மான்சிக்காக – பாகம் 37 – மான்சி கதைகள்

IMG-20160713-WA0022அன்று காலையில் கோபத்தோடு சாப்பிடாமல் ஆலைக்குப் போன வீரேனுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை…. ஆத்திரத்தோடு தரையை உதைத்துக் கொண்டு இரைதேடும் புலியாக நடைப்போட்டான்… கோபத்தில் கண்களில் செவ்வரி கோடுகள் விழுந்து அவன் முகத்தையே கொடூரமாக காட்டியது…..

நேற்று ஒரு வேளையாக மதுரை போனவனுக்கு அவனுடன் கல்லூரி படித்த நண்பன் ஒருவன் சொன்ன செய்தி பயங்கர குழப்பத்தை ஏற்ப்படுத்தியிருந்தது “ டேய் மச்சி உன் மாமா வந்து உன் தங்கச்சியை படிக்கிறதுக்காக வெளிநாடு அனுப்ப எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாருடா…



என் தம்பி வெளிநாடுல படிக்கிறது விஷயமா நான் ஆபிஸ் போயிருந்தப்ப உன் மாமா வந்திருந்தாருடா… அடுத்த வருஷம் அனுப்புற மாதிரி ரெடி பண்ணச் சொன்னாரு.” என அன்று சத்யன் பேசிக்கொண்டிருந்தை விளக்கமாக சொன்னான்… அவனை ஒரு வாறு பேசி சமாளித்து அனுப்பிவிட்டு.. அப்போ என் தங்கச்சி குழந்தை பெத்து தந்ததும் அதை வாங்கிகிட்டு அவளை வெளிநாட்டுக்கு அனுப்ப ப்ளான் பண்ணிருக்கான்…

இவனைப் போய் நல்லவன்னு நம்பி மான்சியை கல்யாணம் செய்து கொடுத்த அபபா அம்மா மீது பழியாகக் கோபம் வந்தது அன்று மனதில் ஏகப்பட்ட குழப்பத்தோடு அம்ருதா படிக்கும் கல்லூரி வாசலிலேயே காத்திருந்தான்… அம்ருதா,, மான்சியை பெண்கேட்ட மதுரை மில் முதலாளியின் தங்கை… தன் அப்பாவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைக்காக அவர்கள் வீட்டுக்குப் போனபோது தன் அழகால் வீரேனின் மனதை கொள்ளை கொண்டவள்…



பார்த்தவுடனெயே அவன் மனதை பறித்துக்கொண்டவள்… மான்சியை அந்த வீட்டில் கொடுத்துவிட்டு அம்ருதாவை வீரேனுக்கு மணமுடிக்க பேச்சு ஆரம்பித்ததும் வீரேன் அவளை காதலிக்கவே ஆரம்பித்துவிட்டான்… அடிக்கடி மதுரை சென்று அவள் கல்லூரி வாசலில் காத்திருந்து தன் காதலை வளர்த்தான்… அம்ருதாவும் வீட்டில் பேசி முடித்தவன் என்ற உரிமையில் அவனுடன் பழக ஆரம்பித்தாள்..

இன்நிலையில் சத்யன் மான்சியை பலாத்காரம் செய்து ஜெயிலுக்குப் போய் வந்து இறுதியில் வேறுவழியின்றி சத்யன் மான்சி இருவரின் திருமணமும் நடந்தேறியதில் வீரேனின் காதல்தான் பொசுங்கிப் போனது.. அம்ருதா அவனைப் பார்ப்பதை தவிர்தாள்… காரில் கல்லூரி வாசலில் இறங்கி.. அதே காரில் ஏறிச்சென்றாள்.. அம்ருதாவின் பாராமுகம் வீரேனை வேதனைக்குள்ளாக்கியது…



வாரம் இருமுறை வந்து கல்லூரி வாசலில் காத்திருந்தவனிடம் நேற்றுதான் முகம் கொடுத்து பேசினாள் அம்ருதா… ஆனால் அதற்கு அவள் பேசாமலேயே இருந்திருக்கலாமோ என்று எண்ணி எண்ணி வேதனைப்படும் படியாக பேசினாள் அம்ருதா “ இதோப் பாருங்க வீரேன் இனிமே என்னைப் பார்க்க வராதீங்க… எங்க வீட்டுல எனக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க…

அதனால நான் உங்களைப் பார்க்கிறது இதுவே கடைசி முறையா இருக்கும்” “ அப்போ இத்தனை நாளா உனக்காவே காத்திருக்கேனே… என்னோட கதி?” குமுறினான் வீரேன்… அவனை கோபமாக பார்த்த அம்ருதா “ உங்க தங்கச்சிக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் பண்றதுன்னு பேசினப்ப.. கூடவே உங்களுக்கும் எனக்கும் சம்மந்தம் பேசினாங்க… இப்போ அந்த கல்யாணம் நின்னு போச்சு..

See also  மனசுக்குள் நீ - பாகம் 37

அப்போ நமக்கு மட்டும் பண்ணி வைப்பாங்கன்னு எப்படி எதிர்பார்க்கிறீங்க.. அதுவுமில்லாம என் அண்ணனுக்கு கிடைக்காத வாழ்க்கை எனக்கும் வேனாம்… தயவுசெய்து உங்க ஊர்லயே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்க.. இனிமே என்னைப் பார்க்க வராதீங்க” என்று உறுதியாக சொல்லிவிட்டு அவள் காரில் ஏறி போய்விட…



வீரேன் ஸ்தம்பித்து போய் வெகுநேரம் அங்கேயே நின்றிருந்தான்,, அவன் காதல் மொட்டிலேயே கருக காரணமாயிருந்த சத்யன் மீது பயங்கர வன்மத்தோடு வீட்டுக்கு வந்தவனுக்கு எரிகின்ற தீயில் எண்ணை வார்ப்பது போல தர்மன் செல்வியை இவனுக்கு மணமுடிப்பது பற்றி பேசியதும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.. முடியாது என்று ஆத்திரத்தில் கத்தியவனை அடக்குவது போல் “ முடியாதுன்னு வெளிய போடா..

சொத்துல நயாபைசா தரமாட்டேன்.. செல்வியை கட்டுறதுன்னா வீட்டுல இரு இல்லேன்னா வெளியப் போ.. உன் மாமன் கிட்ட சொல்லி ராமைய்யாவைப் பார்த்து பேச சொல்லிட்டேன்.. எங்க முடிவுல எந்த மாற்றமும் இல்லை” என்று தீர்மானமாக தர்மன் சொல்லிவிட்டு போக… சத்யன் தன் மாமன் என்பதை மறந்து கொலைவெறி உண்டானது வீரேனுக்கு …



அதோடு ஆலைக்கு வந்தவன் காதில் விழுந்த “ சத்யன் மான்சி இருவருக்கும் ஒத்து போகவில்லை.. சத்யன் எந்த நேரமும் வயலின் தான் இருக்கிறான்.. இரவில் வெளியேப் படுகிறான்.. மான்சியுடன் சுமுகமான உறவில்லை “ என்ற செய்திகள் இன்னும் வெறியை தூண்டியது.. பற்றாக்குறைக்கு மான்சியை வெளிநாட்டுக்கு அனுப்பும் சத்யனின் திட்டம் அவன் பழி வெறிக்கு உரம் போட்டது என் வாழ்க்கையையும் கெடுத்து…

என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்தவனை தீர்த்துக்கட்டாம விடக்கூடாது என்ற வெறியோடு ஆலையில் இருந்து சத்யன் வீட்டுக்கு கிளம்பினான் வீரேன்… எல்லாம் ஒன்றாய் சேர்ந்து அவனை மிருகமாக்கியிருந்தது வரும் வழியில் ராமைய்யாவின் வீட்டு வாசலில் சத்யனின் பைக்கைப் பார்த்ததும்



“ ஓ சம்மந்தம் பேச வந்துருக்கான் போலருக்கு.. இங்கருந்து நீ முழுசா வீடு போகக்கூடாதுடா மாமா ” என்ற வன்மத்தோடு தனது பைக்கை நிறுத்தி இறங்கியவன் ராமைய்யாவின் வீட்டு வாசலில் நின்று “ டேய் எவன்டா வீட்டுக்குள்ள?…. வெளிய வாடா?” என்று உரக்க கூச்சலிட்டான் வீரேன்…

அப்போதுதான் மான்சிக்கு குங்குமம் கொடுப்பதற்காக பூஜையறைக்கு அழைத்து சென்றாள் செல்வியின் அம்மா… வீரேனின் குரலி கேட்டு வெளியே வந்த சத்யன் அவனை கோப முகத்தோடு பார்த்துவிட்டு.. ஏதோ பிரச்சனை பண்ணத்தான் வந்திருக்கான் என்று எண்ணி கொஞ்சம் சமாதானம் செய்யும் குரலில் “ என்ன வீரா இந்த பக்கம்” என்று கேட்க …

See also  பொம்மலாட்டம் - பாகம் 05 - மான்சி கதைகள்

“ ஏன்டா நீ என்ன பெரிய இவனா? என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்து.. இப்போ என் வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டயே? உன்னை அன்னிக்கே காலி பண்ணிருக்கனும்.. மாமனாச்சேன்னு விட்டேன் பாரு அதான் தப்பு..



இப்போ என் தலையில உன் வீட்டு வேலைக்காரியை கட்டி வச்சு என் வாழ்க்கையையும் நாசம் பண்ண பார்க்கிறயா? இதுக்கு மேல உன்னை விட்டு வச்சா நான் ஆம்பளையே இல்லடா?” என்று சத்யன் மீது பாய… சத்யன் அவனது ஆத்திரம் புரிந்து சட்டென்று அவனை பிடித்து தள்ளிவிட்டு ஒதுங்கினான்.. சத்யன் மீது பாய வந்த வீரேன் செல்வியின் அம்மா அமர்ந்திருந்த திண்ணையில் விழுந்தான்..

விழுந்து நிமிர்ந்தவன் கையில் செல்வியின் அம்மா விளக்குமாறு கிழிக்க பயன்படுத்திய அருவாள் முளைத்திருந்தது… “ உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்று மீண்டும் சத்யன் மீது பாய்ந்தான்… செல்வியின் அம்மா கொடுத்த குங்குமத்தை நெற்றி வகிட்டில் வைத்துக்கொண்டு…



இன்னொரு துளி குங்குமத்தை தனது தாலியில் வைத்துக்கொண்டிருந்த மான்சியின் காதில் “ உன்னை கொல்லாம விடமாட்டேன்டா” என்ற வீரேனின் உரத்த குரல் விழுந்தது … அடுத்த நிமிடம் “ அய்யோ என் மாமா” என்று அலறியபடி வெளியே ஓடி வந்தாள் மான்சி..

Leave a Comment

error: read more !!