மனசுக்குள் நீ – பாகம் 38 – மான்சி தொடர் கதைகள்

அவனது அழுகுரல் கேட்டதுமே வசந்தியின் மவுனம் உடைந்து போனது “ அய்யோ என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க,, இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை,, எனக்கு பிறகு உங்களுக்கு ஒரு துணை வேனும்னு நெனைச்சேன்,

அது நீங்க விரும்பிய ரஞ்சனாவா இருந்தா நல்லதுன்னு கடவுளை வேண்டினேன்,, அப்படியே அமைஞ்சதுல எனக்கு சந்தோஷம் தான்,, நான் எப்பவுமே உங்க வசந்திங்க,, இன்னும் எத்தனை பொண்ணுங்க உங்க வாழ்க்கையில் வந்தாலும் உங்க மனசுல உயர்ந்த இடத்துலதான் என்னை வச்சுருப்பீங்கன்னு எனக்கு தெரியும்,, நீங்க எதை நெனைச்சும் கவலை படாதீங்க,,ஒன்னும் அவசரமில்லை மெதுவாவே வாங்க, வரும்போது அவளையும் கூட்டி வாங்க” என்றாள் வசந்தி, அவள் குரலில் ஒரு சந்தோஷம் நினைத்ததை சாதித்து விட்ட சந்தோஷம்,,

தப்பு செய்துவிட்டு அதை பலவருடங்களாக மறைத்து வாழும் ஆண்கள் மத்தியில், சூழ்நிலையால் தவறினாலும் அதை மறைக்கத் தெரியாமல் உடனே கண்ணீருடன் ஒப்புக்கொண்ட கணவனை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது

வசந்தியின் குரல் ஒரளவுக்கு தைரியத்தை கொடுக்க “ அவ எழுந்ததுல இருந்து என்கூட சரியாவே பேசலை வசந்தி,, நடந்ததை ரொம்ப அவமானமா நெனைக்கிறாப் போலருக்கு,, இப்போ ஆஸ்பிட்டல் கூப்பிட்டா வருவாளான்னு தெரியலை ” என்றான் கிருபா

ஒரு நிமிட மவுனத்துக்கு பின்னர் “ என்னதான் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தவறிட்டாலும் மானமுள்ள எந்த பொண்ணும் நடந்ததை நெனைச்சு அவமானப்படத்தான் செய்வா,, என்னதான் இதுக்கெல்லாம் நானும் ஒரு காரணமாயிருந்தாலும் என் முகத்தில் முழிக்க சங்கடமாத்தான் இருக்கும்,, நீங்க ரஞ்சனாவா கூப்பிட்டா வரமாட்டா,, உங்க பொண்டாட்டியா கூட்டிட்டு வாங்க நிச்சயமா வருவா” என்ற வசந்தி “ சரிங்க என்னால பேசமுடியலை, நீங்க இங்க வாங்க பேசிக்கலாம்” என்று போனை வைத்துவிட்டாள்கிருபா கலங்கிய கண்களுடன் கையில் இருந்த செல்போனை வெறித்தான்,, வசந்தியைப் போல உயர்வான பெண்கள் உலகத்தில் இருப்பார்களா,, என் சந்தோஷம் ஒன்றே குறிக்கோளாக வாழும் இவள் போன ஜென்மத்தில் என் தாயாகத் தான் இருந்திருக்கவேண்டும்’, என்று எண்ணினான் கிருபா

சிறிதுநேரம் அங்கேயே நின்று யோசித்தான், அப்போது வயலில் இருந்து வந்த அன்னம்மாவை பார்த்ததும் தன்னருகில் அழைத்தான்,, அவன் கூப்பிட்டான் என்றதும் சிறு பெண்போல் அவசரமாக ஓடிவந்த அன்னம்மாவிடம் நெருங்கி எதையோ விசாரித்து ஏதோ எடுத்து வரச்சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டான்
படுக்கையறைக்கு வந்து பேக்கில் இருந்து உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு அங்கிருந்த கண்ணாடியில் தலையை வாரிக்கொண்டு வெளியே வந்தான்,,

அதற்குள் கந்தனுக்கு செய்திப் போய் வாயெல்லாம் பல்லாக ஓடிவந்து கிருபாவின் கையைப் பற்றிக்கொண்டார்

See also  மான்சிக்காக - பாகம் 56 - மான்சி கதைகள்

“ இப்பதான் ராசா கெழவி விஷயத்தை சொன்னா,, உடனே வேலையை போட்டுட்டு ஓடியாந்தேன்,, அந்தப்புள்ள ரொம்ப பாவம் சாமி,, எவ்வளவு ஏச்சயும் பேச்சயும் தாங்ககிட்டு இருக்கு,, இன்னிக்குத்தான் அதுக்கு விடிவுகாலம் பொறந்திருக்கு போல” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்

சிறு சிரிப்புடன் அவர் கையை தட்டிக்கொடுத்த கிருபா,, அவருடன் எதிரில் இருந்த பூஜையறைக்குள் நூழைந்தான்,, அங்கிருந்த கிருபாவின் பெற்றோர்கள் படங்களுக்கு முன்பு அன்னம்மா விளக்கேற்றி வைத்திருந்தார்,,கிருபா கண்கலங்க தன் பெற்றோரின் படங்களை பார்த்தான்,, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எல்லைக்கோட்டை மீறாமல் வாழ்ந்து மறைந்த அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டான்,, பணம் அந்தஸ்து என்று படாடோபமாக வாழமல் எளிமையே உருவாக பரம்பரை கௌரவத்தை மதித்து வாழ்ந்து மறைந்த அம்மாவிடம் அந்த கௌரவத்தை குலைத்ததற்காக கண்ணீர் மல்க மன்னிப்பை வேண்டினான்,

ஆனாலும் ஒரு அபலைக்கு வாழ்க்கை கொடுத்ததை எண்ணி தன் பொற்றோர்கள் தன்னை மன்னிப்பார்கள் என்ற தைரியத்துடன் “ அவளை கூட்டி வாங்க அன்னம்மா” என்றான்

அன்னம்மா போன சிறிதுநேரத்தில் இடுப்பில் குழந்தையுடன் வந்த ரஞ்சனா அங்கிருந்த கண்கலங்கி நின்ற கிருபாவை பார்த்து திகைப்புடன் பார்த்தாள்

பிள்ளையார் சிலை இருந்த மாடத்தில் இருந்து மஞ்சள் முடிந்த தாலிச் சரடை எடுத்து அன்னம்மா கிருபாவின் கையில் கொடுக்க, அதை வாங்கி தன் பெற்றவர்களின் பாதங்களில் வைத்து கும்பிட்டுவிட்டு, இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்த ரஞ்சனாவின் கழுத்தில் கட்டினான் கிருபா

இதையெல்லாம் எதிர்பார்க்காத ரஞ்சனா திகைப்பில் வாயடைப்போய் நின்றிருக்க,, அன்னம்மா கொடுத்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்துவிட்டு, அவளிடம் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு அவள் கையைப்பிடித்து அவளுடன் மண்டியிட்டு குழந்தையோடு தனது பெற்றோர்கள் படத்துக்கு வணங்கி எழுந்தான், பிறகு அன்னம்மா கந்தன் காலில் விழுந்து வணங்க,, அவர்கள் கண்ணில் நீருடன் ஆசிர்வதித்தார்கள்கண்ணை துடைத்துக்கொண்ட அன்னம்மா கிருபாவின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக்கொண்டு வெளியே போய்விட, அவருடன் கந்தனும் வெளியே போனார்

பின்னர் ரஞ்சனாவின் தோள்ப்பற்றி தன்புறம் திருப்பி “ இப்பவாவது புரிஞ்சுக்கிட்டயா நான் குருமூர்த்தி இல்லை,, உன்னை உண்மையா நேசிக்கும் கிருபானந்தன்னு” என்று கிருபா தீர்க்கமாக கேட்க

“ என்னை மன்னிச்சிடுங்க” என்று கதறியபடி அவன் காலில் விழுந்தவளை தூக்கி அணைத்துக்கொண்டான்,, அவன் தோளில் தலை சாய்த்து “ மறுபடியும் நான் எச்சில் இலை ஆயிட்டேனோன்னு ரொம்ப அவமானப்பட்டேங்க,, அதனாலதான் காலையில உங்க முகத்தில் முழிக்கவே அசிங்கமா இருந்தது” என்று காலையிலிருந்த தனது நிலைக்கு இப்போது விளக்கம் கூறினாள்

அவன் தோளில் உரிமையோடு தலைசாய்த்திருந்தவளை விலக்கி நிறுத்தி “ இப்போ சந்தோஷம் தானே, போதும் அழுதது, போய் டிபன் எடுத்து வை சாப்பிட்டு ஆஸ்பிட்டல் போகலாம்” என்று கூறிவிட்டு அவள் முகத்தருகே குனிந்து அவள் இதழ்களில் தன் உதட்டை வைத்து அழுத்தினான் கிருபா
ஒரு நிமிடம் அவன் முத்தத்தில் மயங்கியவள், மறுநிமிடம் அவனை விலக்கித் தள்ளிவிட்டு வெட்கத்துடன் வெளியே ஓடினாள்..

See also  பொம்மலாட்டம் - பாகம் 20 - மான்சி தொடர் கதைகள்

நேற்று இரவு அவ்வளவு நடந்தபோது இல்லாத வெட்கம் இப்போது அவளிடம் பார்த்து கிருபாவுக்கு சந்தோஷமாக இருந்தது… சிரிப்புடன் வெளியே வந்து அன்னம்மாவிடம் இருந்து மகளை வாங்கிக்கொண்டு இதுவரையில் இல்லாத உரிமையோடு கொஞ்சினான்

அதன்பின் இருவரும் சிறுசிறு பார்வையின் உரசல்களுடன் சாப்பிட்டு விட்டு குழந்தையோடு மருத்துவமனைக்கு கிளம்பினார்கள்..வசந்தியின் அறைக்குள் நுழைந்தவுடன் ரஞ்சனா வேகமாக போய் கட்டிலில் கிடந்த வசந்தியின் காலைத்தொட்டு கும்பிட்டாள்,, வசந்தி சங்கடத்துடன் காலை இழுத்துக்கொண்டு “ என்னம்மா இது எழுந்திரு” என்றாள்

பின்னால் வந்த கிருபா கையிலிருந்த அனிதாவை வசந்தியி மடியில் வைத்துவிட்டு அவளருகில் அமர்ந்துகொண்டான்.. சாய்ந்து அமர்ந்திருந்த வசந்தியின் தோளில் அவளுக்கு நோகாமல் ஆதரவாக தலையை சாய்த்துக்கொண்டான்,,

அவன் மனதில் இவ்வளவு நாள் இருந்த குற்றவுணர்வு இப்போது இல்லை, மனம் நிர்மலமாக இருந்தது,, அய்யோ மனைவிக்கு துரோகம் செய்கிறோமே என்ற தவிப்பு இப்போது இல்லை,,இத்தனை நாட்களாக ரஞ்சனாவை மனதில் கள்ளத்தனமாக நேசித்த அவமானம் இப்போது இல்லை,, ரஞ்சனாவுக்கு ஏற்ப்பட்ட கெட்டப்பெயரையும் துடைத்து, ரஞ்சனா கழுத்தில் தாலி கட்டியதன் மூலம் கள்ளத்தனத்தையும் உதறிவிட்டு நேர்வழியில் கால் வைத்திருப்பதாக அவன் மனதில் எண்ணினான்

Leave a Comment

error: read more !!