பொம்மலாட்டம் – பாகம் 16 – மான்சி தொடர் கதைகள்

“பொதுவாக பயிற்சிகள் கொடுத்து தான் வளர்ப்பாங்க…. ஒருவர் சொல்வதைக் கேட்டு நடந்து தான் வளர்வாங்க… அப்படியிருக்கையில் தாயோ தந்தையோ கடினமான முறைகளால் அதாவது அடித்து அல்லது துன்புறுத்தி…

கட்டாயப்படுத்தி சிலவற்றை அவர்களுக்கு பழக்கப்படுத்தியிருப்பாங்க…. அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவது ரொம்பவே கஷ்டம்…. குழந்தையாக இருக்கும் போதே அதிக பாதிப்பு என்றால்…. சிலருக்குப் பேச்சுத் திறன் குறைய வாய்ப்பு உண்டு… கல்லூரி வரை படிப்பதும் சாத்தியமாகாது சிலருக்கு…. 11வது வயதிலிருந்து தான் மாற்றங்கள் தெரிய வரும்….



உங்க மனைவி மான்சி மாதிரி…… இவர்களால் ஒரு விஷயத்தை கிரகிக்க முடியும்… ஆனால் அதை செயல்படுத்த இன்னொருவர் சொல்ல வேண்டும்… அதாவது…. படி என்று சொன்னால் படிப்பாங்க… படிப்பவை கிரகிப்பாங்க… எழுது என்று சொன்னால் தான் பரீட்சையில் எழுதுவாங்க… முரட்டுத்தனம் குறைந்தவர்களாயின்… சாதாரண பள்ளியிலேயே படித்து வருவாங்க… சில சமயங்களில் இவர்களுக்கு என்று பரீட்சை எல்லாம் தனியாகவேக் கூட நடக்கும்…

எல்லோருடனும் நெருங்கிப் பழக மாட்டாங்க…. யாராவது ஒரு தோழன் அல்லது தோழி இருக்கலாம்… எல்லோரையும் போலவே இவர்களுக்கும் ஹோர்மோன்ஸ் வேலை செய்யும்… உணர்வுகள் தூண்டப்படும்…. அதில் பிரச்சனைகள் இருக்காது… செயல்படும் விதம் தான் தெரியாது…. இப்படிப்பட்டவர்களை திருமணம் செய்தல் அல்லது… இப்படி குறைபாடு உள்ளோருடன் உடலுறவு கொள்ளுதல் என்பதற்கு மேற்கத்தைய நாடுகளில் சட்டம் அனுமதிக்காது… நம் நாட்டில் இதற்காக சட்டங்கள் வகுக்கப்படவில்லை சத்யன்….

பொதுவாக 10 வயதைத் தொடும்போதே பெண்களிடம் சிலது சொல்லிக் கொடுத்து தான் வளர்ப்பாங்க…. ஆண்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதும்… ஆண்கள் எப்படி அணுகக்கூடும் என்பதும் சொல்லிக்கொடுப்பாங்க…. ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்களுக்கு அதையே திரும்பத் திரும்ப சொல்லி வளர்ப்பாங்க…. அதாவது ஒரு ஆண் உன்னைத் தொட அனுமதிக்காதே என்று பாதிக்கப்படும் பெண்ணிடம் கடுமையாகச் சொல்லி வளர்ப்பாங்க….



இப்படிப்பட்ட விஷயங்கள் திருமண வாழ்க்கையில் உடலுறவு என்று வரும்போது பெரும் தடையாக இருக்காலம்… அதாவது கணவன் நெருங்குகையில்… ஹிஸ்டீரியா பேஷன்ட் போல நடந்துகொள்ளலாம்…. அல்லது முதலிரவுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு எப்போதும் வழிகாட்டும் நபர் அதே முறையில் சொல்லி அனுப்பினால்… அதாவது அதட்டிச் சொல்வது… அல்லது இப்படி நடந்துகொள்ளாவிட்டால் ஏதாவது தண்டனை என்று பயமுறுத்தி சொல்வது….

அதனால் ஜடம் போலப் படுத்துக் கிடக்கலாம்… கணவனைக் கட்டியணைப்பாள் என்பதெல்லாம் அசாத்தியம் தான்…. ஆனால்… கவுன்சிலிங் மூலம்… கணவனின் அன்பால்… இவர்களை மெல்ல மெல்ல வசப்படுத்தலாம்… இது சாத்தியப்படும்… எப்படியிருந்தாலும்… ஒருபோதும் சாதாரணப் பெண்ணாக இவர்கள் நடமாட வாய்ப்பே இல்லை…. இது மட்டும் உறுதி…. மொத்தத்தில் ஒரு ரூட்டீன் போட்டு அதன் படியே வாழ்ந்தால் ஓரளவுக்கு சமாளிப்பாங்க…

See also  மனசுக்குள் நீ - பாகம் 27 - மான்சி தொடர் கதைகள்

இவர்களுக்கு எல்லாமே பயிற்சிகள் தான்… இதனால் வேறு பிரச்சனைகள் என்று வர வாய்ப்புக்கள் குறைவு தான்… ஆனால்… காய்ச்சல் என்றால் கூட இவர்களுக்கு தாயிடம் போய் சொல்லத் தெரியாது… நாமாக கண்டுகொண்டால் மட்டுமே உண்டு””ஆட்டிசம் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் என்பதனால்…. கற்றுக்கொடுக்கும் முறைகள் கூட வித்தியாசப்படும்… சிலர் ஒருவருக்கு மட்டும் தான் பயப்பட்டு அல்லது கட்டுப்பட்டு சரியான முறையில் இயங்குவாங்க…



சிலருக்கு சில அற்புதத் திறமைகள் இருக்கும்…. வர்ணம் தீட்டுதல்… பாடல்… ஆடல்… ஏன் சிலருக்கு எழுத்துத் திறமையும் தான்… அவற்றைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால்…. அவர்களது மனதை ஒருநிலைப்படுத்த முடியும்… இவர்களுக்காக நம்முடைய நேரத்தில் முக்கால் வாசியை உபயோகிக்க நேரும்…. ஆட்டிசம் பற்றிய தவறான கருத்துக்கள் நிறையவே உண்டு சத்யன்… இவர்களுக்கு மூளையில் குறைபாடு என்பதனால் மனஇறுக்கம் கொண்டவர்கள்….

இவர்கள் மனநோயாளிகள் அல்ல… ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பேச்சுத் திறன்… கேட்கும் திறன்… இதெல்லாம் குறையலாம்… இல்லாமல் போகலாம்.. ஆனால் கட்டாயம் எல்லோருக்கும் உண்டு என்பது நிச்சயமல்ல…. மான்சியைப் பொருத்தவரை இதுபோன்ற குறைபாடுகள் இல்லாதது உங்களுடைய லக் தான்…. பத்து வயதுகளில் பாதிப்பை சந்திப்பவர்கள்…. திறம்பட எழுதுவார்கள்.. பேசுவார்கள்… ஆனால்…. மற்றவர்களுடன் பழக மாட்டார்கள்..

தங்களுக்கு என்ற ஒரு வட்டம் போட்டு வாழ்வார்கள்… ஒருசிலருக்கு……. எப்போதுமே ஒரு வழிநடத்தல் தேவைப்படும்… மான்சிக்கு அவள் தாயைப் போல்… ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் கவுன்சிலிங் முடியாது…. ஆனால் மான்சி போன்றவர்களுக்கு சாத்தியமே… ஆனால் கவுன்சிலிங் என்பது அதிகம் தேவை…… அவளது உற்றவருக்குத் தான்… இவர்கள் அன்புக்கு கட்டுப்படுவார்கள்….



அன்பால் அவர்களை இயக்குவிக்கலாம்… ஆனால் அதற்கு ஏகப்பட்ட பொறுமை வேண்டும்… அதிகம் பேசமாட்டார்கள்……… எதையும் சொல்லத் தெரியாது…. முக்கியமான விஷயம் என்னவென்றால்…. இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் இருந்தால் அதை ஓர் அவமானமாகக் கருதக் கூடாது… நம்மில் ஒருவராக கவனித்துக் கொண்டால் மட்டும் இவர்களை வழி நடத்த முடியும் இவர்களுக்கு என்று ஒரு ரூட்டீன் பழகியிருப்பாங்க…. 6 மணிக்கு எழுவது… 8 மணிக்கு சாப்பிடுவது….

இரவு 9 மணிக்கு தூங்குவது…. இப்படி இவர்களுக்குள் ஒரு அட்டவணை இருக்கும்… அதிலிருந்து சற்று பிசகினாலும் அப்செட் ஆகிடுவாங்க….. வெளியூர் போகவேண்டும் என்றால் சில நாட்கள் முன்னரே சொல்லிவரவேண்டும்…. திடீரென்று சொன்னால் அவர்களால் தங்களை அஜஸ்ட் பண்ணிக்க முடியாது என்பதால் டென்ஷன் ஆகிடுவாங்க… மற்றவர்களை புரிந்துகொள்ளத் தெரியாது….

அவர்களுக்கும் உணர்வு உண்டு என்ற எண்ணமே இவர்களுக்கு வராது… அதனால் எப்படி நடந்துகொள்வது என்று தெரியாமல் மற்றவர்களைக் காயப்படுத்திடுவாங்க…. இவர்களது நடத்தை சில சமயம் சிறுபிள்ளைப் பேச்சாக இருக்கும்…. பல சமயம் லாஜிக் இருக்காது… ஒருவிஷயத்தையே திரும்பத் திரும்ப பேசக்கூடும்…



அதாவது…. ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் அந்த பேச்சு திசை மாறினாலும் இவர்களால் அந்த ஒன்றை விட்டு சுலபத்தில் மாறி மற்றதைப் பற்றி பேச முடியாது….முதல் பேச்சிலேயே உளன்று கொண்டிருப்பார்கள் சிலருக்கு…. அதிக வெளிச்சம்… இரைச்சல் சத்தம்…. ஏன் சில வகைத் துணிகள்…. இவையெல்லாம் எரிச்சல்படுத்தி எமோஷனலாக்கி விடும்… அதுபோன்ற சமயத்தில் கடுமையாக கோபம் காட்டுவார்கள்….

See also  மனசுக்குள் நீ - பாகம் 19 - மான்சி தொடர் கதைகள்

இவ்வளவு தான் ஆட்டிசம் குறைபாடுகள் உள்ள மான்சியைப் போன்றவர்களைப் பற்றிய விபரங்கள்…. உங்களுக்குத் தேவையான அனைத்து பதிலும் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன் சத்யன்?” என்று டாக்டர் கேட்டார்… ஒப்புதலாய் தலையசைத்த சத்யன் “தெளிவா சொல்லிட்டீங்க டாக்டர்…. இதுக்கு மேலயும் தகவல் தேவைப்படாது” என்றான்…

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks