“ ம்ஹூம் நமக்கு அந்த வேலையே வேனாம் கார்த்திக்,, மான்சிக்கு என்னைப்பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கு,, அதனால அனிதாவும் மான்சியும் பேசிக்குவாங்க, நீ உன் வேலை பாருடா மச்சான்” என்றான் சத்யன்
சத்யன் மறுபடியும் மச்சான் என்றதும், கார்த்திக்க்கு லேசாக கண் கலங்கியது,, “ என்னை மச்சான்னு கூப்பிட்டதுக்கு தாங்க்ஸ் பாஸ்” என்று உணர்ச்சியில் அடைத்த குரலில் கூறினான்
சத்யனுக்கு கார்த்திக்கின் நிலை புரிந்தது,, இருக்கையைவிட்டு எழுந்து கார்த்திக் அருகில் வந்து அவன் தோளில் கைப்போட்டு “ கார்த்திக் நான் வேனா அனிதாவை என் தங்கச்சின்னு வெளிப்படையா சொல்லாமல் இருந்தாலும்,, அவ என் தங்கச்சின்னு எல்லாருக்கும் தெரியும்,, அப்போ நீ என் மச்சான் தானடா” என்று சத்யன் ஆறுதலாக பேசினான்
கார்த்திக்குக்கு சத்யனின் மாற்றங்கள் ஆச்சர்யமாக இருந்தது,, சத்யன் இதுபோல பேசி பார்த்ததேயில்லை,, அப்படியானால் இது மான்சியால் வந்த மாற்றமா? அப்படியிருந்தால் சத்யன் குடும்பத்துக்கு வரம் கொடுக்கும் தேவதை மான்சிதான்,, இனி சத்யன் ஜோடியாகத்தான் வந்து வாழ்த்தவேண்டும் என்ற அனிதாவின் கனவு நிறைவேறிவிடும்,, என்று கார்த்திக்கின் மனது அடுத்தடுத்து கற்பனையில் மிதக்க, கையில் இருந்த பேப்பர்களை அனுப்ப வேண்டுமே என்ற உந்துதலில் “ ஓகே பாஸ் நான் அப்புறமா வர்றேன்” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான்
தனது இருக்கையில் வந்து அமர்ந்த சத்யனுக்கு கார்த்திக்கை நினைத்து பெருமையாக இருந்தது,, மச்சான் என்ற ஒரு வார்த்தைக்கே எவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான்,, ஒருவேளை நான்தான் எல்லாரையும் விட்டு ரொம்ப ஒதுங்கி வாழ்கிறேனா,, இது போன்ற சின்னச்சின்ன வார்த்தைகள் போதுமா ஒருவரிடம் அன்பை வெளிப்படுத்த,, உணர்ச்சியில் கலங்கிய கார்த்திக்கின் முகம் சத்யன் கண்முன் வந்தது,, ம்ஹும் என்ற பெருமூச்சுடன் தனது அலுவலை கவணிக்க ஆரம்பித்தான்
அன்று மதிய உணவு இடைவெளியின் போது சத்யன் கார்த்திக் கேபினுக்கு போய் அவனை அழைத்துக்கொண்டு கேன்டீன்க்கு போனான்,, போகும் வழியில் காலை மான்சிக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதத்தை மேலோட்டமாக சொல்லிக்கொண்டே போனான்,, அப்படியா என்று மட்டும் கார்த்திக் கேட்டானே தவிர,, சத்யனை வேறு எதுவும் தோண்டித் துருவவில்லை
இருவரும் கேன்டீனுக்குள் நுழைந்ததும் சத்யனின் கண்கள் மான்சியைத்தான் தேடியது,, ஒரு ஓரமாய் இருந்த டேபிளில் மான்சி உட்கார்ந்திருக்க அவளருகில் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தாள்,, இருவரும் ஏதோ பேசிக்கொண்டே சாப்பிட்டனர்
“பாஸ் அந்த பொண்ணை வேனும்னா வேற சீட்ல உட்காரச்சொல்லவா?” என்றான் கார்த்திக் ரகசியமாக
“அதெல்லாம் வேனாம்டா, இன்னிக்கு காலையில நடந்ததே கொஞ்சம் ஓவர்தான் இப்பவும் போய் அந்த பொண்ணு முன்னால அவளை சங்கடப்படுத்த வேண்டாம், வா நாம தனியா போய் சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு தனியா ஒரு டேபிளை நோக்கி போய் இருவரும் அமர்ந்தனர்
அன்று மாலை நாலரைக்கு கதவை தட்டிவிட்டு அவனது அறைக்கு வந்த மான்சி “ தினமும் ரிப்போர்ட் எல்லாம் எழுதி கார்த்திக் சார் கிட்ட குடுக்க சொல்லி சுகன்யா மேடம் சொன்னாங்க,, ஆனா கார்த்திக் சார் உங்ககிட்ட குடுக்கச்சொன்னார்” என்று ஒரு கவரை எடுத்து சத்யனின் மேசையில் வைத்துவிட்டு “ நான் இன்னிக்கு சீக்கிரமாவே கிளம்பனும் சார் உங்க பர்மிஷன் வேனும்” என்றாள்
கவரை பிரித்தபடி “ ஏன் எதாவது வேலையிருக்கா, ஷாப்பிங் போகனுமா,” என்று அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான் சத்யன்
“ ஷாப்பிங் போற வேலையில்லை,, இன்னிக்கு என் ப்ரண்ட் அனிதாவோட சிஸ்டர்க்கு ஒரு பங்ஷன் இருக்கு அதுக்கு போகனும்” என்று அவன் கண்களை பார்த்தபடி மான்சி சொல்ல
சத்யனால் இப்போது அவளை நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை,, கவரில் இருந்த ரிப்போர்ட்டை ரொம்ப கவனமாக பார்த்தான்
“ என்ன சார் நான் போகலாமா” என்றாள் மான்சி
“ம்ம் கிளம்பு மான்சி” என்றான் அவள் முகத்தை பார்க்காமலேயே
“ தாங்க்யூ சார்” என்று கூறிவிட்டு மான்சி கதவை நோக்கி போனாள்
“ அவ்வளவு தூரம் எப்படி மான்சி போவ,, ஆட்டோக்கு ரொம்ப பணம் கேட்ப்பானே,, வேனும்னா நம்ம ஆபிஸ் கார் இருக்கு அதுல உன்னை ட்ராப் பண்ணச்சொல்றேன்” என்று சத்யன் குரலில் அளவு கடந்த அக்கரையுடன் கேட்டான்
நின்று திரும்பி பார்த்த மான்சி “ வேனாம் சார் நான் பஸ்லயே போய்க்கிறேன்” என்று கூறினாள்
அவள் பேச்சில் காலையில் இருந்த இணக்கம் இப்போது இல்லை,, திடீரென்று இருவருக்கும் இடையே ஒரு தடுப்புச்சுவர் உண்டானது போல் சத்யனுக்கு தோன்றியது,, அவளின் ஒட்டாத பேச்சு அவன் மனதை வாட்டியது,, ஏன் இப்படி என்று கேள்வி கேட்ட மனதுக்கு பதில் சொல்ல தெரியாமல் “ஏய் மான்சி நில்லு” என்று குரல் கொடுத்தான்
கதவை திறந்து வெளி கால் வைத்த மான்சி மீண்டும் உள்ளே வந்தாள், அவனை பார்த்து “ என்ன சார்” என்றாள்
வேகமாய் எழுந்து அவனருகில் வந்தவன் அவன் தோளைத் தொட்டு தன்புறம் இழுத்து “ ஏய் ஏன் இப்படி தெரியாதவங்க கிட்ட பேசுற மாதிரி பேசுற,,காலையில அவ்வளவு ஆசையா இருந்துட்டு இப்போ இப்புடி முகத்தை கூட பார்க்காம பேசுற,, ஏன் என்னாச்சு” என்று சீறினான் சத்யன்
தனது தோளில் இருந்த அவன் கையை தட்டிவிட்ட மான்சி “ காலையிலே நடந்தது ஒரு பிழை சார்,, நீங்க உணர்ச்சி வேகத்துல அந்த மாதிரி நடந்துக்கிட்டீங்க,, நானும் உங்க மேல இருந்த அன்பால அதுக்கு ஈடு குடுத்துட்டேன்,, இனிமேல் அதுபோல வேண்டாம் சார்,, மூடின கதவுக்குள்ள ஒரு முதலாளி கூட நான் தனியா கொஞ்சநேரம் இருந்தா வெளியே பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கன்னு எனக்கு இப்பத்தான் உரைச்சது,, அதனால இனிமேல் நான் உங்க ரூமுக்கு வரமாட்டேன் ரிப்போர்ட்டை பியூன் கிட்டத்தான் குடுத்தனுப்புவேன்” என்றாள் மான்சி
அவளை கூர்மையாக பார்த்த சத்யன் “ ஓ இது காலையிலேர்ந்து யோசிச்சு எடுத்த முடிவா? இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா என்னப் பண்ணுவே மான்சி” என்று ஏளனமாய் கேட்டான்
“ இந்த வேலைக்கு இத்தனை வருஷம்னு நான் கான்ட்ராக்ட் எதுவும் உங்ககிட்ட போடலையே? அதனால எனக்கு இஷ்டம் இல்லாததை வற்புறுத்தினால் உடனே வேலையை விட்டு போய்டுவேன்” என்று மான்சி தீர்க்கமாக சொன்னாள்
சட்டென்று சத்யன் அவளைவிட்டு ஓரடி தள்ளி நின்றான்,, அவளின் பேச்சு அவனை காயப்படுத்திவிட்டது என்பது அவன் கண்களில் தெரிந்தது,, கோபத்தில் சிவந்ததா,, அல்லது காயம்பட்ட வேதனையில் என்று தெரியவில்லை,, “ அப்போ நமக்குள்ள காலையில் நடந்ததை அசிங்கம்னு நெனைக்கிற,, இதுக்கு மேலே நான் ஏதாவது சொன்னா நீ வேலையை விட்டு போய்டுவ,, இது என்னை எதுக்கோ ப்ளாக்மெயில் பண்ற மாதிரி இருக்கே மான்சி” என்று சத்யன் கேட்க