மனசுக்குள் நீ – பாகம் 11 – மான்சி தொடர் கதைகள்

மறுநாள் கண்விழித்த சத்யனுக்கு இந்த உலகமே தனக்காகத்தான் விடிந்தது போல் இருந்தது,, ஜன்னலை திறந்து தோட்டத்தில் இருக்கும் மகிள மரத்தில் அமர்ந்து கூவும் குயில்களின் நாதத்தை ரசித்தான், தொட்டிகளில் இருந்த பனிமூடிய ரோஜாக்களி அழகை விழியெடுக்காமல் ரசித்து பார்த்தான்,, ஜன்னலுக்கு அருகில் இருந்த மரமல்லி கிளையில் இருந்து கைநீட்டி ஒரு பூவை பறித்து முகர்ந்து பார்த்தான்,, சிறி சிரிப்புடன் மறுபடியும் படுக்கையில் போய் விழுந்தான்

” என் காதல் தேவனே…

” என் இதயத்தில் ரோஜாவை பதிய மிட்டு…

” எனது எண்ணத்தில் அதன் வாசனையை…

” வழிய விட்ட என்னவனே…

” நீயிருக்கும் இடத்தில்

” உனது நிழலாய் நான் இருக்க..

” வரம் தருவாயா?”

எப்போது ஒன்பது மணி ஆகும்,, தனது காதல் தேவதையை மில்லில் சந்திக்கப்போகிறோமோ என்று ஏங்கினான்,, கடிகாரத்தில் மணி பார்த்தான் ஆறரை ஆகியிருந்தது,, சீக்கிரமாக நகராத சிறிய முள்ளை பார்த்தால் எரிச்சலாக வந்தது,,



எழுந்துபோய் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்,, குளித்து உடை மாற்றி மில்லுக்கு தயாராகி வெளியே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்,, வாட்ச்மேன் வாங்கி வந்திருந்த ஹோட்டல் டிபனை சாப்பிட்டு மில்லுக்கு புறப்படும் சமயத்தில் அவனது மொபைல் ஒலித்தது
யார் என்று எடுத்து பார்த்தான்,, அனிதாதான் அழைத்திருந்தாள்,, ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லு அனிதா” என்றான் சத்யன்

“ குட்மார்னிங் அண்ணா”என்றாள் அனிதா

“ ம்ம் குட்மார்னிங்,, என்ன காலையிலயே கால் பண்ணிருக்க,, என்ன விஷயம் சொல்லு ” என்றான் சத்யன்

எதிர் முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ அண்ணா நம்ம வசு பெரியவளாயிட்டா அண்ணா,, இன்னிக்கு காலையில தான்” என்றாள் அனிதா குரலில் சந்தோஷத்துடன்

இப்போது சத்யனிடம் மவுனம் ,, வசந்தி சத்யனின் மூன்றாவது தங்கை,, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வசுவிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட “ எங்க சத்யா அண்ணாவை தவிர யாரையுமே எனக்கு பிடிக்காது என்பாள்

பள்ளியில் அரைநாள் விடுமுறை விட்டால் கூட அடுத்த அரை மணிநேரத்தில் இங்கே வந்துவிடுவாள் ,, சத்யனின் பெண் தோற்றம் போல் அச்சு அசலாக சத்யனின் ஜாடையில் இருக்கும் வசுவின் குறும்புகள் சத்யனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அதை துளிகூட வெளியே காட்டிக் கொள்ளமாட்டான்



பாட்டியுடன் சேர்ந்து கொண்டு எதையாவது செய்து “ அண்ணா இது நல்லாருக்கா பாருண்ணா,, உனக்கு இது பிடிக்குமா” என்று எதையாவது செய்து அவன் அறையைத் தவிர அந்த வீட்டையே தலைகீழாக மாற்றுவாள்,, அவன் அறைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டானோ என்ற பயத்தில் போகமாட்டாள்
குழந்தைத்தனமாக சுற்றி வந்தவள் இப்போது பெரியமனுஷி ஆகிவிட்டாள் என்பது,, சத்யனுக்கு நம்பமுடியவில்லை,, அனிதாவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் அமைதிகாத்தவன் , பிறகு யோசித்து “ வசுவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடு அனிதா” என்றான்

See also  பொம்மலாட்டம் - பாகம் 11 - மான்சி தொடர் கதைகள்

“ அதை நீயே வந்து சொல்லேன் அண்ணா,, அவளுக்கு நீன்னா உயிர்,, காலையிலேர்ந்து அண்ணாகிட்ட சொல்லிட்டியா அனிதான்னு நாலஞ்சு வாட்டி கேட்டா,, அவ நம்ம வீட்டு கடைக்குட்டி,, உனக்கும் அவளை பிடிக்கும்னு தெரியும், நீ வந்து அவளை ஆசிர்வாதம் பண்ணா அவ ரொம்ப சந்தோஷப்படுவா அண்ணா,, ப்ளீஸ்” என்று அனிதா அண்ணனிடம் பாசத்தை யாசகம் கேட்டாள்

சத்யன் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு ,, இறுதியாக “ மில்லுக்கு நேரமாச்சு கிளம்புறேன்,, பை அனிதா” என்று சொல்லிவிட்டு இனைப்பை துண்டித்தான்

வேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவனின் எண்ணங்கள் முழுவதும் கடைக்குட்டி தங்கை வசந்தி ஆக்கிரமித்திருந்தாள்,, தற்காலிகமாக மான்சியை மறந்தான்



சத்யனின் அம்மா வசந்தியின் பெயரை அவளுக்கு சூட்டியிருந்தார்கள், ஆனால் சத்யன் அம்மாவுக்கு நேர் எதிரான குணத்தை கொண்டவள் வசு பயங்கர குறும்புக்காரி, அவளுக்கு நடக்கும் முதல் விஷேசம் இது,, ஆனால் நான் எப்படி அந்த வீட்டுக்கு போகமுடியும்,, என்று குழம்பினான்

அனிதாவுக்கு பதில் சொல்லாமல் லைனை கட் செய்தது மனதை உறுத்தினாலும் தன்னால் வேறென்ன செய்யமுடியும் என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்
கார் மில்லில் வந்து நின்றதும்,, மறுபடியும் மான்சியின் நினைவுகள் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்தது,, அவள் வந்திருப்பாளா,, என்று காரில் இருந்தபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினான்

மணி எட்டு இருபது தான் ஆகியிருந்ததால் ஒன்றிரண்டு தொழிளாலர்கள் மட்டும் மில்லுக்குள் வந்து செக்கியூரிட்டி வைத்திருந்த லெட்ஜரில் கையெழுத்து போட்டுவிட்டு அவரவர்பகுதிகளுக்கு பிரிந்து போனார்கள்,, மான்சியை மட்டும் காணவில்லை,, சத்யன் காரைவிட்டு இறங்கி ரிமோட் மூலம் கதவுகளை லாக் செய்துவிட்டு மில்லுக்குள் நுழைந்தான்

மில்லின் பக்கவாட்டில் இருந்த, மரங்கள் அடர்ந்த குட்டி நந்தவனத்தில் தனது பார்வையை திருப்பினான்,, உடனே அவனது கால்கள் நகர மறுக்க,, கண்கள் சந்தோஷத்தில் அகல விரிந்தது

மான்சி அங்கிருந்த ஒரு சரக்கொன்றை மரத்திற்கு கீழே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்,, சத்யனின் கால்கள் அவனிடம் அனுமதி கேட்காமலேயே அவளிடம் விரைந்தன

அவனை பார்த்ததும்,, முகம் மலர்ந்ததை அவசரமாக தலைகுனிந்து மறைத்தபடி மான்சி எழுந்து நின்றாள்,,

“ என்ன மான்சி இங்கே உட்கார்ந்திருக்க,, மில்லுக்குள் போகவேண்டியது தானே” என்று அன்புடன் கேட்ட சத்யனின் குரல் அவளை நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க வைத்தது



லேசாக சிவந்த முகத்துடன் அவன் முத்தை நோக்கியவள்,, “ நான் சீக்கிரமா வந்துட்டேன் போலருக்கு,,, நான் போகவேண்டிய பிளாக் இன்னும் திறக்கலை,, அதான் இங்கே வந்து உட்கார்ந்தேன் ” என்று மெல்லிய குரலில் கூறினாள் மான்சி
தானும் இன்று சீக்கிரமே வந்துவிட்டது அப்போதுதான் சத்யனுக்கு உரைத்தது,, நான் இவளை பார்க்கும் ஆர்வத்தில் சீக்கிரமே வந்ததுபோல்,, இவளும் என்னை பார்க்கும் ஆவலில் வந்திருப்பாளோ என்று குதூகலமாக எண்ணமிட்ட மனதை அடக்கியவாறு “ அதுக்காக ஏன் இங்கே உட்காரனும்,, என்னோட கேபின் பியூன் திறந்திருப்பானே,, அங்க போய் உட்கரா வேண்டியதுதானே,, சரி வா போகலாம்” என்று கூறிவிட்டு சத்யன் திரும்பினான்

See also  பொம்மலாட்டம் - பாகம் 34 இறுதி - மான்சி தொடர் கதைகள்

“ அது வந்து இங்க ரொம்ப நல்லா இருந்தது அதான் வந்து உட்கார்தேன்,, காலைலேயே நிறைய பறவைகளின் சத்தம்,, கேட்கவே ரொம்ப இனிமையா இருந்தது” என்று சொல்லிகொண்டே அவன் பின்னால் வந்தாள்

சட்டென்று நின்று அவளை திரும்பி பார்த்தான்,, சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, தானும் இன்று காலையில் எழுந்ததும் பறவைகளின் சத்தத்தை ரசித்தது ஞாபகம் வந்தது,, இவளுக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் போல் தெரிகிறதே,, என்று எண்ணமிட்ட படி மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்



இருவரும் சத்யனின் அறையை நோக்கி நடக்க,, மான்சி அவனுடைய ஆச்சரியமான பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் “ எனக்கு பறவைகளின் சத்தம் ரொம்ப புடிக்கும்,, ஒவ்வொரு பறவையின் சத்தத்தை வச்சே அது எந்த பறவைன்னு ஓரளவுக்கு கண்டுபிடிப்பேன்,, சின்ன வயசுலேர்ந்தே இது எனக்கு ரொம்ப புடிக்கும்” என்று தன்னைப்பற்றிய சிறு தகவலை அவனுக்கு சொன்னாள்

error: read more !!
Enable Notifications OK No thanks