செக்ஸ் பற்றிய 12 மூடநம்பிக்கை | SEX TIPS

லேகிய சித்தர்களும், மூலம் பவுத்திர விற்பனை மருத்துவர்களும் பெரும்பாலும் குறிவைப்பது ஆண்களை தான். இயல்பாக இருக்கும் ஆண்குறியின் தன்மைகளையே நோயாக உருவம் செய்து மிரட்டுகின்றார்கள். இந்த தவறான விளம்பரங்களை படித்து பல முறை நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன்.

ஏனென்றால் நான் தேடல் மூலமே கலவி பற்றி அறிந்து கொண்டவன். எனக்கு தெரிந்த அளவுக்கே அவர்கள் கூறுவது எத்தனை பெரிய பொய் என தெரியும். படித்த மருத்துவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் என தெரியவில்லை. மூடநம்பிக்கைகள் – 90% மூட நம்பிக்கைகள் ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் மாத்ரூ.
1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டு விந்து 40 – 100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுயஇன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7. இரவில் உறங்கும் போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.
11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.



என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள். விளக்கங்கள்:

1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில்லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.
2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.
3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரட்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒரு முறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.
6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் என ஒத்துக்கொள்கின்றார் மாத்ரூ)
7. சுயஇன்பம் செய்து வெளியேற்றாவிட்டால் நடக்கும் இயற்கை நிகழ்வு இது. உங்கள் வீட்டில் மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணிர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கையே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.
9. இப்படியெல்லாம் கதைகள் தான் சொல்ல முடியும்.உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.
11. சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தனியலாம் என்கிறார் மாத்ரூ.
12. திருமணத்திற்கு முன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய்தாலும் போய்விடும் அல்லாவா. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். வடிவேலுவின் பாணியில் ரூம் போட்டு யோசிக்கராங்களோ என்று கேட்டால். ஆமாம் தொலைக்காட்சிகளில் அப்படிதான் சொல்லுகிறார்கள். உங்களுக்கு இக்கட்டுரை பயணுள்ளதாக இருந்திருக்கலாம், இல்லை அவசியமற்றதாய் இருந்திருக்கலாம். தேடி வரும் சிலருக்காக என்னால் முடிந்தது இதுதான்.

See also  புண்டைய நக்குவது எப்படி - Detailed explanation



Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks