மனசுக்குள் நீ – பாகம் 23 – மான்சி தொடர் கதைகள்

ஹாஸ்டலுக்குள் இருந்த டெலிபோன் பூத்தில் நுழைந்த தோழியின் வீட்டு நம்பரை டயல் செய்தாள்,, நான்கைந்து ரிங் போனபிறகு எடுத்தாள் அவளின் தோழி “ மங்கை நான் ரஞ்சனா குரு வீட்டுக்கு போனியா? அவரை பார்த்தியா?” என்று கேட்க

எந்த பதிலும் இல்லாமல் எதிர்முனையில் அமைதி நிலவியது,,
ரஞ்சனாவுக்குள் ஒரு பதட்டம் நிலவ “ என்னாச்சு மங்கை,, எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்றாள் ரஞ்சனா

ஊப்ஸ் என்ற பெருமூச்சுடன் “ ரஞ்சனா அவன் நல்லவன் இல்லை,, நீ நல்லா ஏமாந்துட்ட” என்றாள் மங்கை

“ என்னடி சொல்ற” என்று அதிர்ந்தாள் ரஞ்சனா



“ ஆமாம் ரஞ்சனா நான் அவன் ஊருக்குப் போனேன்,, அவனுக்கு மும்பைல நல்ல வேலை கிடைச்சு யாரோ ஒரு பணக்கார பொண்ணை மேரேஜ் பண்ணிகிட்டு மும்பைல செட்டில் ஆகிட்டானாம்” என்று மங்கை அடுத்த குண்டை வீசினாள்

“மங்கை? குரு என்கிட்ட சொல்லிட்டு போய் ரெண்டு மாசம் தானடி ஆச்சு,, அதுக்குள்ள எப்படி இவ்வளவு நடந்தது ” என்று ரஞ்சனா அதிர்ச்சியில் கூவ

“ இல்லை ரஞ்சனா அவன் மேரேஜ் அதுக்கு முன்னடியே ஏற்பாடு பண்ணினது,, அதாவது அவன் படிச்சு முடிச்சதுமே வேலைக்கும் திருமணத்திற்கும் அந்த பொண்ணோட வீட்டுல ஏற்பாடு பண்ணிருக்காங்க ரஞ்சனா,, அவங்க பிளான் படி எல்லாமே நடந்து முடிஞ்சிருச்சு,, நீ அவனை மறந்து தலைமுழுகிட்டு உன்னோட பிற்காலத்தில் கவனம் செலுத்து ரஞ்சனா அவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்” என்று மங்கை விரக்த்தியாக பேசினாள்

அடுத்து அவள் பேசியது எதுவுமே ரஞ்சனாவின் காதில் விழவில்லை,, அவளின் நினைவுகள் தப்ப,, கண்கள் இருள, அப்படியே மயங்கி சரிந்தாள், அவள் கையில் இருந்த ரிசீவர் அனாதையாக தொங்கியது



தூரத்தில் கேட்டருகே இருந்த ஹாஸ்டல் வாட்ச்மேன், இவள் கீழே விழுவதை கவனித்துவிட்டு பதட்டத்துடன் ஓடிவர,, இரவுநேர வாக்கிங் போய்கொண்டிருந்த சில பெண்களும் ஓடிவந்தனர்

சிறிதுநேரத்தில் தண்ணீர் தெளித்து ரஞ்சனாவின் மயக்கம் தெளிவிக்கப்பட்டது,, ஆஸ்பிட்டல் போகலாம் என்ற வார்டனிடம் , தனக்கு ஒன்றுமில்லை உடல் பலகீனம்தான் என்று கூறி சமாளித்துவிட்டு ஷீலாவின் உதவியுடன் தனது அறையில் வந்து படுத்துவிட்டாள்

அடுத்த இரண்டுநாட்கள் அறையைவிட்டு வெளியே வராமல் வேலைக்கும் போகாமல் கண்ணீரிலேயே கரைந்தாள் ரஞ்சனா,, ஷீலா வந்து என்னாச்சு என்று விசாரித்தபோது,, தனத அம்மாவின் ஞாபகம் வந்ததாக பொய் கூறினாள் ரஞ்சனா

இரண்டு நாள் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவளாய்,, மாலை நான்குமணிக்கு தனது உடைமைகளை பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்,,

See also  மான்சிக்காக - பாகம் 58 - மான்சி கதைகள்

தங்கியிருக்கும் எல்லாப் பெண்களும் வேலைக்கு சென்றிருக்க,, வார்டன் அறைக்கு போய் தனது பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு இருப்பதால் தான் பாட்டியுடன் தங்கப்போவதாகவும், அறையை காலி செய்வதாகவும் கூறினாள்,, முன்னறிவிப்பு இன்றி அறையை காலி செய்வதால் அட்வான்ஸாக கொடுத்த தொகையை திருப்பி தரமுடியாது என்று வார்டன் ரூல்ஸ் பேச….

“ நான் போற ஊருக்கு பணம் தேவைப்படாது மேடம், அதனால நீங்களே வச்சுக்கங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்

அன்று மாலை வேலையில் இருந்து சீக்கிரமாகவே வந்தாள் ஷீலா,, ரஞ்சனாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு பர்மிஷன் போட்டுவிட்டு நாலுமணிக்கே வந்துவிட்டாள்,,

ரஞ்சனாவைத் தேடி அவள் அறைக்கு போனாள், அறைக்கதவு பூட்டியிருந்ததை பார்த்து திகைப்புடன் வார்டனை தேடிவந்து கேட்டபோது , ரஞ்சனா அறையை காலிசெய்து விட்டு போய்விட்டதாக கூறினார்கள்,,

தன்னிடம் கூட சொல்லாமல் எங்கே போனாள் என்று எண்ணி திகைத்துப்போன ஷீலா அவசரமாக மில்லுக்கு கிருபாவின் போனுக்கு கால் செய்து ரஞ்சனா ஊருக்கு போவதாக சொல்லி அறையை காலி செய்துகொண்டு போய்விட்டதாக தகவல் சொன்னாள்

கிருபாவுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது,, அவள் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் ஆயிற்றே,, அவளுக்கு ஏது பாட்டி என்று நினைத்தபடி மேலும் அவளைப்பற்றி ஷீலாவிடம் விசாரித்தான்



டெலிபோன் பூத்தில் மயங்கி விழுந்தது,, இரண்டு நாட்களாக ரஞ்சனாவின் சோர்வு,, அழுதது அழுதபடியே இருந்தது, இறுதியாக அறையை காலிசெய்யும் போது வார்டனிடம் ரஞ்சனா கூறிய வார்த்தைகள் என எல்லாவற்றையும் தெளிவாக ஷீலா கூறினாள்

ஒன்றோடு ஒன்று முடிச்சிட்டு பார்க்கும் போது ஏதோ விபரீதமாக நடக்க போவதை உணர்ந்த கிருபா பரபரப்புடன் “ ஷீலா ரஞ்சனா போய் கொஞ்ச நேரம் தானே ஆச்சு,, பக்கத்தில் இருக்குற ஆட்டோ ஸ்டான்ட்ல போய் விசாரிச்சு பாருங்க,, ஏதாவது தகவல் தெரிஞ்சா உடனே எனக்கு கால் பண்ணுங்க,, நிச்சயமா அவங்க ஏதாவது ஆட்டிவில்தான் போயிருக்கனும்,, எங்க போனாங்கன்னு கண்டு பிடிச்சுடலாம்” என்று கிருபா கூறியதும்..

“ ஓகே சார் இதோ உடனே போய் விசாரிக்கிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள் ஷீலா

பக்கத்தில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ரஞ்சனாவின் அடையாளத்தை சொல்லி விசாரித்த போது ஒரு டிரைவர் முன்வந்து இப்போதுதான் பஸ்ஸ்டாண்டில் இறக்கிவிட்டு வருவதாகக் கூறினான்

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மறுபடியும் ஓடிவந்து கிருபாவுக்கு போன் செய்து கிடைத்த தகவலை சொன்னாள்

“ ஓகே ஷீலா நான் போய் பார்க்கிறேன்,, நீங்க கவலைப்படாதீங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்த கிருபா அடுத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தனது காரை எடுத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்ட் நோக்கி விரைந்தான்,, அவளுக்கு ஏதும் நடப்பதற்கு முன்பு தடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே கிருபாவின் மனதில் மேலோங்கி இருந்தது

See also  பொம்மலாட்டம் - பாகம் 07 - மான்சி தொடர் கதைகள்

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு பஸ்ஸ்டாண்டுக்குள் நுழைந்தவன் அங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான பஸ்ஸில் அவளை எப்படி தேடுவது என்று குழம்பி போனான்,, பல ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது



அப்போதுதான் அவனுக்கு சட்டென்று அந்த யோசனை வந்தது,, பஸ்கள் அனைத்தும் ஸ்டாண்டில் இருந்து மெயின்ரோட்டுக்கு திரும்பும் இடத்தில் பெரிய பள்ளம் இருந்ததால் அந்த இடத்தில் மட்டும் பஸ்கள் அனைத்தும் மிக நிதானமாக சென்றன,, அது மட்டுமில்லாமல் அந்த திருப்பத்தில் நிறுத்திவிட்டு காலியான சீட்டுக்கு டிக்கெட்டை ஏத்துவதற்காக சிறிதுநேரம் கத்திக்கொண்டு இருந்தனர்

பஸ்ஸ்டாண்ட் உள்ளேபோய் தேடுவதைவிட இங்கேயே நின்றால் வெளியே போகும் பஸ்ஸில் எளிதாக ரஞ்சனாவை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து அவனை கடந்து செல்லும் பஸ்கள் ஒவ்வொன்றாக பார்த்தான்
சரியாக ஏழாவது பஸ்ஸில் ரஞ்சனா ஜன்னலோர சீட்டில் கண்மூடி சாய்ந்திருந்தாள்,, அந்த பஸ் ஊட்டிக்கு போவதாக போர்டில் எழுதியிருந்தது,, கிருபா தாமதிக்காமல் பஸ்ஸில் தாவி ஏறினான்

நேராக ரஞ்சனாவின் பக்கத்து இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவனை கண்திறந்து பார்த்தாள் ரஞ்சனா,, அவள் முகத்தில் தெரிந்த அளவிடமுடியாத அதிர்ச்சியை பார்த்தபடி “ என்ன ரஞ்சனா உங்க பாட்டி ஊட்டியிலயா இருக்காங்க? நீங்க இதை என்கிட்ட சொல்லவே இல்லை” என்று நக்கலாக கேட்டான்

கிருபாவுக்கு பதில்சொல்ல முடியாமல் தவித்து வந்த அழுகையை உதட்டை கடித்து அடக்க பார்த்தாள்,, ஆனாலும் கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது
அவளது கண்ணீர் கிருபாவின் மனதை வருத்த “ ஸ் இது பஸ் கண்ணை துடைங்க ரஞ்சனா,, எப்படி இறங்கி காரில் போய் பேசுவோமா?,, அல்லது நானும் இதே பஸ்ஸில் உங்ககூடவே ஊட்டிக்கு வரனுமா?” என்று கேட்டான்

கன்னத்தில் வழிந்த கண்ணீரை கையால் வழித்து துடைத்தபடி “ என்னை விடுங்க சார் நான் போயிர்றேன்” என்றாள் ரஞ்சனா



“ உங்களை இப்படியே விட்டுட்டு போறதுக்கா நான் இவ்வளவு தூரம் ரேஸில் வர்ற மாதிரி வந்தேன்,, ஆனாலும் இந்த பஸ்ஸை நிறுத்திட்டு என்னால உங்களை கூட்டிட்டு போகமுடியாதுன்னா நெனைக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டு அவளை கேள்வியாகப் பார்த்தான் கிருபா

அதற்க்குள் பேருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம்வரை பயனித்து இருந்தது,, ரஞ்சனா கிருபாவை சிலவினாடிகள் பார்த்துவிட்டு மெதுவாக எழுந்து தலைக்கு மேலே இருந்த தனது பெட்டியை எடுக்க முயன்றாள்

கூடவே எழுந்த கிருபா “ அடுத்த ஸ்டாப்பில் பஸ் நிக்கும்,, நீங்க இறங்குங்க நான் பெட்டியை எடுத்துகிட்டு வர்றேன்” என்று கூறி அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான்

See also  மனசுக்குள் நீ - பாகம் 33 - மான்சி தொடர் கதைகள்

கிருபா பெட்டியை எடுத்துக்கொள்ள,, இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி மறுபடியும் பஸ்ஸ்டாண்ட் வந்தனர்,, கிருபா ரஞ்சனாவை அழைத்துக்கொண்டு காரில் ஏறி கிளம்பினான்

போக்குவரத்து நெரிசலைவிட்டு சற்று தள்ளி வந்ததும் காரை ஒரு ஒதுக்குப்புறமாக வந்து ஒரு கடையறுகே காரை ஓரங்கட்டி நிறுத்தினான்,, காரில் இருந்தபடியே கடையில் இருந்த பையனை அழைத்து இருபது ரூபாயை கொடுத்து ஒரு மாம்பழச்சாறு வாங்கிவரச் சொன்னான்

பையன் கொண்டு வந்து கொடுத்ததும் வாங்கி உள்ளே வைத்துவிட்டு மறுபடியும் காரை கிளப்பிக்கொண்டு போய் சற்றுத்தள்ளி ஒரு மரநிழலில் நிறுத்தினான்,, பழச்சாறு புட்டியை எடுத்து மூடியை கழட்டிவிட்டு ரஞ்சனாவிடம் கொடுத்தான்
அவளும் மறுக்காமல் வாங்கி மடமடவென்று குடித்தாள்,, அவளுக்கு அந்த பழச்சாறில் இரண்டு பசி அடங்காதுதான், ஆனால் சற்று தெளிவு உண்டானது போல் இருந்தது



அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த கிருபா “ இப்போ பரவாயில்லையா? சரி சொல்லுங்க எதுக்காக ஊட்டிக்கு கிளம்பினீங்க? தொட்டபெட்டாவுல இருந்து குதிச்சு உயிரை விடவா?” என்று நேரடியாக அவன் விஷயத்துக்கு வந்தான்

Leave a Comment

error: read more !!