மான்சிக்காக – பாகம் 44 – மான்சி கதைகள்

FB_IMG_1466872662166சத்யன் ஐசியூவில் இருந்து வெளியே வந்தபோது தர்மன் மீனா தேவன் மூன்றுபேரும் கேன்டீனில் இருந்து வந்துவிட்டிருந்தனர்… மூவரும் சத்யனை நோக்கி வேகமாக வந்தனர்.. மருமகன் முகத்தில் இருந்த நிம்மதி மான்சியின் ஆரோக்கியத்தை தர்மனுக்கு சொல்லாமல் சொன்னது…

“ என்ன சத்யா? மான்சிக்கு இப்போ எப்படியிருக்கு? எதாவது பேசுறாளா? ” என்று மீனா பதட்டத்துடன் கேட்டாள் …

“ ம் நல்லாருக்கா அக்கா…. என்கிட்ட பேசினா.. இங்க இருக்க முடியாது ரூமுக்கு மாத்தச் சொல்லுங்கன்னு சொன்னா… நாளைக்கு டாக்டர் கிட்ட கேட்டு மாத்திரலாம்னு சொல்லி சமாதானம் பண்ணி தூங்க வச்சிட்டு வந்தேன்” என்று சத்யன் தெளிவுடன் சொன்னதும்.. எல்லோரும் நிம்மதியாக மூச்சுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தனர்…“ அப்போ நாங்கல்லாம் மான்சி நாளைக்கு காலையிலதான் பார்க்கமுடியுமா?” என்ற தேவனைப் பார்த்து “ ஆமாம் தேவா.. நாளைக்கு டாக்டர்கிட்ட பேசி ரூமுக்கு மாத்தினதும் கொஞ்சநேரம் மான்சிகூட இருந்துட்டு அப்பாவும் அம்மாவும் கிளம்பட்டும்.. நாம ரெண்டுபேர் மட்டும் இங்கேயே இருக்கலாம்” என்றான் சத்யன்

“ நானும் இருக்கேனே சத்யா?” என்று மீனா தம்பியிடம் கேட்டாள்

“ இல்லக்கா.. மான்சி நல்லா தெளிவாத்தான் இருக்கா… அதோட நாளைக்குத்தான் செல்வி வருதே.. நாங்க மூனுபேரும் இருந்து பார்த்துக்கிறோம்… நீ போய் அங்க இருக்கிற வேலையை கவனிக்கா” என்று சத்யன் உறுதியாக மறுத்தான்

“ சத்யா நமக்கு குடுத்திருக்க ரூம்ல போய் படுக்கலாம்… யாராவது ஒருத்தர் இங்க இருந்தா போதும்” என்று தர்மன் சொல்ல..

“… நைட் மான்சி முழிச்சிகிட்டா மறுபடியும் கூப்பிடுவாங்க… அதனால நான் இங்கயே பெஞ்ச்ல படுத்துக்கிறேன் மாமா.. நீங்கல்லாம் ரூம்ல போய் படுங்க ” என்று சத்யன் சொன்னதும் ..

“ அதுவும் சரிதான் நீ இங்கயே இரு சத்யா” என்ற தர்மன் தேவனிடம் திரும்பி “ தேவா மாமனுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்து குடு… அதான் பொண்டாட்டி கூட பேசிட்டான்ல இனிமே சாப்பிடுவான்” என்று தர்மன் சொன்னதும் சத்யனின் முகத்தில் புன்னகையின் சாயல்…“ ஆமா இப்ப சிரிடா மாப்ள…. என் மக உசுர விட உன்னை நெனைச்சு தான்டா கலங்கிப் போனேன்… உன் முகத்துல சிரிப்ப பார்த்ததும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு” என்றபடி எழுந்து ரூமுக்குப் போகலாம் என்று மீனாவை அழைத்துக்கொண்டு போனவர் .. மறுபடியும் சத்யனிடம் வந்து “ அப்புறம் மாப்ள அந்த வீரா ராஸ்கல் இங்கயே தான் சுத்திகிட்டு இருக்கான்.. மான்சி பார்க்கனும்னு சொன்னா .. கழுத்துமேலயே ரெண்டு போட்டு வெளிய அனுப்பு” என ஆத்திரமாய் கூறிவிட்டு போனார்..

See also  மான்சிக்காக - பாகம் 48 - மான்சி கதைகள்

ஐசியூ வார்டுக்குள் நடந்தது எதையும் சத்யன் தர்மனிடம் சொல்லவில்லை… சொன்னால் தர்மன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சத்யனுக்குத் தெரியும்.. மருத்துவமனையில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் என்று நினைத்து அமைதியாக தலையசைத்து அவரை அனுப்பி வைத்தான்….

தேவன் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதாக கூறிவிட்டு கேன்டீன் நோக்கிப் போனதும்… சத்யன் அமர்ந்திருந்த பெஞ்சில் கைகளை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு கண்மூடி கால்நீட்டி படுத்துவிட்டான்….அவன் மனம் நிர்மலமாய் இருந்தது… ‘ அய்யோ இப்படிப் பண்ணிட்டாளே?’ என்று காலையிலிருந்து தவித்துத் துடித்ததெல்லாம் மான்சி கண்விழித்ததும் இப்போது காதலாக மாறியிருந்தது.. இவ்வளவு மோசமான நிலையிலும் மான்சிப் பேசிய காதல் வார்த்தைகளும்… இறுதியாக கூறிய குறும்பு பேச்சும் சத்யனுக்கு நேற்றைய இரவை ஞாபகப்படுத்தியது… நேற்று அவள் கொடுத்த ஒத்துழைப்பும் அனுசரணையும் சத்யனுக்கு இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக இருந்தது… தன்மேல் மான்சி வைத்துள்ள காதலை நினைத்து சத்யனுக்கு பெருமையாக இருந்தது… ஆணாகப் பிறந்து இப்போதுதான் வாழ ஆரம்பித்திருக்கிறேன் என்று ஆசையோடு எண்ணினான்… அவளை காலமெல்லாம் காதலோடு காக்கும் வேட்கை வந்தது ..

அப்போது “ மாமா” என்ற தேவனின் அழைப்பைக் கேட்டு கண்விழித்து எழுந்து அமர்ந்தான்… கையில் இருந்த பார்சலோடு நின்றிருந்த தேவன் “ சாப்பிட்டு தூங்குங்க மாமா” என்று பார்சலை பெஞ்சில் வைத்துவிட்டு தண்ணீர் கேன் மூடியை கழட்டி வைத்துவிட்டு நிமிர்ந்தவனின் செல் அடித்தது…
மொபைலை எடுத்து ஆன் செய்துப் பார்த்து புதிய நம்பராக இருக்க “ யாரு?” என்றான் …

“ நான் செல்வி பேசுறேன்… இது எங்கப்பாவோட நம்பர்…. சின்னம்மாவுக்கு இப்போ எப்படியிருக்கு?” என்று மறுமுனையில் கேட்ட செல்வியின் குரல் அவள் அழுகின்றாள் என்று தெளிவுபடுத்தியது…

தேவன் சத்யனைவிட்டு சற்று தள்ளிப்போய் பேசினான் “ இப்போ மான்சி நல்லாருக்கு செல்வி… மாமா உள்ளபோய் பார்த்துட்டு வந்தாரு.. அவர்கிட்ட நல்லா பேசுச்சாம்… நாளைக்கு நீ வரும்போது ரூமுக்கு மாத்திடுவாங்க” என்று தேவன் சொல்ல… எதிர்முனையில் செல்வி பதில் சொல்லாமல் கேவினாள்

பிரச்சனை தங்கள் வீட்டு வாசலில் நடந்ததால் அவள் ரொம்ப பயந்து போயிருக்கிறாள் என்று தேவனுக்குப் புரிந்தது “ ஏய் அழாத செல்வி… மான்சிக்கு ஒன்னும் இல்ல எல்லாம் சரியாப்போச்சு” குரலில் அன்பு வழிய சமாதானம் சொன்னான் தேவன்…“ நீ சொல்லிட்ட… ஆனா இங்க எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? முதுகுல வெட்டு விழுந்ததால உசுருக்கு எந்த ஆபத்தும் இல்லேன்னு ஊர் ஆளுக எல்லாம் பேசிகிட்டாக… ஆனா அவங்க வயித்துல இருக்குற குழந்தை எங்க சின்னய்யாவோட வாரிசு… அதுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நான் வேண்டாத சாமியில்ல… இன்னிக்கு முழுக்க அழுதுகிட்டே இருந்தேன்.. சாப்பிடவேயில்ல தெரியுமா?” தேவனிடம் உரிமையோடு தன் மனநிலையை கூறினாள் செல்வி..

See also  மான்சிக்காக - பாகம் 56 - மான்சி கதைகள்

தேவனுக்கு அவள் சொல்வது புரிந்தது.. மான்சியை மருத்துவமனைக்கு எடுத்துவரும் போது அவள் பிழைத்தாளேப் போதும் என்றுதான் நினைத்தார்கள்… குழந்தையைப் பற்றி யாருமே யோசிக்கவில்லை… இப்போது. மான்சியின் கருவும் காப்பாற்றப் பட்டது இரட்டிப்பு சந்தோஷம்தான்.. செல்வியின் பேச்சு தனது சின்னய்யாவின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை காட்டியது …
அதான் சரியாப் போச்சே… மறுபடியும் அதையைப் பேசி கலங்க வைக்காதே செல்வி… மொதல்ல போய் சாப்பிடு” அன்பாக அதட்டினான் தேவன்…

“ நீ சாப்பிட்டயா? சின்னய்யா.. உங்க அப்பாரு. எல்லாம் ஏதாச்சும் சாப்பிட்டீகளா?” என்று கருணையுடன் கேட்டவளுக்கு “ ம்ம் எல்லாரும் சாப்பிட்டோம்” என்று பதில் சொன்னவன்“ செல்வி எங்க வீட்டு சாவியை அம்மா. அம்மாச்சி கிட்ட குடுத்துனுப்பிருக்காங்க.. நீ அதை வாங்கிட்டுப் போய் கதவ திறந்து வலதுபக்கம் ரெண்டாவது ரூம் என்னோட ரூம்… அதைத் திறந்து செல்ப்ல என்னோட டிரஸ் இருக்கும்… என் கட்டிலுக்கடியில ஒரு பேக் இருக்கும் அதை எடுத்து என்னோடது ரெண்டு செட் துணி எடுத்து வச்சிக்கிட்டு நீ வரும்போது மறக்காம எடுத்துக்கிட்டு வா….உங்கப்பா கிட்ட சொல்லி மாமாவுக்கும் போட்டுக்க டிரஸ் எடுத்துகிட்டு வா ” என்று சத்யனுக்கு கேட்காமல் மெதுவான குரலில் கூறினான் தேவன் …

Leave a Comment

error: read more !!