வீட்டிற்கு சென்று கதவை தாளிடும் வரை கோபியின் மனசு படபடத்து கொண்டிருந்தது. அவன் குடியிருக்கும் வீட்டின் சொந்தகாரர் கீழ் வீட்டிலும், இவன் மேல் வீட்டிலும் குடியிருக்கிறான். பைக்கில் ஒரு பெண்ணோடு வந்து இறங்கி வீட்டிற்கு சென்று கதவை இவன் தாழிட்டு கொள்வதை அவர் பார்த்தாரானால் பெரும் களேபரமாய் இருக்கும்.