பொம்மலாட்டம் – பாகம் 24 – மான்சி தொடர் கதைகள்

“ம்,, நீ வீட்டைவிட்டு போகச் சொன்னதும் பவானி ஆன்ட்டி அவங்க சொந்த வீட்டுக்கேப் போய்ட்டாங்க…. மறுநாள் நான் போய் பார்த்தேன்… நிறைய அழுதாங்க…. கல்யாணத்துக்குப் பிறகு ஏதாவது விபத்துல மான்சிக்கு இதுபோல நடந்திருந்தா தன்னோட மனைவியை விட்டுக்கொடுத்திருப்பாரானு கேட்டாங்க….

எனக்கு பதில் சொல்லத் தெரியலை சத்யா…. அவங்க செய்தது பெரும் தவறுதான்… ஆனா அந்த தவறுக்கு காரணம் அவங்களோட அறியாமை தான்…. பத்தாம்பசலித்தனமா மேரேஜ் முடிஞ்சா எல்லாம் சரியாகிடும்னு அவங்க நம்பினதால வந்த விளைவுகள் தான் இவ்வளவும்….. ஒரு தாயா மட்டும் இருந்து சிந்திச்சிருக்காங்க…. இந்த விஷயத்தில் அவங்களை என்னால் குற்றவாளியாக்க முடியலை மச்சி…” மெல்லிய குரலில் நண்பனுக்கு விளக்கினான் ஆதி……“இப்படியிருக்கிற பெண்ணுக்கு கல்யாணம் செய்து வச்ச அவங்களே குற்றவாளி இல்லேன்னும் போது ஏமாற்றபட்ட என்னை குற்றவாளியாக்குவது நியாயமா ஆதி?” சத்யன் வெடுக்கென்று கேட்கவும்…. சிறு புன்னகையுடன் ஏறிட்ட ஆதி ” உன்னை யார் குற்றம் சொன்னது?” எனக் கேட்க….

“வேற யார்? மான்சியோட அம்மா தான்… ஆஸ்பிட்டல்ல ரொம்ப மோசமா பேசிட்டாங்க…. எனக்கும் கனவுகள் ஆசைகள் இருந்திருக்கும்னு அவங்களுக்கு ஏன் புரியலை? இப்படி ஒருத்தியை வீட்டுல வச்சுக்கிட்டு வெறுப்பைக் காட்டியிருந்தா மட்டும் அவங்களால் தாங்கியிருக்க முடியுமா? அதைத் தவிர்க்கத்தான் மான்சியை உடனே அனுப்பினது….

அதைப் புரிஞ்சுக்காம என்னை துரோகி மாதிரி பேசிட்டாங்க ” என்றான் வருத்தமும் வேதனையுமாக…. நண்பனின் தோளில் ஆறுதலாக கை வைத்த ஆதி “ஒரு தாயுடைய மனசு அப்படித்தான் மச்சி… காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுனு சின்ன வயசுல படிச்சிருக்கோமே? அது இதுதான்…. பவானி ஆன்ட்டி தன் தவறை உணர்ந்து பலமுறை அழுவதை நானே பார்த்திருக்கேன்…. விடு மச்சி” என்றவன்….“நம்ம வீட்டைவிட்டுப் போன பத்தாவது நாள் எனக்கு கால் பண்ணி டாக்டர் செபாஸ்ட்டியனைப் பார்க்கனும்னு சொன்னாங்க…. நானும் ஏற்பாடு பண்ணேன்….. அதன்பிறகு மான்சி டாக்டர் செபாஸ்ட்டியனோட நேரடி கவனிப்பில் இருக்கா… வாரம் இருமுறை அவரோட க்ளினிக் வருவா….

ட்ரீட்மெண்ட் போய்க்கிட்டு இருக்கு” என்று தெளிவு படுத்தினான்… ஆதி தன்னைவிட மிகவும் உயர்ந்து தெரிய நண்பனின் கைகளைப் பற்றிக்கொன்டு சற்றுநேரம் அமைதியாக இருந்த சத்யன் “இப்போ மான்சி கன்சீவ் ஆகியிருக்கிறது? என்மேல இவ்வளவு கோபமாயிருக்கிற பவானி ஆன்ட்டி இதை எப்படி அனுமதிச்சாங்க?” என்று மெல்லியக் குரலில் கேட்டான்…

“மான்சி கன்சீவ் ஆகிருக்கான்றதைக் கவனிக்கமால் விட்டது தான் இப்போ உன் குழந்தை ஆறு மாசக் கருவா வளர்ந்திருக்கு…. இங்கருந்து போனதும் மகள் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்ற கவலையில் கவனிக்காம இருந்துட்டாங்க…. அப்புறம் செபாஸ்ட்டியனோட ட்ரீட்மெண்ட்டில் கவனமாகிட்டதால கொஞ்சநாள் மறந்துட்டாங்க… கிட்டத்தட்ட ரெண்டு மாசம் முழுசா முடிஞ்சதும் தான் கண்டுப் பிடிச்சோம்….இப்படியிருக்கிறவளுக்கு இந்த குழந்தை தேவையான்னு அழுதாங்க…. நானும் டாக்டரும் நிறைய சொல்லி ஆன்ட்டியோட மனசை மாத்தினோம்…. இப்போ மந்த்லி செக்கப்ல குழந்தை நல்ல ஆரோக்கியமா இருக்கு சத்யா” என்றான் ஆதி…. தன் குழந்தை உருவாகி ஆறு மாதம் ஆகியும் தெரிந்துகொள்ளாமல் இருந்தது ஒரு மாதிரி வேதனையாக இருந்தாலும்…. பிள்ளை வரப்போவது சத்யனை மகிழ்விக்கத்தான் செய்தது… இருவரும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் கடந்துவிட

See also  மனசுக்குள் நீ - பாகம் 46

“சரி கிளினிக் போய் டாக்டரை பார்த்துடலாம் வா” என்றபடி ஆதி எழுந்துகொண்டான்…. இருவரும் புறப்பட்டு டாக்டர் செபாஸ்ட்டியனின் கிளினிக்கிற்கு வந்தபோது இன்னும் இரு நோயாளிகள் காத்திருக்க இவர்களும் காத்திருந்தனர்…. காத்திருந்தவர்கள் சென்றபின் இருவரும் அழைக்கப்பட்டனர்….. ஆதியுடன் டாக்டரின் அறைக்குள் நுழைந்த சத்யனுக்கு அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே நிலைதான்… மான்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே….சத்யனை அடையாளம் கண்டு புன்னகையுடன் வரவேற்றார் டாக்டர்….. அவருக்கு எதிரே அமர்ந்தார்கள்…. “சொல்லு ஆதி… என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க?” என்று செபாஸ்ட்டியன் கேட்க…. சத்யன் ஆதியைப் பார்த்தான்…. ஆதி சிறு தலையசைப்புடன் டாக்டரைப் பார்த்து

“சத்யன் நேத்து மீனாட்சி நர்ஸிங்கோம் போயிருக்கான்… அங்கே மான்சியைப் பார்த்திருக்கான்…. மான்சி இவனை அடையாளம் தெரிஞ்சு ஓடிவந்தது சத்யனுக்கு ஆச்சரியமா இருந்திருக்கு… கூடவே மான்சியோட ப்ரங்னன்ஸியும் கூட….” என்றான்… அதே புன்னகை மாறா முகத்துடன் சத்யனைப் பார்த்து “இப்போ உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கனும் சத்யன்? எதுவாயிருந்தாலும் தாராளமாகக் கேட்கலாம்… எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்” என்றார்..சத்யனிடம் சில விநாடிகள் வரை அமைதி…. மேசையிலிருந்த பேனா ஸ்டான்டில் இருந்த பேனாக்களை மாற்றி மாற்றி அடுக்கிக் கொண்டிருந்தான்…. பிறகு நிமிர்ந்து டாக்டரைப் பார்த்து “மான்சிக்கு என்னை எப்படி அடையாளம் தெரிஞ்சது? அதுவும் அத்தான் சொல்லி வேற கூப்பிட்டா…. ஓடி வந்து அணைச்சுக்கிட்டு அவ அம்மா கூப்பிட்டதுக்குக் கூட போகமாட்டேன்னு ஒரே அடம் பிடிச்சா…. இதெல்லாம் எப்படி சாத்தியம்?” தன் மனதில் இருந்ததை நேரடியாகக் கேட்டான்….

புன்னகை சிந்தனையாக மாற “ஏன் சாத்தியப்படாது சத்யன்?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டார்…. புரியாமல் பார்த்த சத்யன் “இல்ல டாக்டர்,, நீங்க தானே அன்னைக்கு சொன்னீங்க? மான்சியோட அம்மா சொல்லாம வேறு யாரையும் ஏத்துக்க வாய்ப்பில்லை… அப்படியிருந்தாலும் தினமும் இவர் இன்னார் என்று சொல்லித்தரப்பட வேண்டும்னு சொல்லியிருந்ததா எனக்கு ஞாபகம்” என்று கேட்டான்….

“ஆமாம் சொன்னேன் சத்யன்…. அதே நான்தான் இன்னொரு விஷயத்தையும் சொல்லியிருந்தேன் இவர்களுக்கென்று ஒரு தனித் திறமையிருக்கும்… மிகவும் பிடித்தமான ஒரு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவாங்க அப்படின்னு சொன்னேன் ஞாபகமிருக்கா சத்யன்?” என்று செபாஸ்ட்டியன் கேட்க… “யெஸ் டாக்டர்… சொல்லிருக்கீங்க….ஆனா எனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தமிருக்கு?” லேசாக சிரித்த டாக்டர் “என்ன சத்யன் இப்படிக் கேட்டுட்டீங்க? ஆட்டிசம் பாதிப்பு உள்ளவங்க எதாவது ஒரு விஷயத்தில் தீவிரமா இருப்பாங்க… அது படிப்பாக இருக்கலாம்… பாட்டு, டான்ஸ், ஓவியம், இன்னும் வேறு பல திறமைகளாகக் கூட இருக்கலாம்… ஆனால் மான்சியைப் பொருத்தவரை அவளுக்கு பிடிச்ச ஈடுபாட்டோடு கூடிய விஷயம் எதுவென்றால் அது நீங்க தான் சத்யன்…..” என்று டாக்டர் கூறியதும் சத்யன் அவரை நம்பாமல் பார்த்தான்…..

See also  பொம்மலாட்டம் - பாகம் 33 - மான்சி தொடர் கதைகள்

“என்ன சத்யன் நம்ப முடியலையா? மான்சி விஷயத்தில் இது மெடிக்கல் மிராக்கிள் அப்படின்னெல்லாம் சொல்ல நான் தயாரில்லை…. அவளுக்கு மத்த எல்லாத்தையும் விட உங்களை மட்டும் பிடிச்சிருக்கு…. உங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வம் அவளுக்குள்ள இருந்திருக்கு…என்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தப் பிறகு நான் அதைக் கண்டுப் பிடிச்சு அவளுக்கு பிடிச்ச உங்களை அவளுக்குள்ளயே பதிய வச்சு டெவலப் பண்ணேன்… இவ்வளவு தான் நடந்தது….” என்று சத்யனுக்குத் தெளிவுப்படுத்தினார்….

Leave a Comment

error: read more !!