மனசுக்குள் நீ – பாகம் 40

அதன்பின் வீட்டுக்கு வந்த வசந்தியின் உடல்நிலை ரொம்ப மோசமாக கிருபா மனைவியை விட்டுவிட்டு இப்படி அப்படி நகராமல் அவளைத் தொட்டுக்கொண்டு தனது துக்கத்தை அடக்க முயன்றான்,,

” அய்யோ ரஞ்சனா இப்போ இருக்கும் நிலையில் நீங்க அவகூட இருக்கனும், ப்ளீஸ் போய்ட்டு வாங்க,, அனிதாவையே ஒரு அனாதை மாதிரி பெத்துக்கிட்டா,, இந்த குழந்தைகளுக்கும் அந்த நிலை வேண்டாம், அடிக்கடி போய் பார்த்துட்டு வாங்க” என்று வசந்திதான் வற்புறுத்தி அவனை அனுப்பி வைப்பாள்

ஆனால் அங்கே ரஞ்சனாவுக்கு இவன் நிலையை பார்த்ததும் கண்ணீர்தான் வரும்,, கொஞ்சம் கொஞ்சமாக வசந்தியின் நினைவுகள் தப்பி அவள் மரணத்தின் வாசலில் போய் நின்றாள்,, ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு அடுத்த மூச்சை இழுக்கமுடியாமல் அந்த வீட்டின் ஜோதி அனைந்து போனது,,

பிறகு வந்த நாட்களில் பல இரவுகளில் மனைவியை நினைத்து அழுதவன் ரஞ்சனாவை மறந்து அனிதாவை மறந்து வசந்தியோடு தானும் போய்விட எண்ணினான் கிருபா,, ஆனால் சிறுவயதில் தாயை பிரிந்து மிரண்ட பார்வையுடன் தன் கைகளை விடாமல் பற்றிக்கொண்டு படுத்திருந்த சத்யனை நினைத்து தனது முடிவை மாற்றினான்,,

நாட்கள் வரங்களாக தன்னை நம்பி வந்தவளை மறந்து இப்படி இருக்கிறோமே என்ற குற்றவுணர்வு உந்தி தள்ள தனது கர்ப்பிணி மனைவியையும் மகள் அனிதாவையும் வசந்தியின் வாக்குப்படி வீட்டுக்கு அழைத்து வந்தான்

எல்லோரிடமும் எனது இரண்டாவது மனைவி இவள்,, இது என் மகள் அனிதா என்று மட்டுமே சொன்னான், மற்றவைகளை சொன்னால் எங்கே அனிதாவை பற்றி சொல்ல நேரிடுமோ என்ற கவலையால் எல்லாவற்றையும் மறைத்தான்,

ஆனால் சிறு குழந்தை என்று நினைத்த சத்யனின் நடத்தையில் தெரிந்த மாற்றங்கள் கிருபாவை அதிர்ச்சியடைய செய்தது., போகப்போக சரியாகிவிடுவான் என்று எண்ணியது தவறாகப் போனது, சத்யன் தன் பாட்டியுடன் வீட்டைவிட்டு போனான் , இதோ நாலு தெரு தள்ளியிருக்கும் பங்களா தானே சரி இருக்கட்டும்,, பிறகு அழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணியதும் தவறானது

சத்யனோ பிடிவாதத்தின் உச்சத்தில் இருந்தான்,, யாருடைய சமாதானத்தையும் ஏற்க்க மறுத்தான்,, இரண்டொரு முறை வசந்திக்கு எல்லாம் தெரியும் என்று கிருபா சொன்னதை சத்யன் நம்ப மறுத்தான்,, சிறுவயது மகனிடம் அதற்க்குமேல் தன் நிலையை விளக்கிச் சொல்லமுடியாமல் சத்யனை அமிர்தமாளின் பாதுக்காப்பிலேயே விட்டுவிட்டான் கிருபா

நாளாக நாளாக சத்யனது வெறுப்புதான் அதிகமானதே தவிர குடும்பத்துடன் ஒன்றாக சேரவேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை,, படித்து முடித்துவிட்டு தனது அம்மாவின் மில் பொறுப்பை தனக்கு தருமாறு கேட்டபோதும் மறுக்காமல் மகனுக்கு கொடுத்து விட்டார் கிருபா,,

See also  நான் பத்தினியா | பகுதி 07 | Tamil cuckold Stories

கிருபாவுக்கு முதல் அட்டாக் ஐம்பத்தியொரு வயதில் வந்தபோது மகனை காண அவர் தவித்த தவிப்பை கண்டு குமுறிய ரஞ்சனா சத்யன் வீட்டுக்கு வந்து அப்பாவை வந்து பார்க்குமாறு கெஞ்சியும் சத்யன் அசையவில்லை,, ரஞ்சனாவை ஏறெடுத்தும் பார்க்காமல் கல்மரமாய் நின்றான்

ஆனால் ஒரு மகன் தோள்கொடுக்க வேண்டிய அந்த நேரத்தில் அவர்பெற்ற மூன்று மகள்களும் அவருக்கு துணையாய் நின்றனர்,,

அதிலும் இளையவள் அபிநயா ஆண்பிள்ளையாய் பிறக்கவேண்டியவள்,, கொஞ்சம் மீசையும் இன்னும் உயரமும் இருந்தால் பார்ப்பவர்கள் சத்யனா இது என்று குழம்பி போவார்கள்,, எப்போதும் பேன்ட் சர்ட் அணிந்து ஆணைப்போல நிமிர்ந்து தான் நடப்பாள், எந்த விஷயத்தையும் ரொம்ப தைரியமாக பேசுவாள்,, சத்யனின் செயலில் இருக்கும் நியாயத்தை கிருபாவின் முகத்துக்கு நேராக பேசுவாள்,, ஆனால் தாயையும் விட்டுக்கொடுக்க மாட்டாள்,, இப்போது பெங்களூரில் தங்கி ஏரோனாட்டிக்ஸ் படித்து வருகிறாள்

சத்யன் வரவிட்டாலும் எதாவதொரு இடத்தில் மகனை பார்த்துவிடுவாள் ரஞ்சனா,, அவனது கம்பீரத்தையும் தொழில் நடத்தும் பாங்கையும் ஒரு தாயாய் எண்ணி பூரிப்பாள்,, ஒருவேளை தனது கணவனை பார்த்துக்கொள்ளும்படி கையேந்திய வசந்தி மகனை பார்த்துக்கொள்ள சொல்லாமல் போனதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று ரஞ்சனா பலமுறை எண்ணியதுண்டு,, மகன் தங்களிடம் வரவேண்டும் என்று வேண்டாத தெய்வமில்லை, போகாத கோயிலில்லை,,

இவ்வளவு பெரிய பணக்காரனின் மனைவியா இருந்தாலும்,, அன்று கிருபா அவள் கழுத்தில் போட்ட தாலிச் செயினை தவிர வேறு எந்த நகையும் அணிவதில்லை,, உடைகள் கூட சாதரண கைத்தறி புடவைகள்தான் உடுத்துவாள்,, கிருபா எவ்வளவோ எடுத்துச்செல்லியும் அவள் தன்னை மாற்றிக்கொள்ள வில்லை,,

இவளுடைய இந்த நடத்தையே அமிர்தம்மாளிடம் நன்மதிப்பை பெற்றுதந்தது,, பாதியில் போகவேண்டியது தன் மகளின் விதி என்று புரிந்து கொண்டவள், ரஞ்சனாவை தன் இளைய மகளாகவே எண்ணினார்,, ரஞ்சனாவை பற்றி சத்யனிடம் அடிக்கடி சொல்லுவார் ஆனால் அவனோ கேட்காதது மாதிரி எழுந்து போய்விடுவான்,, எங்காவது ரஞ்சனாவை சந்திக்கும் போது சத்யனை பற்றிக் கூறி வருத்தப்படுவார்,, அதைக்கேட்டு கண்ணீர் விடுவதை தவிர ரஞ்சனாவுக்கு வேறு வழியிருக்காது

இவ்வளவு கதைகளையும் தனது வருங்கால மருமகளிடம் கூறிய ரஞ்சனா அவள் மூலமாவது தங்கள் குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறக்காதா, என்ற ஏக்கத்தோடு மான்சியின் முகத்தை பார்த்தாள்

மான்சி விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள், கடவுள் மனித உருவில் எங்காவது இருப்பார்கள் என்று அவள் அம்மா கேள்விப்பட்டு இருக்கிறாள், இதோ இந்த வீட்டில் ஒரு மனித தெய்வம் வாழ்ந்து மறைந்துவிட்டாலும் இன்னும் இரண்டு தெய்வங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்,,

See also  மனசுக்குள் நீ - பாகம் 50

கண்ணில் கண்ணீர் குளம்கட்ட மெல்ல சோபாவை விட்டு எழுந்தவள் அப்போதுதான் கட்டிலில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த கிருபாவை கண்டாள்,, அடுத்த நிமிடம் “ அங்கிள்” என்ற மெல்லிய கதறலுடன் ஓடிச்சென்று கிருபாவின் காலில் விழுந்தாள்

“ அய்யோ என்னடாம்மா இதெல்லாம்” என்று பதறிய கிருபா மான்சியின் தோள் பற்றி தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டார்

மான்சியின் குமுறல் ஓரளவு ஓய்ந்ததும் “ அங்கிள் நானும் உங்க மகளா இருக்கேன்,, இனிமேல் அனிதா மாதிரி நானும் உங்களை அப்பான்னு கூப்பிடுறேன்” என்று சிறு குழந்தையைப்போல் விசும்பியவளை தட்டி சமாதானம் செய்த கிருபா….

“ எப்பவுமே நீயும் என் மகள்தானம்மா,, ஆனால் எனக்கு விருப்பம் நீ என் மருமகளாகனும் என்பதுதான்,, அதனால நீ என்னை மாமான்னும் ரஞ்சனாவை அத்தைன்னு தான் கூப்பிடனும்” என்று செல்லமாய் கண்டித்தவர் அவளை அப்படியே நடத்திச்சென்று ரஞ்சனாவிடம் ஒப்படைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தார்

error: read more !!