அன்று வரச்சொன்னப் பிறகு மறுநாள் தவறாமல் வந்தவளிடம் இவன் கொடுத்த சென்போனுக்கு மிஸ் கால் கொடுத்தான்,, திருமண வேலையாக இருந்த செல்வியின் ரவிக்கைக்குள் இருந்த தேவன் கொடுத்த செல்போன் வைப்ரேஷன் மூலம் சிக்னல் செய்ய,, நிமிர்ந்து அவனைத் தேடினாள் , தேவன் பார்வையால் அவளை குளக்கரைக்கு வருமாறு ஜாடை செய்துவிட்டு இவள் மறுக்கும் முன் போய்விட்டான்…
செல்வி பஞ்சவர்ணத்தைப் பார்த்து சுண்டுவிரை நீட்டிகாட்டி “ ரொம்ப அவசரம் ஆத்தா போய்ட்டு வர்றேன்” என்று சொல்ல… “ பக்கத்துல முள்ளு தோப்பு இருக்கு பாரு அங்கபோய் ஒதுங்குடி செல்வி” என்றார் பாட்டி
தலையசைத்தபடியே கோயிலைச் சுற்றிக்கொண்டு குளக்கரைக்கு வந்தவள். குளத்துக்கு பக்கத்தில் ஒரு ஆலமரத்தின் மறைவில் தேவன் நிற்ப்பதைப் பார்த்து சுற்றுமுற்றும் பார்த்தபடி அவனை நெருங்கியவள்..
தனது ரவிக்கைக்குள் இருந்த மொபைலை எடுத்து அவனிடம் நீட்டி “ இங்கபாரு …. எனக்கு இந்த கருமமெல்லாம் வேனாம்,, உள்ளார வச்சுப்புட்டு நீ போன் பண்ணறப்ப எல்லாம் என் நெஞ்சுக்குழி தடதடன்னுது.. இதுக்குத்தான் நான் அப்பவே வாங்க மாட்டேன்னு சொன்னேன்.. இந்தா பிடி” என்று அவன் கையில் தினித்தாள்..
போனை வாங்கியவன் .. இவ்வளவு நேரமாக அவள் ரவிக்கைக்குள் இருந்ததால் அது ஈமாயிருக்க.. அதை அப்படியே மூக்கருகே எடுத்துச்சென்று முகர்ந்து பார்த்தான்.. அதில் செல்வியின் வியர்வை வாசனை வர.. கண்கள் சொருக சொருக மறுபடியும் மறுபடியும் முகர்ந்தான்.. பிறகு தன் உதட்டில் வைத்து அழுத்தி முத்தமிட்டான் ..
அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று புரியாமல் பார்த்தவள்… புரிந்ததும் “ ஏய் ச்சீ மொதல்ல அதக் குடு… அய்யோ குடேன்” என்று தன் கைகளால் அவன் நெஞ்சில் குத்தி பிடுங்க முயன்றாள்
அவள் கைக்கு அகப்படாமல் போனை உயர்த்திப் பிடித்துக்கொண்டு “ ம்ஹூம் கொஞ்சநேரம் என்கிட்டயே இருக்கட்டும்.. நான் தொடாத இடத்தை அது தொட்டுட்டு வந்துருக்குள்ள.. இன்னிக்கு அதுக்கு ஆயிரம் முத்தம் குடுக்கப் போறேன்” என்றவன் மறுபடியும் போனுக்கு முத்தம் தந்துவிட்டு வாய்விட்டு சந்தோஷமாக சிரித்தான் …
செல்வி வெட்கத்தில் ஏகமாய் சிவந்து போனாள்,, அவன் சிரிப்பை கண்கொட்டாமல் பார்த்து ரசித்து “ நீ ரொம்ப அழகுய்யா” என்றாள்..
தேவனின் சிரிப்பு பாதியில் நிற்க… அவளின் அந்த பலகீனமான தருணத்தை பயன்படுத்தி அவளை இழுத்து தன் நெஞ்சொடு அணைத்து “ நீயும் தான் செல்வி.. ரொம்ப ரொம்ப அழகு… ஆனா என்னை இந்த அழகை ரசிக்கத்தான் விடமாட்டேங்குற” என்று குறைப்பட்டவனை… இவளும் ஆசையோடு அணைத்துக்கொண்டாள்
அவன் நெஞ்சில் தன் மூக்கை உரசியபடி “ அய்யா எப்புடி ரசிப்பீகன்னு எனக்குத் தெரியாதா… இந்த மாதிரில்லாம் ஆகக்கூடாதுன்னு தான் நீ ஆலையில கிட்ட வரும்போதெல்லாம் நான் ஒதுங்கி போனேன்.. இப்போ என்ன பண்ணியோ தெரியலை நானும் மயங்கிப்போய் ஒனக்காக ஏங்கிப்போய் கெடக்கேன்” என்றவள் குரலில் ஏக்கம்…
செல்வி தன் காதலை வெளிப்படையாக சொன்னது இப்போது தான்… இப்படி அவளாகவே அணைத்துக்கொள்வதும் இதுதான் முதல்முறை தான்… யாருக்குமே அடங்காத காளையை அடக்கியது போல் இருந்தது தேவனுக்கு… உல்லாசமாக சிரித்தான் தேவன்
“ எனக்கும் உன்னைய விட்டுட்டு இருக்கவே முடியலையே செல்வி.. அதுக்குத்தான் செல்போன் வாங்கி குடுத்தேன்.. ஆனா நீ என்னடான்னா திருப்பித்தர்ற… வைப்ரேஷன் வச்சா அப்படித்தான் இருக்கும்” என்று தேவன் வருத்தமாக கூறியதும்…
“ நீ சொல்லிட்ட…. ஆனா அது அடிக்குறப்ப என் நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கிறத எனக்குத் தானே தெரியும்”
“ எங்க படபடன்னுது இரு நான் பார்க்கிறேன்” என்று சரசமாய் பேசி அவள் நெஞ்சில் கைவைக்க வந்தவனை பிடித்து தள்ளியவள். “ உனக்கு கொஞ்சம் இடம் விட்டாப் போது புள்ளப் பெத்து பேரு வச்சுடுவியே… அங்ங என்னை தேடுவாங்க… நான் கெளம்புறேன்” என்ற நகர்ந்தாள்…
“ செல்வி போறதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு செல்வி.. ” என்று தேவன் கெஞ்சினான்
அந்த கெஞ்சலுக்குப் பிறகு செல்வியின் கால்கள் நகரவில்லை.. திரும்பி அவனிடமே வந்தது… அவனையே சிறிதுநேரம் உற்றுப் பார்த்துவிட்டு,, அவன் தாடையை தன் கைகளில் தாங்கி அவன் முகத்தை ஏந்தி “ ஏன்ய்யா என்மேல இம்புட்டு அன்பு.. நான் உனக்கு தகுதியானவளாய்யா… உன் அழகுக்கும் பணத்துக்கும் பெரியப்பெரிய அழகியெல்லாம் வரிசைல நிப்பாங்களே… நீ என்னடான்னா என்கிட்ட கெஞ்சிகிட்டு நிக்கிறயே?” என்று அவள் சொல்லி முடிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துவிட…
தேவன் பதறிப்போய் அவள் கண்ணீரைத் துடைத்தான் “ ஏய் காதல்ன்றது தகுதியும் அழகையும்ப் பார்த்து வந்தா அதுக்குப் பேரு காதல் இல்லை செல்வி,, எதையுமே எதிர்பார்க்காம வருது பாரு அதுதான் காதல்… எனக்கு பசின்னதும் நீ அன்னிக்கு துடிச்சுப் போய் சாப்பாடு போட்ட பாரு? அந்த மாதிரி….. எத்தனை அழகி உலகத்துல இருந்தாலும்கூட எனக்கு நீ மட்டும் தான் அழகா தெரிஞ்ச செல்வி.. உனக்காக எதையும் செய்யலாம்னு தோனுச்சு செல்வி,, எனக்கு பணம் அந்தஸ்து எதுவுமே வேனாம்.. நீமட்டும் தான் வேனும் ” என்ற தேவன் அவளை அணைத்துக்கொள்ள..
அவன் அணைக்கும் முன் அவன் கண்களும் கலங்கியிருந்ததை பார்த்தாள் செல்வி.. அவன் நெஞ்சில் முத்தமிட்டு “ எப்பவுமே இப்படியே இருப்பியா? என்னை கைவிட்டுவிட மாட்டியே?” என்றவள் முகத்தை நிமிர்த்தி…
“ இன்னும் நீ என்னை நம்பலை தானே? இப்பவே இதே கோயில்ல உனக்கு தாலி கட்டவா?. யாரும் என்னை தடுக்க முடியாது… வாடி போகலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு மரத்தின் மறைவிலிருந்து வந்தவனை மீண்டும் மரத்தின் அருகில் இழுத்த செல்வி… தனது பெருவிரலை தரையில் அழுத்தி ஊன்றி குதிங்காலை உயர்த்தி அவன் உயரத்துக்கு தன்னை சமன் செய்துகொண்டு அவன் முகத்தை இழுத்து உதட்டை கடித்து தனக்குள் வாங்கி சப்பினாள்…
தேவன் இதை எதிர்பார்க்கவில்லை,, அவள் தனது உதட்டை கடித்த வேகத்தில் ஸ்ஸ்ஸ்… என்று அலறியவன்… அவள் கடித்த உதட்டை சப்ப ஆரம்பித்ததும் கண்கள் சொருக மயங்கி பின்னால் இருந்த மரத்தில் சாய்ந்துகொண்டான்… அவன் கைகள் அவள் இடுப்பை வளைத்து தன்னோடு இறுக்கிக்கொண்டது….
செல்வி முதல்நாள் அவனிடம் முத்தம் வாங்கிய அனுபவத்தில் மிக நேர்த்தியாக அதை திருப்பிக் கொடுத்தாள்… தேவனின் கடைவாயில் இருவரது உமிழ்நீரும் வழிந்தது.. ஆனால் அதை வழியவிடாமல் உறிஞ்சி எடுத்தாள்.. அவள் ஓய்ந்ததும் தேவன் ஆரம்பித்தான்… இப்போது செல்வி மயங்கி அவன் கைகளில் துவண்டாள்… தேவனின் கைகள் அவள் துவளாமல் தாங்கியது
இருவரும் சூழ்நிலை உணர்ந்து விலகிய போது… செல்வி நிமிரவே இல்லை… நிற்கமுடியாமல் தடுமாறியவள் அவன் சட்டையின் இடுப்பு பகுதியை கொத்தாகப் பற்றிக்கொண்டு தன்னை நிதானப்படத்திக்கொண்டாள்
தேவன் அவளை காதலாகப் பார்த்து கலைந்திருந்த கூந்தலை சரி செய்து… நெற்றியில் இருந்த விபூதி கீற்றை நேராக்கி ஒதுங்கியிருந்த மூடிவிட்டு.. “ அங்க தேடுவாங்க போ செல்வி” என்றான் மெதுவாக…
“ம்ம்” என்றாளே தவிர அவனைவிட்டு நகரவில்லை.. அப்படியே தலை குனிந்து நின்றிருந்தாள்…