மனசுக்குள் நீ – பாகம் 30 – மான்சி தொடர் கதைகள்

காரில் ஏறிய கிருபா ஏதோ நினைவு வந்தவன் போல மறுபடியும் இறங்கி “ டெலிவரிக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தானே இருக்கு,, ஈவினிங்ல நிறைய வாக்கிங் போ,, டாக்டர் சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்னாடியே ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிரு,,

ஆஸ்பிட்டல் போனதும் எனக்கு ஒரு போன் பண்ணிடு ரஞ்சனா,, மறந்துறாதே” என்ற கிருபா தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பணக்கட்டை எடுத்து அவள் கையைப் பற்றி அதில் வைத்தான் “ இந்த பணத்தை வச்சுக்க,, மேல்கொண்டு தேவைப்பட்டா நான் வரும்போது எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு மறுபடியும் காரில் ஏறிக்கொண்டான்கையில் இருந்த பணத்தை கண்ணீருடன் பார்த்தாள்,, இதோ கிருபாவின் இந்த பணம் மட்டும் தான் ரஞ்சனா அருவருக்கக்கூடிய விஷயம்,, எவனுடைய பிள்ளையையோ கிருபாவின் பணத்தில் பிரசவிக்கப்போவது தான் அவளை கூச வைத்தது,, பணத்தை வைத்து தன்னை விலைபேச முயலாத கிருபா அவள் மனதில் உயர்ந்து நின்றாலும்,, அவன் பணத்தில் வாழும் தன்நிலையை எண்ணி மனதுக்குள் அவள் தாழ்ந்து நின்றாள்,, தன்னால் அவனுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் அவன் பணத்தை மட்டும் உபயோகிக்கும் இந்த கேவலமான நிலையை நினைத்து கூசினாள்,

அவள் கண்ணீர் அவள் மனதை உணர்த்தினாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிதர்சனம் அவனுக்கு புரிய, தன்னுடைய கலங்கிய கண்களை அவளுக்கு மறைத்து “ நான் கிளம்புறேன் ரஞ்சனா” என்று கிளம்பினான் கிருபா

அவன் கார் தனது கலங்கிய கண்களுக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், அது கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றாள் ரஞ்சனா.

காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவள் கையில் பணத்தோடு நிற்பதை கலங்கிய கண்களுடன் கார் திரும்பும் வரை பார்த்தான் கிருபா, இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று மட்டும் தனக்கு ஏன் இப்படி நெஞ்சு குமுறுகிறது என்று எண்ணியபடி காரை செலுத்தினான்பிரசவ நாள் நெருங்க நெருங்க ரஞ்சனாவின் மனதில் இனம்புரியாத பயம் வந்து அமர்ந்தது,, இரவில் தூக்கம் வராமல் தவிக்க ஆரம்பித்தாள், யாராவது தன்னை மடியில் சாய்த்துக்கொண்டு கூந்தலை வருடி தூங்க வைக்கமாட்டார்களா என்று மனம் ஏங்கியது,, இப்போதெல்லாம் கிருபா கூட அடிக்கடி போன் செய்தாலும் நிறைய பேசுவது கிடையாது

‘’எப்படி இருக்க,, ‘ சாப்பிட்டயா,, என்ற ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசுகிறான்,, ஏனென்று ரஞ்சனாவுக்கு புரியவில்லை,, ஒருவேளை பிறப்பிலும் வளர்ந்த விதத்திலும் இப்படியொரு கேவலமானவளுக்கு தன்னுடைய பணத்தை வாரியிறைத்து செலவு செய்கிறோமே என்று வருத்தப்படுகிறானோ என்று நினைத்தாள்

See also  இரட்டை ஓழ்

ச்சே அப்படியிருக்காது,, அவருக்கு மேடம் பற்றிய கவலையே அதிகமாக இருக்கும்,, இதில் என்னோட பேச நினைப்பது ரொம்ப அதிகப்பிரசங்கித்தனம் என்று அடுத்த கணமே தன்னுடைய நினைப்பை மாற்றிக்கொள்வாள்

ஆஸ்பிட்டல் போவதற்கு ஒருநாள் முன்பு கிருபாவிறகு போன் செய்தபோது அவன் எடுக்கவேயில்லை,, ஒரேயடியாக தன்னை வெறுத்துவிட்டானோ என்று ரொம்பவே பயந்துபோனாள்,, குழந்தை பிறந்ததும் குழந்தையுடன் எங்காவது போய்விடவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துவிட்டு ஆஸ்பிட்டல் கிளம்பினாள்ரஞ்சனா போன் செய்தபோது கிருபா கலக்கத்துடன் போனைத்தான் வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான்,, அவன் மனதில் ஆக்கிரமித்து விட்ட ரஞ்சனாவின் நினைவுகளை ஒதுக்கமுடியாமல் தவித்தான்,, வசந்தியிடம் வைத்துள்ள அன்பை யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது என்று உறுதியாக எண்ணினான்,, ரஞ்சனாவை பிரசவ நேரத்தில் பார்த்தால் மேலும் தன்மனம் பலகீனமாகிவிடும் என்றுதான் அவன் பயந்தான்.

செல்லை ஆப் செய்துவிட்டு மில்லில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்,, வசந்தியின் அறைக்குள் நுழைந்தவனை படுக்கையில் இருந்த வசந்தி மெலிந்த குரலில் முதலில் கேட்ட கேள்வி “ நீங்க ரஞ்சனாவை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகலையா?,, இன்னிக்கு தானே டாக்டர் டெலிவரி டேட் சொல்லியிருக்காங்க? பின்ன நீங்க ஏன் போகலை? ” என்றுதான் கேட்டாள்

அலுவலக உடைகளை மாற்றிக்கொண்டு வசந்தியின் அருகில் வந்து அமர்ந்த கிருபா போகவில்லை என்று தலையசைத்து மறுத்துவிட்டு வசந்தியின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவளருகில் சரிந்து படுத்துக்கொண்டான்

தன்னருகில் படுத்த கணவனின் தலையை வருடியவாறு “ என்னம்மா என்ன ஆச்சு,, பாவம் அந்த பொண்ணு நம்மை விட்டா யாரு இருக்காங்க,, புருஷன்னு கையெழுத்து வேற போட்டுட்டு வந்துருக்கேன்னு சொன்னீங்க,, பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏதாவது சிக்கல்ன்னா மறுபடியும் கையெழுத்து கேட்பாங்களேங்க,, இந்த நேரத்தில் இதென்ன பிடிவாதம் ராஜா” என்று மெல்லிய குரலில் வசந்தி எடுத்துரைக்க“ ம்ஹூம் நான் உன்னைவிட்டு எங்கேயும் போறமாதிரி இல்லை வசந்தி,, என்னை வற்புறுத்தாதே” என்று கூறிவிட்டு தன் நெஞ்சில் இருந்த நோயால் மெலிந்த தன் மனைவியின் கரங்களை எடுத்து தன் கழுத்தடியில் வைத்துக்கொண்டு அவள் புரமாக திரும்பி படுத்துக்கொண்டான்
ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்தாலும் ,வசந்தியும் அதற்குமேல் அவனை எதுவும் கேட்டு வற்புறுத்தவில்லை

ஆனால் வசந்தி நோகாமல் அணைத்தபடி படுத்திருந்த கிருபாவிற்கு மனம் முழுவதும் ரஞ்சனாவை கடைசியாக பார்க்கும் போது கையில் பணமும் கண்களில் கண்ணீருமாக நின்ற கோலம்தான் மனதில் மறுபடியும் மறுபடியும் தோன்றி வதைத்தது

See also  மனசுக்குள் நீ - பாகம் 35 - தமிழ் காமக்கதைகள்

அப்பா வந்துவிட்டான் என்றதும் அறைக்குள் ஓடிவந்து கிருபாவின் மீது தாவிய சத்யனையும் சேர்த்து அணைத்துக்கொண்டான் கிருபா,,அவன் செய்கைகள் எதையோ கண்டு பயப்படுவது போல் இருந்தது,,

மறுநாள் மில்லுக்கு கிளம்பும் போதுதான் தனது மொபைலை ஆன் செய்தான் கிருபா,, காரில் போகும்போது மொபைல் அடிக்க எடுத்து பார்த்தான், புது நம்பராக இருந்தது, ஆன் செய்து காதில் வைத்தான்

“ ஹலோ நீங்க கிருபானந்தனா,, நாங்க ஆர் கே ஆஸ்பிட்டல்ல இருந்து பேசுறோம்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதும்,,

ஆஸ்பிட்டல்ல இருந்து என்றதும் கிருபாவின் வயிற்றில் சில்லென்று ஒரு உணர்வு தாக்க “ சொல்லுங்க நான் கிருபானந்தன் தான்,, ரஞ்சனாவுக்கு என்னாச்சு” என்றான் பதட்டத்துடன்“ ஒரு நிமிஷம் இருங்க சார்,, இதோ பேசுறாங்க” என்று கூறிவிட்டு போனை பக்கத்தில் யாரிடமோ கொடுக்க

அன்னம்மாதான் பேசினார் “ ராசா எப்படியிருக்கீக,, இங்க ரஞ்சனா கண்ணுக்கு பொட்டப்புள்ள பொறந்து இருக்கு,, நைட்டு பதினோரு மணிக்கு பொறந்துச்சு,, உங்களுக்கு போன் பண்ணி தகவல் சொல்ல சொல்லி ரெண்டு மூனு வாட்டி சொல்லுச்சு,, அதான் போன் பண்ணேன்” என்று அன்னம்மா உரக்க பேசினார்

அதுவரை மனதை பிடித்து வைத்திருந்த ஏதோவொன்று பட்டென்று விடுபட,, ரஞ்சனா பிரசவ நேரத்தில் தன்னை காணாமல் எப்படி தவித்தாளோ என்ற கழிவிரக்கம் மேலோங்க “ சரி அன்னம்மா இதோ இன்னும் அரை மணிநேரத்தில் அங்க இருப்பேன்” என்று கூறி இணைப்பை துண்டித்து காரை மருத்துவமனைக்கு திருப்பினான் கிருபா

மருத்துவமனைக்குள் நுழைந்து ரஞ்சனா இருக்கும் அறையை விசாரித்து,, அவர்கள் கூறிய அறையை அடைந்து வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே போனான்

Leave a Comment

error: read more !!