மனசுக்குள் நீ – பாகம் 27 – மான்சி தொடர் கதைகள்

ஆனால் ரஞ்சனா அமைதியாக வந்தாள்,, வசந்தி அவள் கையை பற்றி “ என்னாச்சு ரஞ்சனா,, அவனோட துரோகத்தை நினைச்சு கலங்காதே,, அடுத்து என்ன செய்றதுன்னு தைரியமா முடிவு பண்ணு,, உன்கூட நாங்க இருக்கோம் ” என்று தைரியம் கூறினாள் வசந்தி

ரஞ்சனாவிடம் எந்த பதிலும் இல்லாது போக “ ரஞ்சனா அதையே நெனைக்காதே,, நான்கூட இவரு மொதல்ல சொன்னப்ப ரொம்ப கோபப்பட்டேன்,, ஆனா இப்போ வேற வழியில்லை,, உன்னோட பிற்கால வாழ்க்கை பாதிக்காமல் இருக்கனும்னா இந்த குழந்தை உனக்கு வேண்டாம்,, என்கூட வா டாக்டரை பார்க்கலாம்” என்றாள் வசந்திஅதுவரை அமைதியாக இருந்த ரஞ்சனா பட்டென்று நிமிர்ந்து வசந்தியை பார்த்தாள் “ வேண்டாம் மேடம் இந்த அனாதைக்கு ஒரு துணையா இருக்கட்டும்,, இனிமேல் எனக்கு பிற்காலம் என் வயிற்றில் இருக்கும் குழந்தைதான்,, உங்ககிட்ட நான் கேட்கும் கடைசி உதவி என்னன்னா,, இந்த வீட்டிலேயே எனக்கு தங்க அனுமதி வேனும்,, அன்னம்மா கூட விவசாயத்துக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்துகிட்டு இப்படியே இருந்துடுறேன்” என்று கண்ணீருடன் கிருபா வசந்தி இருவரையும் பார்த்து கேட்டாள்

வசந்தி,, ரஞ்சனாவை இழுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டு “ உனக்கு எவ்வளவு நாள் இருக்கனும்னு தோனுதோ அவ்வளவு நாள் இரு ரஞ்சனா,, உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க” என்று ஆறுதல் கூறினாள்
மூவரும் வீட்டுக்கு திரும்பி வரும்போது வசந்தி கர்ப்பிணி எப்படியிருக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்த அறிவுரைகளை வழங்கினாள்,, எல்லாவற்றுக்கும் மனதில் குற்றவுணர்வோடு தலையசைத்தபடி வந்தாள் ரஞ்சனா

அங்கிருந்து கிளம்பும்போது கிருபா ரஞ்சனாவை பார்த்து தலையசைத்து விடைபெற,, வசந்தி நெடுநாள் பழகிய ஒரு தோழியை பிரிவது போல முகம் வாடினாள்

நாட்கள் செல்லச்செல்ல ரஞ்சனாவின் கர்ப்பம் அன்னம்மாவுக்கு தெரிய வந்தது,, ஆனாலும் சின்னய்யா சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு அதைப்பற்றி ரஞ்சனாவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, ஒரு தாயைப்போல ரஞ்சனாவை பார்த்துக்கொண்டார்அதன்பிறகு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது கிருபா மட்டும் பார்த்துவிட்டு போவான்,, திடீரென்று வசந்தியின் உடல் மெலிவும் சோர்வும் கிருபாவிற் கவலையை தர,, மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போவதும், நேரம் கிடைக்கும் போது ரஞ்சனாவை வந்து பார்பதுமாக இருந்தான் கிருபா

ஒருமுறை வரும்போது அவசரத்துக்கு தேவைப்படும் என்று ஒரு செல்போனை எடுத்துவந்து ரஞ்சனாவிடம் கொடுத்தான்,, வசந்தி சத்யனை வயிற்றில் சுமந்தபோது என்னென்ன கேட்டாள் என்று ஞாபகப்படுத்தி அதையெல்லாம் வாங்கிக்கொண்டு போய் ரஞ்சனாவுக்கு கொடுத்தான்,,

ஆனால் ரஞ்சனா ஒன்றைக்கூட தொடாமல் வாந்தி மயக்கம் என்று படுத்தே கிடந்தாள்,, அன்னம்மாவுடன் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டு வந்தவள், அடுத்த முறை வரும்போது புருஷனை கூட்டிக்கொண்டு வாம்மா என்று டாக்டர் சொன்னதும் மருத்துவமனைக்கு போவதை அடியோடு நிறுத்திக்கொண்டாள்

See also  மான்சிக்காக - பாகம் 62 - மான்சி கதைகள்

ஆறாவது மாதம் தடுப்பூசி போடவேண்டும் என்று அன்னம்மா மருத்துவமனைக்கு கூப்பிட்டபோது ரஞ்சனா வரமறுத்துவிட,, அன்று மாலை வந்த கிருபாவிடம் அன்னம்மா நடந்தவற்றை கூறினார்

அதை கேட்டதும் கிருபாவுக்கு கோபம் வந்தது,, வேகமாய் படுக்கையறைக்குள் நுழைந்தான்,, கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தவளை பார்த்ததும் வந்த கோபம் பறந்துவிட “ என்ன பண்ணுது ரஞ்சனா? ஏன் ஆஸ்பிட்டல் போகாம இருக்க?” என்று அன்பாக கேட்டான்

அவனை பார்த்ததும் மெதுவாக படுக்கையில் கையூன்றி எழுந்த ரஞ்சனா “ விடுங்க சார் எனக்கு ஆஸ்பிட்டல் போற அளவுக்கு ஒன்னும் இல்லை” என்றாள்“ உனக்கு ஒன்னுமில்லை தான் ஆனா வயித்துல இருக்குற குழந்தைக்கு தேவையான சக்தியை கொடுக்க தடுப்பூசி போட்டே ஆகனும் ரஞ்சனா,, எழுந்து டிரஸ் மாத்திகிட்டு வா என் கார்லயே கூட்டிட்டு போய் வந்துர்றேன்” என்றான் கிருபா

“ வேண்டாம் சார்,, நான் இன்னொரு நாளைக்கு போய்க்கிறேன்” என்று அவன் பார்வையை தவிர்த்து சுவற்றை பார்த்தபடி பேசினாள்

“ நீ எதுக்காக ஆஸ்பிட்டல் போகலைன்னு எனக்கு தெரியும்,, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் வா ரஞ்சனா” என்று பிடிவாதமாக கூறினான் கிருபா

அவள் அமைதியாக இருந்தாலும் உடல் குலுங்குவதை வைத்து அவள் அழுகிறாள் என்று யூகித்த கிருபா “ இப்போ எதுக்காக அழற ரஞ்சனா,, மொதல்ல ஆஸ்பிட்டல் கிளம்பு,, நான் வெளியே வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்

கிருபா போனதும் வெகுநேரம் அழுத ரஞ்சனா வெளியே கிருபா காத்திருக்கும் ஞாபகம் வர எழுந்து புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள்
அவளை பார்த்ததும் முகம் மலர “ ரெடியாயிட்டியா,, பழைய மருந்து சீட்டு எல்லாம் எடுத்துக்கிட்டயா ரஞ்சனா” என்றான்

எடுத்துக்கொண்டேன் என்று ரஞ்சனா தலையசைக்க,, “ அப்போ வா போகலாம்” என்று முன்னே போய் காரின் முன்புற கதவை திறந்து விட ரஞ்சனா ஏறியமர்ந்து கொண்டாள்அந்த மகப்பேறு மருத்துவமனையில் நிறைய பெண்கள் தங்களின் பெரிய வயிற்றை சுமந்தபடி பக்கத்தில் இருந்த கணவனிடம் பேசிக்கொண்டும் தோளில் சாய்ந்துகொண்டும் இருக்க,, இவர்கள் இருவர் மட்டும் அடுத்தடுத்த சேரில் அமர்ந்திருந்தாலும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்

நர்ஸ் ரஞ்சனாவின் பெயரைச்சொல்லி அழைக்க “ வா ரஞ்சனா” என்று கூறி கிருபா எழுந்துகொண்டான்,,

இருவரும் உள்ளே போனதும் ரஞ்சனாவை புன்னகையுடன் பார்த்த அந்த பெண் மருத்துவர் கிருபாவிடம் “ நீங்கதான் ரஞ்சனாவோட ஹஸ்பண்ட்டா?’ என்று கேட்க

அவர் அப்படி கேட்டதும் ரஞ்சனா உடல் கூனிக்குறுக,, கிருபா எந்த தயக்கமின்றி “ ஆமாம் டாக்டர்” என்றான்

See also  மான்சிக்காக - பாகம் 19 - மான்சி கதைகள்

அவன் அப்படி கூறியதும் விதிர்த்துப் போய் திகைப்புடன் ரஞ்சனா அவனை நிமிர்ந்து பார்க்க,, கிருபா அவளைப்பார்த்து புன்னகைத்து ‘அமைதியாக இரு,, என்பதுபோல் கையைப் பற்றிக்கொண்டான்

அதன்பிறகு ரஞ்சனாவிற்க்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து,, சில பாரங்களில் கிருபாவிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர் அவள் மிகுந்த பலவீனமாக இருப்பதால் கவனமுடன் பார்த்துக்கொள்ளுமாறு கிருபாவிடம் சொல்லி அனுப்பி வைத்தார்கள்இருவரும் திரும்பி காரில் வரும்போது ரஞ்சனா மறந்தும் கூட கிருபாவின் பக்கம் திரும்பாமல் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு வந்தாள்,, ஆனால் அடிக்கடி கண்களை துடைத்துக்கொண்டே வர அவள் அழுகிறாள் என்று கிருபாவுக்கு புரிந்தது

Leave a Comment

error: read more !!