மான்சிக்காக – பாகம் 38 – மான்சி கதைகள்

FB_IMG_1466872824439வீரேன் ஓங்கிய அருவாளுடன் நெருங்க… சத்யன் தப்பிக்கும் வழியை யோசித்தபடி பின்னால் நகர… “ மாமா….” ஒருக்களித்திருந்த கதவைத்திறந்து கொண்டு ஓடிவந்த மான்சி வீரேனின் கையிலிருந்த அருவாளைப் பார்த்துவிட்டு

“ வேனாம் வீராண்ணா” என்று அலறியபடி சத்யனை இறுக்கி அணைத்தாள்.. சத்யன் பதட்டத்துடன் மான்சியை விலக்கி தள்ளுவதற்குள் சத்யனின் கழுத்தை குறிவைத்து ஓங்கிய வீரேன் கையிலிருந்த அருவாள் சத்யனை அணைத்திருந்த மான்சியின் பின் கழுத்தை ஒட்டி முதுகின் மேல்புறத்தில் இறங்கியது…வீரேன் தனது தங்கை உள்ளேயிருந்து ஓடி வருவதை பார்த்துவிட்டு தனது கையின் வேகத்தை குறைக்க நினைத்தான் தான்.. ஆனால் ஓங்கிய விசை மான்சியின் தோளில் இறங்கியதும் தான் வேகம் குறைந்தது… ஒரு நிமிடம் சத்யனின் உலகமே ஸ்தம்பித்தது… அவன் இதயம் சில நிமிடங்கள் நின்று போய் மீண்டும் துடித்தபோது…

“ மாமா நீ இங்கருந்து போயிடு” என்றபடி மெதுவாக சரிந்தாள் மான்சி.. அதன்பின் சத்யன் அலறிய அலறலில் ஊரே ஒன்று கூடியது… “ ஏன்டி இப்படி பண்ண.?. அய்யோ நான் வெட்டுப்பட்டு செத்திருப்பேனே?.. நீ ஏன்டி நாயே வந்து விழுந்த?” என்று வலியால் துடிக்கும் மனைவியை தன் நெஞ்சில் அணைத்துக்கொண்டு சத்யன் கத்தி கதறினான்…

மனைவியை மடியில் போட்டுக்கொண்டு சத்யன் விட்ட கண்ணீர் வீரேனை உலுக்கியெடுத்தது… தங்கையின் வார்த்தைகள் அவன் காதுகளில் நெருப்பு குழம்பாக விழுந்தது…. தன் ஆசை தங்கையை தன் கையாலேயே வெட்டிவிட்டோம் என்று புரிந்தபோது வீரேனுக்கு இந்த உலகமே இருண்டு போனது..“ அய்யோ தங்கச்சி” என்றபடி அவனும் சரிந்து அவளருகில் அமர்ந்தான் வீரேன்… அவன் கைகளை வேதனொயுடன் பற்றிய மான்சி “ வீரண்ணா மாமாவை ஒன்னு பண்ணாத?.. என்னை வேனும்னா கொன்னுடு… என் மாமாவை ஒன்னும் பண்ணாதண்ணா?.. அவர் என் உயிர் அண்….ணா” என்று சொல்லிகொண்டு இருக்கும்போதே மான்சியின் கண்கள் சொருகி ஆழ்ந்த மயக்கத்திற்கு போனாள் மான்சியின் வார்த்தைகள் வீரேனின் நெஞ்சை குத்தி கிழிக்க…

“ அய்யோ தப்பு பண்ணிட்டேனே?” என்று முகத்தில் அறைந்துகொண்டு கதறினான் வீரேன்… கூட்டத்தில் இருந்தவர்கள் யாரோ தர்மனுக்கு போன் செய்து தகவல் சொல்ல… அவர் மீனாவுடன் காரை எடுத்துக்கொண்டு ராமைய்யாவின் வீட்டுக்கு வந்தார்…

தன் மகளின் கதியைப் பார்த்த அடுத்த விநாடி மீனா மயங்கி சரிய.. தர்மன் வீரேனை ஒரே அறை அறைந்து கீழே தள்ளினார்… “ தூக்குடா மாப்ள ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்று மயங்கி கிடந்த மனைவியை அங்கேயே விட்டுவிட்டு காரை நோக்கி ஓடி காரில் ஏறி ஸ்டார்ட் செய்து தர்மன் தயாராக இருக்க சத்யன் கண்களில் வழியும் கண்ணீரோடு மான்சியை கையில் ஏந்தினான்.. வீரேன் தங்கையின் கால்களைப் பற்றிக்கொண்டான்..

See also  மான்சிக்காக - பாகம் 63 - மான்சி கதைகள்அப்போது அங்கே பைக்கில் வந்த தேவன் “ டேய் பாவி தங்கச்சி போய் வெட்டிட்டயேடா?” என்று வீரேனின் சட்டைப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளிவிட்டு மான்சியின் காலைப் பற்றி காரில் ஏற்றிவிட்டு தனது அப்பாவை நகர சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரட்டினான் சத்யன் கட்டியிருந்த பட்டு வேட்டி முழுவதும் மான்சியின் ரத்தம் தேங்கி உறைந்தது..

மனைவியின் முகத்தை மடியில் வைத்துக்கொண்டு “ மான்சிக்கு எதாச்சும் ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்கமாட்டேன் மாமா” என்று கதறிய சத்யனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் தர்மன் தன் மருமகனுக்காக கண்ணீர் வடித்தார்…

சத்யனும் மான்சியும் கோயிலில் இருந்து வருவார்கள்.. அவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும் என்று எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் பஞ்சவர்ணம்

“ என் உயிரையே என் கைகளில் ஏந்தினேன்…

“ என் கைகள் உதறின…

“ என் கால்கள் பதறின…

“ என் சிந்தனை சிதறியது…

“ என் இதயம் கதறியது…

“ கண்கள் வெளிறியது…

“ என் உயிர் உருகியது…

“ அவளை இழந்தால்… பிறகு நான்?தன் மடியில் கிடந்த மான்சியின் முகத்தையேப் பார்த்த சத்யன் “ மாமா மதுரைக்குப் போய் பெரிய ஆஸ்பத்திரியில பார்க்கலாமா?” என்று கலவரத்துடன் சொன்னதும்… பின்னால் திரும்பி சத்யனைப் பார்த்த தர்மன்

“ இல்ல வேண்டாம் மாப்ள,, மதுரைவரை போறது நல்லதில்லை… மான்சி வேற இரு உயிரா இருக்கு.. நம்ம தேனியிலேயே பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் இருக்கு.. அதனால இங்கயே பார்த்துக்கலாம்.. அதோட காயம் தோள்ல தானே? அவ்வளவாக ஆபத்து இருக்காது.. மான்சி பலகீனமா இருக்குறதால தான் மயக்கம் வந்துருச்சு

” என்று சத்யனுக்கு சொல்வது போல தனக்கும் ஆறுதல் சொல்லிகொண்டார் சத்யன் மடியில் இருந்த மான்சியின் முகத்தை எடுத்து தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டு

“ ஏன் இப்படி பண்ணா மாமா? இவ இல்லேன்னா நானும் இல்லேன்னு இவளுக்குப் புரியாமப் போச்சே மாமா” என்று தொண்டையடைக்க சத்யன் கதறுவதை கேட்ட தர்மன் என்ன சொல்வது என்று புரியாமல் அவரும் உடைந்தார் இருவரின் கதறலும் தேவனை உலுக்கியது“ வேனாம் மாமா அழாதீங்க… மான்சிக்கு ஒன்னும் இல்லை” என்று சத்யனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தர்மனிடம் திரும்பி “ ஏன்பா மாமாவுக்கு ஆறுதல் சொல்லாம நீங்களும் சேர்ந்து அழுவுறீங்களே” என்று அப்பாவை கடிந்துகொண்ட தேவனின் கண்களிலும் கண்ணீர்…

அதன்பின் காரை செலுத்திய தேவனின் வேகம் அதிகமானது… தேனியில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமணையின் வாசலில் கார் நின்றபோது.. தர்மன் காரில் வரும்போது ஏற்கனவே தகவல் சொல்லியிருந்ததால் அவர்களது குடும்ப டாக்டர் தயாராக மருத்துவமனையின் ரிசப்ஷனில் நின்றிருந்தார்.. சத்யனும் தேவனின் மான்சியை மெதுவாக காரிலிருந்து இறக்கி தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் கிடத்தினார்கள் …

See also  மான்சிக்காக - பாகம் 40 - மான்சி கதைகள்

மருத்துவமனையின் ஊழியர்கள் சத்யனையும் தேவனையும் விலக்கித் தள்ளிவிட்டு ஸ்ட்ரெச்சரை தள்ளிக்கொண்டு ஓடினார்கள்.. சத்யன் தேவன் இருவரும் பின்னால் ஓடினர் .. தர்மனை குடும்ப டாக்டர் தனியாக அழைத்துச்சென்று “ என்ன தர்மலிங்கம்.. போலீஸ்க்கு தகவல் சொல்லிடலாமா?” என்று கேட்க…. தர்மன் யோசனையுடன் தாடையை தேய்த்துவிட்டு“ வெட்டுனது என் மகன்.. வெட்டுப்பட்டது என் மகள்… ஆனாலும் இதுக்கு என்னால எந்த சமாதாமும் சொல்லமுடியாது தயாளன்… என் மருமகன் தான் இதுக்கு பதில் சொல்லனும்… மொதல்ல என் மகளை காப்பாத்துற வழிய பாருங்க,” என்று சொல்லிவிட்டு மகளை அழைத்துச்சென்ற வழியில் உள்ளே போனார் டாக்டரும் அவரைப்பின் தொடர்ந்து சென்றார்.. ஆப்ரேஷன் தியேட்டர் கதவு மூடியிருக்க அதன் வாசலில் தரையில் மடிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறிய சத்யனை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல்

தேவனும் உடன் சேர்ந்து அழுதுகொண்டிருந்தான் பதட்டமாய் அவர்களை நெருங்கிய தர்மன்,, தன் மகன் தோளில் கைவைத்து “ ஏன்டா அவன்தான் அழுதா.. நீ அவனை சமாதானம் பண்றத விட்டுட்டு கூட சேர்ந்து அழுவுறயேடா? ”

வரும்போது மகன் தனக்கு சொன்னதையே இப்போது அவனுக்கு சொன்னார்.. “ இல்லப்பா.. நம்ம மான்சி சின்னப்புள்ளல பென்சில் சீவும்போது அவ விரல்ல பிளேடு பட்டாலே மாமா தாங்கமாட்டாரு,, ஆஸ்பத்திரிக்கு தூக்கிகிட்டு ஓடுவார்.. இப்போ பாருங்கப்பா எவ்வளவு ரத்தம்னு.. என்னால இதைப் பார்க்க முடியலைப்பா” என்று கதறிய தேவன் சத்யனின் வேட்டியைப் பிரித்து காட்டினான்சத்யன் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை, அவன் மனம்போன போக்கில் எதைஎதையோ நினைத்து அழுதுகொண்டிருந்தான்.. சிலநேரம் வெறிப்பிடித்தவன் போல் முகத்தில் அறைந்துகொண்டு “ என்னாலதான் எல்லாம் என்னாலதான்” என்று கதறினான்

நன்றி:- சத்யன்

error: read more !!