மான்சிக்காக – பாகம் 45 – மான்சி கதைகள்

FB_IMG_1466872673452“ அய்ய நான் உன் வீட்டுக்கெல்லாம் போகமாட்டேன் போ.. அதுவும் தனியா உன் ரூமுக்குள்ளயா ம்ஹூம் முடியாது சாமி ” செல்வி கூச்சத்துடன் சொல்ல….

“ அடியேய் லூசு மங்கம்மா… நான் உன்னை என்னோட டிரஸ் தான் எடுத்துட்டு வரச் சொன்னேன்…என்னமோ என் ரூம்ல என்கூடவே குடுத்தனம் பண்ண கூப்ட்ட மாதிரி சிலுத்துக்கிற.. சொன்னதை செய்டி”

என்று காதல் கொடுத்த உரிமையில் அதட்டினான் “ ம்ம் போறேன்… அதான் சாக்குன்னு நீ ரொம்பதான் கற்பனையை ஓடவிடாத…. என்னென்ன துணின்னு சொல்லு எடுத்திட்டு வர்றேன்” பதிலுக்கு அதட்டினாள் செல்வி..“ என்னோட பேன்ட் சர்ட் ரெண்டு செட்.. ஒரு கைலி. ஒரு டவல்.. இதெல்லாம் ” “ ம் சரி வேற என்ன வேனும்” “ என்னோட பனியன் ஜட்டி ரெண்டு செட்” தேவன் கிசுகிசுத்தான் “ ஓய் இங்கபாரு அந்த கருமத்தை எல்லாம் நான் என் கையால கூட தொடமாட்டேன்.. போ போ” செல்வி கறாராக சொன்னாள்

“ ஏய் அது போடாம எப்புடிடி பேன்ட் போடுறது… மரியாதையா எடுத்துட்டுவா” தேவன் குரலை உயர்த்தி அதட்டினான்… “ ஏன் கால் மீட்டரு காடா வாங்கி கோமணம் கட்டிக்கயேன்…. எனக்கென்ன வந்தது” செல்வி தனது கிராமத்து குறும்புடன் பேசினாள் “ கால் மீட்டர் துணில கோமணமா…. அடியேய் என் செல்லக்கண்ணு… எனக்கு கோமணம் கட்டி பழக்கம் இல்லடி…

நம்ம கல்யாணத்துக்குப் பிறகு கட்டிக்கிறேன்… இப்ப நீ அதையெல்லாம் எடுத்துட்டு வா செல்வி… மாமா வேற பக்கத்துல இருக்காரு .. நான் ரொம்ப நேரமா போன்ல பேசினா தப்பா நெனைக்கப் போறாரு” என்று தேவன் சொன்ன மறுவினாடி… “ அய்யய்யோ சின்னய்யா பக்கத்துல தான் இருக்காரா? நீ மொதல்ல போனை வை.. நான் நாளைக்கு எல்லாத்தையும் எடுத்துட்டு வர்றேன்”

என்று பதட்டமாக கூறிவிட்டு இவன் பதில் சொல்லும் முன் இணைப்பை துண்டித்தாள் .. தேவன் காலையிலிருந்து இருந்த இறுக்கமான மனநிலை மாறி மனம் இலகுவானது… முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் திரும்பி சத்யனிடம் வந்தான்… சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டு மறுபடியும் பெஞ்சில் படுத்துவிட்டிருந்தான் சத்யன்“ செல்வி அவங்க அப்பா நம்பர்ல இருந்து போன் பண்ணுச்சு மாமா… நாளைக்கு அவ வரும்போது உங்களுக்கும் எனக்கும் மாத்திக்க டிரஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன்” என்று கூறிவிட்டு பெஞ்சின் ஓரமாக சத்யனின் கால்பக்கம் அமர்ந்தான்.. அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சத்யன்

“ ஏன்டா ஆம்பளைப் புள்ளை என்ன ஏதுன்னு வாயைத் தொறந்து சொல்லமாட்டியா? நேத்து நைட்டு செல்விதான் விஷயத்தை சொல்லிச்சு.. ஆனா நாங்க வேற ஒன்னு முடிவு பண்ணோம்.. அதனால வந்த விணைதான் இவ்வளவும்” என்று தேவனின் முகத்தை பார்க்காமல் பேசினான்..

See also  மனசுக்குள் நீ - பாகம் 32 - மான்சி தொடர் கதைகள்

தேவன் நெஞ்சம் படபடக்க “ என்ன மாமா சொன்னா?… நீங்க என்ன முடிவு பண்ணீங்க?” என்று சன்னமான குரலில் கேட்டான்.. ஒருக்களித்துப் படுத்து தேவன் முகத்தைப் பார்த்த சத்யன்

“ நேத்து சாயங்காலம் உன் அப்பா போன் பண்ணி என்னை வரச்சொன்னார்… அக்காவுக்கும் மாமாவுக்கும் செல்வியை ரொம்ப பிடிச்சுப்போச்சு.. அதனால அவளை வீரேனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு என்னை ராமைய்யா கிட்டப் போய் பேசச்சொன்னாங்க.. நானும் நேத்து நைட்டு போய் ராமைய்யா கிட்ட பேசினேன்.. அவருக்கும் சம்மதம் தான்” என்று சத்யன் சொல்லும்போதே…

அதிர்ச்சியுடன் பெஞ்சில் இருந்து எழுந்த தேவன் “ அய்யய்யோ மாமா.. நானும்.. செல்வியும்” என்று மேலே சொல்லமுடியாமல் தடுமாறினான்… எழுந்து அமர்ந்து தேவன் கையைப் பற்றி இழுத்து தன்னருகே அமர வைத்த சத்யன்“ நான் சொல்றதை முழுசா கேளு” என்று அவன் தோளைத் தட்டி ஆறுதல் படுத்திவிட்டு “ அப்புறம் நான் வீட்டுக்கு கிளம்புனதும் செல்வி என்னை வழியில மடக்கி உங்க ரெண்டுபேர் விஷயத்தையும் சொல்லி அழுதுச்சு…எப்படியோ செல்வி என் அக்காவுக்கு மருமகளா போகனும்… அது பெரியவனா இருந்தா என்ன சின்னவனா இருந்தா என்ன…

என்கிட்ட சொல்லிட்டேல்ல நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு நான் வீட்டுக்குப் போய்ட்டேன்” என்று சத்யன் சொன்னதும்.. “ ஆனா இந்த வீரேன் எதுக்கு திடீர்னு தகராறுக்கு வந்தான்.. நானும் நைட்டு ஆயில் லோடு அனுப்ப ஆலைக்கு போய்ட்டேன்… வீட்டுல என்ன நடந்துச்சின்னு தெரியாது மாமா ” என்று குழப்பமாக கூறினான் தேவன்

“ ஆமா தேவா இன்னிக்கு காலையில வீரேன் என்னை வெட்ட வந்தப்ப செல்வியை நான்தான் அவன் தலையில கட்டுறதா சொல்லிதான் தகராறுக்கு வந்தான்… ஆக அவன்கிட்ட நைட்டே மாமா சொல்லிருப்பார் போலருக்கு.. அவனுக்கு செல்வியை கட்டுறதுல இஷ்டம் இல்லாம அந்த வஞ்சத்தை இப்படி தீர்த்துக்கிட்டான் ……” இது எல்லாத்துக்கும் காரணம் நான்தான் தேவா… நேத்து நைட்டே மாமாவுக்கு போன் பண்ணி நீயும் செல்வியும் விரும்பும் விஷயத்தை சொல்லிருந்தா.. அவரும் இதைப்பத்தி வீரேன் கிட்ட பேசிருக்க மாட்டாரு.. அப்புறம் அப்பா காலையில எனக்கு போன் பண்ணாரு.. நான் தூங்ககிட்டு இருந்ததால கொஞ்சநேரம் கழிச்சு பண்றேன்னு சொல்லி வச்சிட்டாரு.. நானும் மறுபடியும் போன் பண்ணனும்னு நெனைச்சதை மறந்துட்டேன்.. நான் போன் பண்ணியிருந்தா காலையிலேயே எனக்கு வீரேன் வீட்டுல சண்டைபோட்ட விஷயம் தெரிஞ்சு நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருப்பேன்.. ஆக எல்லாம் என்னோட அலட்சியத்தால் வந்தது ”

See also  மனசுக்குள் நீ - பாகம் 27 - மான்சி தொடர் கதைகள்

சத்யன் வருத்தமாக கூறிவிட்டு தலை குனிந்தான்.. மாமன் வருந்துவது மனதுக்கு கஷ்டமாக இருக்க “ இல்ல மாமா வீரேன் இந்த விஷயத்துக்காக இப்படி நடந்துகிட்டு இருக்கமாட்டான்.. அவனுக்கு இன்னும் வேற காரணங்கள் இருக்கும்.. நீங்க மனசை குழப்பிக்காம தூங்குங்க மாமா” என்றான் ஆறுதலாக..

“ ம்ம்” என்று மறுபடியும் படுத்த சத்யன்.. “ டேய் தேவா வாய் தவறிக்கூட செல்விகிட்ட சொல்லிடாத.. அப்புறம்… எல்லாம் நம்மளாலதான்னு அந்த புள்ளை மனசு கஷ்டப்படும்” என்று எச்சரிக்கை செய்தான்“ சரி மாமா.. ” என்றவன் எழுந்துகொண்டு “நான் போய் அந்த ரூம்ல படுக்குறேன் மாமா.. எதுனாச்சும்னா எனக்கு போன் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு போனான் தேவன்

Leave a Comment

error: read more !!