மனசுக்குள் நீ – பாகம் 31 – மான்சி தொடர் கதைகள்

முதலில் அவன் கண்கள் தேடியது ரஞ்சனாவைத்தான்,, பிரசவித்த களைப்பில் கலைந்த ஓவியமாக கண்மூடி கட்டிலில் கிடந்தாள் ரஞ்சனா,, சிறிதுநேரம் அவளருகே நின்று கலங்கிய கண்களுடன் அவளையே பார்த்த கிருபா பிறகு அவளருகே தொட்டில் கிடந்த ரோஜா குவியலை அருகில் சென்று பார்த்தான்

ரஞ்சனா அழகி என்றால் அந்த அழகின் பிரதியாக கிடந்தது அந்த பெண் குழந்தை,, சத்யன் பிறந்து பதினோரு வருடம் கழித்து இப்போதுதான் ஒரு பிறந்த குழந்தையை கிருபா பார்க்கிறான், கொஞ்சநேரம் அவன் மனதில் இருந்த சோகங்கள் மறைந்து, இனம்புரியாத சந்தோஷம் வந்து அமர குழந்தையின் கால் விரல்களை தொட்டான்,, இவன் தொட்டவுடன் சிலிர்த்தது குழந்தை,, அதை பார்த்ததும் கிருபாவுக்கும் உள்ளுக்குள் சிலிர்த்தது



தனது ஆள்காட்டி விரலை நீட்டி குழந்தையின் வலது உள்ளங்கையில் வைக்க குழந்தை அந்த விரலை பற்றிக்கொண்டது,, கிருபாவுக்கு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது,, சில மாதங்களாக சந்தோஷத்தை மறந்துவிட்டிருந்த அவன் மனதுக்கு வெண்பனி சாரலாய் இருந்தது அந்த குழந்தையின் வரவு,, இந்த குழந்தையை ரஞ்சனா வயிற்றில் சுமந்த போது கிருபாவுக்கு குழந்தையை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் கிடையாது,, ஆனால் இப்போது அந்த சின்னஞ்சிறு சிசுவை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது

கிருபா நிமிர்ந்து ரஞ்சனாவை பார்த்தான் அவள் கண்விழித்து இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்களில் வழிய அவனையே பார்த்தாள், அவள் இதழ்கள் எதையோ சொல்ல துடித்தது,

கிருபா குழந்தையிடமிருந்து தனது விரலை விடுவித்துக்கொண்டு ரஞ்சனாவை நெருங்கினான், குனிந்து அவள் முகத்தை பார்த்த கிருபா “ அழாத ரஞ்சனா,, நான்தான் வந்துட்டேனே” என்று கூறிவிட்டு அவள் கண்ணீரை துடைத்துவிட்டு தனது தயக்கத்தை உதறிவிட்டு சட்டென்று அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான்

ரஞ்சனா தன் கண்களை மூடிக்கொண்டாள் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது,,

மறுபடியும் அவள் கண்ணீரை துடைத்த கிருபா “ ஸ்… ரஞ்சனா அழாதே இந்தமாதிரி நேரத்தில் அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க ப்ளீஸ் அழாதே ரஞ்சனா” என்று அவள் கையைப்பிடித்து கெஞ்சினான் கிருபா,, ஆனால் அவனுக்கும் கண்கள் கலங்கித்தான் இருந்தது



இருவரும் இப்போதெல்லாம் நிறைய கண்ணீர் விடுகிறோம் என்று இருவருக்குமே புரிந்தது,, ஏன் அழுகிறோம் என்று காரணம் புரியாமல் இல்லை ,, ஆனால் அதைச் சொல்லத்தான் இருவரும் பயந்தனர்,, காலங்கடந்து முறையற்று வந்த இந்த காதலைச்சொல்ல இருவரும் பயந்தனர்,, இருவருக்கும் காதலைவிட குற்றவுணர்வே அதிகமாக இருந்தது,, கண்ணீரால் தங்களின் காதலை இருவரும் மறைக்க முயன்றனர்,,

See also  மனசுக்குள் நீ - பாகம் 08 - மான்சி தொடர் கதைகள்

இந்த முறையற்ற காதல் வெளிவுலகிற்கு தெரிந்தால் எவ்வளவு கேலி பேச்சுக்கு ஆளாவோம் என்று இருவருக்குமே புரிந்ததால்,, இருவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பயந்தனர் என்பதுதான் உண்மை,, எந்த நேரத்திலும் காதலை வெளிக்காட்டாமல் மனதுக்குள் புதைந்து மடிந்து போகவேண்டும் என்று இருவருமே நினைத்தனர்

அதற்க்குள் அன்னம்மா காபி பிளாஸ்க்குடன் உள்ளே வர, இருவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டனர்,, கிருபா மறுபடியும் குழந்தையின் அருகில் வந்தான்,, குழந்தையை அவன் தொட்டுத் தொட்டு ரசிப்பதை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் ரஞ்சனா

அன்னம்மா குழந்தையை துணியில் சுற்றி தூக்கி கிருபாவிடம் கொடுக்க,, கைகள் நடுங்க குழந்தையை வாங்கிய கிருபா,, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்,, அவன் மனதில் இருந்த கவலைகள் மறந்து மனம் லேசானது போல உணர்ந்தான்

சந்தோஷத்துடன் ரஞ்சனாவை பார்த்தான் கிருபா,, அவள் முகம் சந்தோஷத்தில் பூரித்து சிவந்து போயிருந்தது,, பார்த்த கொஞ்சநேரத்தில் அவள் அழகு பலமடங்காகி விட்டதை வியப்புடன் பார்த்தான் கிருபா



சிறிதுநேரம் இருந்துவிட்டு ரஞ்சனாவிடம் கண்களாலேயே கிளம்பட்டுமா என்று கேட்க,, அவளும் சரியென்று கண்களாலேயே அவனுக்கு விடைகொடுத்தாள்,,
அறையில் இருந்து மனமேயில்லாமல் வெளியே வந்த கிருபா, குழந்தையின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் அப்பா என்ற இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு மில்லுக்கு கிளம்பினான்

அன்று முழுவதும் மனது சந்தோஷமாக இருந்தது,, அந்த குழந்தையின் முகம் கிருபாவின் மனதைவிட்டு நீங்கவில்லை,, மாலை வீட்டுக்கு போனதும் முதல் வேளையாக வசந்தியிடம் சென்று ரஞ்சனாவிற்கு பெண் குழந்தை பிறந்தது பற்றி சந்தோஷமாக கூறிய கணவனை வியப்புடன் பார்த்தாள் வசந்தி

சில நாட்களாக சிரிப்பு சந்தோஷம் இவற்றை மறந்திருந்த கிருபாவின் முகத்தில் மீண்டும் சந்தோஷத்தை பார்த்ததும்,, வசந்திக்கு மகிழ்ச்சியாக இருந்தது,, குழந்தையை பற்றியே அன்று முழுவதும் பேசிக்கொண்டு இருந்த கணவனை ஆச்சரியமாக பார்த்தாள்,, அவளுக்கு கணவனின் மனநிலை புரிந்தது,, அந்த குழந்தையின் வரவு கிருபாவை மகிழ்வித்திருக்கிறது என்று புரிந்துகொண்டு அவளும் குழந்தையை பற்றி விசாரித்து அவன் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டாள்

ரஞ்சனா மருத்துவமனையில் இருந்த ஐந்துநாட்களும் அடிக்கடி போன் செய்து ரஞ்சனாவின் நலனையும் குழந்தையின் நலனையும் விசாரித்தான்,, மருத்துவமனையில் இருந்து வரும் நாளில் அவனே வந்து காரில் ரஞ்சனாவையும் குழந்தையும் வீட்டுக்கு அழைத்து வந்தான்



ரஞ்சனா, குழந்தை, வெளியே நிற்க வைத்து அன்னம்மா ஆரத்தி சுற்றும் போது அவனையும் அருகில் நிற்குமாறு அன்னம்மாள் சொல்ல சங்கடமில்லாமல் ரஞ்சனாவின் அருகில் நின்றுகொண்டான்,, மூவருக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றினார் அன்னம்மாள்

படுக்கையில் குழந்தையை கிடத்தியதும் அருகே போய் அமர்ந்துகொண்டு,, தூக்கத்தில் சிரித்த குழந்தையின் அழகை ரசித்தபடி,, பக்கத்தில் நின்றுகொண்டு இவன் குழந்தையை ரசிக்கும் அழகை பார்த்துக்கொண்டிருந்தவளிடம் “ ரஞ்சனா குழந்தைக்கு அனிதான்னு பேர் வைக்கலாமா?” என்றான்

See also  மான்சிக்காக - பாகம் 20 - மான்சி கதைகள்

ஆச்சர்யத்தில் விழிவிரித்து “ ஓ பெயர் நல்லாத்தான் இருக்கு,, வைங்களேன்,, ஆனா குறிப்பா இந்த பேர் மட்டும் ஏன் ?,, ஏதாவது விசேஷ காரணம் உண்டா?” என்றவளைப் பார்த்து..

சிரிப்புடன் உதட்டை பிதுக்கி “ ம்ஹூம் விசேஷ காரணமென்று எதுவும் இல்லை,, எனக்கும் வசந்திக்கும் அடுத்து பெண் குழந்தை பிறந்தா இந்த பெயரை வைக்கனும்னு நெனைச்சோம்,, ஆனா சத்யனுக்கு அப்புறம் குழந்தை எதுவும் இல்லாம போச்சு,, நைட் நானும் வசந்தியும் பாப்பாவை பத்தி பேசும்போது அனிதாங்கற பேரையே வசந்தி வைக்கச் சொன்னா,, அதான் கேட்டேன்” என்று கிருபா சொன்னதும்

“ சரி அந்த பேரே வைக்கலாம்” என்றாள் ரஞ்சனா

சிறிதுநேரம் குழந்தையை கொஞ்சிவிட்டு அரைமனதோடு வீட்டுக்கு கிளம்பினான் கிருபா,, தாய்மையின் பூரிப்புடன் ஒருக்களித்து படுத்திருந்த ரஞ்சனாவிடம் வந்து, “ நல்லா சாப்பிடு,, எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே” என்று கூறிவிட்டு அவள் கண்களை பார்த்தபடி எதற்காவோ அவளை நோக்கி குனிந்தவன் எதையோ நினைத்துக்கொண்டு தலையை உலுக்கியபடி அவசரமாக அந்த அறையைவிட்டு வெளியேறினான்



அதன்பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனிதாவை காண ஓடிவந்தான்,, குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் ரஞ்சனாவுடன் சேர்ந்து கண்டுகளித்தான்,

1 thought on “மனசுக்குள் நீ – பாகம் 31 – மான்சி தொடர் கதைகள்”

  1. தினமும் ஒரு பாகம் போட்டா ஓகே

    15 நாளைக்கு ஒன்னு போட்டா எப்படி
    வாசகர்க கை மதிச்சா டெய்லியும் போடுங்க

    இல்லையா நாங்க ரிமூவ் ஆகிக்கிறோம்

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks