இருவரும் இதுவரை நேரடியாக காதலை சொல்லவில்லையே தவிர ஒருவர் மனது மற்றவருக்கு தெரியும், தேவன் கவனித்துக்கொள்ளும் ஆலையில் வேலைக்குச் சேர்ந்த போது அங்கு வேலை செய்யும் மற்ற பெண்களைப் போலத்தான் செல்வியும்..
நாளாக நாளாக அவளின் துடுக்கான பேச்சும் சுறுசுறுப்பும் தேவனை பெரிதும் கவர அவளிடம் சும்மாவேனும் ஏதாவது பேச்சுக்கொடுத்தான்… பெரிய கண்களை விரித்து, நெற்றியில் வந்து கற்றையாக கூந்தல் விழ தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியபடி பேசும் அவள் அழகை கண்டு மயங்கி நிற்பான்,
அவன் தன் காதலை உணரும் தருணத்தில் தான் குடும்பத்தில் தகராறு வந்து செல்வி வேலைக்கு வராமல் நின்று போனாள்… அவளை காணாமல் தவித்து அவள் போகுமிடமெல்லாம் மறைவாக இவனும் பின்னால் போவான்… அப்படித்தான் அன்றும் அவளைத் தேடி எங்குமே இல்லையென்றதும் பயங்கர கோபத்தோடு
தன் வீட்டுக்குப் போனவன் அங்கே செல்வி நாட்டாமை பண்ணிக்கொண்டு இருக்க.. அவளைப் பார்க்க முடியாத ஆத்திரத்தில் கூந்தலைப் பற்றி இழுத்தது.. ஆனால் அதற்காக தேவன் வருந்தவே இல்லை.. எனக்கு உரிமையிருக்கு நான் பண்ணுவேன் என்று நினைத்தான் .. இன்று அவளின் இரண்டிலொன்று முடிவு தெரிந்தே ஆகவேண்டும் என்றுதான் பின்னாலேயே வந்தது..
“ சொல்லு செல்வி உன்னை எப்படி தனியா பாக்குறது?” என்று மறுபடியும் கேட்டவனை பார்த்து குறும்பாக சிரித்தவள் “ இப்ப என்னமோ நம்ம கூட நூறுபேர் இருக்குற மாதிரி பேசுற.. என்று சொல்லிவிட்டு வாய்ப்பொத்தி சிரிக்க…
“ ஏ…. செல்வீ………. அப்பன்னா இனிமே இங்கயே பார்த்துக்கலாம்னு சொல்றியா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் தேவன் …
“ அய்யோ போ போ .. நான் ஒன்னும் அப்படி சொல்லலை” என்று ஓடியவளை மறித்து நின்று…
“ நாளைக்கு இதேநேரம் இங்க வந்து உனக்காக காத்திருப்பேன் செல்வி, நீ கட்டாயம் வரனும், இல்லேன்னா எவ்வளவு நேரமானாலும் இங்கேயே இருப்பேன், வீட்டுக்கு போகமாட்டேன்… அப்புறம்.. உனக்காக நான் ஒன்னு வாங்கி வச்சிருக்கேன் , நாளைக்கு நீ வந்ததும் அதை தருவேன்” என்று தன் காதலை மறைமுகமாக சொல்லியேவிட்டான் தேவன்
சிலவிநாடிகள் மவுனத்திற்கு பிறகு … சரியென்று தலையசைத்து விட்டு நகர்ந்தவளை மறித்து நின்ற தேவன் “ செல்வி இத்தனை நாளா உன் பின்னாடியே அலைஞ்சேனே உனக்கு இரக்கமேயில்லையா?” என்று கேட்டதும்…
“ அதான் நாளைக்கு வர்றேன்னு சொன்னேன்ல அப்புறமா ஏன் சும்மா சும்மா வழி மறிச்சு நிக்கிற ” என்று கூறியபடி குழப்பத்துடன் நிமிர்ந்தவள் தேவன் தன் உதடுகளையே தாபத்துடன் பார்ப்பதைப் பார்த்து “ ஏய் ச்சீ” என்று வெட்கத்துடன் விலகினாள்..
“ என்ன ச்சீ, வா செல்வி ஒன்னே ஒன்னுதான் ” என்று அவள் கையைப்பிடித்து இழுத்து தன் நெஞ்சில் சாய்த்தவன் அவள் திமிறி விடுபடும்முன் சட்டென்று குனிந்து அவள் இதழ்களை கவ்விக்கொண்டான்… இத்தனை நாட்களாக பார்த்துப் பார்த்து ஏங்கியது கைக்கு கிடைத்த சந்தோஷத்தை அவளை அணைத்துக்கொண்டு ஆழமாய் முத்தமிட்டான்
முதலில் மறுத்து முரண்டியவள் நேரம் செல்ல செல்ல தன் இதழ்களை பிளந்து அவன் மூச்சு தன்னோடு கலக்க வழி விட்டாள்,, நேற்றுவரை இரு துருவமாக இருந்தவர்கள் இன்று மூச்சுடன் மூச்சாக கலந்தார்கள்..
தேவன் தனது முதல் முத்தத்தில் மயங்கி ஆர்வமாய் அவளின் கீழுதட்டை கடித்துவிட,, பட்டென்று அவனிடமிருந்து தன் உதடுகளை பிடுங்கிக்கொண்டு அணைத்திருந்த அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு வெட்கத்துடன் ஓடினாள் செல்வி…
“ ஏய் ஏய் செல்வி” என்று அவள் பின்னாலேயே ஓடிவந்த தேவன் யாரோ எதிர் திசையில் வருவதைப் பார்த்து “ நாளைக்கு மறக்காம வந்துடு காத்திருப்பேன்” என்று அவளுக்கு மட்டும் ரகசியம் சொல்லிவிட்டு கிளம்பினான்