ரஞ்சனா மறுக்காமல் அவனிடம் டவலை கொடுத்துவிட்டு வேகமாக உள்ளே போனாள்,, கையை கழுவிவிட்டு, அன்னம்மாள் ஆக்கி வைத்திருந்த சாப்பாட்டை தட்டில் போட்டு அதில் ரசத்தை ஊற்றி குழைய பிசைந்தாள், அடுப்பில் இருந்த வென்னீரை ஒரு சொம்பில் எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தாள்
அதற்க்குள் அன்னம்மாள் ஒரு புது வேட்டியுடன் நிற்க்க,, அதை வாங்கி கிருபாவிடம் கொடுத்து “ மொதல்ல இந்த வேட்டியை மாத்துங்க, பேன்ட் எல்லாம் ஒரே ஈரமும் சகதியுமா இருக்கு” என்றாள், விட்டால் அவளே மாத்தி விடுவாள் போல பிடிவாதமாக வேட்டியை நீட்டிக்கொண்டு இருந்தாள்
கிருபா வேட்டியை வாங்கி இடுப்பில் சுற்றிக்கொண்டு பேன்ட்டையும் சட்டையையும் அவிழ்த்துவிட்டு உடலில் டவலை போர்த்திக்கொண்டான் ,, ஈர உடைகளை அன்னம்மாள் அதை அழசி காயப்போட எடுத்துக்கொண்டு போனார்,,
ரஞ்சனா ஒரு ஸ்டூலை இழுத்து சோபாவின் எதிரே போட்டு அதில் சாப்பாட்டு தட்டை வைத்து “ ம் இதை சாப்பிடுங்க, அப்புறமா மாத்திரை போடலாம்” என்று கட்டளையிட்டாள்
“ எனக்கு சாப்பாடு வேண்டாம் ரஞ்சனா,, மாத்திரை மட்டும் குடு போட்டுக்கிறேன்” என்றான் கிருபா
“ ம்ஹூம் வெறும் வயித்துல மாத்திரை போடக்கூடாது,, பிடிச்ச வரைக்கும் கொஞ்சூண்டு சாப்பிடுங்க” என்று ரஞ்சனா வற்புறுத்தினாள்
சாப்பிடாமல் இவள் விடமாட்டாள் என்றுணர்ந்த கிருபா மறு பேச்சின்றி தட்டிலிருந்த உணவை வேண்டாவெறுப்பாக உள்ளே தள்ளினான்,, அவனுக்கு எங்காவது ஒருமூலையில் படுக்க இடம் கொடுத்து ஒரு போர்வையும் கொடுத்தால் போதுமென்றிருந்தது
சாப்பிட்டு முடித்ததும் ரஞ்சனா கொடுத்த காய்ச்சல் மாத்திரையை போட்டுக்கொண்டான்,,
“ எழுந்து உள்ளே போய் படுங்க” என்று ரஞ்சனா கூற,… அதற்காகவே காத்திருந்ததை போல வேகமாக எழுந்து தள்ளாடி நடந்து அங்கிருந்த ஒற்றை படுக்கையறையில் இருந்த கட்டிலில் விழுந்தான் கிருபா
ரஞ்சனா தனது ஈர உடைகளை மாற்றிக்கொண்டு, அவளும் சாப்பிட்டு,, குழந்தைக்கு பால் கலக்கி பால் புட்டியில் ஊற்றிக்கொண்டாள், அன்னம்மா படுக்கையறையில் கிடந்த கிருபாவையே கவலையுடன் பார்க்க “ ஒன்னும் ஆகுது பாட்டிம்மா,, சாதாரண காய்ச்சல் தான்,, நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க” என்று ஆறுதல் கூற அனுப்பிவிட்டு கிருபா இருந்த அறைக்குள் போனாள்
தரையில் ஒரு பழம் புடவையை போட்டு அதில் குழந்தையை படுக்க வைத்துவிட்டு,, இருந்த ஒரே போர்வையை எடுத்து கிருபாவின் மேல் போர்த்திவிட்டு இவள் இன்னும் ஒரு எடுத்து போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்
அன்று முழுவதும் நடந்த சம்பவங்கள் மனதில் படமாக ஓடியது,, வசந்தி கூறி வார்த்தைகள் காதுகளில் ஒலித்தது,, கிருபாவின் கோப முகம் கண்முன் வந்து போனது,, எல்லாவற்றையும் எண்ணிக்கொண்டே குழந்தை தட்டிக் கொடுத்தவாறு ரஞ்சனா தூங்கி போனாள்
நடு இரவில் முனங்கல் ஒலி கேட்டு சட்டென்று கண்விழித்த ரஞ்சனா, சூழ்நிலை உணர்ந்து சட்டென்று சுதாரித்து கட்டிலை பார்த்தாள்,, கிருபாதான் முனங்கிக்கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்,, வாரிச் சுருட்டி எழுந்த ரஞ்சனா கட்டிலருகே ஓடினாள்
கிருபா காய்ச்சல் வேகத்தில் உளறிக்கொண்டு உடலை முறுக்கியபடி படுக்கையில் புரண்டான், கட்டிலில் ஏறி அவனருகே மண்டியிட்ட ரஞ்சனா அவன் தோளைப் பற்றி “ என்னாச்சுங்க” உலுக்கினாள்,, அவன் உடல் நெருப்பென கொதித்தது,,
ரஞ்சனாவுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை அழுகை தான் வந்தது,, அன்னம்மாவையும் கந்தனையும் எழுப்பி வரலாமா என்று நினைத்தாள்,, ஆனால் கிருபாவை தனியாக விட்டு போக பயமாக இருந்தது, குளிர் தாங்காமல் அவன் உடல் தூக்கிப் போட்டது
‘ அய்யோ வேற போர்வை கூட இல்லையே’ என்று கலங்கியவள் இருந்த ஒரு போர்வையை சரியாக போர்த்தினாள்,, ரஞ்சனா தன்னருகே இருக்கிறாள் என்பதை உணர்ந்த கிருபா “ ரஞ்சனா என்னால குளிர் தாங்கமுடியலையே” என்று நடுங்கும் குரலில் கூறினான்
இப்போ என்னப் பண்றது,, என்று புரியாமல் கையை பிசைந்தாள் ரஞ்சனா,, அவள் மனமும் உடலும் பதறியது, ஏதோ நினைத்துக்கொண்டு நடுங்கும் கிருபாவையே தீர்கமாக பார்த்தாள், பிறகு போர்த்திய போர்வையை விலக்கிவிட்டு சிலநிமிடங்கள் தாமதித்தாள்,, ஒன்று, இரண்டு, மூன்று, நாலாவது வினாடி கிருபாவின் மீது அப்படியே சரிந்தாள்
காலை நீட்டி அவன்மீது படுத்தாள், கைகளை அவன் கழுத்துக்கு கீழே போட்டு வளைத்துக்கொண்டாள், அவன் காதருகே சென்று “ என்னை இறுக்கி கட்டிக்கங்க, குளிராது” என்றாள் கிசுகிசுப்பாக
கிருபாவுக்கு தன்மீது விழுந்த பூக்குவியல் ரஞ்சனாதான் என்று புரிந்தது,, உடல் அவளை அணைக்க துடித்தது, மனம் வேண்டாம் என்று முரண்டியது, அந்த பலகீனமான போராட்டம் சிலவினாடிகளே நடந்தது,, உடல் மனதை ஜெயிக்க, அவளின் எலும்புகள் நொருங்குவது போல இறுக்கி அணைத்தான் கிருபா
வாய் ஓயாமல் ரஞ்சனா ரஞ்சனா என்று புலம்ப, இவ்வளவு நேரம் தனியாக புரண்டு உருண்டவன்,, இப்போது ரஞ்சனாவுடன் சேர்ந்து உருண்டான்,, பலநாட்களாக அடக்கி வைத்த வேட்கை கட்டுப்பாடுகளை கடந்து கரையை உடைக்க,, ரஞ்சனாவை கீழே கொண்டு வந்து அவன் அவள் மேலே ஏறினான்
சூடான அவளின் உடல் அவனுக்கு இதமாக இருந்தது, அந்த சூட்டை அனுபவிக்க அவளது புடவை தடையாக இருக்க, அவசரமாக அதை உருவி எறிந்தான்,, தன் கால்களால் அவள் கால்களை விரித்தான்,, கிடைத்த இடைவெளியில் புகுந்தான்,,
தனது வரண்ட உதடுகளை அவளின் ஈர இதழ்களில் அழுத்தினான்,, அவன் உடலைவிட உதடுகள் அதிகமாக கொதித்தது, ரஞ்சனா வாயைத்திறந்து அவனது உதடுகளை உள் வாங்கினாள்,, அவளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்,, வசந்திக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவது என்ற முடிவு,, ஆனால் வசந்தியின் கோரிக்கையைவிட அவர்களின் உடல் வேட்கை அவர்களை அடுத்தகட்டத்துக்கு தூண்டியது
கிருபாவின் இயக்கம் வேகமாக வெறியுடன் இருந்தது, அவனது வேகம் ரஞ்சனாவை பயமுறுத்தினாலும் அவனுக்கு சரியாக ஒத்துழைத்தாள், இயக்கத்தின் இறுதி வரை கிருபாவின் வாயில் வந்த ஒரே வார்த்தை ரஞ்சனாதான், ஒவ்வொரு முறை அவளை கூப்பிடும் போதும் அவனுடைய அளவுகடந்த காதல்தான் வெளிப்பட்டது
தன்னுடைய இத்தனை நாள் பசிக்கு அவள் உடலையே இரையாக உண்பவன் போல் அவளை முழுவதுமாக சாப்பிட்டான் கிருபா,, அவன் பசிக்கு தனது உடலை முழுமனதோடு படையலிட்டாள் ரஞ்சனா,, இருவருக்கும் இருக்கும் இடம்,, சூழ்நிலை,, குடும்பம், உறவுகள்,, சுற்றம், நட்பு, அத்தனையும் மறந்தது, அவர்களின் ஞாபகத்தில் இருந்ததெல்லாம் காதலை மிஞ்சிய அவர்களது கூடல் மட்டுமே,, அவனது வேகமும்,, அவளது விவேகமும் ஒன்றையொன்று ஜெயிக்க முற்பட்டது
குளிரில் நடுங்கிய கிருபாவின் உடல் இப்போது வியர்வையில் குளித்தது,, அவனின் அனல் மூச்சில் அவளின் உடல் வதங்கி வாடியது,, கிருபா இறுதியாக களைத்து அவள்மீது சரிந்தபோது, ரஞ்சனா தனது கால்களால் அவனை பின்னிக்கொண்டாள்,,
வெகு நேரம் வரை இருவரும் அசையவில்லை பின்னிக்கொண்டு கிடந்தனர்,, அவனுடைய கம்பீர உடல் அவளின் பூவுடலை நசுக்கினாலும், அவனை விலக்கவில்லை கைகளாலும்,, கால்களாலும் அவனை பின்னிக்கொண்டாள்,, அவனும் சுகமாக அவளுக்குள் அடங்கினான்
அவர்களின் இந்த காமப் போராட்டத்திற்கு காரணம், ரஞ்சனாவின் தனிமையா? கிருபாவின் வேட்கையா? இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலா? அல்லது வசந்திக்கு செய்து கொடுத்த சத்தியமா? இவை எதுவுமே இல்லையென்றான் எதுதான் காரணம்? . வேறென்ன அந்த வீணாப்போன காய்ச்சல் தான்,,