மான்சிக்காக – பாகம் 10 – மான்சி கதைகள்

panchayat-1கூட்டத்தில் பலத்த சலசலப்பு,, அதிலும் பெண்கள் மத்தியில் சலசலப்பு அதிகமாக இருந்தது.. அப்போது கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு இளம்பெண் பஞ்சாயத்து மேடையறுகே வந்தாள் “ இதோ பாருங்க பஞ்சாயத்துகாரவுலே,, இதுக்கு நாங்க யாரும் ஒத்துக்க மாட்டோம்,, அவங்க மகளை எங்கய்யாவுக்கு குடுத்தா குடுக்கட்டும் இல்லேன்னா பீரோவுல வச்சு பூட்டட்டும்..

ஆனா சின்னய்யா ஏன் ஊரைவிட்டு போகனும்னு சொல்றது நியாயமில்லை” என்று தன்னால் முடிந்தவரை உரத்த குரலில் சத்யனுக்கு சப்போர்ட்டாக பேசினாள்.. உடனே இன்னும் சில பெண்கள் அவள் சொன்னதையேத் திருப்பி சொன்னார்கள்.. சத்யன் தன்னருகில் நின்ற அந்த பெண்ணிடம் “ செல்வி உனக்கு என்ன தெரியும்,, நீ வீட்டுக்கு போ.. பெரியவங்க பேசுவாங்க” என்று மெல்லிய குரலில் அதட்டினான்..“ இல்லய்யா நான் போகமாட்டேன்,, எனக்கு எல்லாம் தெரியும்,, நாலு நாளா எங்கப்பாரு சோறு தண்ணி இல்லாம அழுவுறது எனக்குத்தான் தெரியும்.. கரும்பு லாரிக்கும் வக்கோலுக்கு நெருப்பு வச்சவுக கிட்ட நியாயத்தை எதிர்பார்க்க முடியாததுதான்.. ஆனா நா சொல்ல வந்ததை சொல்லாம போகமாட்டேன்” என்று பிடிவாதமாக செல்வி அங்கேயே நிற்க்க… சத்யன் ராமைய்யாவை பார்த்து

“ அண்ணே செல்விய கூட்டிட்டுப் போங்க” என்றான்.. “ இல்ல தம்பி எம் மக என்னதான் சொல்லுதுன்னு பார்க்கலாமே” என்று சத்யனிடம் சொன்னவர் மகளிடம் திரும்பி “ நீ பேசு தாயி ” என்றார்… பத்தொன்பது வயது செல்வி கூட்டத்தை ஒரு முறை பார்த்துவிட்டு “ உங்க எல்லாருக்கும் தெரியும்.. நானும் சின்னய்யாவோட மகளும் சின்னப்புள்ளைலேருந்து ஒன்னா வளர்ந்தோமுன்னு… நான் சிமி கூட எப்பவுமே அய்யா வீட்டுலதான் இருப்பேன்.. கெட்ட புத்தி உள்ளவரா இருந்தா என்னை ஒரு பார்வைகூட தப்பா பாத்தது இல்ல.. என்னையும் ஒரு மகளாதான் நெனைச்சு பேசுவாறு…அதுமட்டுமில்ல அய்யாவோட வயக்காட்டுல ஒருநாளைக்கு கிட்டத்தட்ட முப்பது நாப்பது பொம்பளைக வேலை செய்வோம்… என்னிக்குமே யாரையும் தவறா பார்த்ததும் கிடையாது பேசினதும் கிடையாது,, ஏன் முறைவுள்ளவுகல பார்த்து கூட கிண்டல் பண்ண மாட்டாரு, அப்புடியிருந்த மனுஷன் இப்படியொரு தப்பை பண்ணாருன்னா அதுக்கு தூண்டுகோளு யாருன்னு மொதல்ல தீர விசாரிங்க.. அதவுட்டுட்டு புள்ளைபூச்சிக்கெல்லாம் பயந்து எங்க அய்யாவை கைகட்டி நிக்க வச்சிட்டீகளே” என்று நீளமாய் பேசி நியாயத்தை கேட்டாள்..

செல்வி புள்ளைப் பூச்சி என்று தங்களைத்தான் சொல்றா என்று வீரேனுக்குப் புரிய “ ஏய் யாரைப்பார்த்து புள்ளைபூச்சின்னு சொல்ற… ஆளுக தராதரம் தெரியாம பேசாத” என்று கர்ஜிக்க.. அவனுக்குப் பின்னால் நின்ற தேவா செல்வியை எரித்துவிடுவது போல் முறைத்தான்..

See also  மனசுக்குள் நீ - பாகம் 29 - மான்சி தொடர் கதைகள்

“ யாருக்கு தராதரம் தெரியலை? உங்களுக்கா? எங்களுக்கா? அய்யாவோட அக்காள உங்க அப்பாரு கட்டலைன்னா நீங்களும் எங்கள மாதிரி அன்றாடம் கூலிக்கு ஊர் ஊரா ஓட வேண்டியதுதான்… ஏதோ அய்யா குடுத்த சொத்த வச்சு பணக்காரவுகளா ஆயிட்டீக.. ஆனா அந்த நன்றியை மறந்து எங்கய்யாவை பஞ்சாயத்துல நிறுத்துனீக பாருங்க இதை அந்த ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான்” என்று கொதிப்புடன் பேசினாள்செல்வி..அவள் வாதம் இளங்கன்று பயமறியாது என்பது போல் இருந்தது..சும்மாவே ஊரே அலறும் வாயாடி,, இன்று அவள் அய்யாவுக்கு ஒன்று என்றதும் கொதித்துப் போயிருந்தாள்,, “ சொத்து குடுத்தா எங்க தங்கச்சிய இந்தாளு என்ன பண்ணாலும் நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருக்கனுமா?” இது தேவனின் வாதம்.. “ சும்மா இருக்க வேனாம்… ஆனா உம்ம தங்கச்சி பண்ணதையெல்லாம் கேட்டுகிட்டு அதுக்கப்புறம் பேசுங்க புதுப் பணக்காரங்களே”

என்று தேவனைப் பார்த்து நக்கலாக மொழிந்தவள்.. பஞ்சாயத்து ஆட்கள் பக்கம் திரும்பி “ இங்க பாருங்கய்யா, இவுக தங்கச்சி ஊருக்கு வந்த இந்த பதினஞ்சு நாளுல, ஊருல உள்ள இளவட்டத்துக்கெல்லாம் உள்ளாற கலவரமாகி போச்சு,, ஏன்னா அவுக போட்டுருந்த துணிக அப்புடி, ” அதுலயும் நெதமும் வயக்காட்டுக்கு வந்து மாமா மாமான்னு கொஞ்சிக்கிட்டு அவரு முதுகுல கட்டி ஏறுறதும், கட்டி கட்டி பிடிச்சுக்குறதும்… மடியில படுத்துக்கறதும், சோறு சாப்பிடும்போது எனக்கும் ஊட்டிவிடு மாமான்னு சொல்லி உரசுறதும்,,

இது எல்லாத்தையும் இந்த ஊரே வேடிக்கைப் பார்த்துச்சுங்க… இப்படியெல்லாம் பண்ணிப்புட்டு எங்கய்யா அடக்கமா இருக்கனும்னா அவரு என்ன முற்றும் துறந்த முனிவரா? சாமியாரா இருக்குறவுனுகளே ராவானா மாமியார் வீட்டுக்குப் போய்ட்டு டிவி டிவியா நாறுரானுங்க… இதுல எங்க அய்யா இவுக தங்கச்சி ஆடுன கூத்தையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருந்தா அப்புறம் அவரு ஆம்பிளையே இல்லையே?, அதுவும் பத்தொன்பது வயசுலயே புள்ள பெத்தவராச்சே ”என்று செல்வி உண்மைகளை அசால்டாக வீசி வீசி எறிய அதில் முதலில் அடிபட்டது காருக்குள் இருந்த மான்சிதான்… செல்வி மீது உண்டான ஆத்திரத்தில் பற்களை கடித்தாள் “ தாய்மானாச்சேன்னு பாசத்துல அந்த மாதிரி பண்ணா அதை இப்படி பயண்படுத்துறதா? இது எந்த ஊரு நியாயம்டி ” மறுபடியும் தேவாதான் செல்வியிடம் மல்லுக்கு நின்றான் “ எதுய்யா நியாயம்… தாய்மாமன் கிட்ட அஞ்சு வயசுல கொஞ்சலாம்.. கட்டிபிடிக்கலாம்… முதுகுல ஏறி சவாரி பண்ணலாம்,,

ஏன் பத்து வயசுல கூட பண்ணலாம்,, ஆனா அதையே இருவது வயசுல பண்ணா எவன்தான் சும்மா இருப்பான், தாய்மாமன்னு எவனாவது பல்லு போன கெழவன் இருந்தா கூட உன் தங்கச்சிய தூக்கிகிட்டு எங்கயாவது மறைவா ஓடியிருப்பான்… ” சரி உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லுங்க?.. உங்க தங்கச்சி உங்க மேலயும் தான அம்புட்டு பாசமா இருக்கு? இன்னிக்கு வரைக்கும் உங்கப்பாரு கிட்டயோ இல்ல உங்ககிட்டயோ இந்த மாதிரி கட்டிப்பிடிச்சு, முதுகுல ஏறிகிட்டு சவாரி பண்ணறது… இந்த மாதிரியெல்லாம் நடந்துருக்கா?”

See also  மான்சிக்காக - பாகம் 02 - மான்சி கதைகள்

என்று செல்வி உரத்து கேட்க.. பதில் சொல்லமுடியாமல் விழித்தான் தேவா… அப்பாவாயிருந்தாலும் அண்ணனாயிருந்தாலும் ஒரு அடி தள்ளி நின்றுதான் பேசுவாள் மான்சி.. ஆனால் இந்தாளுக்கிட்ட மட்டும் ஏன்? “ என்ன பதில் சொல்ல முடியலையா?… அப்ப போங்க… வீட்டுக்குப் போய் உங்க தங்கச்சிய நாலு சாத்து சாத்துங்க… அதவுட்டு போட்டு எங்கய்யாவை ஊரைவிட்டு அனுப்பனும்னு நெனைச்சீங்க அவ்வளவுதான்… உன் தங்கச்சி ஊரே வேடிக்கைப் பார்க்க இல்லாத ஆட்டமெல்லாம் ஆடிப்புட்டு இன்னிக்கு அய்யோ போச்சே அம்மா போச்சேன்னு கத்துனா போனது வந்துடுமா?பொம்பளைன்னா இடத்துக்கு தகுந்தா மாதிரி அடக்க ஒடுக்கமா இருக்கனும், ஆனா உங்க வீட்டு பொண்ணுக்கு அதெல்லாம் தான் நீங்க கத்து குடுக்கவே இல்லையே? ” என்று மறுபடியும் நக்கலில் ஆரம்பித்து கேள்வியில் முடித்தாள் செல்வி… ஊரே அவள் பேச்சில் இருந்த நியாயத்தில் வாய் பிளக்க… வீரேன் மட்டும் அவள் கூறியதில் இருந்த நியாயத்தில் கொதித்துப் போய் முன்னால் வந்து

“ பொட்டச்சிய நியாயம் பேச விட்டுட்டு பொண்டுக பயலுக மாதிரி எல்லாரும் வேடிக்கைப் பார்க்குறீங்களா?…. ஏலேய் இந்த ஊர் பஞ்சாயத்தே எங்களுக்கு வேனாம்.. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்றவன்… “அப்பா எந்திரிங்க வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டு தனது காரை நோக்கி வேகமாக நடந்தான் ..

Leave a Comment

error: read more !!