மனசுக்குள் நீ – பாகம் 55

சத்யன் அவளுக்காக வெளியே காரில் காத்திருக்க, மான்சி வந்து காரில் அமர்ந்தாள்,, சத்யன் அவள் கையில் இருந்த பெட்டியை பார்த்து “ என்ன பெட்டி இது மான்சி” என்றான் 

“ வசந்தி அத்தையோட நகைகளாம், ரஞ்சனா அத்தை கொடுத்தாங்க, இதெல்லாம் இனிமேல் எனக்குத்தான் சேரனுமாம்” என்ற மான்சி தன் மடியில் இருந்த பெட்டியை திறந்தாள்

“ நீ ஏன் இதையெல்லாம் வாங்கிட்டு வந்த, அவங்களையும், தங்கச்சிங்களையும் போட்டுக்க சொல்றது தானே?” என்றான் சத்யன்,அவனுக்கு மனசுக்குள் கோபம் இருந்தது, எவ்வளவு வசதியும் பணத்தையும் வைத்துக்கொண்டு, ரஞ்சனா எந்த நகையும் பட்டுப்புடவையும் இல்லாமல் சாதரண குடும்பத்து பெண்போல் வெறும் தாலிச்செயினும் கைத்தறி புடவையுமாக கல்யாணத்துக்கு வந்திருந்தது சத்யனுக்கு எரிச்சலாக இருந்தது, எல்லாம் வேஷம் என்று எண்ணினான்,

பெட்டியில் இருந்த நகைகளை பார்த்துக்கொண்டிருந்த மான்சி, அவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்து “ உங்களுக்கு ரஞ்சனா அத்தையைப் பத்தி தெரியாதா?, அவங்க எப்பவுமே எந்த நகையும் போட்டுக்க மாட்டாங்க, அதேபோல எப்பவுமே கைத்தறி சேலைதான் கட்டிப்பாங்க, அத்தை ரொம்ப சிம்பிளாதான் இருப்பாங்க, அதேபோல அனிதா அபி ரெண்டு பேருக்கும் கூட எதுவுமே வாங்கித் தரமாட்டாங்க, வசுதான் உங்க செல்லமாச்சே அதனால உங்கிட்ட பாட்டிகிட்ட கேட்டு வாங்கிக்குவா” என்று மான்சி சத்யனுக்கு தெரியாத விஷயங்களை கூறினாள்

சத்யன் எதுவுமே பேசவில்லை அமைதியாக இருந்தான், இதற்க்கு முன்பு ரஞ்சனாவை சந்தித்த ஒரு சில நாட்களை நினைவில் கொண்டு வந்தான், அவன் கவணத்தில் ரஞ்சனா ஒருமுறை கூட படாடோபமாக இருந்ததில்லை, எப்பவுமே கழுத்தில் இதே செயின், உடலில் காட்டன் புடவையில் தான் பார்த்திருக்கிறான், ஆனால் அன்று உரைக்காத அவளது எளிமை இன்று மான்சி கூறியதும் பொட்டில் அடித்தாற்போல் உரைத்தது,இவ்வளவு நாட்களாக பணம் நகை படாடோபமான வாழ்க்கை இதற்க்காகத்தான் ரஞ்சனா தனது அப்பாவை வலைவீசி பிடித்து விட்டதாக சத்யன் நினைத்துக்கொண்டு இருந்தான் எளிமையை விரும்பும் இவங்க ஏன் என் அப்பாவை வலைவீசி பிடிக்கனும்?, தான் பெற்ற பெண்களுக்கு கூட வசதியான வாழ்க்கையை அறிமுகம் செய்யாத இவங்க ஏன் அப்பாவுக்கு இரண்டாவது மனைவியாக வந்தாங்க?, எல்லாவற்றுக்கும் பணம் காரணம் இல்லையென்றால் வேறு என்னதான் காரணம்? என் அப்பா மீது கொண்ட காதலா? சத்யனுக்கு மனம் குழம்பியது

திருமணம் முடிந்தவர் மீது எப்படி காதல் வரும்? அப்படியே வந்தாலும்கூட என் அம்மாவோட நினைவு ஏன் அப்பாவுக்கு இல்லாமல் போனது? என்று சத்யன் யோசிக்கும் போதே வசந்தி இறந்த சிலநாட்கள் கழித்து இரவில் எழுந்து அமர்ந்து அழுதுகொண்டிருந்த கிருபாவின் ஞாபகம் வந்தது, நிச்சயமாக அந்த கண்ணீர் பொய்யில்லை, அப்படியானால் ஒரே சமயத்தில் இரண்டு பேரை ஒருவரால் காதலிக்க முடியுமா? என்று இறுதியாக இந்த கேள்வி சத்யன் மனதில் தொக்கி நின்றது

See also  மனசுக்குள் நீ - பாகம் 42

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக “ ஏங்க இந்த நகைகளில் முக்கியமான சிலதை மட்டும் எடுத்து வச்சுட்டு, மீதி நகைகளை அழிச்சு புது மாடலாக செய்து அனிதா, அபி, வசு, மூனுபேர் கல்யாணத்துக்கும் போடலாம், பெரியத்தையின் ஞாபகமாக இருக்கும்” என்று மான்சி சொல்ல..

“ ம் சரி மான்சி செய்யலாம்” என்றான்

அவன் முகத்தில் இருந்த சிந்தனை கோடுகளை கவனித்து “ என்னாச்சும்மா காலையிலேருந்து உங்க முகமே சரியில்லை, இன்னிக்கு எல்லாமே உங்களுக்கு பிடிக்காத விஷயங்களே நடந்தது,, அதனால வருத்தமா இருக்கீங்களா?” என்று மான்சி கேட்க…

இல்லையென்று தலையசைத்த சத்யன் “ வருத்தமெல்லாம் இல்லை மான்சி, ஆனா ஒரு விஷயம் எனக்கு குழப்பமா இருக்கு,, அதாவது ஒரே சமயத்தில் ஒரு ஆண் இரண்டு பேரை காதலிக்கமுடியுமா?” என்று கேட்டான்மான்சிக்கு அவன் யாரைப்பற்றி பேசுகிறான் என்று பட்டென்று புரிந்து போனது, சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள் பிறகு அவன் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ எனக்கு இதைப்பற்றி எப்படி பேசுறதுன்னு தெரியலை,, ஆனா நீங்க கேட்டதற்கு பதில் சொல்லனும்னு தோனுது,, சமநிலையில் உள்ள ரெண்டு பேரை ஒருத்தரால நிச்சயமா காதலிக்க முடியாது,,

ஆனா ஒருத்தரிடம் இல்லாத ஒன்று இன்னோருத்தரிடம் கிடைச்சுருக்கலாம், ஆனா அதுக்காக ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு நபரை காதலிக்க முடியாதுதான், காதலிக்கும், அல்லது காதலிக்கப் படும் எதிராளியின் சூழ்நிலையை கவனத்தில் வச்சு பார்க்கனும், அப்படி அப்போதைய அவர்களது சூழ்நிலை நமக்கு தெரியாத பட்சத்தில் அந்த விஷயத்தை நாம பேசுறதே ரொம்ப தப்புங்க, அது யாராக இருந்தாலும் சரி தப்புதான்” என்று மான்சி தீர்கமாக சொன்னாள்

சத்யன் என்ன நினைத்தானோ மான்சியின் தோளில் கைப் போட்டு தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான், அவள் வகிட்டில் குங்குமம் இருந்த இடத்தில் அழுத்தமாக முத்தமிட்டான், எதற்காக இந்த திடீர் அணைப்பும் முத்தமும், ஒருவேளை அவன் மனதில் நினைத்தது மான்சியின் வாயில் வந்துவிட்டதாலா?,,

“ சரிங்க மேடம் இந்த குழப்பத்தையும் தெளிவுப் படுத்திடுங்க” என்று கிண்டலாக கூறியவன் “ கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனாக இருக்குற ஒரு ஆளைப் போய் எந்தப் பொண்ணாவது லவ் பண்ணுவாளா?” என்று கேட்டான்

மான்சி சிறிதுநேரம் அமைதியாக அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள், பின்னர் நிமிர்ந்து அமர்ந்தவள் அவன் முகத்தை பார்க்காமல் கார் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள்,, சத்யன் அவள் தோளில் கைவைத்து “ என்னாச்சு மான்சி” என்றான்அவனை திரும்பிப்பார்த்து “ மத்தவங்க எப்படின்னு எனக்கு தெரியலை, ஆனா நான் என் காதலின் மீது அழுத்தமான நம்பிக்கை வச்சுருக்கேன், அதன் அடிப்படையில் சொன்னால், நீங்க திருமணமாகி பத்து குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தாலும்கூட நான் உங்களைத்தான் காதலிச்சுருப்பேன்,, நீங்க எனக்கு கிடைப்பீங்களா இல்லையா என்ற எண்ணத்தை எல்லாம் ஒதுக்கிட்டு இப்போ இருக்குறதை விட தீவிரமா உங்களை காதலிப்பேன் , ஏன்னா எனக்கு என் காதல்தான் உசத்தி, என் காதலுக்கு முன்னாடி மத்ததெல்லாம் தூசியைப் போல் நினைப்பேன்,, என்றாள் மான்சி

See also  மனசுக்குள் நீ - பாகம் 40

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யனுக்கு அதிர்ச்சியாக இருந்தது,, இவளுடைய காதலுக்கு முன்னால் நான் இவள் மீது கொண்ட காதல் தூசுக்கு சமமானது என்று எண்ணினான்,, ஒரு பெண் மனதில் ஒருத்தனை நினைச்சுட்டா அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தன் காதலில் உறுதியாக இருப்பார்களோ,, என்று சத்யனுக்கு எண்ணத்தோன்றியது

மான்சியின் முகத்தை கையில் தாங்கி “ உன் காதலுக்கு ஈடா என்னால எதையுமே தரமுடியாது மான்சி,, உன் அளவுக்கு என்னால் காதலிக்க முடியுமான்னு தெரியலை,, ஆனால் என் உயிர் என்னைவிட்டு போகும் வரை உன்னை என் நெஞ்சில் சுமப்பேன் மான்சி” என்று சத்யன் உணர்ச்சிகரமாக பேசினான்
அவன் வாயைப்பொத்திய மான்சி “ ம்ஹூம் உங்களோட காதலும் ரொம்ப உயர்ந்ததுதான்” என்றாள்அதன்பிறகு இருவரும் அணைத்தபடி சீட்டில் சாய்ந்துகொண்டனர்,, வெளியே நன்றாக இருள் கவிழ்ந்துவிட, கார் முன்பைவிட வேகமாக மான்சியின் கிராமத்தை நோக்கி பயணமானது

Leave a Comment

error: read more !!