பொம்மலாட்டம் – பாகம் 13 – மான்சி தொடர் கதைகள்

அதே புன்னகையுடன் ஆதியை ஏறிட்ட டாக்டர் “யாருக்குப் பிரச்சனை ஆதி?” என்று கேட்க…. ஆதி தனது நண்பனை அறிமுகம் செய்துவிட்டு மான்சியை நோக்கி விரல் நீட்டிக் காட்டி “இவங்க சத்யனோட ஒய்ப்… இவங்கக்கிட்ட தான் நிறைய வித்தியாசங்கள் தெரிவதா சத்யன் பீல் பண்றான் சார்” என்றான்…

தனது மேசையிலிருந்த பெரிய டைரியையும் பேனாவையும் எடுத்துக் கொண்ட டாக்டர் சத்யனை நேரடியாகப் பார்த்து “சொல்லுங்க சத்யன்? என்ன மாதிரி வித்தியாசத்தை உணர்ந்தீங்க?” என்று கேட்க…. சத்யன் கொஞ்சம் சங்கடமாக தலை குனிந்தான்…..



“இதோப் பாருங்க சத்யன் உங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு வாரம் தான் ஆச்சுன்னு ஆதி சொல்லியிருந்தார்…. அப்போ நீங்க உணர்ந்தது உங்களுடைய தாம்பத்தியம் சம்மந்தமாக இருந்தாலும் அதை வெளிப்படையாகச் சொன்னால் மட்டுமே நான் அதைப் பற்றி ஆலோசிக்க முடியும்… கமான் சத்யன்… மனசுல இருக்கிறதை சொல்லிடுங்க” என்றார்….

பவானியையும் மான்சியையும் கண்டு தயங்குகிறான் என்று புரிந்த ஆதி “ஆன்ட்டி நீங்க மான்சி கூட பக்கத்து ரூம்ல வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு அவர்களை அழைத்துச் சென்று பக்கத்து அறையில் அமர்த்திவிட்டு வந்தான்…. நிமிர்ந்து அமர்ந்தான் சத்யன்…. திருமணமான இரவிலிருந்து தனக்குப் புரிந்தவற்றை.. தான் உணர்ந்தவற்றை மெல்லியக் குரலில் கூற ஆரம்பித்தான்…..



“ஒரு சதவிகிதம் கூட கூச்சமில்லை…. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை…. இது தான் கடமை அப்படின்ற மாதிரி இருந்தா…. இதையெல்லாம் விட நான் அவளுக்குத் திருப்தியா இருக்கேனா அப்படின்னே தெரியலை சார்….” என்றான்…. “ம்… செக்ஸ் தவிர வேற எந்த மாற்றங்களை உணர்ந்தீங்க?” என்று கேட்டார் செபாஸ்ட்டியன்… “அவளோட அம்மா கூட இருக்கிற வரைக்கும் அவங்க சொல்றதை அப்படியே செய்றா… மத்த நேரங்களில் அப்நார்மல் தான் சார்…

நேத்து காலைல எவ்வளவு சாப்பிடனும்னு தெரியாம பத்துக்கும் மேல இட்லிகளை சாப்பிட்டு வாமிட் பண்ணிட்டா….” என்றவன் பெரும் சங்கடத்துடன் தலை கவிழ்ந்து “நைட் பெட்லயே யூரின் போய்ட்டு அதுலயேப் படுத்திருந்தா…. அப்புறம் இன்னைக்கு காலைல குளிக்க பாத்ரூம் போனவ ஒரு பாட்டில் ஷாம்பு போட்டு குளிச்சிட்டு வர்றா…. இதெல்லாம் என்னன்னே எனக்குப் புரியலை” என்றான் கவலையாக… “புரியுது சத்யன்… மேரேஜ் முடிஞ்ச ஒரு வாரத்துக்குள்ள இவ்வளவு மாற்றங்கள்ன்னா ஏத்துக்க ரொம்ப கஷ்டம் தான்….” என்ற டாக்டர் ஆதியைப் பார்த்து



“அவங்க ரெண்டு பேரையும் கூப்பிடுங்க ஆதி” என்றார்… “அவங்க வர்றதுக்கு முன் இன்னொரு விஷயம் சொல்லனும் டாக்டர்” என்ற ஆதி…. மான்சியிடமும் அவள் தாயிடமும் வித்தியாசத்தை உணர்ந்துவிட்டு பவானியின் அறைக்குச் சென்று தாம் பார்த்த சேகரித்த தகவல்களை ஒன்று விடாமல் கூறினான்….யோசனையாக அவனைப் பார்த்த டாக்டர் “வேற மெடிசன்ஸ் ஏதாவது வச்சிருந்தாங்களான்னு பார்த்தீங்களா?” என்று கேட்க… “அதெல்லாம் இல்லை சார்…” என்றான் ஆதி…. “ம் சரி அவங்க ரெண்டு பேரையும் கூப்பிடுங்க” என்றதும் ஆதி சென்று பெண்கள் இருவரையும் அழைத்து வந்தான்….

See also  பஜனை - பாகம் 27

மான்சியைப் புன்னகையுடன் ஏறிட்ட டாக்டர் “உன் பெயர் என்னம்மா?” என்று கேட்க…. மான்சி திரும்பித் தன் தாயைப் பார்த்தாள்…. “உன் பேர் சொல்லு பாப்பா” என்று பவானி கூறியதும் “மான்சி….” என்றவள் நிமிடநேர யோசனைக்குப் பிறகு “மான்சி சத்யன்” என்றாள்…. சட்டென்று திரும்பி தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான் சத்யன்… அதேநேரம் அவளும் பார்த்துவிட்டு பளிச்சென்று புன்னகைத்தாள்….



மனதை பிசைய கண்களில் தேங்கிய நீர் யாருக்கும் தெரிந்துவிடாதபடி தலை குனிந்தான் சத்யன்…. “ம் குட்… உன்னைப் பத்தி சொல்லும்மா…. என்ன படிச்சிருக்க?” என்ற அடுத்த கேள்விக்கும் தாயின் முகத்தையேப் பார்த்தாள்…. பவானி சொல்லச் சொன்னதை அப்படியே டாக்டருக்குச் சொன்னாள்… அடுத்தடுத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் இப்படியே தொடர்ந்தது…..

“சரி நீங்க சொல்லுங்கம்மா…. உங்க மகளுக்கு என்ன குறைபாடுன்னு உங்களுக்குத் தெரியுமா? மனசு விட்டு வெளிப்படையா எல்லாத்தையும் சொல்லுங்கம்மா… நீங்க சொல்றதை வச்சுதான் உங்க மகளுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க முடியும்” என்று பவானியிடம் கேட்டார்… தெரியாது என்று தலையசைத்தவள் “இவளோட பனிரெண்டாவது வயசு இவ அப்பா இறந்து போனார்…. அவர் இறந்தப் பிறகுதான் இவக்கிட்ட இதுபோல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சது….

அப்பா இறந்ததால் பயத்தால் என்னை சார்ந்து வாழ நினைக்கிறான்னு நினைச்சேன்… ஆனா போக போக நான் சொன்னால் மட்டும் தான் எதையும் செய்ய ஆரம்பிச்சா…. எனக்கு பயமாத்தான் இருந்துச்சு… பெரியவளாகி மேரேஜ் முடிஞ்சு புருஷன் கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சா எல்லாம் சரியாப் போய்டும்னு நினைச்சேன்….” என்றவள் மெல்லிய விசும்பலுக்கிடையே “கல்யாணத்துக்குப் பிறகும் அப்படியே இருப்பான்னு நான் நினைக்கவேயில்லை” என்றாள்…



“சரிம்மா,, நீங்க உங்க கணவரைப் பத்தி சொல்லுங்க… உங்க ரிலேட்டிவ்ஸ் யார் யார்லாம் உங்கக் கூட இருக்காங்க?” என டாக்டர் கேட்டதும்… “நானும் அவரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்.. எங்க ரெண்டு பேர் வீட்டுலயுமே எங்களை ஏத்துக்கலை…. அதனால தனியாத்தான் இருந்தோம்… அவர் இறந்தப் பிறகு மான்சியும் நானும் மட்டும் தான்… வேற யாரும் வரமாட்டாங்க” என்றாள்….

Leave a Comment

error: read more !!