மனசுக்குள் நீ – பாகம் 21 – மான்சி தொடர் கதைகள்

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் குழம்பி போய் நின்றாள்,, அதற்க்குள் எதிர்முனையில் இருந்த நபர் “ ஓகே நான் வச்சிரட்டுமா?” என்றார்

அய்யோ என்ற பதட்டத்துடன் “ சார் சார் வச்சிராதீங்க,, எனக்கு படிக்க உதவிய நீங்க இன்னொரு உதவியும் செய்யனும்னு உங்களை வணங்கி கேட்கிறேன் சார்” என்று வேதனையில் மெலிந்த குரலில் ரஞ்சனா கூறினாள்

அந்த குரல் அந்த நபரை ஏதோ செய்திருக்கவேண்டும் “ சொல்லுங்க ரஞ்சனா என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்” என்றார்

“ சார் எனக்கு யாரையும் தெரியாது ,, எனக்கு ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தால் உங்களை மறக்கமாட்டேன்,, விடுதியை விட்டு வெளியே வந்து இரண்டு நாள் ஆச்சு,, தோழியோட அறையில் தங்கியிருக்கேனெ்,, ஒரு வேலை கிடைத்தால்தான் அடுத்தவேளை உணவு எனும் நிலையில் இருக்கிறேன் ” என்று ரஞ்சனா சொல்வதற்குள் கண்ணீர் கன்னங்களில் வழிந்ததுஅந்த மனிதர் சிறிதுநேரம் யோசித்துவிட்டு “ சரி நீங்க உடனே கிளம்பி கோவை வரமுடியுமா? இங்கே ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று ஆறுதலாக கூறினார்

ரஞ்சனாவின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே “ இதோ உடனே கிளம்பி வருகிறேன் சார் ,, ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று தடுமாற்றத்துடன் கூற

“ இட்ஸ் ஓகே கிளம்பி வந்து இதே நம்பருக்கு கால் பண்ணுங்க எங்க வரனும்னு சொல்வாங்க ” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்
மறுநாள் அதிகாலை ரஞ்சனா தன் தோழியிடம் சொல்லிவிட்டு சேலம் வழியாக கோவை சென்றாள்

அந்த நம்பருக்கு போன் செய்தபோது, ஒரு முகவரியை கொடுத்து அங்கே வரச்சொன்னார்கள்,, ரஞ்சனா ஒரு ஆட்டோவில் ஏறி அவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்றாள்

பர்வதம்மாள் டெக்ஸ்டைல் மில் என்று நியான் எழுத்துக்கள் மின்ன,, மிக பிரமாண்டமாக இருந்த அந்த மில்லை பார்த்து பிரம்மித்துப்போன ரஞ்சனா வாட்ச்மேனிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்முன்பாகவே இருந்த அழகான வரவேற்பு அறையில் ஒரு மூலையில் இருந்த மேசையருகே போய் அதன் பின்னால் இருந்த பெண்ணிடம் தனது பெயரைச்சொல்லி “ ஒரு ஜாப் விஷயமா என்னை வரச்சொன்னாங்க” என்றாள்
பெண் அவளை சிறிதுநேரம் காத்திருக்க சொல்லிவிட்டு பக்கவாட்டில் இருந்த அறைக்குள் போனாள்,, ரஞ்சனா அந்த வரவேற்பு அறையை நோட்டம் விட்டாள் அங்கிருந்த அத்தனை பொருட்களிலும் ஒரு நேர்த்தி இருந்தது,, பணத்தின் செழுமை இருந்தது

ரஞ்சனா பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அந்த பெண் வந்து “ நீங்க உள்ளே போகலாம்,, லெப்ட் சைட் பர்ஸ்ட் ரூம்” என்று கைக்காட்டினாள்

See also  அக்கா நோட்ஸ் - பாகம் 02 இறுதி

“ தாங்க்யூ” என்று புன்னகையுடன் கூறிவிட்டு ரஞ்சனா அந்த அறையை நோக்கி போனாள்

கிருபானந்தன் MA என்ற எழுத்துக்கள் கதவில் மின்ன,, தான் சந்திக்கப்போகும் நபரின் பெயர் கிருபானந்தன் போலருக்கு,, என்று மனதில் யூகித்தபடி ஆள்காட்டிவிரலால் கதவை மெதுவாக தட்டி “மே ஐ கமின் சார்” என்றாள்

“ உள்ளே வாங்க” என்று தொலைபேசியில் இவளுடன் உரையாடிய அதே கம்பீரக் குரல் தமிழில் அழைக்க,, ச்சே நாமளும் தமிழிலேயே கேட்டிருக்கலாமோ, என்று எண்ணியபடி கதவை திறந்துகொண்டு உள்ளே போனாள்அந்த அறை எளிமையாக இருந்தாலும் அழகாக இருந்தது,, அந்த அறையின் நடுவே இருந்த பெரிய மேசைக்கு பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த மனிதரை வணங்கினாள் ரஞ்சனா

“ ம் உட்காருங்க ரஞ்சனா,, மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஆசிரமத்தில் இருந்து அனுப்பிய உங்களோட பயோடேட்டாவில் உங்கள் போட்டோவில் பார்த்தது,, அதுல ரொம்ப சின்னப்பிள்ளயா இருந்தீங்க ” என்று கூறி அறிமுகமாக கிருபா புன்னகைக்க…

அந்த புன்னகையை கண்டு ரஞ்சனா வியந்து போனாள் ,, பணக்காரர்களுக்கு இப்படி புன்னகைக்க கூட தெரியுமா? அவளுக்கு விபரம் தெரிந்த வரை அவளிடம் யாருமே இதுபோல நேசத்துடன் புன்னகை செய்ததேயில்லை,, குருமூர்த்தியும் சிரிப்பான் அதில் விஷமம் தான் அதிகமிருக்கும்

“ என்னாச்சு மிஸ் ரஞ்சனா, அப்படியே ப்ரீஸ் ஆயிட்டீங்க” என்று கிருபா அவளின் நினைவுகளை கலைத்தான்

கிருபாவுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து “ ம் ஒன்னுமில்லங்க சார்,, எனக்கு படிப்பை குடுத்த ட்ரஸ்ட் உரிமையாளர் வயதானவராக யூகித்திருந்தேன்,, அதான்” என்று ரஞ்சனா சொல்லவந்ததை முடிக்காமல் இழுக்க…“ ஓ… அப்போ என்னை சின்னப்பையன்னு சொல்றீங்களா ரஞ்சனா,, என்று கூறி பளிச்சென்று சிரித்த கிருபா “ ம்ஹூம் எனக்கு முப்பத்தைந்து வயது ஆகுது,, திருமணம் ஆகி அழகான மனைவியும் ஒன்பது வயதில் மகனும் இருக்கான்,, அதனால என்னையும் பெரியமனுஷன் லிஸ்ட்டில் சேர்த்துக்கங்க ரஞ்சனா” என்று சிரிப்பை அடக்கியவாறு கிருபா கூறியதும்

ரஞ்சனா பக்கென்று சிரித்துவிட்டாள்,, சிலநாட்களாக சிரிப்பதை தான் மறந்துவிட்டோம் என்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது,, இன்னும் கொஞ்சம் சிரிக்கவேண்டும் என்ற ஆவலை அடக்கிக்கொண்டாள்

“ ஓகே மிஸ் ரஞ்சனா, எங்களின் ட்ரஸ்ட் மூலம் படிக்கும் பெண்கள் யாருக்குமே நாங்கள் மீண்டும் உதவுவது கிடையாது,, காரணம் அவர்கள் அடித்தளமாக படிப்பை கொடுத்த பிறகு அவர்களின் பிற்காலத்தை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதால்தான்,, அதுவுமில்லாமல் மறுபடியும் அவர்களுக்கு செலவிடும் தொகைக்கு இன்னும் சில பெண்களுக்கு படிப்பை தரலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்,, அதனால் நீங்கள் மேற்படிப்புக்கு கேட்டபோது உங்களுக்கு எங்களால் உதவ முடியவில்லை ” என்று தனது நிலையை தெளிவாக கிருபா எடுத்து சொல்ல…

See also  மான்சிக்காக - பாகம் 12 - மான்சி கதைகள்

“ இதுவும் நல்லதுதான் சார் பல பெண்கள் பயன் பெறவேண்டும் என்பதே எனது ஆசையும்,, எனக்கு ஏதாவது வேலைகிடைத்தால் அதை வைத்து நான் பிழைத்துக்கொள்வேன் சார்”அப்போது தொலைபேசி ஒலிக்க, எடுத்து பேசினான் கிருபா “ சொல்லும்மா” என்றவர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தால் எதிர்முனையில் இருப்பவர் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தாள் ரஞ்சனா

அவளிடம் காத்திருக்குமாறு சைகையில் சொல்லிவிட்டு “ இல்ல வசி நான் மறக்கலை இதோ கிளம்பி வந்துர்றேன்,, சத்யன் கிட்ட அழவேனாம்னு சொல்லு” என்று சமாதானம் பேசியவர் எதிர்முனையின் பதிலுக்கு பிறகு “ சரிம்மா அவன்கிட்ட குடு நான் பேசுறேன்” என்றார்

சிறிது அமைதிக்கு பிறகு “ ஏய் சத்யா செல்லம் எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை இதோ இன்னும் அரைமணிநேரத்தில் வீட்டுல இருப்பேன்,, நீ அழாதேடா அப்புறம் அம்மாவும் அழுவா,, இதோ வந்துர்றேன் ” என்று கூறிவிட்டு போனை வைத்தார்

எதிரில் இருந்த ரஞ்சனாவை பார்த்து புன்னகை செய்து “ ஸாரிம்மா,, வீட்டிலிருந்து போன்,, பையனை சயின்ஸ் எக்ஸிபிஷன் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்தேன்,, நான் இன்னும் வரலைன்னு அழுது ஆர்பாட்டம் பண்றான் போலருக்கு,, நான் உடனே போகனும்,, உங்களை இங்கே ஸ்டெனோவாக அப்பாயின்மென்ட் பண்ணச்சொல்லி இருக்கேன்,, நீங்க ரிசப்ஷனில் வெயிட் பண்ணுங்க,, ஆர்டரை குடுத்து வேலையைப் பற்றியும் சொல்வார்கள்” என்று மகனை காணும் ஆவலில் கிருபா படபடவென்று பேசினான்அதற்க்கு மேல் பேச எதுவுமில்லை என்பதால் எழுந்துகொண்ட ரஞ்சனா கிருபாவை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு “ ரொம்ப நன்றிங்க சார்” என்று கூறிவிட்டு கதவை நோக்கி போனாள்

Leave a Comment

error: read more !!