுமின்றி புத்தம்புதிய ரோஜாவைப் போல் இருந்தது அவள் முகம்… வெறும் நைட்டி மட்டும் போட்டிருந்தாள்… அவள் எதிரில் இருந்த மேசையில் சிடிப் ப்ளேயரில் இளையராஜாவின் மெல்லிசைப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.. அதை கண்மூடி ரசித்தாள் வீரேன் அப்படியே நின்று அவள் அழகை பிரமிப்புடன்ப் பார்த்தான்…

மருத்துவ உடையில் பார்த்தது போல் அல்லாமல் இப்போது அடக்கமான அழகில் மிச்சமிருந்த அவன் மனதையும் தன்வசப்படுத்தினாள்… பேன் காற்றில் கூந்தல் பறந்து நெற்றியில் வழிந்தது.. மெதுவாக அருகில் போனவன் முதன்முதலாக அவள் பெயர் சொல்லி “ ருத்ரா” என்று காதலோடு அழைத்தான்…அவனது ஒரு அழைப்பில் உயிர்பெற்றது அந்த சிலை…அவள் அம்மா அப்பாவுக்குப் பிறகு யாருமே அவளை ருத்ரா அழைத்தது இல்லை… வீரேன் அந்த பெயர் சொல்லி அழைத்ததன் தீவிரம் அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்க்க பட்டென்று சேரில் இருந்து எழுந்து நின்றாள்…

அவனின் காதல் பார்வையும்… இவளின் கண்ணீர் பார்வையும் ஒன்றொடொன்று மோதி பின்னிப்பிணைந்து விடுபட முடியாமல் அப்படியே செயலிழக்க… ஒலித்துக்கொண்டிருந்த சிடி ப்ளேயரில் அடுத்த பாடல் மாறியது……. இருவரின் மனமும் மெல்ல மயங்கியது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுதுLeave a Comment

error: read more !!