அலட்சியமாக தனது தோளை குலுக்கிய மான்சி “ நான் யாரையும் ப்ளாக்மெயில் பண்ணலை,, காலையில நடந்த மாதிரி மறுபடியும் நடக்காமல் ஒரு சுய பாதுகாப்பு அவ்வளவுதான்,, அதை நீங்க இப்படி நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை,, எனக்கு நேரமாச்சு நான் வர்றேன்” என்று அலட்சியமாக பேசி கதவை திறந்துகொண்டு வெளியேறினாள்
சத்யன் மூடிய கதவையே வெறித்து நோக்கினான்,, வசுவின் விசேஷத்திற்கு நான் வரவில்லை என்ற கோபத்தை இப்படி காட்டிவிட்டு போகிறாள் என்று தெளிவாக சத்யனுக்கு புரிந்தது,, இருபது வருஷமாக என் மனதோடு பதிந்து போன ஒரு விஷயத்தை நேத்து வந்த இவளுக்காக விட்டுக்கொடுக்க நான் என்ன பொண்ணுங்களுக்கு மயங்கி சுயத்தை தொலைப்பவனா? ம்ஹூம் நடக்கவே நடக்காது,,
இவளுக்காக நான் ஏன் மாறவேண்டும்,, முடியவே முடியாது,, சிறுவயதில் நான் பட்ட அவமானங்கள் இவளுக்கு எப்படி தெரியும்,, அனிதா இவளோட ப்ரண்ட் என்றால் அவளுக்காக இவள் மாறட்டும்,, என்னை மாறச்சொல்வது எந்த வகையில் நியாயம்,, நானே இவளிடம் வழிந்துகொண்டு போனதால் என்னை இளக்காரமா நெனைச்சுட்டா போலருக்கு,, ஆனா நான் எப்பேர்ப்பட்ட வைராக்கியம் பிடிச்சவன்னு இவளுக்கு தெரியாது,, ம்ம் இத்தோட இவளா என்னை தேடும் வரை நான் இவளை சந்திக்கப்போறதில்லை, இது உறுதி” என்று தனக்குள் சபதமெடுத்தான் சத்யன்
தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்த சத்யன், அடுத்து எந்த வேலையும் செய்யத் தோனாமல், உடனே கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்,,
சத்யன் அறையில் இருந்து வெளியே வந்த மான்சி முகத்தையும்,, கோபமாய் கண்கள் சிவக்க மில்லில் இருந்து வெளியேறும் இவன் முகத்தையும் பார்த்த கார்த்திக் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று புரிந்தாலும், மேற்கொண்டு எதுவும் கேட்காமல் “ ஓகே பாஸ் நீங்க கிளம்புங்க,, நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி அனுப்பி வைத்தான் கார்த்திக்
வீட்டுக்கு வந்த சத்யன் வேலைக்காரன் கொடுத்த காபியை மறுத்து தனது அறைக்கு வந்து உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில் விழுந்தான்,, மான்சியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் அறைவது போல் இருந்தது,,
ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது, அவள் முடிவுக்கு என்னை இழுக்கிறாள்,, ம்ஹூம் அதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்,, அவளாகவே என்னிடம் வரவேண்டும் இல்லையென்றால் எவ்வளவு நாளானாலும் இப்படியே இருப்பேன் என்று நினைத்தபடியே படுத்திருந்த சத்யனை வெளியே இருந்து வேலைக்காரன் அழைக்கும் குரல் கேட்டது
அதான் எதுவும் வேனாம்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் கதவைத்தட்டுறான்,, என்று முனங்கியபடி எழுந்து கதவை திறந்த சத்யன் திட்டுவதற்கு முன் வேலைக்காரன் முந்திக்கொண்டான்
“ சின்னய்யா நம்ம அனிதா பாப்பாவும்,, வசந்தி பாப்பாவும் வந்திருக்காங்க” என்றான் மூச்சுவாங்க
“ என்னது வசு வந்திருக்காளா,, இப்போ ஏன் வந்த,, இந்தநேரத்திலயா?” என்று வேகமாக கீழே இறங்கிய சத்யன் ஹாலுக்கு வந்தான்
சோபாவில் அமர்ந்திருந்தனர் அனிதாவும் வசுவும், வசு ஒரு கல்யாணப் பொண்ணைப் போல முழு அலங்காரத்தில் ஜொலித்தாள்,பட்டுப்புடவையில் அவளை பார்த்த சத்யன் அதிசயத்தில் அப்படியே நிற்க்க,, வேகமாக எழுந்து வந்த வசு சட்டென்று சத்யன் காலில் விழுந்து “ என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கண்ணா” என்றாள்
சத்யனுக்கு உணர்ச்சி வேகத்தில் வயிறு தடதடத்தது,, என்மேல் எவ்வளவு அன்பு இருந்தால் விசேஷம் முடிந்த கொஞ்சநேரத்தில் என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பாள்,, என்று எண்ணி லேசாக கலங்கினான்
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றவனை “ அவளை ஆசிர்வாதம் பண்ணு அண்ணா,, பங்ஷன் முடிஞ்சதும் ஓரே அழ, நான் உடனே அண்ணனை பார்க்கனும்னு அதான் கூட்டிவந்தேன்” என்ற அனிதாவின் வார்த்தைகள் கலைத்தது
வேகமாக குனிந்து வசவை தூக்கிய சத்யன் “ இந்த நேரத்தில் வரலாமா வசு,, நீ எங்க இருந்தாலும் என்னோட ஆசிர்வாதம் உனக்கு உண்டு” என்றவன் வசுவை அழைத்துக்கொண்டு தனது தாயின் படத்தருகே போனான்
“ அம்மாவை கும்பிட்டுக்க வசு” என்றவன் அங்கே கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து வசுவின் நெற்றியில் பூசி “ இனிமேலாவது குறும்புத்தனத்தை எல்லாம் குறைச்சு,, நல்லப் பொண்ணா நெறைய படிக்கனும்” என்றான் சத்யன்
அனிதாவும் அவனருகில் வந்து “ எனக்கும் விபூதி பூசுங்கண்ணா” என்றாள்
சத்யன் அவளுக்கும் விபூதி பூசிவிட்டு “ சீக்கிரமா கார்த்திக்கை மேரேஜ் பண்ணி லைப்ல செட்டில் ஆகு அனிதா” என்று வாழ்த்தினான்
அனிதா கலங்கிய கண்களை மறைக்க வேறு புறமாக திரும்பிக்கொண்டாள்,, சத்யன் இதுபோலெல்லாம் பேசி அவள் பார்த்ததேயில்லை,, வசு அதிர்ஷ்டசாலி தான் அண்ணன் மனம் திறந்து ஆசிர்வாதம் பண்ணிட்டாரு,, என்று நினைத்தாள்
வேலைக்காரன் எடுத்து வந்த காபியை இருவரிடமும் எடுத்து கொடுத்த சத்யன், சோபாவில் வசுவின் பக்கத்தில் அமர்ந்தவன் “ இந்த நேரத்தில் போய் வரலாமா வசு,, உங்க கூட யார் வந்திருக்கறது” என்று கேட்டான்
டிரைவர் கூட கார்ல வந்தோம் அண்ணா,, எங்ககூட மான்சியும் வந்திருக்கா,, கார்லயே இருக்கா,, நான் எவ்வளவோ கூப்பிட்டும் வரமாட்டேன்னுட்டா,, நாங்க போகும்போது அவளை, அவ வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போகனும் அண்ணா” என்று அனிதா கூறியதும்
மான்சி என்ற பெயரை கேட்டதுமே உள்ளுக்குள் ஒரு ஜில்லிப்பு பரவ ” ஓ மான்சி வந்திருக்காளா?” என்று கேட்ட சத்யன்,, அவளுக்கு இவ்வளவு பிடிவாதம் இருந்தா வீடுவரைக்கும் வந்துட்டு உள்ளே வராம கார்லேயே இருப்பா,, நானே போய் இவ கால்ல விழனும்னு நெனைக்கற போலருக்கு என்று கோபமாய் எண்ணினான்
” சரி நேரமாயிருச்சு நாங்க கிளம்புறோம் அண்ணா” என்று அனிதாவும் வசுவும் எழுந்துகொண்டனர்
” சரி பார்த்து போங்க,, வீட்டுக்கு போய்ட்டு கால் பண்ணுங்க” என்று வாசல்வரை வந்து சத்யன் வழியனுப்பி விட வந்தவன் காரில் அமர்ந்திருந்த மான்சியின் பக்கவாட்டு தோற்றத்தை பார்த்ததும் தயங்கி நின்றான்
அவ வந்து வாழப்போகும் வீடு,, அவளுக்கு இந்த வீட்டை பார்க்கும் ஆர்வம் இல்லாதபோது நான் ஏன் கூப்பிடனும் எனறு பிடிவாதமாக எண்ணிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டான்,,
வெளியே கார் கிளம்பி செல்லும் ஓசை கேட்டது
” உன் மவுனம் என்னை மனிதனாக்கும்..
” என்று காத்திருக்கும் என் காதலியே…
” முதலில் நீ என்னை காதலனாக ஏற்றுக்கொள்!
” பிறகு மனிதனாக மாற்று!
” உன் லட்சியம் ஜெயிக்க -என் கனவுகளுக்கு..
” கல்லரை எழுப்பாதே அன்பே”