சற்று காலம் கடந்து அவன் காதலை உணர்ந்தாலும்.. அது அவனை சொர்க்கத்தின் விழிம்பில் கொண்டுபோய் நிறுத்தியது,, அதே சந்தோஷமான மனநிலையுடனேயே தன் அக்காவீட்டுக்குப் போனான்…
அவனுக்காக காத்திருந்தார் தர்மன்,, தம்பிக்கு காப்பி எடுத்து வர உள்ளே போனாள் மீனா… சத்யன் தர்மனுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்த படி “ எங்க மாமா வீரனும் தேவனும்” என்று கேட்க… “ வீரன் மதுரைக்குப் போயிருக்கான்.. தேவன் ஆலையில இருந்து இன்னும் வரலை மாப்ள” என்றபடி நிமிர்ந்தவர்.. சத்யனின் வெள்ளைச் சட்டையின் காலரில் ஒட்டியிருந்த குங்கும தீற்றலைப் பார்த்து தனக்குள் சிரித்தபடி
“ என்ன மாப்ள மான்சி இன்னிக்கு ஏதோ கோயிலுக்கு கூட்டிப்போகலைன்னு ரொம்ப தகராறு பண்ணாலாமே? அப்புறம் என்னாச்சு?” என்று .. ஏதோ மகளுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல கேட்டார்… தன் சட்டையில் அவர் பார்வை போன இடத்தைப் பார்த்த சத்யன் சற்று நெளிந்தபடி
“ ம் போன் பண்ணி சொன்னதும் நான் வந்து சமாதானம் பண்ணேன் மாமா.. என்னப் பண்றது மாமா கொஞ்சம் பிடிவாதம் அதிகம்.. போகப்போக சரியாயிடுவா” என்றவன் சோபாவில் இருந்து எழுந்தவன்
“ இதோ வர்றேன் மாமா” என்றுவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தான்… கிச்சனில் காபிப் போட்டுக்கொண்டு இருந்த மீனா தம்பியைத் திரும்பிப்பார்த்து “ என்ன சத்யா?” என்று கேட்க… பாத்திரம் கழுவும் வாஷ்பேஷின் அருகே வந்து குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து தன் காலரில் இருந்த குங்குமக் கரையை கழுவியபடி..
“ இல்லக்கா சும்மா ஏதோ கரை ” என்று சமாளித்தவனை உற்றுப்பார்த்த மீனா சட்டையில் இருந்த குங்குமத்தைப் பார்த்துவிட்டு பூரித்து சிரித்தபடி காபியுடன் வெளியேப் போனாள் சற்றுநேரத்தில் வந்து அமர்ந்த சத்யனை மேலும் சிரித்து சங்கடப்படுத்தாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார் தர்மன்
“ சத்யா நம்ம செல்விய வீரனுக்கு கேட்கலாம்னு நானும் உன் அக்காவும் முடிவு பண்ணிருக்கோம்.. நீ என்ன சொல்ற மாப்ள?” என்று கேட்க.. சத்யன் அவரை ஆச்சர்யமாகப் பார்த்து
“ என்ன மாமா சொல்றீங்க?… நம்ம செல்வியா?” என்று கேட்டதும்… “ ஆமாம் மாப்ள.. அவள மாதிரி ஒரு ஆளுதான் இந்த வீட்டுக்கு லாயக்கு,, அதுவுமில்லாம நாம என்ன சாதி குளம் கோத்திரம் பார்க்கவேண்டியதில்ல, தூரத்து உறவுல ராமைய்யா உனக்கு அண்ணன் முறை.. எனக்கு மச்சான் முறை.. அதான் நீயே அவர்கிட்ட பேசி அபிப்ராயத்தை கேட்டு சொன்னா. நாம ஒரு நல்லநாள் பார்த்து ராமைய்யா வீட்டுக்குப் போய் தாம்பூலம் மாத்திக்கிட்டு வந்துடலாம்”
என்று தனது முடிவை சொன்னார் செல்வி இந்த வீட்டுக்கு மருமகளாவது அவனுக்கு ரொம்பவே சந்தோஷம்,,
“ சரி மாமா நான் ராமைய்யா அண்ணனைப் பார்த்து பேசிடுறேன்” என்றான்.. அதன்பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு சத்யன் கிளம்பினான்… நேராக தன் வீடு செல்லாமல் ராமைய்யாவின் வீட்டுக்குப் போனான்.. சத்யனுக்கு இந்த விஷயத்தை ஆறப்போட்ட செய்வதில் விருப்பமில்லை… உடனடியாக பேசி முடிக்க தீர்மானித்தான் .. அந்த நேரத்தில் சத்யனை எதிர் பார்க்காத ராமைய்யா பதட்டத்துடன் “ என்னங்க தம்பி இந்த நேரத்துல?”
என்று கலவரத்துடன் கேட்டு வெளித் திண்ணையில் சத்யன் அமர தன் தோளில் இருந்த துண்டை எடுத்து தரையை துடைத்தார்.
திண்ணையில் ஏறியமர்ந்த சத்யன் “ நல்ல விஷயம் தாண்ணே… நம்ம செல்வியை மீனாக்கா பையன் வீரேனுக்கு கேட்கிறாங்க.. இப்பதான் மாமா கூப்ட்டு விஷயத்தை சொல்லி உங்ககிட்ட அபிப்பிராயம் கேட்க சொன்னாரு.. நீங்க என்னண்ணே சொல்றீங்க?’ என்று சத்யன் உற்சாகத்துடன் கேட்க.. தன் காதில் விழுந்த செய்தியை நம்ம முடியாமல் சத்யனை ஆவென்று பார்த்தார்…
“ என்னண்ணே அப்புடிப் பார்க்குறீங்க.. எல்லாம் நல்லதுக்கு தான்.. அக்காவுக்கும் மாமாவுக்கும் செல்வியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதான் உடனே முடிக்க ஆசைப்படுறாங்க” என்று சத்யன் விளக்கியதும் .. கதவோரமாக நின்றிருந்த ராமையாவின் மனைவி “ அய்யா இவருக்கு என்னத்தங்க தெரியும்.. செல்வி உங்க வீட்டு பொண்ணு.. நீங்கப் பார்த்து என்ன செய்தாலும் எங்களுக்கு சம்மதம்”
என்று தன் கணவருக்கு பதிலாக பேச… அப்போதுதான் உயிர் வந்தது போல் “ ஆமாங்கய்யா ஆமா ஆமா.. செல்வி உங்கவீட்டு பொண்ணு நீங்கப் பார்த்து எது செய்தாலும் நாங்க மறுத்துப் பேசப்போறதில்ல.. அப்புறம் எங்ககிட்ட என்னய்யா கேட்குறது” என்றார் ராமைய்யா..
“ செல்வியும் என் மகதான்.. ஆனாலும் பெத்தவங்க கிட்ட கேட்கிறது தானே முறை அண்ணே… சரி சம்மதம் சொல்லிட்டீங்கள்ள இனிமே ஆகவேண்டியதை நான் பார்த்துக்கிறேன்” என்று உற்சாகமாய் கூறிவிட்டு சத்யன் வீட்டுக்கு கிளம்பினான்.. ராமைய்யாவின் வீட்டில் இருந்து பைக்கை தன் வீடு செல்லும் தெருவில் திருப்பியவன் பின்னாடி யாரோ ஓடி வருவது இருட்டில் தெரிய, உடனே வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிப்பார்த்தான் .. செல்விதான் மூச்சிரைக்க ஓடிவந்து வண்டியின் அருகே நின்றாள்
“ என்னா செல்வி ஏன் இப்படி ஓடி வர்ற?” என்று சத்யன் கேட்டு முடிக்குமுன் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்ட சத்யனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு
“ சின்னய்யா எனக்கு இந்த கல்யாண ஏற்ப்பாடு வேனாம்ய்யா.. எனக்கு இதுல சம்மதமில்லைங்க அய்யா” என்று சொல்லிவிட்டு கேவியவளைப் பார்த்து சத்யன் குழப்பத்துடன்.. “ ஏன் செல்வி? அவங்க என்கிட்ட பண்ண பிரச்சனையை மனசுல வச்சுக்கிட்டு இப்புடி சொல்றியா? ஏதோ கோவத்துல இப்படி பண்ணிட்டாங்க மத்தபடி அவனுங்க நல்ல பசங்கதான் செல்வி” சத்யன் தன் மச்சான்களுக்கு ஆதரவாக பேசினான்..
“ அய்யோ நான் அதையெல்லாம் நினைக்கலைங்க சின்னய்யா… எனக்கு இப்போ கல்யாணம் வேனாமுங்க” என்று கலங்கியவளை கூர்மையாகப் பார்த்து “ என்ன செல்வி நீ யாரையாவது விரும்புறயா?” என்று நேரடியாக சத்யன் கேட்டதும்.. திகைத்து மவுனமாக தலை குனிந்தாள்.. அவளது தலைகுனிவே சத்யன் கேட்டது உண்மை என்று உணர்த்த.. சத்யனது உற்ச்சாகமெல்லாம் வடிந்து போனது
“ யாரு அந்த பையன் செல்வி? ” என்று கேட்டான்.. கலவரத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த செல்வி.. மறுபடியும் தலைகுனிந்து “ அந்த வீட்டு சின்னவரு தாங்க” என்றதும் சத்யன் ஆச்சரியமாக “ யாரு தேவனா?” என்று கேட்க “ ஆமாங்க… மொதல்ல சம்மதமில்லை ஆனா அவரு என்னைய உசுருக்கு உசுரா விரும்புறாருங்கய்யா.. பொறவு நானும்தான்……” என்று முடிக்க முடியாமல் தடுமாறிவளைப் பார்த்து..
“ அடக் கழுதை.. கொஞ்சநேரத்தில என்னையவே கலங்க வச்சிட்டயே… நீ அந்த வீட்டு மருமகளா போகனும் , அது தேவனோ வீரனோ.. உனக்கு பிடிச்சவன் கூடதான் உன் கல்யாணம்.. மனசைப் போட்டு குழப்பிக்காம போய் தூங்கு நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சத்யன் தன் வீட்டுக்கு கிளம்பினான் அதேசமயம்த்தில்
அங்கே தர்மன் வீட்டில் மீனா மூலமாக விஷயத்தை கேள்விப்பட்ட வீரேன்… ‘ மொதல்ல என் தங்கச்சியை பெரிய இடத்துல கட்டிக்குடுக்க கூடாதுன்னு அவ வாழ்க்கையை கெடுத்த.. இப்போ என் தலையில ஒன்னுமில்லாத வாயாடியை கட்டப் பார்க்கிறயாடா மாமா’
என்று சத்யன் மீது பயங்கரமாய் நெஞ்சில் வஞ்சத்தை வளர்த்தான்,, அவனுக்கு அந்த பணக்கார மதுரை பெண்ணின் மீது இருந்த மோகம் கண்ணை மறைத்தது..