மான்சிக்காக – பாகம் 13 – மான்சி கதைகள்

actor7-1மான்சி தன் அம்மாச்சியின் தோளில் சாய்ந்தபடி “ அய்யோ அழாத அம்மாச்சி … நான் இவுக கூட போகமாட்டேன் அம்மாச்சி.. நான் பாப்பாவை எதுவும் பண்ணமாட்டேன் அம்மாச்சி ” என்று கேவினாள்..

பட்டென்று நிமிர்ந்த மீனாவின் முகத்தில் ஒரு மின்னல்… மகளின் முகத்தை கூர்ந்து பார்த்தவள்… அடுத்த நிமிடம் தாயை அணைத்திருந்ததை உதறி பிரிந்து தன் கணவனிடம் ஓடினாள்..தர்மன் முதல்படியில் அமர்ந்திருக்க அதற்கு அடுத்த படியில் அமர்ந்து குனிந்த அவர் பாதங்களை பற்றி கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய “ இந்த கொடுமை வேனாங்க… என் தம்பிக்கு ஒரு அடுத்து ஒரு வாரிசு இல்லாம போச்சேன்னு நீ எத்தனை நாள் நீ என்கிட்ட வேதனைப்பட்டீங்க… இப்ப நீங்களே அதை அழிக்க நினைக்கிறீங்களே? எங்கம்மாவைப் பாருங்க? அவங்களுக்காக இதை இப்படியே விட்டுடுங்க” என்று அழுதபடி கூற…

தர்மன் கண்களும் கலங்கிவிட்டது “ ஏன்டி ஒரு கருவை கலைக்கனும்னு எனக்கு மட்டும் ஆசையாடி? வயித்துல குழந்தையோட இந்த புள்ளைய எத்தனை நாளைக்கு நம்ம வீட்டுலயே வச்சிருக்க முடியும்.. அதான் இந்த முடிவுக்கு வந்தேன்,, மான்சியும் சரின்னு தானே ஒத்துக்கிச்சு” என்று தனது நிலைமையை சொன்னார் தர்மன்

முகம் தெளிவாக முந்தானையால் முகத்தை துடைத்த மீனா “ அவ குழந்தைங்க… அவளுக்கு என்னா தெரியும்? அவ அண்ணனுங்க எதைஎதையோ சொன்னதும் ஒத்துக்கிட்டா… இப்ப பாருங்க அவ அம்மாச்சி கிட்ட என்ன சொல்றான்னு?” என்ற மகளைப் பற்றி கணவனுக்கு புரியவைக்க முயன்றாள்..“ இப்ப நான் என்னதான் செய்றது மீனா? அவனுங்க வந்தா என்ன பதில் சொல்றது? எனக்கு ஒன்னுமே புரியலையே ” என்று துயரத்தோடு கூறினார்

“ என்ன புரியலை? அவனுங்க வரட்டும் என்ன வேனும்னாலும் பண்ணட்டும், அதையும் பார்த்துக்கலாம்.. அவனுங்க வர்றதுக்குள்ள மான்சிய அனுப்பிடுங்க,, அவ இங்க இருக்க வேனாம் எங்க இருக்கனுமோ அங்க இருக்கட்டும்.. அனுப்பிடுங்க… எப்ப ஒருத்தன் புள்ளைய அவ சுமக்க ஆரம்பிச்சாளோ இனி அவ நம்ம மக இல்லை.. இதை கலைச்சிட்டா மட்டும் நடந்தது இல்லேன்னு ஆயிடுமா? ஆம்பிளைக உங்க எல்லாரோட பிடிவாதத்தால நாலு சுவத்துக்குள்ள முடிக்க வேண்டிய பிரச்சனைய இப்படி ஜில்லா ஜில்லாவா நாறடிச்சிட்டீங்க..

இனிமே என் வருவன் இவளை கட்ட…. இன்னும் எவ்வளவு நாளைக்கு இவள* நம்ம வீட்டுலயே வச்சுக்க முடியும்.. ஆம்பளை பயலுகளுக்கு அவனுங்க வீராப்பு தான் பெரிசுன்னு இல்லாத ஆட்டமெல்லாம் ஆடிட்டானுங்க ,, ஆனா நம்ம பொண்ணோட மானம் நம்மக்கு முக்கியமில்லீங்களா? அவனுங்க இளவட்டப் பயலுகங்க அவனுங்களுக்கு அவனுங்க வீம்புதான் பெரிசு.. அவனுங்கள ஒதுக்கிட்டு நம்ம மகள மனசுல வச்சு முடிவு பண்ணுங்களேன் ” என்று இத்தனை நாளாக அடக்கி வைத்ததையெல்லாம் கொட்டினாள் மீனாள்

See also  மான்சிக்காக - பாகம் 58 - மான்சி கதைகள்

மீனாவின் குரலில் இருந்த உறுதி அவரை உலுக்கியது.. நிமிர்ந்து தன் மகளைப் பார்த்தார்.. பாட்டியின் தோளில் துவண்டு சாய்ந்திருந்தாள்.. அவளை தாங்கியிருந்த மாமியார் இன்னும் கண்களை துடைக்காமல் இவரிடம் யாசகம் கேட்கும் பார்வையுடன் நின்றதைப் பார்த்ததும் எழுந்து நின்றார்வீட்டில் பஞ்சவர்ணத்தை காணாமல் வழியில் விசாரித்துக்கொண்டு அங்கேஅப்போது தான் வந்த செல்வியிடம் வாசலில் இருந்தவர்கள் சற்றுமுன் அங்கு நடந்ததை சொல்ல… செல்வியின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.. கேட்டைத் தாண்டி உள்ளே வந்தவள் பஞ்சவர்ணத்தின் தோளில் இருந்த மான்சியை இழுத்து அவள் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு

“ சின்னம்மா எதுவும் பண்ணிக்காதீங்க சின்னம்மா.. அய்யா வீட்டுக்கு வந்துடுங்க.. உங்களை ஒரு துரும்பு கூட தீண்டாம நான் பார்த்துக்கிறேன்.. இந்த வீடு வேண்டாம்மா.. அய்யா வீட்டுலதான் நீங்க இருக்கனும் வந்துடுங்க நாம போயிடலாம்” என்று கண்களில் கண்ணீர் வழிய வழிய மான்சியின் கையைப்பிடித்து இழுத்தாள்.

மான்சி செல்வியின் கண்ணீரை வியப்புடன் பார்த்தாள்… அன்று பஞ்சாயத்தில் என்னை அவ்வளவு மட்டமாக பேசிவிட்டு இன்னிக்கு எனக்காக அழுவுறாளே?

“ என்ன சின்னம்மா அப்படி பார்க்குறீங்க,, என்னடா அன்னிக்கு பஞ்சாயத்துல நம்மளை அப்புடி பேசுனவ இப்போ இப்படி மாறிட்டாளேன்னு தான? அன்னிக்கு எங்க ஐயாவுக்காக பேசினேன்.. இன்னிக்கு எங்க அய்யாவோட வாரிசை சுமக்குற உங்களுக்காக பேசுறேன், நீங்க வந்துடுங்கம்மா” என்றவள் மறுபடியும் மான்சியின் கையைப்பிடித்து இழுத்தாள்ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு படிகளில் இறங்கி வந்த தர்மன் மகள் அருகே வந்து “ மான்சி முடிவா சொல்லு? நீ அம்மாச்சி வீட்டுக்கு போறியா?” என்று கேட்க..

மான்சி யோசிக்காமலேயே “ நான் போறேன்பா” என்று தலையசைத்தாள்…
மகளை கூர்மையாகப் பார்த்தவர் “ அங்க நீ சும்மா போகமுடியாது தெரியுமா?” என்று மறுபடியும் கேட்க.. மான்சி புரியாமல் அவரைப் பார்த்தாள்

“ நீ அங்க போறதானால் உன் மாமனுக்கு பொண்டாட்டியா தான் போகமுடியும் மான்சி… இப்ப சொல்லு முழு மனசோட அம்மாச்சி வீட்டுக்குப் போறியா?” என்றார் தீர்மானமாக..

மான்சி இப்போது யோசித்தாள்.. இதைவிட்டால் எதற்குமே அசையாமல்,, துச்சமாக ஏற்று நிற்கும் மாமனை எப்படி பழிவாங்குவது ,, இதுதான் கடைசி சந்தர்ப்பம்.. கல்யாணம் பண்ணிகிட்டு பழிவாங்க வேண்டியதுதான்… உடனே முடிவெடுத்தாள் மான்சி “ அப்பா நான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன், இப்போ அம்மாச்சி கூட போறேன், நீங்க போய் மாமாவை கூட்டி வந்ததும் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுங்க” என்றாள் நிமிர்வுடன்…தர்மன் சில நொடிகள் மகளைப் பார்த்துவிட்டு,, பிறகு மாமியாரிடம் திரும்பி “ அத்தை உங்க பேத்தியை கூட்டிட்டுப் போங்க.. அவ துணிமணியை எல்லாம் ஆளுங்க கிட்ட குடுத்தனுப்புறேன்” என்று உறுதியாக கூறிவிட்டு நகர்ந்தவர்.. மறுபடியும் திரும்பி “ நாளைக்கு நானேப் போய் சத்யனை கூட்டிட்டு வர்றேன்” என்று கூற..

See also  மான்சிக்காக - பாகம் 27 - மான்சி கதைகள்

இப்போது செல்வி அவர் கால்களில் பொத்தென்று விழுந்து எழுந்து “ பெரியய்யா ஒரு குடும்பத்துக்கே வெளக்கேத்தி வச்சிட்டீங்க.. உங்க நல்ல மனசு யாருக்குமே வராது” என்றுவிட்டு மான்சியிடம் வந்தவள் “ வாங்க சின்னம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றவளின் கூந்தல் கொத்தாகப் பற்றி இழுத்து அந்த பக்கமாக தள்ளினான் தேவன்…

அனைவரும் அதிர்ந்து போய் பார்க்கும்போதே “ ஏன்டி யார் வீட்டுக்கு வந்து யாரை கூப்பிடுற? ஒழிச்சுக்கட்டிடுவேன்” என்று ஆக்ரோஷத்துடன் கத்தியவனை செல்வி சீற்றத்துடன் பார்த்தாள்..

“ டேய் ஏன்டா ஊரான் வீட்டு பொண்ணு மேல போய் கைவைக்கிற? நான்தான் மான்சிய போகச்சொன்னேன்.. இனிமேல் என் மக விஷயத்தில் நீங்க ரெண்டுபேரும் முடிவெடுக்க வேண்டாம்.. போய் உங்க வேலையைப் பாருங்கடா… எல்லாம் எனக்குத்தெரியும்.. என்னை மீறி எவனாவது எதுவும் செய்ய நினைச்சீங்க.. அப்புறம் பெத்த புள்ளைன்னு கூட பார்க்கமாட்டேன் வெட்டிப்போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்” என்று கர்ஜித்த அப்பாவைப் பார்த்து தேவன் அதிர்ந்து போய் நிற்க்க…“ நீங்க மான்சியை கூட்டிட்டுப் போங்க, நான் இல்லாம எவன் வந்து கூப்பிட்டாலும் அவளை அனுப்பாதீங்க ” என்று மாமியாரைப் பார்த்து சொல்லிவிட்டு… “ மீனா மான்சியோட துணிகளை எல்லாம் எடுத்து செல்விகிட்ட குடுத்தனுப்பு.. நான் வக்கிலைப் பார்த்து பேசிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு மகனை துச்சமாகப் பார்த்தவர்.. தனது காரை எடுத்துக்கொண்டு தர்மன் கிளம்பினார்

Leave a Comment

error: read more !!