மனசுக்குள் நீ – பாகம் 52

“ சரி ஆபிஸ்க்கு நேரமாச்சுன்னு சொன்னீங்களே” என்று அவனிடமிருந்து விலகி அமர்ந்த மான்சி “ ஆனா உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் இருந்து தனிமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது நீங்க,, ஒத்துக்கலைனாலும் நீங்க ஒரு குடும்பத்துக்கு தலைவன்தான் சத்யா ” என்றவள் சட்டென்று கார் கதவை திறந்து இறங்கி கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாக தலையை உள்ளே நீட்டி….

“ இப்போ உங்களுக்கு ஓரளவுக்கு புரிஞ்சிருக்குமே இயற்கையான உணர்ச்சிகளுக்கு முன்னாடி மனிதன் கைவிலங்கிடப்பட்ட கைதி என்று, அவனால இயற்கை அழைத்துச்செல்லும் வழியில் தான் போகமுடியும், என்னோட புருஷன் தனக்கொரு நீதி எதிராளிக்கு ஒரு நீதி என்று தவறாக சிந்திக்கமாட்டார்னு நெனைக்கிறேன்” என்று முகம் நிறைந்த புன்னகையுடன் கூறினாள்சத்யனுக்கு திகைப்பாக இருந்தது, இவள் இப்போது என்ன சொல்ல வருகிறாள் என்று குழப்பத்துடன் “ மான்சி என்ன சொல்ற” என்று கேட்டான்

“ மனசுல எந்த குழப்பமும் இல்லாம நல்லா தெளிவா யோசிங்க மச்சான் எல்லாம் புரியும்,, நான் போறேன் உள்ள உங்க தங்கச்சிங்க என்னை தேடுவாங்க” என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டாள் மான்சி

சத்யன் சற்றுநேரம் அப்படியே இருந்தான், அதெப்படி இயற்கையான உணர்ச்சிக்கு முன்னாடி எல்லாரும் ஒன்னாகமுடியும்? மனுசனுக்கு கட்டுப்பாடு வேண்டாமா? என்று அவனே அவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டான்,

‘ இப்போ நீ கட்டுபாட்டோட இருந்தியா சத்யன், நேற்று இரவு மான்சி சுதாரிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்’ என்று அவன் மனம் அவனை திருப்பி கேள்வி கேட்டது, ‘’ம்ம் அதெப்படி மான்சி என் காதலி, இன்னும் சிலநாட்களில் மனைவியாகப் போகிறவள், என் அப்பாவின் கதை அப்படியில்லையே’ என்று சத்யன் தன் மனதுடன் எதிர்வாதம் செய்தான்

‘ உன் அப்பாவோட கதை அப்படியில்லை என்று உனக்கு தெரியுமா சத்யா’ என்று மனது பதில் வாதம் செய்தது,சத்யனுக்கு பொட்டில் அடித்தது போல் இருந்தது, மனம் குழம்பியது, “ அப்படின்னா என் அப்பாவும் அனிதாவின் அம்மாவும் காதலர்களா, அப்படின்னா என் அம்மா, அவங்க என் அப்பாவுக்கு யாரு வெறும் மனைவி மட்டுமா? காதலி இல்லையா?” என்று சத்யனின் மனது குழம்பியது

“ ச்சே குளிர்ச்சியா ஒரு முத்தத்தை குடுத்துட்டு நெஞ்சுல நெருப்பை மூட்டிட்டு போயிட்டாளே” என்று நெற்றியில் அறைந்து கொண்டு எரிச்சலுடன் காரை கிளப்பினான் சத்யன் ,

கிருபா தன் மகன் தன்னை அனுமதித்தை நம்பமுடியாமல் மறுபடியும் மறுபடியும் கேட்டார், ரஞ்சனா பூஜையறைக்குப் போய் வசந்தியின் புகைப்படத்துக்கு நேரே அமர்ந்து கண்ணில் நீர்மல்க கைகூப்பி “ இனி எல்லாம் நல்லதே நடக்கவேண்டும் என்று வேண்டினாள், பூஜையறையில் இருந்து வந்த ரஞ்சனாவை அணைத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டார் கிருபா
அடுத்த அரைமணிநேரத்தில் கிருபாவும் ரஞ்சனாவும் காரில் கிளம்பினர்,, மான்சி அனைவருடனும் ஊரில் போய் இறங்கியதும், காரில் வந்து இறங்கிய அந்த பட்டணத்து கூட்டத்தை அந்த பட்டிக்காட்டு ஊரே கூட்டமாக வேடிக்கை பார்த்தது,

See also  மான்சிக்காக - பாகம் 22 - மான்சி கதைகள்

இவர்களை என்னவென்று சொல்லி அறிமுகப் படுத்துவது என்ற குழப்பத்துடனேயே மான்சி தனது வீட்டுக்குள் நுழைந்தாள், ஆனால் அவள் சொல்லாமலேயே அனைவரும் வாசலுக்கு வந்து கிருபா குடும்பத்தினரை வரவேற்றனர், அவர்களுக்கு பின்னால் ஜெகன் நின்றிருந்தான், மான்சிக்கு புரிந்துபோனது, நன்றியுடன் தனது அண்ணணை பார்த்தாள்அது இரவானதால் எல்லோரும் முதலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு மொட்டைமாடியில் நிலவின் வெளிச்சத்தில், விரித்த ஜமுக்காளத்தில் அமர்ந்து கல்யாண பேச்சை ஆரம்பித்தனர், மான்சியின் சித்தப்பா சித்தி பாட்டி அண்ணன் என அனைவருமே கிருபாவின் வார்த்தைக்கு கட்டுப்பாட்டனர்

மான்சியை சத்யனுக்கு கொடுக்க எல்லோருக்கும் சம்மதமாகவே இருந்தது,, ஆனால் மான்சியின் தாய்மாமன் வீட்டு பிரச்சனையால் பயந்தனர், கிருபா நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன் நீங்க பயப்படாம கல்யாண ஏற்பாட்டை செய்யுங்க” என்று தைரியம் கூறினார்

ஆனால் மறுநாள் காலையே ஒரு வேனில் வந்து மான்சியின் மாமன் வீட்டினர் வந்து இறங்க அனைவரும் கொஞ்சம் கலங்கித்தான் போயினர், கார்த்திக் மட்டும் துணிச்சலாக அவர்களிடம் பேசினான் ,

அவர்களுக்கு மான்சியைவிட சொத்து மட்டுமே குறிக்கோளாக இருந்தது, கூட்டத்தை விலக்கி வந்த கிருபா “ எங்களுக்கு அந்த நிலம் வேண்டாம்பா,, அதுபோல பலநூறு மடங்கு சொத்து என் மருமகளுக்கு என்னால வாங்கித்தர முடியும், அதனால நீங்க நாளைக்கு பத்திரம் ரெடி பண்ணி எடுத்துக்கிட்டு வாங்க எழுதி ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துறோம், இல்ல எங்களுக்கு பொண்ணும் வேனும்னா நீங்க கம்பிதான் எண்ணனும், அவ மேஜர் அதனால அவ இஷ்டப்படி தான் அவ வாழ்க்கை அமையனும், நீங்க அவளை வற்புறுத்தினால் நான் போலீஸ்க்கு போகவேண்டியிருக்கும், ” என்று சமயோசிதமாக மிரட்டி பேசியதும் வந்த கூட்டம் தங்களுக்குள் பேசிவிட்டு சரியென்று கூறி கலைந்து சென்றனர்
வீட்டுக்குள் வந்த கிருபா “ உங்க யார்கிட்டயும் கேட்காம நான் நிலம் வேண்டாம்னு சொல்லிட்டேன், அதனால உங்களுக்கு எதுவும் வருத்தமில்லையே? ஏன்னா அந்த சொத்தில் ஜெகனுக்கும் உரிமையிருக்கு, அதனாலதான் கேட்கிறேன்” என்று கிருபா கேட்டார்“ அய்யோ அப்படியெல்லாம் எதுவுமில்லை சார் , எப்படியோ பிரச்சனை தீர்ந்தால் சரி, அதோட அதை மான்சிக்குத்தான் கொடுக்கனும்னு நான் முடிவு பண்ணிருந்தேன், எனக்கு எதுவும் வேண்டாம் சார்” என்று ஜெகன் சொல்ல அதையே மற்றவர்களும்சொன்னார்கள்

கார்த்திக் நடந்தவற்றை சத்யனுக்கு போன் செய்து கூறினான், கிருபா சாமர்த்தியமாக பேசியதை பெருமையாக கார்த்திக் கூற சத்யன் அமைதியாக கேட்டான், சத்யன் இறுதியாக “ சரி கார்த்திக் நாளைக்கு அவங்க வந்து எதுவும் பிரச்சனை பண்ணிட போறாங்க ஜாக்கிரதையா இருங்க” என்றவன் சிலவினாடிகள் அமைதிக்கு பிறகு “ அவர்கூடயே இரு கார்த்திக், ரொம்ப சத்தம் போட்டு பேசவிடாதே, கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டிக்க கார்த்திக் பிரம்மிப்பாக கையில் இருந்த போனையே பார்த்தான்

See also  ராட்ஷசி முலை - பாகம் 07

‘இதைத்தான் தானாடாவிட்டாலும் தன் சதையாடும்னு சொல்வாங்களோ’ என்று எண்ணியபடி வீட்டுக்குள் போய் அனிதாவிடம் சொல்ல அடுத்த நிமிடம் விஷயம் அனைவருக்கும் பரவியதுசத்யனின் இந்த சிறிய மாற்றம் அனைவரையும் இமயம் அளவுக்கு சந்தோஷப்படுத்தியது, ஆனால் மறுநாள் காலை கிருபா மான்சி வீட்டினருடன் பத்திரபதிவு அலுவலகத்திற்கு போனபோது அங்கே மான்சியின் தாய்மாமனும் வேறு ஒரு பெரியவரும் மட்டுமே வந்திருந்தனர்

Leave a Comment

error: read more !!