ம்ம் சரி போயிட்டு வா என்றாள் .பின் இருவரும் வீட்டுக்கு வந்தனர் .அதன் பின் விக்கி அவளை இறக்கி விட்டு வேகமாக போனான் .வழக்கம் போல ஒரு மாலுக்கு போக அங்கு டேவிட் நின்று கொண்டு இருந்தான் .சரிடா ஒரு கல்யாணம் அதான் லேட் ஆகிடுச்சு என்றான் .
இருக்கட்டும்டா வா உக்காந்து கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசுவோம் என்றான் .எப்படியும் சாக் ஆகுற மாதிரி தான் பேசுவான் சரி போயி கேப்போம் என நினைத்து கொண்டு போனான் .என்னடா விஷயம் சொல்றா என்றான் டேவிட் .நான் ஸ்வாதிய மறந்துட்டு என் பொண்டாட்டிய லவ் பண்ண போறேன் என்றான் டேவிட் .என்னது என்றான் .ஆமாடா கல்யாணத்துக்கு அப்புறமும் அவள நினைச்சு கிட்டு இருக்கிறது தப்புன்னு இப்ப தான் புரிஞ்சுச்சு
எல்லாம் ஆஸ்பத்திரில மணியும் வள்ளியும் கொஞ்சி கிட்டத பாத்து தான் எனக்கு புத்தி வந்துச்சு மணியும் என்னைய மாதிரி தான் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணான் ஆனா இப்ப அவள மறந்துட்டு வள்ளிக்கு உண்மையா இருக்கான் இன்னும் சொல்ல போனா நான் ஆச்சும் ஸ்வாதிய 2 வருஷம் தான் லவ் பண்ணேன் ஆனா மணி ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் லவ் பண்ணான் அதையே மறந்துட்டு வள்ளிய இப்ப லவ் பண்ணி நிம்மதியா இருக்கான் அண்ட் நானும் அதே மாதிரி ஆக போறேன் .என்னைய நம்பி வந்தவள ஏமாத்தம அவள் நல்லா படியா வச்சுக்க போறேன்
அண்ட் எனக்கும் குழந்தை பெத்துகிரனும்னு ஆச வந்துடுச்சு அதனால நானும் ஒரு குடும்பஸ்தான மாற போறேன் என்றான் .அப்பா இன்னைக்கு தான் நல்லா பேசி இருக்கான் இருந்தாலும் இவன நம்ப முடியாது போட்டு வாங்குனாலும் வாங்குவான் சோ அமைதியா அடக்கி வாசிப்போம் என நினைத்து கொண்டு சரிடா நீ எது பண்ணாலும் எனக்கு சந்தோசம் தாண்டா என்றான் ,
சரிடா நான் கிளம்புறேன் இனி மேல் ரெஜினா கூட டைம் அதிகமா செலவழிக்க போறேன் சோ கோபிக்காத அண்ட் கூடிய சீக்கிரம் நீயும் யாரையாச்சும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகு என்று அவசர அவசரமாக சொல்லி கொண்டு போனான் .
சரி ஒரு வில்லன் போயிட்டான் ஆனா புது வில்லன் சித்தார்த் எப்ப என்ட்ரி ஆக போறனோ சரி எல்லாம் விதி படி நடக்கட்டும் என்று விக்கி நினைத்து கொண்டே ஓகே நம்மளும் வீட்டுக்கு போவோம் ….
விக்கி வீட்டிற்கு வந்து நன்கு தூங்கி விட்டான் .அடுத்த நாள் ஆபிசில் முக்கியமான மீட்டிங் இருப்பதால் சீக்கிரம் எந்திரிக்க வேண்டும் என்று தூங்கி விட்டான் .அடுத்த நாள் எழுந்த போது முதல் நாள் மணி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது .அன்னைக்கு மீட்டிங்குக்கு பாஸ் வராருன்னு சொன்னதும் அப்புறம் அன்னைக்கு ஒரு நாள் அவன் கம்பெனியோட உண்மையான பாஸ் சுவாதி அப்பா தான் டேவிட் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சு .
ஒரு வேல இன்னைக்கு வர பாஸ் நேம் வச்சு சுவாதியோட அப்பா தான் நம்ம கம்பெனி பாசா இல்லையான தெரிஞ்சுக்காலம் ஆனா சுவாதி அப்பா பேர் மறந்துடுச்சே என்னமோ பேர்ல ம்ம் என்று யோசித்தான் .ம்ம் ஞாபகம் வந்துடுச்சு ,ம்ம் ஏதோ மேனன்னு ஆரம்பிக்கும்னு மட்டும் தெரியுது சரி அவ கிட்டே கேப்போம் என நினைத்து கொண்டு குளித்து முடித்து ஆபிசுக்கு கிளம்பினான் .பின் ரூமை விட்டு வெளியேறும் போது ஹால சுவாதி உக்காந்து இருக்கணும் ஹால சுவாதி உக்காந்து இருக்கணும் என மனதில் நினைத்து கொண்டே வெளியேறினான் .
ஆனால் அவள் ஹாலில் இல்லை சே பேட் லக் பேட் லக் தொடர்ந்து இப்படியே இருந்தா என்ன பண்ண என்று நினைத்து கொண்டு வெளியேறினான் .கார் வரை போனவன் சரி எதுக்கும் ஒரு தடவ உள்ள போயி பாப்போம் என நினைத்து கொண்டே உள்ளே பைல் எடுக்க செல்வது போல் உள்ளே போனான் .அங்கே சுவாதி கண்களை கசக்கி கொண்டே வெளியே வந்து காப்பி போட்டு குடித்து கொண்டே பேப்பர் படித்து கொண்டு இருந்தாள் .
ஹே குட் மார்னிங் என்றான் .குட் மார்னிங் காப்பி வேணுமா என்றாள் .இல்ல என்று சொல்லிவிட்டு யோசித்தான் .எப்படி கேக்குறது இவளுக்கு தான் அப்பா பத்தி பேசுனா பிடிக்காதே சரி கேக்க வேணாம் என்று கதவு வரை போனவன் ஹ சுவாதி உன்னைய ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே என்றான் .நீ என்ன கேப்பன்னு தெரியும் குழந்தை யாருதுன்னு கேப்ப இத விட்ட உனக்கு வேற என்ன கேக்க தெரியும் வெண்ண என்று மனதில் நினைத்து கொண்டு அவனை பார்க்கமால் காப்பியை உறிஞ்சு கொண்டே கேளு என்றாள்.
அது வந்து உங்க அப்பா பேர் என்ன என்றான் .சுவாதி காப்பி குடிப்பதை நிறுத்தி விட்டு விக்கியை முறைத்தாள் .ஏன் அது எதக்கு உனக்கு எங்க அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு அவர் கிட்ட கொண்டு போயி விட போறயா எ நான் தான் சித்தார்த் அபர்ட்மெண்ட்க்கு சிப்ட் ஆகிக்கிறேன்னு சொன்னேளே அப்புறம் ஏன் என்றாள் .
ஹ நீ தான உங்க அப்பாவ பாத்து பத்து வருஷம் ஆச்சு அப்படின்னு நேத்து சொன்ன அப்புறம் உங்க அப்பா வேற பெரிய தொழில் அதிபர்ன்னு வேற சொன்னேளே அதான் இன்னைக்கு எங்க ஆபிஸ்ல ஒரு பெரிய கான்பெரன்ஸ் அதுல இந்தியா முழுக்க இருக்க தொழில் அதிபர்க கலந்துக்கிறாங்க அதான் உங்க அப்பா பேர் சொன்னா பாத்து சொல்றேன் என்றான் .ஒன்னும் வேணாம் நீ போ என்றாள் .
யே சும்மாவாச்சும் ஒரு ஜெனரல் நாலெஜுக்கு கேட்டேன் என்றான் .ஒரு மயிரு நாலெஜும் வேணாம் நீ போ என்றாள் ,ஓகே ஐ அம் சாரி என்றான் .சரி போ என்றாள் .சரி இதுக்கு மேல இவங்க அப்பா பேர் கேட்டு இவள கோப படுத்த வேண்டாம் கிளம்புவோம் டேவிட் கிட்ட கேக்கலாம் ஆனா அவன் திரும்ப சுவாதி மேல லவ் வந்துருச்சு நான் போயி அவர பாக்கணும் அப்படின்னு ரிவர்ஸ் அடிச்சுட்டானா என்று நினைத்து கொண்டு சரி ஆபிஸ் போவோம் யாராச்சும் சவுத் இந்தியால இருந்து வந்தா நமக்கு நல்லா தெரிஞ்சுடும் அப்புறம் அத பாப்போம் என்று நினைத்து கொண்டு ஆபிஸ் போனான் .
அங்கு ஆபிசில் எல்லாரும் எப்போதும் வருவதற்கு முன்பே வந்து இருந்தார்கள் ,மேலும் அங்கு welcome boss என்று தோரணங்களும் அலங்காரங்களும் இருந்தன .எப்பா பயங்கரமா தான் அலங்காரம் பண்ணி இருக்காங்கே என்று நினைத்து கொண்டு உள்ளே வந்தான் .நல்ல வேல நீ சீக்கிரம் வந்த என்றான் மணி .டேய் நான் என்னைக்குமே லேட்டா வர மாட்டேண்டா நைட் புல்லா குடிச்சா கூட காரெக்டா ஆபிஸ்க்கு வந்துடுவேன் என்றான் .
யே உன்னையே பத்தி எனக்கு தெரியும் இருந்தாலும் புது பாஸ் வராருல அதான் உன்னையே கொஞ்சம் அலர்ட் பண்ணிக்கிற தான் சொன்னேன் என்றான் மணி .அது சரி யாருடா அது புது பாஸ் என கேட்டான் விக்கி .தெரியல மச்சான் ஆனா யார் வந்தாலும் நீ பிரசென்டேசன் பண்ண வேண்டியது இருக்கும் என்றான் மணி .ஏண்டா அப்படி என்றான் விக்கி .ஏன்னா நீதான் ஆபிஸ்ல முக்கியமானவங்கள அஞ்சு பேர்ல நீயும் ஒருத்தன் என்றான் மணி என்னமோ போடா என்றான் விக்கி .