மான்சிக்காக – பாகம் 27 – மான்சி கதைகள்

mamathaஅன்று மாலையே வீடு வந்த சத்யன் அறைக்குள் மான்சி இல்லாததால் அவளைத் தேடி தோட்டத்திற்கு வந்தான் .. தோட்டத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொட்டடியில் விளையாடிய கன்றுகுட்டியை பார்த்துக்கொண்டிருந்தாள்,,

அவளை நெருங்கிய சத்யன் “ மான்சி” என்று அழைத்தபடி அருகில் அமர்ந்து அவள் கையைப் பற்றி தன் நெஞ்சில் வைக்க… அவளோ கையை வெடுக்கென்று உதறி விடுவித்துக்கொண்டு “ என்ன இருக்கேனா செத்தேனான்னு பார்க்க வந்தியா? என்று கேட்க



சத்யன் துடித்துப் போனவனாய் “ என்னடா இப்படி பேசுற.. எனக்கு வேலை சரியா இருக்கு ,, நான் வர்ற நேரம் நீ தூங்கிப் போயிர்ற.. அதுக்கு நான் என்ன பண்றது?” என்று வருத்தமாக சொன்னதும் பட்டென்று எழுந்துகொண்ட மான்சி “ ம்ம் தூங்குற என் தலையில கல்லைத்தூக்கி போடுறதுதான? ” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.. போகும்முன் அவள் விழிகள் குளமாகியிருந்ததைப் பார்த்து சத்யனுக்கு வாழ்க்கையே வெறுத்தது..

கவலையோடு உள்ளே வந்தவனை எதிர்கொண்ட அம்மா “ ராசு அவளும் சின்னப்புள்ள தானப்ப.. நீயும் தோட்டம் தொறவுன்னு சுத்துற.. அவளை எங்கயாவது வெளிய கூட்டிட்டுப் போய்ட்டு வாய்யா? நாளைக்கு மதியம் சாப்பாட்டுக்கு பிறகு ரெண்டுபேரும் வீரபாண்டி கோயிலுக்கு போய்ட்டு வாங்க” என்று சொல்ல..

சத்யனுக்கும் கோயிலுக்கு போய்விட்டு வருவது நல்லது என்று தோன்றியது… “ சரிம்மா கூட்டிட்டுப் போறேன்” என்றான்..

மறுநாள் காலை மான்சி விழிக்கும் வரை காத்திருந்து விழித்ததும் “ மான்சி மதியம் ரெடியா இரு……. ரெண்டு பேரும் வீரபாண்டி கோயிலுக்குப் போகலாம்” என்று சொல்ல..



மான்சி அவ்வளவு காலையிலேயே உற்ச்சாகமானாள் “ கோயிலுக்கா? நாம ரெண்டுபேருமா? ரெடியா இருக்கேன் மாமா?” என்று கூவியவளை நெருங்கி கன்னத்தில் தட்டி “ ஆனா அழகா பட்டுச்சேலை கட்டிகிட்டு.. நகையெல்லாம் போட்டுகிட்டு ரெடியா இருக்கனும். சரியா?” என்றதும்..

மான்சியின் முகம் பட்டென்று சுருங்க “ அய்யய்யோ எனக்கு சேலையே கட்டத் தெரியாதே?” என்று உதட்டை பிதுக்கினாள்..

பிதுக்கிய உதட்டை இழுத்து சப்பலாமா என்று எழுந்த ஆவேசத்தை அடக்கிக் கொண்டு “ அம்மாச்சிய இல்லேன்னா செல்விய கட்டிவிட சொல்லு” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவே.. சத்யன் மறுபடியும் திரும்பிப் பார்க்க… இவ்வளவு நேரம் குளிர் நிலவாய் இருந்த மான்சியின் முகம் இப்போது நன் பகல் சூரியனாய் தகித்தது..

அவன் முகத்தை கூர்ந்து “ எனக்கு புருஷன் யாரு?” என்று மட்டும் தான் கேட்டாள்… அவசரமாய் அவளை நெருங்கிய சத்யன் “ இதுக்கு ஏன்டா இவ்வளவு கோபம்.. சரி நானே வந்து கட்டி விடுறேன் நீ குளிச்சிட்டு ரெடியா இரு” என்று சொல்லிவிட்டு வயலுக்குப் போனான்

See also  பொம்மலாட்டம் - பாகம் 06 - மான்சி கதைகள்



ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை, கரும்பு லோடுடன் வீரேனால் எரிக்கப்பட்ட லாரியின் இன்சூரன்ஸ் க்ளைம் செய்வது தொடர்பாக இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரிகள் விசாரனைக்காக வந்துவிட.. அவர்களுக்கு விபத்து நடந்த இடம் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் என அனைத்து தகவலையும் சொன்ன சத்யன்.. மேலே சென்ற மின் கம்பியில் உராய்ந்ததால் விபத்து நடந்துவிட்டது என்று சொன்னான், அவர்களுக்கு தேவையான தகவல்களை சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு சத்யன் ஸ்ஸ் யப்பா என்று வரப்பில் அமர்ந்தபோது அவனது செல் அழைத்தது..

எடுத்துப் பார்த்தான்.. தேவனின் நம்பர் ஆன் செய்து “ சொல்லு தேவா?” என்றதும்…

சின்னய்யா நானு செல்வி.. இவுக இப்பதான் நம்ம வீட்டுக்கு வந்தாக அதான் அவுககிட்ட போனை வாங்கி உங்களுக்கு பண்றேன்.. நீங்க உடனே வீட்டுக்கு வாங்க சின்னய்யா?” என்றவளின் குரலில் இருந்த பதட்டம் சத்யனை திகைக்க வைக்க..

“ என்னாச்சு செல்வி.. மான்சிக்கு ஏதுனா…………?” என்று முடிக்காமல் தவிப்புடன் கேட்க..



“ அய்யோ சின்னம்மா நல்லாதான் இருக்காங்க,, ஆனா நீங்க உடனே வாங்களேன் சின்னய்யா” என்று செல்வி சொன்னதும் “ சரி இரு வர்றேன்” என்றவன் உடனே தன் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினான்..

வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் பஞ்சவர்ணம் செல்வி மட்டுமல்லாது மொத்த வேலையாட்களும் வீட்டு வாசலில் நிற்க… சத்யன் பதட்டத்துடன் “ என்ன செல்வி என்னாச்சு?” என்றான்..

சங்கடமாக அவனைப் பார்த்த செல்வி “ அதுங்கய்யா…. நீங்க ரெண்டு மணிக்கு கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதால சின்னம்மா குளிச்சுட்டு தலைப் பின்னி பூ வச்சு, நகையெல்லாம் போட்டுகிட்டு, புடவை மட்டும் கட்டாம நீங்க வந்து கட்டி விடுவீங்கன்னு வெறும் பாவாடை ரவிக்கையோட ரூமூக்குள்ள உட்கார்ந்திருந்தாங்க… நீங்க வர லேட்டானதும் ரொம்ப கோபமாகி ரூமுக்குள்ள இருந்த எல்லாத்தையும் எடுத்து தாறுமாறா போட்டுட்டு கோவமா தோட்டத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க.. அவங்க மேலாக்கு இல்லாம வெறும் பாவாடை ரவிக்கையோட.. தோட்டத்துல சுத்தவும் வேலை செய்றவுக யாருமே வீட்டுக்குள்ள போகலை எல்லாருமே வெளிய உட்கார்ந்திருக்கோம்.. நான் சமாதானம் பண்ணப் போனா கையில கெடச்சத எடுத்து வீசுறாங்க. அதான் நானும் இங்கனயே வந்து உட்கார்ந்துட்டேன்” என்று செல்வி முடிக்கவும் ..



வீட்டின் சூழ்நிலை நொடியில் புரிந்தது.. தலைகுனிந்து அமர்ந்திருந்த வேலைக்காரர்களைப் பார்த்தான் சத்யன்.. ச்சே இவங்க முன்னாடி என் மானம் போச்சே? கோபத்தில் கொந்தளித்தான் சத்யன் … மனுஷனோட சூழ்நிலை புரியாம இவ்வளவு பிடிவாதமா? ச்சே என்ன பொண்ணு இவ? ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவன் நேராக தோட்டத்திற்கு சென்றான்,

error: read more !!
Enable Notifications OK No thanks