மனசுக்குள் நீ – பாகம் 33 – மான்சி தொடர் கதைகள்

கிருபா வீட்டுக்கு வந்தபோது அவன் முகமே வசந்தியிடம் அவனை காட்டிக்கொடுத்தது,, மவுனமாக உடை மாற்றியவனை பார்த்து “ குழந்தை எப்படியிருக்கா” என்று வசந்தி கேட்டாள்

வசந்தியின் படுக்கையை சரிசெய்துகொண்டே “ ம் நல்லாருக்கா” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மகனைத் தேடி வெளியே சென்றான், 

ஏதோ நடந்திருக்கிறது என்று வசந்திக்கு புரிந்தது,, ஆனால் அவனிடம் கேட்கவில்லை,, அவன் மனதில் ரஞ்சனா இருப்பது தெளிவாக தெரிந்தாலும், அவன் ரஞ்சனாவை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு காரணம் சமூகத்தில் உள்ள அந்தஸ்தும்,, தன் மீது வைத்துள்ள அன்பும் தான் என்று வசந்தி எண்ணினாள்கிருபாவின் மனதை மாற்றுவது கஷ்டமான காரியமாக இருந்தது,, வசந்திக்கு அவள் குடும்பம் சிதறாமல் பாதுகாக்கப்பட வேண்டும்,, தனக்கு பிறகு கிருபா குடும்பம் குழந்தை என சந்தோஷமாக வாழவேண்டும்,, அதை தன் உயிர் இருக்கும்போதே செய்துவிட நினைத்தாள்

அதற்கு என்ன செய்வது என்று வெகுநேரம் யோசித்தாள்,, அன்று இரவு உணவு முடிந்து கிருபா வந்து படுக்கையில் படுத்து அவளை மெதுவாக அணைத்து தூங்கியபோதும் வசந்திக்கு தூக்கம் வரவில்லை,, ‘ இதோ இந்த நிலை மாறவேண்டும்,, நோயுற்றவள் என்ற அருவருப்பின்றி என் மனைவி இவள் என்று ஒன்றுக்கும் உதவாத என்னை அணைத்துக்கொண்டு தூங்கும் இந்த நிலைதான் மாறவேண்டும்,, என்னை மறந்து முழுமையாக இன்னொருத்தியை நினைக்கவேண்டும்,, என்று பலவாறாக யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள் வசந்தி

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக போனது,, ஆனால் கொஞ்சமாக இருந்த நடமாட்டமும் குறைந்து படுக்கையே கதியென்று ஆனாள் வசந்தி,, ஒருநாள் இரவு வசந்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக,, அப்போதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்,

கொட்டும் மழையில் மனைவிக்காக அலைந்தான் கிருபா,, அவனுக்கு வசந்தியின் நிலைமை முழுவதுமாக தெரிந்ததால், ‘ என் மனைவியை காப்பாற்று என்று கடவுளை அவன் வேண்டவில்லை,, என் மனைவிக்கு வலியில்லா மரணத்தை கொடு கடவுளே என்றுதான் வேண்டினான்மூன்று நாட்களாக ஏற்பட்ட மனஉளைச்சலும்,, வசந்தியின் மோசமான நிலைமையும் அவனை மேலும் பலகீனமடைய செய்தது,, நடு இரவில் கொட்டும் பனியில் தோட்டத்தில் அமர்ந்திருந்ததும்,, மழையில் நனைந்ததும் சேர்ந்து அவனுடைய உடல் டெம்பரேச்சரை அதிகப்படுத்த,, அதை கண்டுகொள்ளாமல் மனைவிக்காக ஓடினான்

மருந்துகளின் வீரியத்தால் தலை முடி கொட்டி,, ரொம்பவும் மெலிந்துபோய் பார்க்கவே வசந்தி மோசமாக இருந்ததால்,, சத்யனை தாயை பார்த்தால் பயந்துவிடுவான் என்று கருதி சத்யனை வசந்தியின் அண்ணன் வீட்டுக்கு அமிர்தம்மாளுடன் அனுப்பிவிட்டான் கிருபா

தீவிரசிகிச்சைக்குப் பின் சரளமாக பேசும் அளவிற்கு தேறிய வசந்தி கண்விழித்ததும் முதலில் கூறியது ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்கவேண்டும் என்பதுதான்,, பிடிவாதமாக அதையே மறுபடியும் மறுபடியும் சொல்லிகொண்டே இருக்கவும் வேறு வழியின்றி ரஞ்சனாவை அழைத்து வர கிளம்பினான் கிருபா

See also  உடம்பு சூடு - பாகம் 15 - அம்மா செக்ஸ் கதைகள்

வினாடிக்கு வினாடி அவனுக்கிருந்த காய்ச்சலின் வேகம் அதிகரிக்க, சமாளித்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு போய் ரஞ்சனாவையும் குழந்தை அனிதாவையும் அழைத்துக்கொண்டு வந்தான்..

கண்கள் சிவந்து, தலை களைந்து, ரொம்பவும் சோர்ந்து போயிருந்த கிருபாவை பார்த்து ரஞ்சனாவுக்கு தொண்டையை அடைத்தது , ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை, வசந்தி மருத்துவமனையில் இருப்பதால் இப்படி இருக்கிறான் என்று நினைத்தாள்.மருத்துவமனைக்கு வந்ததும் குழந்தையை கிருபா தூக்கிக்கொள்ள, ரஞ்சனா அவன் பின்னே வந்தாள், வசந்தியின் அறைக்குள் நுழைந்ததும் அவளின் நிலை கண்டு அதிர்ந்து போனாள் ரஞ்சனா,

இவர்களை பார்த்ததும் வசந்தி தனது கையை நீட்ட, வேகமாக வசந்தியின் அருகில் போன ரஞ்சனா அவள் கையை பற்றிக்கொண்டு “ மேடம் என்ன இப்படி ஆயிட்டீங்க,, பார்க்கவே கொடுமையா இருக்கே” என்று குலுங்கி கண்ணீர் விட்டாள்

வரண்ட தனது உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்ட வசந்தி “ என்னப் பண்றது ரஞ்சனா, எல்லாம் முன்னோர்கள் செய்த பாவம்” என்று விரக்த்தியாக கூறியவள் குழந்தைக்காக கையை நீட்டினாள்

ரஞ்சனா உடனே குழந்தையை வசந்தியின் கையில் குடுக்க, அந்த குழந்தையை தூக்கக் கூட சக்தியற்றவளாக கைகள் துவண்டு விழ, குழந்தையை பக்கத்தில் வைக்குமாறு கூறினாள்

அப்போது அறைக்குள் வந்த நர்ஸ் “ ஏம்மா குழந்தையை இங்கே எடுத்து வரக்கூடாது,, இது சாதரணமான நோய் இல்லை, ஏதாவது இன்பெக்ஷன் ஆச்சுன்னா குழந்தை தாங்குமா,, மொதல்ல குழந்தையை வெளியே கொண்டு போங்க” என்று அதட்ட

கட்டிலருகே வந்த கிருபா “ குழந்தையை நான் வெளியே கொண்டு போறேன்,, நீ கொஞ்சநேரம் வசந்தி கூட பேசிட்டு வா” என்று குழந்தையுடன் வெளியேறினான்கிருபா போனதும் கட்டிலருகே இருந்த சேரில் அமர்ந்து வசந்தியின் கையை பற்றிக்கொண்ட ரஞ்சனாவுக்கு வசந்தியை பார்த்து அழுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை,, தோட்டத்து வீட்டுக்கு வசந்தி கிருபாவுடன் வந்த நாளை நினைவுபடுத்தி பார்த்தாள்,, எவ்வளவு அழகாக இருந்த பெண்ணை நோய் இப்படி திண்று தீர்த்துவிட்டதே என்று வெதும்பினாள்

பற்றியிருந்த கையை தட்டிக்கொடுத்த வசந்தி “ அழாதே ரஞ்சனா,, அழவேண்டிய கட்டத்தை நான் தாண்டிவிட்டேன், இனிமேல் எனக்கு தேவை வலியில்லாத மரணம் மட்டும்தான்,, சாவறதை பத்தி எனக்கு எந்த வருத்தமும் இல்லை,, அவர்கூட நூறு வருஷம் வாழவேண்டிய வாழ்க்கையை பனிரெண்டு வருஷத்தில் திருப்தியா வாழ்ந்துட்டேன்” என்ற வசந்தி மூச்சுவாங்க பேசுவதை நிறுத்தினாள்
பிறகு “ இப்போ உன்னால எனக்கு ஒரு உதவி ஆகனும் ரஞ்சனா,, மறுக்காம செய்வியா” என்றாள்

ரஞ்சனா குழப்பம் மேலிட “ நானா? உங்களுக்கு நான் என்ன உதவி மேடம் செய்யமுடியும்,, எதுவானாலும் கேளுங்க என்னால முடிஞ்சதை செய்வேன்” என்றாள் ரஞ்சனா

See also  மனசுக்குள் நீ - பாகம் 17 - மான்சி தொடர் கதைகள்

ரஞ்சனாவின் கையை இறுகப்பற்றிய வசந்தி “ அனிதாவோட பர்த் சர்டிஃபிகேட்ல குழந்தையோட அப்பான்னு இவர் கையெழுத்து போட்டாரே அதுல உனக்கு வருத்தம் எதுவும் இருக்கா?” என்றாள்

கிருபா தன் மனைவியிடம் எதையும் மறைக்கமாட்டான் இதையும் சொல்லியிருப்பான் என்று ரஞ்சனாவுக்கு தெரியும்,, ஆனால் அதை வசந்தியே கேட்கும்போது ரஞ்சனாவால் தெளிவாக பதில் சொல்லமுடியவில்லை ,, தலையை குனிந்தவாறு “ இல்லை” என்றாள்“ அப்படின்னா உண்மையிலேயே அவர் அனிதாவோட அப்பாவான உனக்கு சந்தோஷம் தானே ரஞ்சனா?” என்று அடுத்த கேள்வியை வீசினாள் வசந்தி

வசந்தி சொன்னதன் அர்த்தம் தாமதமாகத்தான் ரஞ்சனாவுக்கு புரிந்தது இதை எதிர்பாராத ரஞ்சனா திகைத்துப்போய் “ மேடம் என்ன சொல்றீங்க” என்று கூவினாள்

error: read more !!