மனசுக்குள் நீ – பாகம் 17 – மான்சி தொடர் கதைகள்

கார் கிளம்பியதும் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மான்சியின் முகத்தை பார்க்க,, அவள் உதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு இருந்தாள்,, அதையும் மீறி வெளிப்பட்ட கண்ணீர் விழியோரம் எட்டிப்பார்த்தது

மான்சியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அனிதா அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள் “ நீ வீட்டுக்குள்ளே வந்திருக்கலாம் மான்சி,, நீ எங்ககூட வந்துருக்கேன்னு சொன்னதும் அண்ணன் முகத்தில் எவ்வளவு ஆர்வத்தோட வாசலைப் பார்த்தார் தெரியுமா?,,

ஆனா அடுத்த செகண்ட்டே மாறிட்டார்,, நீயும் உள்ளே வந்து அவரை பார்க்காம இப்போ கண்ணீர் விடுற,, எங்களுக்காக உன் காதலை பணயமாக வைக்க வேனாம் மான்சி,, எங்க விதிப்படி நடக்கட்டும் விடு,, அண்ணன் எங்க மேல இவ்வளவு அன்பு காட்டுறதே போதும்” என்று அனிதா விரக்த்தியாக பேசினாலும் அவள் கண்களும் கலங்கி இருந்ததன,,,“ அழாதீங்க மான்சி அக்கா,, என்னாலதானே நீங்க அண்ணா கூட பேசலை,, ஸாரிக்கா” என்று வருத்தமாக வசு கூறியதும்..

சட்டென்று தன் கண்களை துடைத்துக் கொண்ட மான்சி “ ஏய் செல்லக்குட்டி இன்னிக்கு நீ எதற்க்காகவும் வருத்தப்படக்கூடாது,, நான் இனிமேல் அழமாட்டேன் வசு,, ஆனா உன்னால ஒன்னும் நான் உங்கண்ணனை அவாய்ட் பண்ணலை,, அவருக்கு பாசமானவங்களை பிரிஞ்சா எவ்வளவு வலிக்கும்னு தெரியனும் அதனால்தான் இந்த பரிட்சை” என்று மான்சி கண்களில் தீவிரத்துடன் பேச..

“ அதெல்லாம் சரி மான்சி,, ஆனா உனக்கு எங்கண்ணனோட பிடிவாதம் தெரியாது,, பனிரெண்டு வயசுலேயே எங்கம்மா எங்க வீட்டுக்கு வந்தபோது,, ரூமை விட்டு வெளியே வராமல் ரெண்டு மூனுநாள் அவரோட துணிகளை அவரே துவைச்சாராம்,, வேலைக்காரங்க குடுத்த சாப்பாட்டை திருப்பி அனுப்பிட்டு பாட்டினா இருப்பாராம்,, வேலைக்காரங்களே அழுது கெஞ்சி சாப்பிடச் சொன்னதும்தான் சாப்பிடுவாராம்,, அப்புறம் பாட்டிதான் எதேதோ சொல்லி அவரை சமாதானம் பண்ணி ரூமை விட்டு வெளியே கூட்டிவந்து டைனிங் டேபிளில் சாப்பிட வச்சாங்களாம்,, அதுக்கப்புறம் நம்ம அபி பிறக்கறதுக்கு பத்துநாளைக்கு முன்னாடி பாட்டியை கூட்டிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்துட்டார்,, அண்ணா ரொம்ப வைராக்கியமானவர் மான்சி,, அதனாலதான் நாங்க அவர்கிட்ட அதிகமா அன்பை எதிர்பார்க்கறது கிடையாது,, கிடைச்சதே கடவுள் கிருபைன்னு சந்தோஷப்பட்டுக்குவோம்” என்று அனிதா தனது அண்ணனை பற்றி சிறு உரை நிகழ்த்தினாள்அவள் சொன்னதையெல்லாம் எப்பவும் போல் கவனமாக கேட்டு வழக்கம்போல மனதின் ஆழத்தில் பதியவைத்த மான்சி “ அனிதா உங்களுக்கெல்லாம் அண்ணன் இவ்வளவு பாசம் காட்டினா போதும்னு நெனைக்கிறீங்க, சரிதான்,, ஆனா கிருபா அங்கிளும் ரஞ்சனா ஆன்டியையும் நெனைச்சுத்தான் நான் இந்த மாதிரி பண்ணதே,, நீங்க அடுத்தடுத்து மேரேஜ் ஆகிப்போனதும் அவங்களை யாரு கவனிச்சுக்குவாங்க,,

See also  பொம்மலாட்டம் - பாகம் 22 - மான்சி தொடர் கதைகள்

” அனிதா அவரை பிரிஞ்சு இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம்தான் என்றாலும்,, மூனு வருஷமா அவரோட நினைவே சொர்க்கம்னு வாழ்ந்தவ தான் நான்,, அதனால இந்த தற்காலிக பிரிவு என்னை அவ்வளவாக பாதிக்காது,, ஆனா உங்க அண்ணனுக்கு இந்த இரண்டு நாளும் ஒரு புது உலகத்தையே காமிச்சிருக்கேன்,, நிச்சயமா அவரால என்னை பார்க்காமல் இருக்க முடியாது,, நீங்க ரெண்டு பேரும் கவலையே படாதீங்க கூடிய சீக்கிரம் உங்க அண்ணனோடு அங்கிள் ஆன்டியை பார்க்க வருவேன்” என்று மான்சி உறுதியோடு கூறினாள்மான்சியை அணைத்துக்கொண்ட வசு “ நீங்க எங்களுக்கு அண்ணியா கிடைச்சதுக்கு கடவுளுக்கு தாங்க்ஸ் சொல்லனும் மான்சி அக்கா,, எப்படியாவது நீங்க எங்கண்ணனை எங்க வீட்டுக்கு கூட்டி வந்துடுங்க,, அப்புறமா எங்க வீட்டுல எல்லாரும் உங்களை தெய்வமா பார்ப்பாங்க” என்று வசு உணர்ச்சி வசப்பட்டு பேச,,…

சட்டென்று அவள் வாயைப்பொத்திய மான்சி “ ஏய் ச்சீ பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே வசு,, இதுல என்னோட சுயநலமும் அடங்கியிருக்கு,, அப்பா அம்மாவை ஒரே சமயத்தில் விபத்தில் இழந்த எனக்கு, எதிர்காலத்தில் எல்லா உறவுகளும் வேனும்னு நினைச்சேன்,, ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழனும்னு ஆசைப்பட்டேன்,, இத்தனை நாளா அவரை பார்க்காமலேயே மனசுக்குள்ள விரும்பின எனக்கு இவர் பணக்காரர்னு ஒரு பயம் இருந்தது,, ஆனா வேலைக்கு வந்த அன்னிக்கே அவருக்கும் என்னை பிடிக்குதுன்னு தெரிஞ்சதும் மூனு வருஷமா செடியா வளர்ந்த என் காதல் ஒரே இரவில் வளர்ந்து பெரிய மரமாயிருச்சு,, அந்த காதல் மரத்தின் வேர்கள் ரொம்ப ஆழத்தில் இறங்கி இருக்கு அனிதா,, அந்த மரத்தை யாராலும் பிடுங்க முடியாது,, ஏன் அசைச்சுக் கூட பார்க்கமுடியாது” என மான்சி தன் காதல் தந்த நம்பிக்கையில் உறுதியுடன் பேசினாள்

“ நீ பண்ணது எல்லாம் சரிதான்,, நீ அண்ணனை அவாய்ட் பண்றதுக்காக சொன்னியே ஒரு காரணம் அவரும் அதையே நம்பிட்டார்னா என்னப் பண்ணுவ மான்சி” என்று அனிதா கேட்க,,
அவளை புரியாமல் பார்த்தாள் மான்சி“ அதான் மான்சி மூடிய ரூமுக்குள்ள இருந்தா வெளியே பார்க்கிறவங்க நம்மளை தப்பா நினைப்பாங்கன்னு சொன்னியே,, அதையே உண்மைன்னு அண்ணன் நம்பிட்டா என்ன பண்ணுவ,, அதாவது ஆபிஸ்ல இருக்கிற யாரோ தப்பா பேசினதால தான் நீ அவரை வெறுத்து ஒதுக்குறேன்னு அண்ணன் நினைச்சுட்டா என்ன பண்றது மான்சி” என்றாள் அனிதா

முகம் சற்று நிம்மதியை தாங்க “ ஸ் யப்பா நான் என்னவோ ஏதோன்னு நெனைச்சேன்,, அனிதா நான் சொல்றதை எல்லாத்தையும் நம்பும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை,, வேலைக்கு சேர்ந்து ஒருநாள்தான் ஆச்சு என்னை யாருன்னு ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்,, அப்படியிருக்க நான் யாரு,, அவரோட ரூம்ல எவ்வளவு நேரம் இருந்தேன்,, என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது,, குடும்பத்தோட ஒன்னா சேர்க்கத்தான் நான் இந்த மாதிரி பேசினேன்னு அவருக்கு நல்லாவே தெரியும் அனிதா,, ரெண்டு பேரும் ஒரு விஷயத்தில் எதிர் எதிர் விவாதிகளாக இருக்கிறோம்,, ம்ம் யார் யாரோட சேர்வாங்கன்னு பார்க்கலாமே” என மான்சி கூறினாள்

See also  மனசுக்குள் நீ - பாகம் 09 - மான்சி தொடர் கதைகள்

அதற்க்குள் மான்சி தங்கியிருக்கும் வீடு வந்துவிட கார் அங்கே நின்றதும் மான்சி இறங்க தயாரானாள்,, அவளுடைய கையை பற்றிய அனிதா “ ஆனாலும் இதை நீ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணியிருக்கலாமே மான்சி,, அவரை நீ சந்திச்சு ஒரு நாளில் விலகி இருக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு,, எல்லாம் எங்களாலதானே” என்று அனிதா சங்கடமாக சொல்ல,,,தன் தோளில் இருந்த அனிதாவின் கையை ஆறுதலாக தட்டிய மான்சி “ இன்னும் ஒருநாள் தள்ளிப்போட்டுருந்தாலும் நான் அவரோட காலடியில் கிடந்திருப்பேன் அனிதா,, என்னால் அவரை விட்டு விலகி இருந்திருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி திரும்பி பார்க்காமல் மாடிப்படிகளில் ஏறி தனது அறைக்கு போனாள்

அவள் போகும்வரை பார்த்துக்கொண்டிருந்த அனிதா,, கவலையுடன் ஒரு பெருமூச்சு விட்டு “ கிளம்புங்க அண்ணே” என்றாள் டிரைவரிடம்
அறைக்குள் வந்து மாற்று உடைகள் எடுத்துக்கொண்டு பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்த மான்சி,, அங்கே ஜக்கில் இருந்த தண்ணீரை மடமடவென்று குடித்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்

Leave a Comment

error: read more !!