மனசுக்குள் நீ – பாகம் 14 – மான்சி தொடர் கதைகள்

அவன் என்ன செய்யப்போகிறான் என்று மான்சிக்கு தெளிவாக புரிந்தது, சுதாரித்து விலகும் முன் அவன் அவள் உடலை தனது முரட்டு கரங்களால் சிறைபிடித்து,, அவளின் இதழ்களை தனது முரட்டு உதடுகளால் சிறைபிடித்திருந்தான்

அவனுக்கு அவளின் மென்மையான இதழ்களின் தேனை அருந்த வேண்டும் என்ற வேகத்தில் அவளை முரட்டுத்தனமாக அணைத்திருந்தான்,, அவளின் கீழுதட்டை கவ்வி, இழுத்து தனது கூறிய நாக்கால் இரண்டு உதடுகளுக்கும் இடைவெளியை ஏற்படுத்தியவன், அவன் நாக்கை உள்ளே விடாமல் தடுத்த பற்களில் பாதுகாப்பை தகர்க்க முடியாமல் மறுபடியும் மறுபடியும் நாக்கால் அவள் பற்களுடன் முட்டி மோதினான்அவளும் அவனுக்கு உள்ளே வர இடம் விடாமல் தனது பற்களை சேர்த்து வைத்துக்கொண்டு போராடினாள்

ஒரு கட்டத்தில் அலுத்துப்போன சத்யன் சட்டென்று அவளை விலக்கி நிறுத்தி முறைத்துப் பார்த்தான்,, அவனுக்குள் ஏற்கனவே தீயாய் பற்றி பரவியிருந்த காதல், அவளின் பிடிவாதத்தால் கடும் வேட்கையாக மாறியிருந்தது

தனது கடைவாயில் வழிந்த சத்யனின் எச்சிலை தனது புறங்கையால் துடைத்த மான்சி,, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து ” என்ன இது,, உங்ககிட்ட இந்த மாதிரி நான் எதிர்பார்க்கலை,, என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க மனசுல” என்று குரல் வெளியே கேட்காமல் கோபமாய் மான்சி கேட்க

சத்யன் படபடத்த அவளின் உதடுகளை பார்த்துக்கொண்டே ” இது முத்தம்,, வேற எப்படி எதிர் பார்க்கிற,, உன்னைத்தான் மனசுல நெனைச்சுகிட்டு இருக்கேன்” என்று அவளின் கேள்விகளுக்கு பதிலலித்த சத்யன் விலகியிருந்த அவளை எட்டிப்பிடித்து இழுத்து அணைத்தான்

ஒருகையால் இடுப்பை வளைத்து,, மறுகையால் அவள் கழுத்தை வளைத்தவன் , அவளின் மூக்கை தன் மூக்கால் உரசி ” முடியலை மான்சி ஒரேயொரு முத்தம் தான் ப்ளீஸ், அதுக்குமேல வேனாம் என்னால் அடக்கி வைக்க முடியலை,, மூனு வருஷமா என்னையே மனசுல நெனைச்சுக்கிட்டு இப்போ என்னை இப்படி அவாய்ட் பண்றியே மான்சி” என்று சத்யன் ஏக்கமும் தாபமுமாக மான்சியிடம் கெஞ்சினான்

அவனுடைய ஏக்கப் பார்வையும்,, தாபம் நிறைந்த பேச்சுக்கும் மான்சி கறைந்து போக ஆரம்பித்தாள்,, ” இது ஆபிஸ் அதனால என்னைய விடுங்க” என்று அவனின் காதோரம் மான்சி கிசுகிசுக்கஅவள் மனம் இளகிவிட்டது என்று சத்யனுக்கு புரிந்தது,, ” ம்ஹும் இது ஆபிஸ்னாலதான் வெறும் முத்தம்,, இதே என் வீடாயிருந்தால் இன்னேரம் அவ்வளவுதான்” என்று சத்யன் குறும்புடன் பேசினான்

” அய்யோ வீடாயிருந்த என்ன பண்ணியிருப்பீங்களாம் ” என்று அவனை தூண்டினாள் மான்சி

அவள் முகத்தை சற்று தள்ளி நிறுத்தி உற்றுப்பார்த்து ” ம் பூஜை ரூம் கூட்டிப்போய் தாலியை கட்டிட்டு உடனே பெட்ரூமுக்கு தள்ளிக்கிட்டு போயிருப்பேன்” என்றான் குறும்பு வழியும் குரலில்

See also  மான்சிக்காக - பாகம் 35 - மான்சி கதைகள்

” ஏய் ச்சீ” என்று வெட்கத்தில் சினுங்கிய அவள் உதடுகளை மறுபடியும் கவ்விக்கொண்டான்,, இப்போது அவளிடம் எதிர்ப்பு சுத்தமாக இல்லை,, அவன் தேடாமலேயே,, அவனுடைய முத்த ஆராய்ச்சிக்கு தனது இதழ்களை திறந்து வழிவிட்டாள்

சத்யன் அவளின் இடுப்பை பற்றி தனது உயரத்துக்கு தூக்கினான்,, இப்போது குனியாமல் அவளை சமநிலையில் நிறுத்தி,, அவள் இதழ்த் தேனை உறிஞ்சினான்

சிறிதுநேரம் அவர்களின் உறிஞ்சும் சப்தத்தை தவிர வேறு எதுவும் அந்த அறையில் கேட்கவில்லை ,, அப்போது சத்யன் மேசையில் இருந்த தெலைபேசி தனது வேலையை செய்ய,, இருவரும் திடுக்கிட்டு விலகினார்கள்

இருவரும் ஒரே சமயத்தில் தனது வாயை துடைத்துக்கொண்டு அசட்டுத்தனமாக ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்ள,, ,எப்படி எனது முத்தம், என்று சத்யன் புருவம் உயர்த்தி ஜாடையில் கேட்டான்” ச்சீ போங்க” என்று வெட்கத்தை வார்த்தையில் மொழிந்துவிட்டு கதவை திறந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் மான்சி

” அன்பே இன்று நீ என் இதயத்தில்..

” வார்த்தை முட்களை விதைக்கிறாய்!

” வருத்தமாக இருக்கிறது..

” எனக்கு வலிக்கும் என்பதற்காக அல்ல..

” நீ முதன் முதலில் உன் பாதம் பதித்து..

” என் இதயத்தில் நடக்கும் போது…

” உனக்கு வலிக்குமே என்றுதான்!!!

மான்சி அறையிலிருந்து சென்றதும் சத்யன் மனம் கும்மாளமிட்டு கொண்டாட அடித்து ஓய்ந்திருந்த தொலைபேசியை அடைந்து யார் அழைத்தது என்று காலரைடியில் பார்த்தான்,, கார்த்திக்தான் அழைத்திருந்தான்,, அவனுடைய மொபைல் நம்பரில் இருந்து அழைத்திருந்தான்

கார்த்திக்கை அழைத்துவிட்டு சத்யன் காத்திருந்தான்,, எதிர்முனையில் எடுத்ததுமே “ என்னடா மச்சான் எதுக்கு கால் பண்ண” என்று சத்யன் கேட்டான்
கல்லூரியில் படித்த நாட்களைத் தவிர சத்யன் எப்பவுமே இப்படி அழைத்ததில்லை என்பதால் கார்த்திக்குக்கு ஆச்சரியமாக இருந்தது சந்தோஷத்தில் பேச வாய் வராமல் கார்த்திக் அமைதியாக இருக்க……..

“ என்னடா கார்த்திக் என்னாச்சு,, என்று சத்யனின் குரல் கேட்டதும்

“ ஒன்னுமில்ல பாஸ்,, மான்சி உங்க ரூமுக்குள்ள வந்து ரொம்ப நேரமாச்சு, சில பேப்பர்ஸ் நீங்க செக்ப் பண்ணா கூரியரில் அனுப்பிரலாம்,, லேட் ஆகுது அதான் கால் பண்ணேன் பாஸ்” என்றவன் சிறிதுநேர தயக்கத்துக்குப்பிறகு “ மான்சி போய்டாங்களா பாஸ்,, நான் பேப்பர்ஸ் எடுத்துகிட்டு வரவா?” என்று கேட்டான் கார்த்திக்சத்யனுக்கு சங்கடமாக இருந்தது,, காலையிலேயே ஆபிஸ்ல இது தேவையில்லாத வேலை,, கொஞ்சம் கட்டுப்பாட இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு,, “ போய்ட்டா,, நீ வா கார்த்திக்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்

See also  மனசுக்குள் நீ - பாகம் 12 - மான்சி தொடர் கதைகள்

ஏதோ தோன்ற அவசரமாக குனிந்து சட்டையை பார்த்தான்,, அவன் நினைத்தது சரியாகப் போய்விட்டது,, மான்சியை முத்தமிடும்போது அவள் இவன் சட்டையை கொத்தாக பற்றிய இடத்தில் கசங்கி போயிருந்தது,, பதட்டமாக சட்டையின் கசங்கலை நீவி சரிப்படுத்தினான் சத்யன்

உள்ளே நுழைந்த கார்திக்கின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு அவன் வைத்த பேப்பர்களில் தனது கவனத்தை செலுத்தினான்,, எல்லாவற்றையும் சரி பார்த்து கையெழுத்திட்டு கார்த்திக் முன்பு நகர்த்தினான்
பேப்பர்ஸை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிய கார்த்திக்கை “ ஸாரி கார்த்திக்” என்ற சத்யனின் குரல் தடுத்தது

ஆச்சரியமாக திரும்பி பார்த்த கார்த்திக் “ எதுக்கு பாஸ் ஸாரி” என்றான்
“ இல்ல கார்த்திக்,, மான்சி தனியா உட்கார்ந்திருந்தா,, சரி வான்னு இங்கே கூட்டி வந்தேன்,, வந்து கொஞ்சநேரம் அனிதா பேமிலியை பத்தி ரொம்ப கோபமா பேசினாள்,, அப்புறமாத்தான் ஏதோ ஒரு வேகத்தில் பேச்சு திசைமாறி போச்சு” என்று கார்த்திக்கின் முகத்தை பார்க்காமல் டேபிளில் இருந்த அத்தனைப் பொருட்களையும் பார்த்துபடி பேசினான்

கார்த்திக்கிடம எந்த பதிலும் இல்லாது போகவே என்னாச்சு என்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தான் சத்யன்கார்த்திக் முகத்தில் குறும்பு வழிந்தது,, சட்டென்று எட்டி சத்யன் கையைப்பிடித்து குலுக்கி “ பாஸ் நீங்க வெட்கப்பட்டா ரொம்ப அழகா இருக்கீங்க பாஸ்” என்றான்
இப்போது சத்யனுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்தது,, “ டேய் போடா போடா போய்ப் பொழப்ப பாரு,, இங்கே நின்னு என் மூஞ்சிய ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்க” என்று சிரிப்புடன் சத்யன் சொல்ல….

“ எஸ் பாஸ் இதோ கிளம்பிட்டேன்,, ஆனா இப்பவும் அனிதா கிட்டே இதைப்பத்தி எதுவுமே பேசக்கூடாதா பாஸ்,, ஏன்னா என்னால அவளை சமாளிக்க முடியலை,, அவளைப்பார்த்ததும் இதைத்தான் முதலில் சொல்லனும் போல இருக்கு ,, ப்ளீஸ் பாஸ் சொல்லிரட்டுமா?” என்று கார்த்திக் அதிகபட்சமாக அசடு வழிந்தான்

Leave a Comment

error: read more !!