” இது நிஜம்தானடா..?? பொய் இல்லையே.. ??”
” ச்ச.. எதெதுல பொய் சொல்வம்னு இல்லையா.. ?? இதெல்லாம் லைப்டி.. !!”
” ம்.. ம்ம்.. கேக்கவே ரொம்ப சந்தோசமாத்தான்டா இருக்கு.. !!”
கவி உண்மையாகவே மகிழ்ச்சியாக சிரித்தாள்.
அப்பறம்.. அவர்களுக்குள் ஓடிய மகிழ்ச்சி பிரவாகங்களை பகிர்ந்து கொணடனர். மனசு விட்டு நிறைய பேசிக் கொண்டனர்.. !! மதிய உணவை கவிதாயினி வீட்டில் முடித்துக் கொண்டு.. இருவரும் கிளம்பினர்..!! வெளியே வந்து ரோட்டில் கலந்ததும்.. பில்லியனில் உட்கார்ந்து கொண்டிருந்த புவி.. சசியின் காதருகே வாய் வைத்துக் கேட்டாள்.!!
” வீட்ல போய் என்ன பண்ண போறோம் அறுவு.. ??”
” ஏன்.. ??”
” சினிமா போலாமா.. ??”
” எங்காவது வெளில சுத்தனும் உனக்கு. . ??”
” ம்.. ம்ம்.. !! உன் பின்னால.. இப்படி கட்டிப்புடிச்சி உக்காந்துட்டு இந்த உலகத்தையே சுத்தி வரதுன்னாலும் சந்தோசம்தான் எனக்கு.. !!”
” ஆனா.. எனக்கு இப்ப இந்த உலகத்தை சுத்தி வர நேரம் இல்லை..!! நான் போய் தோட்டத்துக்கு போகனும்.. !! தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு.. !!”
” என்ன வேலை.. ??”
” ஏன் நீ செய்யப்போறியா.. ??”
” செஞ்சிட்டா போச்சு.. !! நம்ம தோட்டத்துல வேலை செய்றதுல எனக்கு எந்த இதும் இல்ல.. !! சரி.. சினிமா வேண்டாம்.. !! தோட்டத்துக்கு போலாம்.. !! நானும் வந்து ரொம்ப நாள் ஆச்சு.. !! இப்ப எப்படி இருக்குன்னு பாக்கனும். . !!”
” சினிமா வேண்டாமா அப்ப.. ??”
” ம்கூம்.. வேண்டாம்.. !!”
வண்டியை தோட்டத்துக்கு விரட்டினான் சசி. போகும் வழியில் கொஞ்சம் களைக்கொள்ளி மருந்துகளை வாங்கிக் கொண்டான்.. !!
” ஆமா.. இப்பவும் கொய்யா மரம் இருக்கா ??” சசியின் முதுகிக் மார்புகள் அழுந்தப் பதிந்திருந்த புவி கேட்டாள்.
” ம்.. ம்ம்.. !! இருக்கு.. !!”
” காய் இருக்கா.. ??”
” இருக்கும்.. !!”
” எவ்ளோ நாள் ஆச்சு.. நான் நம்ம தோட்டத்து கொய்யாக்காய் தின்னு.. ? எவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.. ?? என் பிரெண்ட்ஸ்க கூட அடிக்கடி சொல்லுவாளுக.. உங்க தோட்டத்து கொய்யாக் காய் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்னு.. !!”
தோட்டம்.. !! கேட் போட்டு.. அதில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. சாவியை எடுத்து புவியிடம் கொடுத்து பூட்டைத் திறக்கச் சொன்னான்.. !! கேட் திறந்த பின் உள்ளே போனார்கள்.. !!
ஆற்றின் ஓரமாக தோட்டம் இருப்பதால் வெயிலின் தாக்கம் துளியும் தெரியவில்லை. முன்பிருந்த ஓட்டுச் சாலையின் முன்பாக இப்போது புதிதாக ஒரு டெண்ட் போட்டிருந்தான் சசி. அந்த டெண்ட்டுக்குள் ஒரு கட்டில்.. தலையணை.. போர்வை எல்லாம் இருந்தது.. !!
” இங்க யார் படுப்பா.. ?? நீயா.. ??” எனக் கேட்டாள் புவி.
” ம்கூம்.. நான் இல்ல.. !! காவல்காரர்… !!”
” காவல்காரரா.. ??”
” ம்.. ம்ம்.. !! நைட்ல தோட்டத்துக்கு அவர்தான் காவல். நைட்ல மட்டும் இல்ல.. பகல்லயும்.. !!”
” எங்க அவரு.. ?? காணம்.. ??”
” வருவாரு.. !! அவருக்கும் பசிக்கும்ல.. ?? சாப்பிட போயிருப்பாரு.. !!”
வாங்கி வந்த களைக்கொள்ளி மருந்துகளை ஓட்டு வீட்டுக்குள் கொண்டு போய் வைத்தான். எல்லாவற்றையும் அவன் கூடவே இருந்து பார்த்தாள் புவி.. !!
வீட்டின் முன்பாக இருந்த நிலத்தில் வாழை மரங்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து நின்றிருந்தன. பச்சை பசேல் என இருந்த வாழை மரங்களைப் பார்க்கவே பரவசமாக இருந்தது புவிக்கு.. !! ஆற்றோரமாக இருந்த தென்னை மரங்கள் நல்ல உயரமாக வளர்ந்து நின்றிருந்தன.!! அதன் வரிசையில் இருந்த கொய்யா மரத்தைப் பார்த்ததும் சட்டென அவளுக்குள் ஆவல் பொங்கியது.. !!
” நான் கொய்யாக்காய் பொறிக்க போறேன்.. !!” எனச் சொல்லிவிட்டு.. உடனே அங்கே ஓடினாள்.. !!
சசிக்கு சின்னச் சின்ன வேலைகள் கொஞ்சம் இருந்தது. அவன் அவைகளைச் செய்து கொண்டிருந்த போதே.. காவலுக்கு இருக்கும் பெரியவர் வந்து விட.. களைக் கொள்ளி மருந்துகளை அடிக்கச் சொல்லி அவருக்கு சொல்லி விட்டு.. புவியிடம் போனான்..!!
கொய்யாக்காய் மரத்தடியில் நின்று.. ஒரு சின்ன குச்சியை தூக்கி தூக்கி மேலே வீசிக் கொண்டிருந்தாள் புவி. இதுவரை அவள் ஒரு காயைக் கூட பறிக்கவில்லை.. !!
” மரம்லாம் ரொம்ப ஹைட்ல இருக்குமா.. !! ஒண்ணு கூட பொறிக்க முடியல என்னால.. !! கல்லு வீசி பாத்தேன்.. குச்சி வீசிப் பாத்தேன்..!! அடிபடவே மாட்டேங்குது.. !! மேல ஏறி பொறிச்சு குடேன்.. ப்ளீஸ்.. !!”
முகத்தைக் குழந்தை போல வைத்துக் கொண்டு கொஞ்சலாகக் கேட்டாள் புவி..!! அவள் டிக்கியில் பொத்தென ஒரு தட்டு தட்டிவிட்டுச் சொன்னான்..!!
” மரத்துல ஏறி பொறிக்க வேண்டியதுதான.. ??”
” க்கும்.. மரம் ஏறத் தெரிஞ்சா.. உன்னைலாம் போயி நான் ஏன் கெஞ்சிட்டு இருக்க போறேன்.. ?? ஆமா இப்ப இதுல காய் பொறிக்கறதில்லயா.. ??”
” நான் அதிகமா கண்டுக்கறதில்ல..!! ஏதோ.. குமுதா பசங்களுக்கு மட்டும் கேட்டா பொறிச்சிட்டு போவேன்.. !! மத்ததெல்லாம் நம்ம காவல்கார பெரியவரோட பேரனுக வந்து புடுங்கித் திம்பாங்க.. !!”
மரத்தில் ஏறினான் சசி. பழங்கள் குறைவாகத்தான் இருந்தது. பெரியதாக இருந்த மொகக் காய்களில் நிறைய பறித்து.. கீழே போட்டான்.. !! அவன் பறித்துப் போட்டவைகளை எல்லாம் ஓடி ஓடி பொருக்கினாள் புவி..!! பழமாக இருந்ததை உடனடியாக கடித்து தின்றாள்.. !!
சசி பறித்துப் போட்ட கொய்யாக்காய்களை எல்லாம் குட்டு சேர்த்து எடுத்து.. தன் துப்பட்டாவில் மூட்டை கட்டிக் கொண்டாள்.. !! பெரியவரும் வந்து.. அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு.. மருந்தடிக்கப் போய் விட்டார்.. !!
” இவருக்கு சம்பளமா.. ??” பெரியவர் போனதும் கேட்டாள் புவி.
” அப்பறம்.. சும்மா யாராச்சும் இதெல்லாம் செய்வாங்களா.. ?? ஒரு வேளை உங்கப்பனா இருந்தா.. உனக்காக செய்யலாம்..!!” என்றான்.
ஆற்றில் அவ்வளவாக நீர் வரத்து இல்லை. அடுத்த படியாக.. ஆற்றில் குளிக்க ஆசைப் பட்ட புவி.. அவனையும் வம்பு செய்து ஆற்றோரமாக இழுத்துப் போனாள்..!! அவனது ஆலோசனை கேட்டு ஆற்றில் இறங்கியவள்.. கெண்டைக்கால் நனைய நின்றுகொண்டு.. தண்ணீரை வாரி சசிமேல் இறைத்தாள்.. !!
” வா.. அறுவு.. !! குளிக்கலாம் அறுவு.. !! எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு அறுவு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. !!”
எனக் கொஞ்சி சசியை அழைத்தாள் புவி …… !!!!!