மான்சிக்காக – பாகம் 11 – மான்சி கதைகள்

hoytgb-1தர்மன் எழுந்து தன் மகன் பின்னாலேயே மவுனமாக போனார்… தேவன் தன் பார்வையால் செல்வியின் மீது நெருப்பை கக்கிவி்டு போனான்… பஞ்சாயத்து முடிவெதுவும் எட்டப்படாமல் பாதியில் முடிந்துவிட… கூட்டம் சலசலத்துக் கொண்டே கலைந்து போனது…

“ சின்னய்யா நீங்க தைரியமா போய் சாப்பிட்டு தூங்குங்க,, இவுக என்னத்த கிழிக்கிறாகன்னு பார்ப்போம்” என்று சத்யனுக்கு தைரியம் சொன்ன செல்வி “ யப்போவ் நீ அய்யா வீட்டுலயே இருந்துக்க.. நான் அம்மாகிட்ட சொல்லிக்கிறேன்” என்ற செல்வி தன் உடன் வந்த பெண்களுடன் வீட்டுக்கு கிளம்பினாள் சத்யன் தனது பைக்கில் அமர ராமைய்யா அவன் பின்னால் அமர்ந்தார்,,



வீட்டுக்குப் போகும்போது சத்யன் மனதில் ஓடியெதெல்லாம் வீரேன் கடைசியாக கூறியதுதான்.. சத்யனுக்கு வீரேனின் குணம் தெரியும்,, அவன் எதற்கும் துணிவான் என்று எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தான்.. தனது அறைக்குள் போய் முகம் கழுவி உடை மாற்றி வருவதற்குள் ராமைய்யா பஞ்சாயத்தில் நடந்தவற்றை பஞ்சவர்ணத்திடம் விளக்கமாக கூறிக்கொண்டு இருந்தார்..

“ ராமைய்யா உம் மவளா இம்பூட்டு பேசினா? அவ வாயாடியா இருந்தாலும் நாயத்த தான் பேசுவா ராமைய்யா… எம்புட்டு விஷயத்தை யோசனை பண்ணி பேசிருக்கா பாரு… இந்த சிறுக்கி இம்புட்டு சிலுப்பு சிலிப்பிப் புட்டு இப்ப எம் மவன குத்தம் சொல்றானுகளே?” என்று பஞ்சவர்ணம் அங்கலாய்த்துக் கொண்டார்… சிறிதுநேரம் ராமைய்யாவுடன் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு..



சத்யன் மனதில் ஆயிரம் யோசனைகளுடன் சாப்பிட போய் அமர்ந்தான்,, ராமைய்யாவைப் பார்த்து “ அண்ணே நீங்களும் உட்காருங்க.. சேர்ந்தே சாப்பிடலாம்… என்னை பாதுக்காப்பு பண்ண உங்களை விட்டுட்டுப் போயிருக்கா செல்வி.. என்னா போடு போடுறாண்ணே” என்று சொன்னவனின் முகத்தில் நான்கு நாட்கள் கழித்து புன்னகையின் சாயல்.. பஞ்சவர்ணம் பேசிக்கொண்டே இருவருக்கும் தட்டுவைத்து அதில் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்ற…

சத்யன் சோற்றை பிசைந்து அள்ளி வாயில் வைக்கப் போகும்போது “ வீட்டுல யாரு இருக்கீங்க” என்ற கட்டையான ஆண் குரல் ஒன்று கதவை தட்டியபடி கேட்க.. சத்யன் கையிலிருந்த சோற்றை மீண்டும் தட்டில் போட்டுவிட்டு எழுந்திருக்க.. அவன் கையைப் பற்றி தடுத்து “ இருங்க தம்பி நான் போய் பார்த்துட்டு வர்றேன்” என்று ராமைய்யா எழுந்து போனார் வீட்டுக்குள் ஒரு போலீஸ் அதிகாரியும் அவருக்கு அருகில் இரண்டு கான்ஸ்டபிளும் நிற்க்க.. வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது.. ராமைய்யா திகைத்துப்போய் நின்றிருக்க…



“ சத்யமூர்த்தி இருக்காரா? ” என்ற அதிகாரியின் கேள்விக்கு “ நான்தான் சார் சத்யமூர்த்தி.” என்று சத்யனே வந்து பதில் சொன்னான் அவன் பக்கம் திரும்பிய இன்ஸ்பெக்டர் “ நீங்க தானா?’ என்று அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு “ உங்க மேல மான்சி என்ற பெண்ணை கற்பழித்து விட்டதா புகார் வந்திருக்கு, அதுவும் புகார் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமா எங்க ஸ்டேஷனுக்கு வந்திருக்கு,,

See also  மான்சிக்காக - பாகம் 63 - மான்சி கதைகள்

அதனால உங்க கைது பண்ண வந்திருக்கோம், எங்களுக்கு நீங்க சரியானபடி ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது” என்று எச்சரிக்கையுடன் பேசினார் .. சத்யன் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தான்,, ஆனால் வீரேந்திரன்,, கலெக்டர் வரை பிரச்சனையை எடுத்துச்செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை “ சார் நாளைக்கு காலையில நான் நேரா ஸ்டேஷனுக்கு வந்துர்றேனே?” என்று கேட்டான்..

“ இல்லை சத்யன் , உங்களை உடனடியாக கைது பண்ணி ஜட்ஜ் அய்யா வீட்டுல ஒப்படைச்சு அவரோட அனுமதிக்கப் பிறகு தேனி கிளைச் சிறையில் ரிமாண்ட் பண்ணச்சொல்லி எங்களுக்கு உத்தரவு, நீங்க உடனே கெளம்புறது நல்லது.. இல்லேன்னா…?’ என்று முடிக்காமல் நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.. ராமைய்யா கண்களில் கண்ணீர் தேங்க கலவரத்துடன் சத்யனைப் பார்த்தார்,, இவர்களை காணாமல் சமையலறையில் இருந்து வந்த சின்னம்மாவும் பஞ்சவர்ணமும் போலீஸை கண்டவுடன் கலக்கத்துடன் சத்யன் அருகே வர…



சத்யன் யோசனையுடன் ராமைய்யாவைப் பார்த்து “ அண்ணே நீங்க வீட்டுல இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கங்க, நான் இவங்க கூட போறேன், ஜட்ஜ் ரிமாண்ட் பண்ணச் சொல்லி சொல்லிட்டா பத்து பதினைஞ்சு நாள் ஆகும் நான் வர.. அதுவரைக்கும் எல்லாத்தையும் கவனமா பார்த்துக்கங்க,, செல்வியை இங்கயே வந்து ஆத்தா கூட இருக்கச் சொல்லுங்க” என்றவன் தன் அம்மாவிடம் திரும்பி “ அம்மா உன் பேரன்களுக்கு என்னை ஜெயில்ல வச்சுப் பாக்கனும்னு ஆசைப்படுறாங்க..

நீங்க பயப்படாதீங்க, நான் போய்ட்டு கூடிய சீக்கிரமே வர்றேன்.. ஆனா நான் வர்ற வரைக்கும் இங்க இருக்குற யாரும் எதுக்காகவும் அந்த வீட்டு வாசப்படி போகக்கூடாது ” என்றவன் தன் தாய் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வீட்டிலிருந்து வெளியேறி ஜீப்பில் ஏறினான்… சத்யன் போன பிறகுதான் பஞ்சவர்ணத்திற்கு உணர்வே வந்தது “ அய்யோ மகனே” என்று அலறி விழுந்தவரை சின்னம்மாளும் ராமைய்யாவும் தாங்கினார்கள் …



போலீஸ் ஜீப்பில் அழைத்துச்செல்லப் பட்ட சத்யன் சின்னமனூர் ஜட்ஜ் வீட்டுக்கு அழைத்துச்செல்ல பட்டு, அவனே குற்றத்தை ஒத்துக்கொண்ட காரணத்தால் அவர் உத்தரவின் பெயரில் இரவோடிரவாக தேனி மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டான், செய்த தவறுக்கான தண்டனையை சத்யன் மனபூர்வமாக ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்துவிட்டான்,, மறுநாள் காலை ராமைய்யா ஊர் பெரியவர்களோடு ஒரு வக்கீலையும் அழைத்துக்கொண்டு அவனை சந்திக்க வந்த போது சத்யன் ஜாமீனில் கூட வெளியே வர மறுத்துவிட்டான்…

தனக்கு அளிக்கப்படும் தண்டனையை அனுபவித்து விட்டே வருவேன் என்று அவன் பிடிவாதமாக கூறிவிட … வேறு வழியின்றி ராமைய்யா ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார் சத்யனின் இவ்வளவு பிடிவாதத்திற்கு காரணம்.. சின்னமனூர் ஜட்ஜிடம் காட்டப்பட்ட புகார் மனுவில் இருந்த மான்சியின் அழகான கையெழுத்து தான்… அவளே நான் ஜெயிலுக்குப் போகனும்னு விரும்பி கையெழுத்துப் போட்டுருக்கா.. அவ ஆசைப்படியே நான் இங்க இருக்கேன்..

See also  பொம்மலாட்டம் - பாகம் 21 - மான்சி தொடர் கதைகள்



என்று விரக்த்தியுடன் எண்ணியபடி சிறையில் பொழுதை கழித்தான்… வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற, இன்னும் முழுமையாக தண்டனை அறிவிக்கப்படாத நிலையில்,, சத்யன் விசாரணை கைதியாக சிறையிலேயே இருந்தான் பஞ்சவர்ணம் மகனின் நினைவால் வாடினாலும் தன் துன்பம் வெளியே தெரிந்தால் எதிராளிக்கு அது நகைப்புக்குரியதாகிவிடும் என்ற திடத்துடன் நிமிர்ந்தார்… சத்யன் சிறைக்கு சென்ற எட்டாவது நாள் ,,

ராமைய்யா மூலமாக விஷயத்தை கேள்விப்பட்ட சத்யன் மகள் சிவாத்மிகா,, தன் கணவன் , மற்றும் மாமனாருடன் அப்பாவைப் பார்க்க தேனி சிறைக்கு வந்தாள் …

Leave a Comment

error: read more !!