வீரேன் தலைகுனிந்து வெளியேறியதும் ஜோயல் மேசையின் மேல் அப்படியே கவிழ்ந்தாள்… காலையில் வீரேன் அவள் கையைப் பற்றிக்கொண்டு தங்கைக்காக அழுதபோது.. அந்த கம்பீரமான ஆணுக்குள் இருந்த குழந்தையைத் தான் பார்த்தாள் ஜோயல்…
ஆனால் அவனுக்குள் இப்படியொரு கொடூரன் இருப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை…. அவள் கண்களில் தேங்கிய நீர் மேசையில் சொட்டியது… ‘ ச்சே இன்னிக்கு காலையில பார்த்த எவனோ ஒருத்தனுக்காக நான் ஏன் அழனும்… அவன் எப்படிப் போனால் எனக்கென்ன’ அலட்சியமாக கண்ணீரை சுண்டிவிட்டு தனது கடமையை செய்ய எழுந்தாள்..
இரவு மணி ஒன்றாகியது ரவுண்ட்ஸ் முடித்து தன் கேபினுக்கு வந்து வீரேனின் நினைவை பிடிவாதமாய் ஒதுக்கிவிட்டு மேசையில் கவிழ்ந்து படுத்தாள்.. சற்றுநேரத்தில் உறங்கியும் போனாள்… அதிகாலை நாலு மணிக்கு ‘ மாமா …. மாமா” என்ற மான்சியின் முனங்கல் கேட்டு பதறி விழித்து எழுந்து மான்சியிடம் ஓடி “ என்னம்மா? என்ன பண்ணுது ” என்று அன்பாக கேட்க….
மான்சியின் முகம் வேதனையில் சுருங்கியது “ என்னால இப்படி ஒரு பக்கமாவே படுத்திருக்க முடியலை.. பயங்கரமா வலிக்குது” என்று முனங்கியவள் கண்களில் கண்ணீர் தேங்கியது.. ஜோயல் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டிருந்த நிலையில் மான்சியின் இந்த வார்த்தைகள் அவள் நெஞ்சை கிழித்தது… ‘ கொலைகார ராஸ்கல்’ என்று வீரேனை மனதுக்குள் திட்டியபடி
“ கொஞ்ச நேரம் ஒரு பக்கமா சாய்ஞ்சு உட்கார்றியா மான்சி? நான் தாங்கிப் பிடிச்சுக்கிறேன்?” என்று அன்பாக சொல்லி மான்சியின் அருகில் போனாள் மான்சி இடமும் வலமுமாக தலையை அசைத்து “ ம்ஹூம் எனக்கு என் மாமா தான் வேனும்… அவரை கூட்டிட்டு வாங்களேன் ப்ளீஸ்” என்று கெஞ்சியவளைப் பார்த்து ஜோயலின் மனம் கசிந்தது… ‘ சின்ன குழந்தை மாதிரி மனசு… இவளைப் போய் காயப்படுத்த எப்படிதான் மனசு வந்தது’ என்று வீரேன் மீது அவள் நெஞ்சில் வஞ்சம் ஏறியது…
ஒரு தாயின் கருணையோடு மான்சியின் கூந்தலை கோதி “ நீ அழக்கூடாது மான்சி… இப்ப என்ன மாமா வரனும் அவ்வளவு தானே? உன் மாமாவையே வரச்சொல்றேன் போதுமா?” என்றவள்… அருகில் நின்ற நர்ஸிடம் “ வெளியே பெஞ்சில் இவங்க ஹஸ்பண்ட் படுத்திருப்பாரு… அவரை வரச்சொல்லுங்க சிஸ்டர்” என்றாள்… சற்று நேரத்தில் சத்யன் வேகமாக வந்து …
மான்சியின் கலங்கிய விழிகளைப் பார்த்து பதறி… கட்டிலின் ஓரம் அமர்ந்து அவள் கன்னத்தை கைகளில் தாங்கி “ என்னடா கண்ணம்மா?” என்று கேட்டவனின் குரலிலும் கண்ணீர்.. “ என்னால ஒருபக்கமா படுத்திருக்க முடியலை மாமா… இங்க மிஷின் சத்தமா கேட்குது.. எனக்கு பயமாயிருக்கு.. தூக்கமே வரலை மாமா… நாம வீட்டுக்குப் போயிரலாம்..என்னைத் தூக்கிட்டுப் போயிடு மாமா” என்று கலங்கிப் போய் கூறியவளுக்கு பதில்கூற முடியாமல் சத்யன் ஜோயலைப் பார்த்தான்…
‘ நான் சொல்றேன்’ என் கண்ணால் ஜாடை செய்துவிட்டு “ இதோபார் மான்சி எட்டு மணிக்கு சீப் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவாரு அப்போ கேட்டுகிட்டு உன்னை ரூமுக்கு மாத்திடலாம்… அது தனி ரூம்.. உன் வீடு மாதிரி நிம்மதியா தூங்கலாம்… உன் மாமாவும் கூடவே இருப்பாரு… உனக்காக இல்லேன்னாலும் உன் வயித்துல இருக்கிற பாப்பாவுக்காக நீ தாங்கிக்கனும் மான்சி…
இல்லேன்னா பாப்பாவுக்கு பலகீனமாயிடும்மா” என்று அன்பும் கருணையுமாக ஜோயல் சொன்னதும் மான்சி சற்று அமைதியானாள்.“ சார் நீங்க கட்டில்ல ஏறி நல்லா உட்கார்ந்து மான்சியை தூக்கி உங்க மார்பில் சாய்ச்சு உட்கார வைங்க… இடது பக்கமா இருக்குற மாதிரி உட்கார வைங்க… கட்டிலினெ தலைபக்கம் இருக்கும் பிளேட்டை உயர்த்தி மான்சியை உட்கார வைக்கலாம்… ஆனா காயம் கட்டிலில் அழுத்தி ரொம்ப வலியெடுக்கும்..
அதனால மான்சி எப்ப உட்கார நினைச்சாலும் யாராவது ஒருத்தர் பின்னாடியிருந்து தாங்கிக்கனும் சார் ” என்று சத்யனிடம் சொல்லிவிட்டு மான்சியை தூக்க உதவி செய்தாள்… சத்யன் மான்சிக்குப் பின்னால் ஒரு மடித்துக் கொண்டு ஒரு காலை கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டு அமர்ந்து கொண்டான்… ஜோயலும் நர்ஸும் மான்சியை மெல்ல தூக்கி சத்யன் நெஞ்சில் சாய்க்க… மான்சி சரிந்துவிடாமல் இடுப்பை சுற்றி வளைத்து தன்மீது சாய்த்துக் கொண்டான் சத்யன் ..
சரியாக மான்சியை அமர்த்திவிட்டு நிமிர்ந்த ஜோயல் “ இப்போ கொஞ்சம் பரவாயில்லையா மான்சி?” என்று கேட்க .. “ ம்ம் இப்படி உட்கார்ந்திருக்கிறது நல்லாருக்கு… ஏன்னா பின்னாடி இருக்கிறது என் மாமாவாச்சே? அதனால வலியே தெரியாது” என்று மான்சி அந்த நிலையிலும் குறும்பு பேசினாள் ..
“ சரியான குறும்புக்காரி” அவள் கன்னத்தில் செல்லமாக தட்டிய ஜோயல் “ நீங்க ரொம்ப லக்கி சத்யன்….. உங்கமேல உயிரையே வச்சிருக்கா…இனிமேல் எதுவுமே அவகிட்ட நெருங்காதபடி கவனமாப் பார்த்துக்கங்க” என்று சத்யனிடன் சொன்னாள் சத்யன் பெருமையாக புன்னகைத்து தலையசைக்க… மான்சி அவசரமாக கையசைத்து “ அய்யோ டாக்டர் நீங்க தப்பா சொல்றீங்க…
நான்தான் ரொம்ப ரொம்ப லக்கி… என் மாமாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாது… அதுவும் என்மேல உயிரையே வச்சிருக்கு” என்று சொல்ல…. “ ம் சரி சரி ரெண்டு பேருமே லக்கி தான்… ஆமா அதென்ன புருஷனைப் போய் அது இதுன்னு கூப்பிடுற… வாங்க போங்கன்னு சொல்லமாட்டியா மான்சி?” என்ற ஜோயலுக்கு மான்சியிடம் பேசிக்கொண்டிருக்க ரொம்ப பிடித்திருந்தது… அவள்மீது ஒரு இனம்புரியாத பாசம் ஏற்பட்ட மனதை நிறைத்திருந்தது…
“ ம்ஹூம் நான் சின்ன வயசுல இருந்து அப்படித்தான் கூப்பிடுவேன்… இனிமேலும் அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றாள் மான்சி.. “ சரி உன் மாமா நீ எப்படி வேனும்னாலும் கூப்பிடும்மா தாயே” என்று பின்வாங்கிய ஜோயல் சத்யனைப் பார்த்து “ சார் ஆறு மணிக்கு என்னோட டியூட்டி டைம் முடிஞ்சிரும்… எட்டு மணிக்கு சீப் வந்ததும் ரூமுக்கு சிப்ட் பண்ண சொல்லி கேளுங்க.. நானும் என்னோட ரிப்போட்ல மான்சி நார்மலாத்தான் இருக்காங்கன்னு எழுதி வச்சிட்டுப் போறேன்… நைட் ஏழு மணிக்கு மறுபடியும் வரும்போது மான்சியை வந்து பார்க்கிறேன்…” என்று கூற….
சரியென்றான் சத்யன் அவர்களை தனியாக விட்டுவிட்டு தனது கேபினுக்கு வந்த ஜோயலுக்கு சற்றுமுன் மனதை அடைந்திருந்த பாரம் மான்சியிடம் பேசியதால் குறைந்திருந்தது.. கைப்பையில் தனது பொருட்களை எடுத்து வைத்தவள்,, மேசையை ஒழுங்குப்படுத்தினாள்… வீரேன் டீ குடித்துவிட்டு வைத்த பிளாஸ்க் மூடி கழுவாமல் அப்படியே இருந்தது.. அந்த கப்பையே எடுத்து சிறிதுநேரம் பார்த்தவளுக்கு…
‘குழந்தை மாதிரி எவ்வளவு வெகுளியா பேசினானே’ என்ற வேதனை தழும்பியது… இன்னோரு விஷயமும் அவள் மனதில் ஓடியது… இவ்ள் கேட்டதும் மறைக்காமல் உண்மையை சொன்னானே… என்றும் மனம் வாதிட்டது… சற்றுநேரம் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்… அவள் மனமே அவளுக்கு எதிரியானது
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் எனை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே…
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி…
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
நன்றி:- சத்யன்