மனசுக்குள் நீ – பாகம் 10 – மான்சி தொடர் கதைகள்

அவள் பின்னாலேயே வந்த அந்த வீட்டுக்காரம்மா ” என்னம்மா மான்சி வேலை எப்படி இருக்குது” என்று விசாரித்த படி கையில் இருந்த பாத்திரத்தை அங்கிருந்த சிறிய மேசையில் வைத்தாள்

மான்சியின் உணவுக்கும் அந்த வீட்டிலேயே அனிதா ஏற்பாடு செய்திருந்தாள்,, ” அய்யோ நீங்க ஏன்மா எடுத்துட்டு வந்தீங்க நானே கீழ வந்திருப்பேனே” என்று மான்நஎன்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி கீழே இறங்கி போய்விட்டாள்



மான்சி முகம் கழுவிட்டு வந்து, கொண்டு வந்த உணவில் கால் வாசி சாப்பிட்டு விட்டு அங்கிருந்த சிறிய கட்டிலில் அமர்ந்தாள்,, சத்யன் இப்போது என்ன செய்துகொண்டு இருப்பான் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது

என்னை அப்படி அணைத்தானே,, எதை நினைச்சு அணைச்சான்,, என்று முகம் சிவக்க எண்ணினாள்,, விலக நினைச்சா ‘ அப்படியே இரு மான்சி எல்லாம் சரியாயிடும்னு” டயலாக் வேற,, ம்ம் ரொம்பத்தான் தைரியம் என்று எண்ணிக்கொண்டே தனது பெட்டியை திறந்து அதிலிருந்து தனது பெற்றோரின் படத்தை எடுத்தாள் மான்சி

தன் தாயின் முகத்தை விரல்களால் வருடியவள் தந்தையின் முகத்தை பார்த்ததும் அழுகை வந்தது,, உலகத்துல எவ்வளவு கெட்டவங்க இருக்காங்க,, அவங்கல்லாம் நல்லாருக்கும் போது ஏன் என் அம்மா அப்பாவை மட்டும் எடுத்துட்டு போய்ட்ட கடவுளே,, என்று கண்ணீருடன் கடவுளிடம் கேள்வி கேட்டாள்

நல்ல அழகான குடும்பம் மான்சியினுடையது,, வயலுக்கு நடுவில் மான்சியின் அப்பாவும் சித்தப்பாவும் பக்கம் பக்கமாக வீடு கட்டிக்கொண்டு ஒன்றாக விவசாயம் பார்க்கும் ஒற்றுமையான குடும்பம்,, மான்சியின் அம்மா அருணாவுக்கு பக்கத்து ஊரிலேயே தாய் வீடு,, மூன்று சகோதரர்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள்,, மான்சியின் அப்பா மாணிக்கத்தை திருமணம் செய்துகொண்டு சொர்கத்தை சொந்தமாக்கிக் கொண்டவள்



ஒரே மகள் என்பதால் அருணாவி்ன் அப்பா தனது சொத்துக்களில் அருணாவுக்கும் ஒரு பங்காக ஐந்து ஏக்கர் நிலத்தை கொடுத்தார்,, அருணாவின் சகோதரர்கள் நிலத்துக்கு நடுவே வந்தது அருணாவுக்கான பாகம்,, அவர்களே பயிர் செய்து அருணாவிற்கு கொடுத்து வந்தனர்

மான்சியின் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த போது அவளுடைய பெற்றோர்களுக்கு அவள் மறுபடியும் ஒரு குழந்தையாகிப்போனாள்

நல்ல சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் இடி விழுந்தது போல,, ஒரு விசேஷத்திற்கு சந்தோஷமாக பைக்கில் சென்ற மாணிக்கமும் அருணாவும் ஒரு விபத்தில் சிக்கி மூட்டையாக வீட்டுக்கு வந்தனர்

பெற்றோரின் பிரிவை தாங்க முடியாத மான்சி ,,சுயநினைவை இழந்து பலநாட்களாக கிடந்தாள்,, அனிதா அடிக்கடி வந்து ஆறுதல் சொன்னாலும் தேறவில்லை மான்சியின் மனம்

ஆண்பிள்ளையான ஜெகன் மட்டும் ஓரளவு சுதாரித்துக் கொண்டு தங்கைக்கு ஆறுதலாக இருந்தான் ,, தங்களின் நிலையை எண்ணி மான்சி வருந்தாதே நிமிடமே இல்லை எனலாம்



மான்சியின் சித்தப்பா அண்ணன் பிள்ளைகளை கவணமாக பார்த்துக்கொண்டாலும்,, ஒரே நாளில் அனாதையாக்கப்பட்டதை மான்சியால் ஜீரணிக்கவே முடியவில்லை

See also  மனசுக்குள் நீ - பாகம் 40

உடலும் மனமும் ஓரளவுக்கு தேறி மான்சி எழுந்து நடமாட ஆரம்பித்ததும் அடுத்ததாக புதிதாக ஒரு இடி வந்தது மான்சியின் மூத்த தாய்மாமன் மூலமாக,,

தனது சகோதரிக்கு கொடுத்த நிலம் எப்படியிருந்தாலும் மான்சிக்குத்தான் போய் சேரும் என்பதால்,, மான்சியை தனது மகனுக்கு திருமணம் செய்துவிட்டால் சொத்து வெளியே போகாது என்ற கணக்குடன் மான்சியை பெண் கேட்டு வந்தார்கள்

முதலில் அதிர்ந்து போன மான்சி பிறகு திருமணம் செய்துகொள்ள தீவிரமாக மறுத்தாள்,, மான்சியின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு சொத்துக்காக ஏற்படுத்தப்படும் அந்த சம்மந்தம் சுத்தமாக பிடிக்கவில்லை

ஆனால் உரிமையுள்ள தாய்மாமனை எதிர்க்க தைரியம் இல்லாமல் மான்சியை சரிகட்ட முயன்றனர்,, ஆனால் ஜெகன் தங்கையின் பக்கம் இருந்தான்,, அவனுக்கும் தாய்மாமன்பெற்று வைத்திருக்கும் அரைகுறைக்கு தனது அழகு தங்கையை கொடுக்க அறவே விருப்பம் இல்லை



பேச்சுவார்த்தை நாளடைவில் சண்டையில் போய் முடிய,, இறுதியாக மான்சியை கடத்தி வந்தாவது தாலி கட்டுவது என்று அருணாவின் தாய் வீட்டு ஆட்கள் முடிவு செய்ய ..

மான்சிக்கு எப்போதும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை,, ஜெகன் போலீஸில் புகார் செய்யலாம் என்று குதிக்க,, அவர்களின் தாத்தா இது குடும்ப சண்டை இதை போலீஸார் வந்து விசாரித்தால் ஊரில் மரியாதை இருக்காது என்று கூறி ஜெகனை அடக்கினார்

ஒரு கட்டத்தில் தாய்மாமனின் தொல்லைகள் அதிகரிக்க,, மான்சியை வேறு எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைப்பது என்று முடிவுசெய்தனர்,,

மான்சிக்கு அப்போது ஞாபகம் வந்தது அனிதாதான்,, உடனே அனிதாவுக்கு போன் செய்து கண்ணீருடன் தனது நிலைமையை சொல்லி தனக்கு ஏதாவது வழி சொல்லுமாறு மான்சி கேட்க ,,,

மறுநாளே அனிதா வந்துவிட்டாள்,, தனது அண்ணனின் மில்லில் மான்சிக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துவிட்டு கோவை வந்தவள் மறாவது நாளே மான்சிக்கு போன் செய்து உடனே கிளம்பி வருமாறு சொன்னாள்

குடும்பத்தினர் கண்ணீருடன் வழியனுப்ப,, அண்ணனும் தங்கையும் நடு இரவில் பயந்து பயந்து வீட்டைவிட்டு ரகசியமாக கிளம்பி ரயிலை பிடித்து கோவை வந்து சேர்ந்தனர்,,



ஜெகன் எம் சி ஏ படிப்பதால் உடனடியாக தங்கையை விட்டுவிட்டு போகவேண்டிய சூழ்நிலை,, ஆயிரம் ஆறுதல் மொழிகளுடன்,, கண்ணீர் வற்றும் வரை அழுதுவிட்டு தங்கையை அனிதாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினான் ஜெகன்

தனது வீட்டில் மான்சியை தங்க வைத்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற காரணத்தால்,, ஜன சந்தடி மிகுந்த இடத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் மான்சியை தங்க வைத்தாள் அனிதா

இனி மான்சியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பக்கத்துணையாக அருணாவும் மாணிக்கமும் இருப்பார்கள் என்று மான்சியின் குடும்பத்தினர் நம்பிதான் அவளை கோவைக்கு அனுப்பி வைத்தார்கள்

See also  மான்சிக்காக - பாகம் 17 - மான்சி கதைகள்

ஆனால் மாணிக்கம் அருணா இவர்களின் ஆத்மாவைவிட ,, மான்சியை உயிராய் நேசிக்கும் சத்யனின் துணை அவளிடம் யாரையும் நெருங்கவிடாது என்பதுதான் நிஜம்

Leave a Comment

error: read more !!