மான்சிக்காக – பாகம் 56 – மான்சி கதைகள்

IMG-20160713-WA0018வீரேன் அப்படியே நின்று அவள் அழகை பிரமிப்புடன்ப் பார்த்தான்… மருத்துவ உடையில் பார்த்தது போல் அல்லாமல் இப்போது அடக்கமான அழகில் மிச்சமிருந்த அவன் மனதையும் தன்வசப்படுத்தினாள்… பேன் காற்றில் கூந்தல் பறந்து நெற்றியில் வழிந்தது..

மெதுவாக அருகில் போனவன் முதன்முதலாக அவள் பெயர் சொல்லி “ ருத்ரா” என்று காதலோடு அழைத்தான்… அவனது ஒரு அழைப்பில் உயிர்பெற்றது அந்த சிலை…அவள் அம்மா அப்பாவுக்குப் பிறகு யாருமே அவளை ருத்ரா அழைத்தது இல்லை… வீரேன் அந்த பெயர் சொல்லி அழைத்ததன் தீவிரம் அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்க்க பட்டென்று சேரில் இருந்து எழுந்து நின்றாள்… அவனின் காதல் பார்வையும்…இவளின் கண்ணீர் பார்வையும் ஒன்றொடொன்று மோதி பின்னிப்பிணைந்து விடுபட முடியாமல் அப்படியே செயலிழக்க… ஒலித்துக்கொண்டிருந்த சிடி ப்ளேயரில் அடுத்த பாடல் மாறியது……. இருவரின் மனமும் பாடலில் மெல்ல மயங்கியது வீரேன் அவள் கண்களையேப் பார்த்தபடி “ ருத்ரா உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்” முதன்முதலாக அவளை ஒருமையில் அழைத்து நெருக்கத்தை ஏற்ப்படுத்தினான் அவன் கூறியதும் அந்த சிலை தலைகுனிந்தது…

வீரேன் துணிச்சலாக அவளை நெருங்கினான்.. தலைகுனிந்து நின்றவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தினான் அவள் கண்களை தயக்கமின்றி சந்தித்து “ ருத்ரா என் வீட்டுல யாருடைய கோபமும் என்னை இவ்வளவு பாதிக்கலை.. ஆனா நீ என்னை புரிஞ்சுக்கிட்டு மன்னிக்கனும்னு என் மனசு தவியாத் தவிக்குது ருத்ரா… என்னால உன் புறக்கணிப்பை ஏத்துக்கவே முடியலை ருத்ரா… ப்ளீஸ் ஒரு வார்த்தையாவது என்கிட்ட பேசேன்?”

வீரேனின் குரல் அவளிடம் யாசித்தது… அவனின் நெருக்கத்தில் இருந்து விலகாமல் அப்படியே நின்றிருந்தாள் ஜோயல் … மவுனமாகவே “ ஏன் ருத்ரா? நான் உன் படிப்புக்கும் அந்தஸ்த்துக்கும் தகுதியில்லாதவன்னு நெனைக்கிறயா? அப்படியிருந்தா அதை இப்பவே வெளிப்படையா சொல்லிடு ருத்ரா? என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்கமுடியாது” என்று வீரேன் வேதனையுடன் கூறியதும் அதுவரை மவுனமாக நின்றிருந்த ஜோயல்…மவுனம் கலைந்து “ இல்லை வீரேந்தர்? நான் அதையெல்லாம் யோசிச்சது கூட கிடையாது?” என்றாள் அவளை விட்டு விலகிய வீரேன் சற்றுத் தள்ளியிருந்த ஜன்னல் அருகே போய் நின்று “ அப்போ நான் என் தங்கச்சிய வெட்டின காரணத்தால் தான் வெறுக்குறயா ருத்ரா? அதுக்காக நான் படும் வேதனை போதும்… நீ மேலும் பேசி என் மனசை ரணமாக்காதே… நான் கெளம்புறேன்” என்று வீரேன் வாசல் பக்கம் திரும்பிய அடுத்த விநாடி ..

“ வீரேந்தர் ” என்ற மென்மையான அழைப்புடன் அவனைப் பின்புறமாக அணைத்தாள் ஜோயல்… “ நான் இனிமேல் அதைப்பத்தி பேசமாட்டேன் வீரா… நீங்க படுற வேதனை எனக்குப் புரியுது.. என்னை விட்டுட்டு போகாதீங்க வீரேன் ” என அவன் முதுகில் தன் உதடுகள் உரச உரச ஜோயல் பேச… இதையெல்லாம் எதிர்பார்த்திராத வீரேன் திகைப்புடன் அப்படியே நின்றிருந்தான்….

See also  மான்சிக்காக - பாகம் 40 - மான்சி கதைகள்

ஜோயல் சற்று துணிச்சலாக தனதுஉதடுகளை குவித்து அவன் முதுகில் முத்தமிட… இப்போது வீரேன் என்ற சிலைக்கும் உயிர் வந்தது…பின்னால் கைவிட்டு அவளை முன்புறமாக இழுத்து தன் கை வளையத்தில் நிறுத்தி “ ருத்ரா இது கனவில்லையே?” என்று நம்பமுடியாது அதிசயமாக அவளைப் பார்த்து கேட்டான் ஜோயல் அவனை காதலாய்ப் பார்த்து“ கனவுதான்… கண்ணை மூடிக்கிட்டு ரசிங்க” என்றவள் அவனை அணைத்து நெஞ்சில் முத்தமிட… வீரேன் கண்களை மூடவில்லை முத்தமிட்ட அவள் முகத்தை நிமிர்த்தினான் அவள் கண்களைப் பார்த்தபடியே நெற்றியில் முத்தமிட்டான்…. அவன் உதடுகள் அவள் உதடுகளை நெருங்கியதும் பட்டென்று அவனை உதறி வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.. “ ஏய் ருத்ரா இரு?” என்றபடி அவள் பின்னால் போனான் வீரேன்…

கிச்சனுக்குள் ஓடிய ஜோயல் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சுவற்றின் பக்கமாக திரும்பி நின்றுகொண்டாள்.. அவளை நெருங்கி தன் பக்கமாக திருப்பிய வீரேன் “ இனனும் நீ என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லலை ருத்ரா?” என்று கேட்க… அவனின் ஏக்கம் புரிய “ மன்னிச்சிட்டேன்னு வாயால் சொன்னாதானா? அதான் என் செய்கையில புரியவச்சிட்டேனே? இதோபாருங்க வீரேன் மொதல்ல உஙக மேல பயங்கர கோபம் வந்தது தான்..

அந்த கோபம் மான்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள்ள அதிகமாகிக் கிட்டே இருந்துச்சு… ஆனா உங்க முகத்தைப் பார்த்தால் என் கோபம் என்கிடட நிக்கலை வீரேன்… நான் உங்களை பர்ஸ்ட் பார்த்தேனே? என் தங்கச்சி எப்படியிருக்கான்னு என் கையைப் பிடிச்சிக்கிட்டு அழுதீங்களே அந்த முகம் தான் என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.. அந்த முகத்தை ஒரு கொலைகாரனா மாத்திப் பார்க்கவே முடியலை வீரேன்…தினமும் டியூட்டி முடிச்சு வந்தா பகலெல்லாம் கதவை சாத்திக்கிட்டு தூங்குவேன்.. ஆனா இந்த ரெண்டு நாளா சுத்தமா தூங்கலை.. உங்க முகத்தை மனசுக்குள்ள கொண்டு வந்து இந்த மாதிரி பாட்டு கேட்டுகிட்டே கண்மூடி கிடப்பேன்… என் மனசுப்பூரா முதன்முதலா நல்லவனா பார்த்த உங்களை நிரப்பி வச்சுகிட்டு உங்களை வெறுக்க முடியலை என்னால வீரேன்” என்றவள் அதுக்குமேல பேச முடியாமல் கண்ணீருடன் அவன் நெஞ்சில் விழுந்தாள்..

வீரேனுக்கு இந்த உலகத்தில் உள்ள அழகானவை எல்லாவற்றையும் தனது நெஞ்சில் தாங்கிய உணர்வு… ஒருத்தியால் உதாசீனப்படுத்தப்பட்டு ரணமாய் கிடந்த அவன் இதயத்திற்கு ஜோயலின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மயிலிறகால் மருந்திட்டது.. இதுதான் காதல் என்று இப்போது புரிந்தது..

தன் நெஞ்சில் இருந்த அவளை இறுக்கி அணைத்த வீரேன் “ ருத்ரா இனிமேல் நான் யார்கிட்டயும் கோபப்படவே மாட்டேன்… நீ என்கூடவே இருந்தப் போதும் ருத்ரா” என்று அவன் சொன்னபோது அவன் குரலிலும் கண்ணீர்… இருவரும் அணைத்தபடி அமைதியாக இருந்தனர்..

See also  மனசுக்குள் நீ - பாகம் 13 - மான்சி தொடர் கதைகள்முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது ஜோயல் தான்… அவனிடமிருந்து விலகியவள் சமையல் மேடையை நெருங்கி கியாஸை பற்றவைத்து காபி போடுவதற்காக பாலை எடுத்து வைக்க… அவள் பின்னால் வந்து நெருக்கமாக நின்றபடி “ எப்பவுமே எனக்கு காபி தானா? சாப்பாடெல்லாம் கிடையாதா?” என்று உரிமையுடன் கேட்டான் …

Leave a Comment

error: read more !!