பொம்மலாட்டம் – பாகம் 12 – மான்சி தொடர் கதைகள்

img-20161211-wa0436ஆதியும் வேதனையுடன் தலை குனிந்தான்…. “எனக்கும் அதான் கவலையா இருக்கு சத்யா…. உன்னையும் மான்சியையும் வச்சு அக்காவுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு…. இந்த ஆறு நாள்லயே மான்சி விஷயத்துல அவங்களுக்கு நிறைய ஏமாற்றம்…

அதை மேலும் வளரவிடாம இப்பவே சகலமும் தெரிஞ்சிடுறது நல்லது தான் மச்சி…. ஆனா மொதல்ல நாம டாக்டரைப் பார்த்து இதை கன்பார்ம் பண்ணிக்கனும்…” என்ற ஆதி குழப்பமாக சத்யனை ஏறிட்டு “ஆனா யாருக்கும் தெரியாம எப்படி கூட்டிடுப் போறதுன்னு தான் புரியலை” என்றான்…



இருவரிடமும் ஒரு நீண்ட மவுனம்….. சற்றுநேரம் கழித்து நிமிர்ந்த சத்யன் “அதிலும் மான்சியோட அம்மாவுக்குத் தெரியாம எப்புடி கூட்டிட்டுப் போறது? அவங்க எப்பவுமே கூடவே இருப்பாங்களே?” என்று கேட்க… “இல்ல சத்யா…. அவங்களும் நம்ம கூட வரனும்…. மான்சியைப் பத்தின கேள்விகளுக்குப் பதில் அவங்கக்கிட்ட மட்டுமே இருக்கு…. அவங்களும் வரனும்… ஆனா டாக்டரைப் பார்க்கப் போறோம்னு சொன்னா மறுக்கலாம்….

அதனால டாக்டரை சந்திக்கும் வரை அவங்களுக்குத் தெரியாம இருக்கிறது தான் நல்லது” என்றான் ஆதி…. “யெஸ் ஆதி,, நீ சொல்றது தான் சரி” என்ற சத்யன் சட்டென்று தோன்றிய யோசனையுடன் “ஆதி… நம்ம ப்ரெண்ட்ஸ் யார் வீட்டுக்காவது விருந்துக்குப் போற மாதிரி சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போகலாமா?” என்று கேட்டதும்…. “கரெக்ட் மச்சி… அப்படித்தான் செய்யனும்… என் வீட்டுக்கே விருந்துக்குப் போறதா சொல்லிடலாம்… ஊருக்குப் போயிருந்த அப்பா அம்மா நேத்தே வந்துட்டதா அக்காக் கிட்ட சொல்லிடலாம்” என்று ஆதி கூறினான்…



நண்பர்கள் இருவரும் ஆலோசித்து சரியாகத் திட்டம் தீட்டியப் பிறகு கீழே வந்து வாசுகியிடம் விருந்துக்குச் செல்லப் போகும் விஷயத்தைக் கூறினர்…. தம்பியும் அவன் மனைவியும் விருந்திற்கு செல்லப் போகும் உற்சாகம் வாசுகியிடம் இல்லை…. “ஆதி,, இந்த பொண்ணு யார்க்கிட்டயும் ஒட்ட மாட்றாளே? இவளைக் கூட்டிட்டுப் போய்? அப்புறம் அப்பா அம்மா சங்கடப்படப் போறாங்கப்பா?” என்று வருத்தமாகக் கூறினாள்…

ஆறுதலாக மனைவியைப் பார்த்த மதி “எல்லாம் போகப் போக சரியாகிடும் வாசு…. நம்ம சத்யன் கூட ஒத்துமையா இருந்தாலேப் போதும்…. நம்மளை விடு…. அவங்க ரெண்டு பேரோட புரிதல் தான் முக்கியம்” என்று கூறியதும் சத்யனுக்கு கண்கள் கலங்கிற்று… முகத்தைத் திருப்பிக்கொண்டான்… “மான்சி தலைவலிக்கிதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தா தம்பி… இப்போ விருந்துக்குப் போய் ஆகனுமா?” என்று தயக்கமாகக் கேட்ட பவானியைப் பார்த்த ஆதி

“அதுக்கென்ன ஆன்ட்டி.. ஒரு டேப்லட் போட்டா தலைவலி சரியாகிடும்…” என்றவன்… “அப்புறம் நீங்களும் வரனும் ஆன்ட்டி… அப்பா அம்மா உங்களையும் பார்க்கனும்னு சொன்னாங்க” என்றான்…அதற்குமேல் பேச வாய்ப்பில்லாமல் போகவும் “சரிப்பா” என்றுவிட்டு மகளுடன் தனது அறைக்குச் சென்றுவிட்டாள் பவானி… நண்பனின் அருகே வந்த ஆதி “எனக்குத் தெரிஞ்ச டாக்டர்க்கிட்ட ஒன்றரை மணிக்கு அப்பாய்ன்மெண்ட் வாங்கிருக்கேன் மச்சி… லஞ்ச் டைம் முடிஞ்சு அவரோட ரெஸ்ட் டைமை நமக்காக ஒதுக்கியிருக்கார்… எந்த காரணமும் சொல்லி தவிர்க்காம சீக்கிரம் கிளம்பியாகனும்” என்று ரகசியமாகக் கூறிவிட்டுச் சென்றான்…

See also  மான்சிக்காக - பாகம் 24 - மான்சி கதைகள்



சரியென்று தலையசைத்துவிட்டு மான்சி சென்ற அறையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தனது அறைக்குச் சென்று தயாராகினான்… சரியாக பணிரென்டரை மணிக்கு வீட்டிலிருந்துப் புறப்பட்டனர்….. ஆதி காரை செலுத்த அவனருகே சத்யன் அமர்ந்து கொண்டான்…. தாயும் மகளும் பின்னால் அமர்ந்திருந்தனர்…. மான்சியின் அழகை நிமிடநேரம் கூட விடாமல் ரசித்த சத்யனுக்கு ஏனோ அன்று திரும்பிப் பார்க்கவும் தோன்றவில்லை….

அவனது வித்தியாசம் பவானிக்கு உரைத்ததோ என்னவோ? கொஞ்சம் பதட்டமாகவே வந்தாள்…. கார் மருத்துவமனையின் வாயிலில் நின்றது…. அது மருத்துவமனை என்று புரிந்ததுமே ஏதோ விபரீதம் என்று எண்ணிய பவானி “என்ன தம்பி உங்க வீட்டுக்குன்னு சொல்லிட்டு ஆஸ்பிட்டலுக்கு வந்திருக்கீங்க?” என்று கலவரமாகக் கேட்டாள்… சத்யன் மவுனமாக காரை விட்டு இறங்கிவிட….

இறங்காமல் திரும்பிப் பார்த்த ஆதி “ம் ஆஸ்பிட்டல் தான் ஆன்ட்டி…. மான்சிக்கு சில டெஸ்ட்கள் எடுக்கனும்னு சத்யன் விரும்பினான் அதுக்குத்தான் ஆஸ்பிட்டல் வந்திருக்கோம்” என்றான் நிதானமாக… சங்கடமாகப் பார்த்து “என்ன டெஸ்ட்கள்?” என்று தவிப்புடன் கேட்க…. இதற்குமேல் மறைக்க ஒன்றுமில்லை என்று நினைத்த ஆதி ஒரு பெருமூச்சுடன்



“மான்சி அப்நார்மலா இருக்கிற மாதிரி சத்யனுக்குத் தோனுதாம்… அதுக்குத்தான் டாக்டரை பார்க்க வந்திருக்கோம்… நீ பயப்படும்படி ஒன்றுமில்லை ஆன்ட்டி” என்றான் தெளிவாக… பதட்டத்தில் துளிர்த்தக் கண்ணீருடன் “அப்நார்மலா?” என்றாள் பவானி…. “ஆமாம் ஆன்ட்டி…. அது உங்களுக்கும் தெரியும்னு எங்களுக்குத் தெரியும்…. இதுக்கு மேலும் மறைச்சு வச்சு பிரச்சனையை வளர்க்காம டாக்டரை பார்த்துடுறது நல்லது” என்று தீர்மானமாகக் கூறிவிட்டு காரை விட்டு இறங்கி பின்னால் வந்து கதவைத் திறந்துவிட்டான்….

கண்களில் தேங்கிய நீருடன் பவானி இறங்க அவளது கையைப் பற்றிக்கொண்டு வளர்ந்த குழந்தையாக இறங்கினாள் மான்சி…. சுற்றிலும் பார்த்துவிட்டு “எங்க வந்திருக்கோம் மம்மி?” என்று கேட்டாள்.பவானி மவுனமாக இருக்க…. அவர்களின் அருகே வந்த ஆதி “ஆஸ்பிட்டலுக்கு வந்திருக்கோம்னு சொல்லி அவங்களுக்குப் புரிய வைங்க ஆன்ட்டி” என்றான்… மருமகனைத் திரும்பிப் பார்த்தாள்… இரக்கமில்லாதவன் போல் கைகள் விரைக்க நின்றிருந்தான்….

கண்ணீரை முந்தானையால் துடைத்து விட்டு “இது ஆஸ்பத்திரி பாப்பா… உனக்குதான் பார்க்க வந்திருக்கோம்… டாக்டர் சொல்றபடி கேட்கனும்டா” என்று மகளுக்கு அறிவுருத்தினாள்..



சரியென்று வேகமாக தலையசைத்தாள் மான்சி… நால்வரும் மருத்துவமனையின் உள்ளே சென்று ஆதி அனுமதி வாங்கியிருந்த டாக்டர் செபாஸ்ட்டியன் MB BS, M.D (Psychiatry) என்ற போர்டு மாட்டப்பட்டிருந்த அறை வாயிலில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்தனர்… ஆதி மட்டும் எழுந்து சென்று ரிஷப்ஸன் பெண்ணிடம் பேசிவிட்டு வந்தான்… டாக்டர் சாப்பிட்டுவிட்டு வரும்வரை காத்திருந்த நேரத்தில் நால்வருக்கும் குளிர்பானம் வாங்கி வந்துக் கொடுத்தான் ஆதி…. சத்யன் இருந்த துயரத்தில் வேண்டாம் என்று மறுக்க….

See also  பொம்மலாட்டம் - பாகம் 13 - மான்சி தொடர் கதைகள்

“நடந்ததையும் நடக்கப் போறதையும் ஜீரணிக்க உடம்புக்கு இல்லைனாலும் மனசுக்குத் தெம்பு வேணும் மச்சி… அதுக்காகவாவது இதைக் குடிச்சிடு” என்று வற்புறுத்திக் குடிக்க வைத்தான்… சரியாக ஒன்றரை மணிக்கு வந்த டாக்டர் செபாஸ்ட்டியன் ஆதியைக் கண்டதும் நட்புடன் கை குலுக்கி “அப்பா எப்படியிருக்கார் ஆதி?” என்று விசாரித்தார்….

“நல்லா இருக்கார் சார்….” என்றான் ஆதி…. சத்யனைப் பார்த்து சினேகமாக தலையசைத்தவர் “என்னோட முதல் மெடிக்கல் புக்கும் ஸ்டெதஸ்கோப்பும் இவங்க அப்பா கொடுத்தது தான்….” என்றார் பெருமையாக….. அதன்பிறகு அவர் தனது அறைக்குச் சென்ற ஐந்தாவது நிமிடம் இவர்கள் அழைக்கப் பட்டனர்…..

திரும்பித் தாயும் மகளையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு டாக்டரின் அறைக்குள் நுழைந்தான் சத்யன்… மவுனமாக எழுந்த பவானி மகளின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு ஆதியைப் பின் தொடர்ந்தாள்…. பெரிய மேசைக்கு எதிரே கிடந்த குஷன் நாற்காலிகளில் நால்வரும் அமர்ந்தனர்….



அறையெங்கும் மனித மூளையின் விதவிதமான படங்கள் விளக்க வார்த்தைகளுடன் மாட்டப்பட்டிருந்தது… அறையின் ஒரு ஓரத்தில் சிறிய மேசையில் குழந்தை ஏசுவை கைகளில் ஏந்திய மேரிமாதாவின் சிலையும் எரியும் மெழுகுவர்த்திகளும் அவரது தெய்வ நம்பிக்கையை எடுத்துக் கூறியது…

error: read more !!
Enable Notifications OK No thanks