மான்சிக்காக – பாகம் 50 – மான்சி கதைகள்

2a4b18240844114-1இப்போது வீரேனுக்கு இன்னொரு முடிச்சும் அவிழ்ந்தது.. எவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணியிருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்தது… மாமாவுக்கு பேசுறதுக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருந்தாலும் எல்லாம் சரியாப் போயிருக்கும்..

இப்படி அவசரப்பட்டு எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்கிறேன்… என்று நினைத்தவன் வேதனையுடன் தன் தலையில் அடித்துக்கொண்டான் அவன் செய்கைப் பார்த்து கலவரமான செல்வி“ நீங்க சின்னய்யாவை வெட்ட வந்ததுக்கு காரணம்? என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னதுதானா? அய்யோ அப்ப நான்தான் எல்லாத்துக்கும் காரணமா?” என்று சட்டென்று விழிகள் குளமாகி நின்றவளைப் பரிதாபத்துடன் பார்த்து…. அந்த சின்ன பெண்ணின் மனதை வேதனைப்படுத்த மனமின்றி “ நீ காரணம் இல்லை செல்வி… இது வேற பிரச்சனை..

மாமாவும் மான்சியும் நல்லா வாழலைன்னு நான்தான் தீர விசாரிக்காம முட்டாள்தனம் பண்ணிட்டேன்.. நேத்து மாமாகிட்டயும் மான்சிகிட்டயும் பேசி மன்னிப்பு கேட்டுட்டேன்… மாமாவும் என்னை மன்னிச்சிட்டாரு.. இனிமேல் எங்கப்பா தான் என்னை மன்னிக்கனும்” என்ற கவலையுடன் கூறியவன்

“ சரி நீ போ செல்வி… இன்னிக்கு மான்சிய ரூமுக்கு மாத்திடுவாங்கலாம்” என்றான்.. மறுபடியும் தயங்கிய செல்வி “ நீங்களும் இங்கதான் இருக்கீங்கன்னு எங்கப்பா சொன்னாரு.. அதனால உங்க வீட்டுல உங்க தம்பி துணியெல்லாம் எடுக்க போகும்போது.. உங்கவீட்டுல வேலை செய்றவங்ககிட்ட சொல்லி உங்களுக்கும் ரெண்டு செட் துணி எடுத்துட்டு வந்தேன்…

அந்த பை கார்லயே இருக்கு எடுத்துக்கங்க” என்று கூறிவிட்டு தேவன் போனவழியில் போனாள் செல்வி… போகும் செல்வியையேப் பார்த்தான் வீரேன்… என்னைத்தவிர எல்லோரும் நல்லவங்க தான்… நான்தான் சீரழிஞ்சு போய்ட்டேன்… என்னைதான் யாருக்குமே பிடிக்காம போச்சு’ கழிவிரக்கத்தில் வீரேனின் கண்கள் கசிந்தது… ஜோயலின் கோபமும் சேர்ந்து அவனை வாட்டியது..

அமைதியாக சத்யனின் காரை நோக்கிப் போனான்.. டிரைவரிடம் சொல்லி காரிலிருந்த பேக்கை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்த குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வந்து ஐசியூவின் வெளியே மொத்த குடும்பமும் காத்திருக்க.. வீரேன் பெஞ்சில் அமர்ந்திருந்த சத்யன் அருகே அமர்ந்தான்… அவன் அப்பா அவனை தீயாய் முறைத்ததை கவனிக்காதது போல் சத்யன் பார்த்தான்.. “ என்ன வீரா ஏதாவது சாப்ட்டயா?” என்று சத்யன் கேட்க…

“ இன்னும் இல்ல மாமா?” என்றான் வீரேன்.. “ பெரிய டாக்டர் வந்து பார்த்துட்டுப் போய்ட்டார்…மான்சியை ரூமுக்கு மாத்த இன்னும் ஒரு மணிநேரம் ஆகுமாம்… வா அதுக்குள்ள நாம போய் சாப்பிட்டு வரலாம்” என்ற சத்யன் எழுந்து வீரேன் கையிலிருந்த பேக்கை வாங்கி செல்வியிடம் கொடுத்து “ இதை ரூம்ல கொண்டு போய் வச்சிடு செல்வி” என்று கூறிவிட்டு வீரேன் தோளில் கைப்போட்டுபடி வெளியே போனான்…

See also  Hema மாமி - பாகம் 13

சத்யனின் இந்த அன்பான அனுசரனையும் வீரேனுக்கு வலித்தது.. “ மாமா மத்தவங்கல்லாம் சாப்பிட்டாங்கலா? ” என்று கேட்க… “ ம் .. செல்வி ஊர்லேருந்து ஏதோ செய்து எடுத்துட்டு வந்திருக்குப் போலருக்கு.. எல்லாரும் அதை சாப்பிட்டாங்க.. நான் மட்டும் தான் சாப்பிடலை.. நீ வருவேன்னு வெயிட் பண்ணேன்” என்று சத்யன் சொன்னதும் வீரேனுக்கு இன்னும் உருகியது…

“ மான்சி என்ன சாப்பிடனும்னு ஏதாவது சொன்னாங்களா மாமா?” “ அது ரூமுக்கு மாத்தினதும் சொல்வாங்க போலருக்கு… அப்படியில்லேன்னாலும் டாக்டர் ஜோயல் அவங்க போன் நம்பர் குடுத்திட்டு போயிருக்காங்க… அவங்ககிட்ட கேட்டா சொல்லுவாங்க” என்று சத்யன் சொல்லி முடிக்கும் போது கேன்டீன் வந்துவிட்டது… இருவரும் கைகழுவிவிட்டு மேசையில் அமர்ந்தனர்…

சத்யன் இரண்டு தோசை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க .. வீரேன் தலைகுனிந்து பெரும் தயக்கத்துடன் “ மாமா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கக்கூடாது.. இப்போ எனக்கு அதுதான் பெரிய குழப்பமா இருக்கு?” என்று சொல்ல…புருவம் சுருக்கி அவனைப் பார்த்த சத்யன் “ என்ன வீரா? எதுவானாலும் கேளு?” என்றான் “ அது வேற ஒன்னுமில்ல மாமா… நான் மதுரைக்குப் போயிருந்தப்ப என் ப்ரண்ட் ஒருத்தன் ஒரு விஷயம் சொன்னான்… அது வந்து….. வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புற ஒரு நிறுவனத்தில் நீங்க மான்சியோட சர்டிபிகேட் எல்லாத்தையும் கொடுத்து அடுத்த வருஷம் அவளை படிப்புக்காக வெளிநாடு அனுப்ப வைக்க ஏற்பாடு பண்றதா சொன்னான்…

அதுலேருந்து தான் எனக்கு கோபம் மாமா.. என் தங்கச்சிய பிடிக்காம கல்யாணம் பண்ணி . அவ உங்க வாரிசைப் பெத்து குடுத்ததும் அவளை கழட்டி விட பார்க்குறீங்கன்னு கோபம்… ஆனா இப்போ பார்த்தா மான்சி மேல இவ்வளவு அன்பு வச்சிருக்க நீங்க ஏன் அப்படிப் பண்ணீங்க மாமா?” என்று வீரேன் தன் மனஉறுத்தலை கேட்டுவிட… இதுதான் உன்ப் பிரச்சனையா என்பதுபோல் அவனை ஏறிட்ட சத்யன்

“ அது எனக்கும் மான்சிக்கும் கல்யாணம் ஆனதும் அவ நடந்துக்கிட்ட முறையை வச்சு அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னு நெனைச்சேன்.. என்னாலதான் அவ படிப்பு வீணாப் போச்சுன்னு என்னை வெறுக்குறாளோ என்ற வருத்ததுல மதுரைக்குப் போய் அந்த ஏற்ப்பாட்டை செய்தேன்… ஆனா அப்புறமாதான் அவ என்னை எவ்வளவு நேசிக்கிறான்னு புரிஞ்சுது… இனிமே எந்த காரணத்தை கொண்டும் அவளைப் பிரியமாட்டேன்…

தொலைஞ்சு போன என் இளமையை ,, வாழ்க்கையை திருப்பி கொடுத்தவ வீரா உன் தங்கச்சி… அவ இல்லேன்னா அடுத்த நிமிஷம் நானும் இல்லை” என்று உணர்ச்சிவசப்பட்ட சத்யன் டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான்… வீரேன் மாமனின் கையை ஆறுதலாகப் பற்றிக்கொண்டான்…

See also  மனசுக்குள் நீ - பாகம் 39அவன் நினைத்தது எல்லாமே பொய்யாய்ப் போனதில் சந்தோஷம் ஏற்ப்பட்டாலும்.. இதை விசாரிக்காமல் தண்டனைத் தர முடிவு செய்த தனது அறிவீனத்தை எண்ணி வருத்தப்பட்டான்… தங்கச்சியை வெட்டினவன் என்ற இந்த களங்கம் காலத்துக்கும் மாறாதே என்று வருந்தியபடி சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தான் வீரேன் அவன் மனம் வேதனைபுவது புரிந்து

“ சரி இதையெல்லாம் போட்டு மனசை குழப்பிக்காதே… எல்லாம் காலப்போக்குல சரியாயிடும்… மொதல்ல சாப்பிடு வீரா” என்று அவன் பக்கமாக தோசை இருந்த பிளேட்டை நகர்த்தி வைத்தான் சத்யன் “ ஆனா அப்பா பேசலையே மாமா?” என்று வேதனைப்பட்டவனின் கையை தட்டி “ இருடா வீரா ஒரே நாள்ல எல்லாம் சரியாகுமா? போகப்போக தான அவர் மனசும் மாறும்…

எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தன் சத்யன்… வீரேன் தன் மாமனின் வார்த மேல் இருந்த நம்பிக்கையில் சாப்பிட ஆரம்பித்தான்.. இருவரும் கேன்டீனில் இருந்து வரும்போது வீரேன் முகத்தில் வழியும் அசடை மறைத்து வேறு பக்கம் திரும்பி

“ மாமா டாக்டர் ஜோயலோட நம்பர் வேனும் மாமா குடுங்களேன்” என்று கேட்க… சத்யன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ ஏன்டா நைட்டெல்லாம் அவ்வளவு நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தீங்க அப்போ வாஙக வேண்டியதுதானே?” என்றான். அய்யோ மாமா எல்லாத்தையும் கவனிச்சாரா? என சங்கடமாக எண்ணிய வீரேன் தலையை சொரிந்தபடி “ அது நம்ம வீட்டைப் பத்தி எல்லாம் கேட்டாங்க.. நானும் சொன்னேன்.. அதுல நம்பர் வாங்க மறந்து போய்ட்டேன்” என்றதும்…சத்யன் தனது பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து வீரேனிடம் ஜோயல் நம்பரை சொல்ல.. வீரேன் தன் மொபைலில் பதிவு செய்துகொண்டான் இருவரும் ஐசியூ அருகே வந்தபோது மான்சியை அறைக்கு மாற்றுவதற்கு தயாராக இருந்தார்கள்… ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு போய் அறையிலிருந்த படுக்கையில் மான்சி படுக்க வைக்கப்பட்டாள்… உடன் வந்த டாக்டர் அவளுக்கு கொடுக்கவேண்டிய உணவைப் பற்றி சொல்லிவிட்டு .. மான்சியின் காயத்தை பார்த்துவிட்டு கிளம்பினார் ..

நர்ஸ் சத்யனிடம் “ இன்னும் ஏழு நாள் கழிச்சு தையல் பிரிச்சதும் போகலாம் சார… மாத்திரைகள் எல்லாம் வேளாவேளைக்கு நாங்களே வந்து குடுத்துவோம் … வேற ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க.. அவங்க கூட ரெண்டு பேர் மட்டும் இருங்க… மிச்சபேர் எல்லாம் வீட்டுக்கு போயிடுங்க ” என்று சொல்லிவிட்டு போனார்கள்

Leave a Comment

error: read more !!