பொம்மலாட்டம் – பாகம் 32 – மான்சி தொடர் கதைகள்

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கம்பெனியிலும் வீட்டிலும் அதிக நேரம் செலவிடாத சத்யனை மதியும் வாசுகியும் கேள்வியாக நோக்க சிறு புன்னகையுடன் அவர்களை சமாளித்தான்…. விஷயம் என்னவென்று அவனாகச் சொல்ல காத்திருந்தனர் தம்பதியர்….

ஒரு சுபயோக சுப நாளில் வாசுகின் மகன் வருண் பிறந்தான்…. வீடே சந்தோஷக் கடலில் மிதந்த அன்றைய நாட்களில் ஒரு நன்னாள் பார்த்து தனது கர்ப்பிணி மனைவியுடன் அக்காவின் எதிரே வந்து நின்றான் சத்யன்…. மான்சியைக் கண்டு அதிர்ச்சியென்றால் அவளது கருவுற்ற வயிறு அதைவிட அதிர்வைக் கொடுக்க “அப்பூ……………” என்றாள் கலவரமாக…..“ம் என் மான்சி தான்க்கா…. நான்தான் உலகம்னு மொத்தமாக மாறிட்ட மான்சி தான் அக்கா” என்று உணர்ச்சிப் பெருக்கில் உதடுகள் துடிக்கக் கூறினான்… மெல்லப் படுக்கையை நெருங்கிய மான்சி, வாசுகியின் விரல் தொட்டு “நீங்க சத்யா அத்தானோட அக்கா வாசுகி… எனக்கு அண்ணி… இவர் சத்யா அத்தானோட மாமா… எனக்கு அண்ணா… இவ அம்மூ… சத்யா அத்தானோட அம்மூ பாப்பா… எனக்கும் அம்மூ பாப்பா….”

என்றவள் வாசுகியின் விரலை எடுத்து தன் வயிற்றில் வைத்து “இது சத்யா அத்தானோட பாப்பா… உங்களுக்கு மருமகன் ” என்றாள் விழிகளில் மின்னல் தெறிக்க… மான்சியின் வயிற்றை வருடிய வாசுகியால் தாங்க முடியவில்லை…. “என் கண்ணே….” என்று மான்சியை இழுத்து அணைத்துக் கொண்டு குமுறிவிட்டாள்….

குழந்தைப் பெற்றவள் அழக்கூடாதே என்ற தவிப்பில் சத்யனும் மதியும் வாசுகியை ஆறுதல்ப் படுத்த…. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த வாசுகி “எப்புடி அப்பு இதெல்லாம்? என்னால நம்பவே முடியலையே? இந்த ஒரு மாசமா நீ மான்சியைப் பார்க்கத்தான் ஓடிக்கிட்டு இருந்தியா?” என்று கேட்க... “ஆமாம் அக்கா” என்ற சத்யன்,, வாசுகியின் ரிப்போர்ட் வாங்க சென்ற அன்று மான்சியை மருத்துவமனையில் சந்தித்தது முதல் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்….”இவ்வளவு நடந்திருக்கா?” என்று வாசுகி மதி இருவரும் திகைப்பில் வாய்ப் பிழக்க… சத்யன் சிரிப்புடன் தனது மருமகனைத் தூக்கி மான்சிக்கு அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தான்….

“இந்த ஆதிப் பய மூச்சு விட்டானா, பார்த்தியா வாசு? வரட்டும் அவனை.. ரெண்டுல ஒன்னு பார்த்துடுறேன்” என்று மதி கூறிக்கொண்டிருந்த அந்த நிமிடம் உள்ளே நுழைந்த ஆதி “வந்துட்டேன் மாமா… என்ன பண்ணனுமோ பண்ணுங்க” என்று கைகளை விரித்து நின்றான்… படுக்கையிலிருந்து எழுந்து வந்த வாசுகி ஆதியின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக் கொண்டு “உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னேத் தெரியலை ஆதி… நீயும் எங்க வீட்டுப் பிள்ளை தான்…

See also  மனசுக்குள் நீ - பாகம் 15 - மான்சி தொடர் கதைகள்

உனக்கும் இந்தக் குடும்பத்துல பொறுப்புகளும் கடமைகளும் இருக்குன்னு மறுபடியும் நிரூபிச்சிருக்க ஆதி….” என்று கண்கலங்கியவளின் கைகளைப் பற்றிய ஆதி… “நன்றினு சொல்லி பிரிச்சிடாதீங்கக்கா… இந்த கையால எத்தனை நாள் சாப்பிட்டிருப்பேன்… சத்யனுக்கு ஒரு சட்டை எடுத்தால் ஆதி இந்த சட்டை உனக்கு நல்லாருக்கும்டானு எனக்கும் ஒரு சட்டை எடுத்து தருவீங்க... அது போல ஆயிரம் சட்டைகள் எடுக்க என்கிட்ட பணமும் வசதியும் இருக்கு… ஆனா உங்க அன்பு? அதுக்கு ஈடு எதுவுமேயில்லைக்கா” என்றான்….. தம்பியிடம் வந்தாள் வாசுகி “மான்சி மேல தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது அப்பு…. உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்… மான்சி கூட நீ சந்தோஷமா வாழ முடியும்னு நீ நம்பும் போது அவளை நானும் ஏத்துக்கிறேன் அப்பு…” என்றாள்….

“நிச்சயம் நல்லா இருப்போம் அக்கா” என்றான் சத்யன்…. அதன் பிறகு உணர்ச்சிகரமாகவும் சிரிப்பும் சந்தோஷமுமாகவும் பல வாத விவாதங்களுக்குப் பிறகு மான்சி அந்த குடும்பத்தின் முதல்க் குழந்தையாக ஏற்றுகொள்ளப்பட்டாள்…. சந்தோஷமெனும் சாரல் மழையுடன் நாட்கள் நகர்ந்தன…. மான்சி அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்டாள்….

அவளது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கும் புரிந்துகொள்ளும்படி இருந்தது… வாசுகி தனது இரு குழந்தைகளுடன் மான்சியையும் ஒரு குழந்தையாகக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள்….எல்லோரும் பயத்துடன் எதிர்ப்பாத்துக் காத்திருந்த ஒரே விஷயம் என்னவென்றால்…… அது மான்சியின் பிரசவம் தான்…. உணர்வுகளைக் கொட்டத் தெரியாதவள் வலியினை எப்படிக் காட்டுவாள் என்ற பயம் தான் அதிகமாக இருந்தது….டாக்டர் செபாஸ்டியன் மூலமாக குடும்பத்திலிருந்த அத்தனை பேரும் கவுன்சிலிங் செய்யப்பட்டுத் தயார் படுத்தப் பட்டனர்…. மான்சியின் பிரசவகாலம் குறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்…. எப்போதும் போல் மிக சாதாரணமாகவே இருந்த மான்சியைக் கண்டு இவர்கள் அனைவரும் தான் அலறினார்கள்… ஆனால் பிரசவ வலி இன்னதென்று கண்டுகொள்ள முடியாத மான்சியோ சத்யனைத் தவிர வேறு யாரையுமே கிட்டே வரவிடாமல் கத்தி அலறினாள்…

மற்றவர்களுக்குப் புரியாதது டாக்டருகளுக்குப் புரிந்தது…. சத்யனைக் கைபேசியில் அழைத்த டாக்டர் செபாஸ்டியன் “உங்க கையில் தான் இருக்கு சத்யன்…. நீங்க தான் மான்சிக்குப் புரிய வைக்கனும்…. கூடவேயிருங்க… பாப்பா வருவதற்கு தான் இந்த வலியென்று சொல்லுங்க… எப்படியாவது ஒரு லேடி டாக்டரும் நர்ஸூம் அறைக்குள் வரும்படி மான்சியை மாற்றுங்க சத்யன்” என்றார்….

சத்யனுக்கு அவர் சொல்வது புரிந்தது… ஆனால் மான்சி வலி தாங்கும் விதமே மூர்க்கமாக இருந்தது…. சத்யனை அருகில் படுக்கச் சொல்லி அவனை இறுக கட்டிக் கொண்டு கத்தித் துடித்தாள்… ஆனால் பொட்டுக் கண்ணீர் இல்லை…. அவளது அணைப்பில் சத்யனது உடல் புண்ணானது…. பிடரி மயிர்களை பிய்த்து விடுபவள் போல் செய்தாள்…. அணிந்திருந்த சட்டையையும் மீறி சத்யனின் முதுகில் ரத்தக் கோடுகள்….

See also  பொம்மலாட்டம் - பாகம் 08 - மான்சி தொடர் கதைகள்

அசுரத்தனமாக வலி தாங்கிய அவளை அடக்குவது பெரும் பாடாக இருந்தது… இதில் அவளுக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்பது? அதற்கான கால அவகாசமும் இல்லை…. நேரம் ஆக ஆக அனைவரிடமும் பதட்டம் அதிகரித்தது…. பிரசவம் சிக்கலாகி விடுமோ என்று பயந்தனர்….. அறைவாயிலில் கைகளை பிசைந்துகொண்டு காத்திருந்தனர்….டாக்டர் செபாஸ்ட்டியன் பெண் மருத்துவரின் அருகே வந்து “மேடம்… வேற வழியில்லை… மெடிசன் கொடுத்து மயக்கப்படுத்தி சிசேரியன் செய்துடலாம்…. நேரம் அதிகமாகுதே” என்றார் கொஞ்சம் கலவரமாக…

Leave a Comment

error: read more !!