பொம்மலாட்டம் – பாகம் 04 – மான்சி கதைகள்

10431196_963148137046122_3134163773567541076_oஆதி அவசரமாக வந்து கைக்குட்டையால் சத்யனின் வாயைத் துடைத்து விட்டு ” வேணாம்டா …. நீ சிறுத்தைக்குட்டின்னு ஊருக்கே பெருமையடிச்சு வச்சிருக்கோம் … இப்புடி ஒழுக விட்டு சின்னப்புள்ளைத்தனமா நடந்து எங்க மானத்தைப் போக்கிடாத ராசா ” என்று குறும்புடன் கெஞ்சினான் …

கடுகடுவென்று அவனை முறைத்த சத்யன் ” என்கிட்ட அடிவாங்குறதுக்கு முன்னாடி சமயக்கட்டுப் பக்கமா ஓடிப் போயிடு ” என்றான் …. மேடைக்கு வந்த வாசுகி தம்பிக்கு மனைவியாகப் போகிறவளின் அழகைக் கண்டு வியந்து ” நல்லாருக்கியாடாம்மா ?” என்று கேட்க ….பதுமையாக நிமிர்ந்தவள் அவளைப் புதுமையாகப் பார்த்தாள் …. ” என்னடாம்மா அதுக்குள்ள மறந்துட்டயா? ” என்று வாசுகி சங்கடமாகக் கேட்க … மான்சியைக் குழப்பமாகப் பார்த்த சத்யன் ” என்னோட அக்கா மான்சி ?” என்று ஞாபகப்படுத்தினான் ….

இன்னும் அடையாளம் காணாப் பார்வையுடன் இருந்தவளின் முகத்தில் அந்த சிரிப்பு மட்டும் ஒட்ட வைத்ததுப் போல அப்படியே நிலைத்திருந்தது ….. எங்கிருந்தோ மேடைக்கு ஓடி வந்தாள் மான்சியின் அம்மா பவானி ….. விதவைப் பெண் … மான்சிக்கு சகோதரியோ என எண்ணும்படியானத் தோற்றம் ….பெரும் எதிர்ப்புகளை மீறி காதலித்தவனையே கணவனாக அடைந்தவள் ….

பணிரென்டு வருடங்களுக்கு முன்பு காவல்துறையில் பணிபுரிந்த கணவனை ஒரு கலவரத்திற்கு பலிக்கொடுத்தப் பிறகு கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து மகளை ஆளாக்கிய உத்தமி ….. மகளின் அருகே வந்து கையைப் பற்றி காதருகே குனிந்த பவானி ” என்னடா தங்கம்? அப்புடிப் பார்க்கிற? மாப்ளையோட அக்கா வாசுகி தான் இவங்க…. அதுக்குள்ள மறந்துட்டியா ? சரியானவ தான் நீ ” என்று மகளுக்கு ஞாபகப்படுத்திவிட்டு ” கல்யாணம்னதுமே இவளுக்கு ஒன்னுமே புரியலை ….அந்த டென்ஷன்ல மறந்துட்டா …. தப்பா எடுத்துக்காதீங்க ” என்று வாசுகியிடம் மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள் … பளிச்சென்ற சிரிப்புடன் பவானியின் கைகளைப் பிடித்துக் கொண்ட வாசுகி ” அய்யோ ஆன்ட்டி …. நான் எதுவும் தப்பா நினைக்கலை ….கல்யாணம் … புது பேமிலி … அப்படின்னாலே டென்ஷன் வரத்தானே செய்யும்? விடுங்க ஆன்ட்டி ” என்றாள் …

மகளின் அருகே அமர்ந்திருந்த சத்யனை சங்கடமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ….. ” வாசுகி …. அப்பா இல்லாம என் கைக்குள்ளயே வளர்ந்த பொண்ணு …. நானில்லாம ரொம்ப சிரமப்படுவா…. நானும் இங்கயே … அதோ அப்படி ஓரமா நிக்கட்டுமா ? ” என்று அனுமதிக் கேட்கும் முன் பவானியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது ….. ஆறுதலாகக் கைகளைப் பிடித்துக் கொண்ட வாசுகி

See also  ராட்ஷசி முலை - பாகம் 05” ஆன்ட்டி … ப்ளீஸ் … அழாதீங்க …. இங்கயே உங்க மகக் கூடயே இருங்க…. யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க …. என்ன சத்யா நான் சொல்றது சரி தானே?” என்று தம்பியைப் பார்க்க …. ” யெஸ் க்கா …. நீங்க இங்கயே இருங்க ஆன்ட்டி ” என்றான் சத்யனும் ….. இவர்களின் இத்தனை உரையாடலுக்கும் மான்சி தனது புன்னகை மாறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் …சத்யனுக்கு வியப்பாக இருந்தது …. கலங்கும் தாயைக் கண்டும் தளராத வைராக்கிய நெஞ்சமா?

அல்லது சபை நாகரீகம் கடைப்பிடிக்கிறாளா ? …… அவளுடன் ஒரு வார்த்தையாவது பேசவேண்டும் என்று நினைத்தது சந்தர்ப்பம் கிடைக்காமலேயேப் போய்விட… புகைப்படங்கள் எடுக்கப்பட்டது …. வீடியோ எடுப்பவனின் இஷ்டத்திற்கு இவர்களை தனது இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க அதுவும் கூட ஒரு சுக அனுபவம் தான் …. மான்சியின் தோளில் கைப் போட்டு அணைத்தவாறு …. அவள் சேரில் அமர்ந்திருக்க அவளின் தோளில் கையூன்றி குனிந்து நின்றுவாறு ….இருவரும் கைகோர்த்தபடி …. இப்படி ஏராளமான போஸ்களில் வீடியோவில் ரிக்கார்ட் ஆனது …. பக்கத்திலிருக்கும் அம்மா சொல்லுவதையெல்லாம் அப்படியே செய்தாள் …. சமயத்தில் சத்யன் கூறுவதையும் கேட்டுக் கொண்டாள் …. பாட்டுக் கச்சேரி முடியும் தருவாயில் இவர்கள் இருவரையும் மேடைக்கு அழைத்து பாடும் படிக் கூற …. சத்யன் தனக்கு பாடத் தெரியாது என்று மறுத்து விட …

மான்சியைப் பாடும்படி அனைவரும் வற்புறுத்தினர் …. சத்யனும் அருகில் நின்றவளின் விரல் பற்றி ” உனக்குப் பாட வருமா மான்சி ?” என்று கேட்க… மான்சி தனதுத் தாயின் முகம் பார்த்தாள் … அவசரமாக அருகே வந்த பவானி ” மான்சிம்மா … உனக்கு ரொம்பப் பிடிக்குமே அந்தப் பாட்டு?….. அதைப் பாடும்மா ” என்றதும் சரியென்று தலையசைத்தாள் …. மான்சியின் கையில் மைக் கொடுக்கப்பட்டதும் தனது தேன் குரலில் பாட ஆரம்பித்தாள் ….

ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல்..

உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்..

இலைகளில் காதல் கடிதம்
வந்து எழுதும் பூஞ்சோலை

இதழ்களில் மேனி முழுதும்
இளமை வரையும் ஓர் கவிதை

மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு…..

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது
உனது கிளையில் பூவாவேன்

முழுதும் உனக்கு மகிழ்ந்து
வேராவேன்

பூவிலே மெத்தைகள் தைத்து
கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் …..

ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல்..

உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்..நன்றி :-சத்யன் 

error: read more !!