மனசுக்குள் நீ – பாகம் 24 – மான்சி தொடர் கதைகள்

ரஞ்சனா கவிழ்ந்து வரும் இருட்டில் காரின் ஜன்னல் வழியாக வெளியே இலக்கற்று வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் , கண்களில் விழிந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து கழுத்தில் இறங்கி ரவிக்கையை நனைத்தது

அவளையே கவனித்த கிருபாவிற்க்கு அவளுக்கு எப்படி ஆறுதலளிப்பது என்று புரியவில்லை,, சிறிதுநேரம் அங்கே பலத்த அமைதி நிலவியது, நேரம் கடந்து போவதை எதிரே கடந்து போன வாகனங்களின் விளக்கொளி உணர்த்த “ சொல்லுங்க ரஞ்சனா உங்களுக்கு என்ன பிரச்சனை,, உங்களின் நடவடிக்கைகளை வச்சு பார்க்கும்போது லவ் பெயிலியர்னு எனக்கு தோனுது,,


நான் சொன்னது கரெக்டா ரஞ்சனா” என்று கிருபா கேட்க

” கொட்டிக்கிடந்த கடற்கரை மணலில்…

” உன் காலடிச் சுவடைத் தேடினேன்,,

” வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை,,

” தூரத்தில் ஒரு ஜோடி சுவடுகள்….

” உன் பாதங்களை ஒத்து இருக்க…

” உன்னையே கண்ட சந்தோஷத்தில்,,

” அந்த சுவடை நோக்கி ஓடினேன்…

” எனக்கு முன்னால் அலை வந்து தொட்டு..

” அழித்துவிட்டது உன் சுவடுகளை!!

அதற்க்கு மேல் பொறுக்கமுடியாமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு கதறியழுதபடி ஆமாம் என்று தலையசைத்தாள் ரஞ்சனா

“ சரிங்க அதுக்காக உயிரைவிட துணியறது ரொம்ப தப்புங்க,, அப்பா அம்மா இல்லாமல் இவ்வளவு படிச்சு முன்னுக்கு வந்து எல்லாத்தையும் எவனோ ஒருத்தனுக்காக வீணடிக்க போறீங்களா ரஞ்சனா? நீங்க படிச்ச படிப்புக்கு எத்தனை தொழிளாலர்களோட வியர்வையும் உழைப்பும் இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? எங்களோட டிரஸ்ட் எங்களோட பணத்துல மட்டும் நடக்கலை ரஞ்சனா, எங்க மில் தொழிலாளர்கள் அத்தனை பேரின் உழைப்பும் அதுல அடங்கியிருக்கு,, ஒருத்தன் உங்களை ஏமாத்திட்டான் என்பதற்காக தற்கொலை முடிவு எடுத்த நீங்க , ஏன் நல்லபடியா வாழ்ந்து சமூகத்தில் முன்னேறி அவன் முகத்தில் கறியை பூசனும்னு நெனைக்கலை?” என்று சற்று கோபமாக கிருபா சரமாரியாக கேள்வி கேட்க

ஒன்றுக்குகூட பதில் தெரியாமல் பரிதாபமாக அவனைப்பார்த்து விழித்தவளை பார்த்து கிருபாவுக்கு மேலும் கோபம்தான் வந்தது “ ச்சே உங்களை ரொம்ப உயர்வா நெனைச்சேன் ரஞ்சனா, அனாதை என்று குறுகி போகாமல் நல்லா படிச்சு முதல்வகுப்பில் தேறி ஒரு வேலையில் சேர்ந்து லைப்ல செட்டில் ஆகிட்டீங்கன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்,, உங்களுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் உங்களை நிறைய நோட் பண்ணியிருக்கேன், உங்களோட நிமிர்வும் தன்னம்பிக்கையும் எனக்கு ரொம்ப பிடிச்சது, ஆனா இப்போ நான் நெனைச்சது ரொம்ப தப்போன்னு தோனுது, எல்லாமே வீன்” என்று ஸ்டேரிங்கில் குத்தியபடி கிருபா பொரிந்து தள்ளினான்அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டிபோல் இறங்க “ வேனாம் வேனாம் நான் எதுக்குமே தகுதி இல்லாதவள்,, நான் உயிருடன் வாழ லாயக்கில்லாதவள் சார்” என்று அழுதவளை தீர்க்கமாக பார்த்தான் கிருபா

See also  பொம்மலாட்டம் - பாகம் 29 - மான்சி தொடர் கதைகள்

“ நீங்க பேசுறதை பார்த்தா பிரச்சனை ரொம்ப பெரிசுன்னு தோனுது,, எதுவாயிருந்தாலும் சொல்லுங்க ரஞ்சனா , என்னால் முடிந்த உதவிகளை செய்றேன்” என்று கோபம் குறைந்த குரலில் கிருபா கூற

அதற்க்கு மேல் மறைக்க விரும்பாத ரஞ்சனா தனக்கும் குருமூர்த்திக்கும் நடந்ததில் இருந்து மங்கையிடம் போனில் பேசியது வரை அத்தனையும் ஒன்று விடாமல் கூறினாள், கூறிவிட்டு மன்னிப்பை வேண்டி அவன் முகத்தையே பார்த்தாள்

அவனிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை இதை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை கிருபாவின் முகபாவனை எடுத்து சொன்னது,, அவன் விரல்கள் ஸ்டேரிங்கை பற்றியிருந்த அழுத்தத்தை பார்த்து ரஞ்சனாவுக்கு வயிற்றுக்குள் திக்கென்றது

நடுங்கும் குரலில் “ என்னை மன்னிச்சுடுங்க சார் உங்களோட நம்பிக்கையை நான் பொய்யாக்கிட்டேன்,, ஆனா என்னை கேவலமான பொண்ணா மட்டும் நினைக்காதீங்க,, என்னோட நிலைமையை பாருங்க சார் ” என்று மெல்லிய குரலில் இறைஞ்சினாள்.

பட்டென்று திரும்பி அவளை ரௌத்ரமாக முறைத்த கிருபா “ இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே கெட்டுப்போக என்ன நிலைமையை காரணம் சொல்லப் போற ரஞ்சனா” என்றான் இறுகிய குரலில்அவன் மனதில் ரஞ்சனாவின் தரம் தாழ்ந்து விட்டதை அவன் ஒருமையில் அழைத்து உணர்த்தியதும் ரஞ்சனாவுக்கு இதயத்தை யாரோ பிளப்பது போல் இருந்தது

இருந்தாலும் தனது அன்றைய நிலைமையை அவனுக்கு புரியவைக்கும் முயற்ச்சியுடன் “ ஆமாம் சார் நிலைமைதான்,, நான் ஒன்னும் உடம்பு சுகத்துக்காக அவன் கூட படுக்கலை, சின்னவயசுல இருந்து ஏளனப் பார்வைக்கே பழகி போயிருந்த எனக்கு முதல் காதல் பார்வை கிடைத்ததும் மயங்கி போனது உண்மைதான் ஆனா அதுக்காக அவன்கூட நான் படுக்கலை,, நான் என்னதான் படிச்சு முன்னேறினாலும் என் அம்மாவும் அப்பாவும் ஹெச் ஐ வி யால இருந்ததால் என்னோட பிற்கால திருமண வாழ்க்கை ஒரு கேள்விகுறிதான் என்பதை நீங்க மறுக்கமுடியுமா சார்? என்னோட அப்பா அம்மா பத்தி தெரிஞ்சவங்க யாராவது என்னை கல்யாணம் பண்ணிக்க முன் வருவாங்களா சார்? அப்படியே யாராவது தெரியாமல் கல்யாணம் பண்ணிகிட்டாலும் அதுக்கப்புறம் தெரிஞ்சா என்கூட வாழனும்னு நினைப்பாங்களா சார்? அப்படி எந்த ஆணாவது சமூக சிந்தனையுடன் தாராள மனதுடன் என்னை கல்யாணம் பண்ணிக்க முன்வந்திருப்பான்னு நினைக்கிறீர்களா சார்?” என்று ஆவேசமாக தனது கேள்விகளை கேட்ட ரஞ்சனா, கிருபாவின் நெற்றியில் விழுந்த சிந்தனை முடிச்சுகளை பார்த்து தனது குரலை தனித்து“ இந்த மாதிரி எந்த கேள்விக்கும் பதில் தெரியாமல் இருக்கும்போது தான் குருமூர்த்தி என்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்சே காதலிச்சான்,, அன்னிக்கு நான் இருந்த மனநிலையில் கடவுளாதான் இப்படியொருத்தனை எனக்காக அனுப்பியிருக்காரேன்னு எனக்கு தோனுச்சு, எதையாவது அவனுக்கு கொடுத்து தக்கவச்சுக்கனும்னு நெனைச்சேன்,, அவன் என்னையே கேட்டப்ப நானும் தயங்காமல் குடுத்துட்டேன்,, ஆனா இப்பத்தான் தெரியுது அவன் கடவுளின் அவதாரம் கிடையாது,, சாத்தானின் அவதாரம்னு, நான் உலகத்துலேயே அதிகமா வெறுத்தது என் அப்பாவை இரண்டாவது இந்த குருமூர்த்தியை தான்,, கடவுள் என்ற ஒருத்தன் உலகத்தில் இல்லவேயில்லை,, எல்லாமே பொய்,, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது” என்று தனது முகத்தில் அறைந்துக்கொண்டு கதறியவளை அடக்க வழி தெரியாது செயலற்று அமர்ந்திருந்தான் கிருபா

See also  மான்சிக்காக - பாகம் 24 - மான்சி கதைகள்

அழுது அழுது தானாகவே சமாதானமாகிய ரஞ்சனா “ இந்த மோசக்கார உலகத்தில் இனிமேல் வாழனும்னு எனக்கு துளிகூட ஆசையில்லை சார், என்னை என் போக்கில் விடுங்க” என்று அவனைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்

கூப்பிய அவள் கையை பற்றி ஆறுதல் சொல்ல முன்வந்த தன் கைகளை அடக்கியவாறு “ உன் அப்பாவையும் குருமூர்த்தியையும் வச்சு உலகத்தை எடைபோடாதே ரஞ்சனா,, உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்க,, நீ சொல்றதை வச்சு பார்க்கும்போது உன்பக்கம் இருக்கும் நியாயம் புரியுது,, உன்னோட வயசு அந்தமாதிரி முடிவெடுக்க வச்சாலும்,, என்னோட வயசு அதை இன்னும் ஏத்துக்கலை ரஞ்சனா ” என்றவன் காரின் டேஷ்போர்டை திறந்து அதிலிருந்து ஒரு சிறிய டவலை எடுத்து அவளிடம் கொடுத்து “ முகத்தை தொடைச்சுக்க ரஞ்சனா,, எனக்கு ஒரு விஷயத்தில் நீ உறுதியளிக்கனும்” என்று தனிவாக கேட்டான்டவலை கைநீட்டி வாங்கியவள் , என்ன என்பதுபோல் கேள்வியாக அவனை பார்க்க

“ இனிமேல் உன் விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமையை நீ எனக்கு தரனும்,, நீ தரும் உரிமையை நான் எப்பவுமே தவறாக பயன்படுத்த மாட்டேன்,, நீ என்னை நம்பலாம் ரஞ்சனா” என்று கிருபா கூற

அவனை நன்றியுடன் பார்த்த ரஞ்சனா “ உங்களைத்தவிர வேற யாரை நம்பப்போறேன் சார்,, நீங்க எது செய்தாலும் அது என்னுடைய நன்மைக்காகத்தான் இருக்கும்னு எனக்கு தெரியும் சார்” என்றாள்

“ அப்படின்னா முகத்தை தொடைச்சுக்கிட்டு நிமிர்ந்து உட்காரு” என்று சொல்லிவிட்டு அரைசெங்கல் அளவுக்கு இருந்த தனது புதிய செல்போனை எடுத்து வீட்டுக்கு கால் செய்தான்

Leave a Comment

error: read more !!