மனசுக்குள் நீ – பாகம் 32 – மான்சி தொடர் கதைகள்

வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் வசந்தியிடம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டவனை பார்த்து குழப்பமில்லாத மனதோடு வசந்தி கேட்டாள் “ ரஞ்சனாவையும் குழந்தையையும் நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திறீங்களா?” என்று..
சட்டையை கழட்டிவிட்டு டீசர்ட்க்குள் தலையை நுழைத்தவன்,, திகைத்துப்போய் மனைவியை ஏறிட்டான் “ என்ன வசந்தி சொல்ற,, ஏன் ரஞ்சனாவை இங்கே கூட்டி வரனும்,, புரிஞ்சுதான் பேசுறியா வசந்தி” என்றவனை பலகீனமாக கையசைத்து அருகில் அழைத்தாள் வசந்தி 

அவள் அழைத்ததும் அருகே வந்து சரிந்த அமர்ந்த கிருபாவின் கையை பற்றிய வசந்தி “ புரிஞ்சுதாங்க சொல்றேன்,, ரஞ்சனாவையும் குழந்தையையும் இங்க கூட்டி வந்துடுங்க,, எனக்கு தங்கைச்சியா,, உங்களுக்கு மனைவியா,, கூட்டிட்டு வாங்க” என்று தீர்மானமாக கூறினாள்அவள் கூறியதை கேட்டதும் அதிர்ந்து போனான் கிருபா,, தனது முகம் தன் மனதை வசந்திக்கு காட்டிக்கொடுத்து விட்டதோ என்று கலங்கிப்போனான் அவசரமாக தலையசைத்து “ அதெல்லாம் வேண்டாம் வசந்தி,, அவங்க அங்கேயே இருக்கட்டும்” என்றான் பதட்டத்துடன்

நலிந்த விரல்களால் அவன் வாயை பொத்திய வசந்தி “ எதுவும் சொல்லாதீங்க,, எனக்கு உங்க மனசு ஓரளவுக்கு புரியும்ங்க,, நான் இதை வருத்ததோடு சொல்லலை முழு மனசோடு தான் சொல்றேன்,, நானோ ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கிட்டு இருக்கேன்,, எனக்கு பிறகு உங்களை கவனிச்சுக்க ஒருத்தி வேனும்ங்க,, அது ரஞ்சனாவா இருந்தா எனக்கு சந்தோஷம் தான்,, சத்யன் வளர்ந்துட்டான் அவனை பற்றிய கவலை எனக்கு இல்லை எங்கம்மா அவனை பார்த்துக்குவாங்க,, ஆனா நீங்க?, இந்த எட்டு மாசமா நைட்ல நீங்க எவ்வளவுதான் கட்டுபாட்டோடு இருந்தாலும் உங்களோட ஏக்கங்களை பக்கத்தில் இருந்து பார்க்கிற எனக்கு எப்படியிருக்கும்,, சும்மா என்னை தொட்டுக்கிட்டு படுத்துக்கிறதே சுகம்னு நீங்க நெனைக்கலாம்,, ஆனா உங்களை அப்படியே விட நான் ஒன்னும் சுயநல பிடிச்சவள் இல்லைங்க,,

உடலின் தாபங்களை அடக்கிக்கொள்ளும் வயசில்லை உங்களுக்கு,, அப்படி அடக்கி வைச்சுக்கவும் நான் உங்களை பழக்கவில்லை,, எனக்கே இந்த அறையும் இந்த மருந்து வாசனையும் சுத்தமா பிடிக்கலை,, ஆனா நீங்க இத்தனை நாளா இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு என்கூடவே இருக்கிறது உங்களுக்கு வேனா பெருந்தன்மையா இருக்கலாம்,, என்னால இதையெல்லாம் சகிச்சுக்க முடியலைங்க,, எனக்காகவே நீங்க இருக்கனும்னு ஒருபோதும் நான் நினைக்கமாட்டேன்,, அத்தோட இப்பல்லாம் உங்க மனசுல ரஞ்சனாவும் அனிதாவும் இடம் புடிச்சுட்டாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது,, நீங்க யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படாமல் ரஞ்சனாவையும் குழந்தையும் இங்கே கூட்டிவாங்க” என்று வசந்தி மூச்சுத் திணறத் திணற வேகமாக ஆனால் தெளிவாக பேசி முடிக்க..கிருபா விக்கித்துப்போய் அமர்ந்திருந்தான்,, வசந்திக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை,, அவளின் அன்பை நினைத்து கண்களில் கண்ணீர் குளம்கட்டியது,, ரஞ்சனா பற்றிய நினைவுகளால் வசந்திக்கு துரோகம் செய்துவிட்டது போல் உணர்ந்தான்,, மென்மையாக வசந்தியை இழுத்து தன்மீது போட்டுக்கொண்டவன் “ வேனாம் வசந்தி இப்போ எதை பத்தியும் பேசாதே,, பேசி உன்னோட பிரிவை உறுதிபடுத்தாதே,, நீ இருக்கும் வரை நான் உன்னை விட்டு விலகமாட்டேன்,, இதே அறையில் உன்னுடன்தான் இருப்பேன்,, வசந்தி நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்று கூறிவிட்டு அவளை அணைத்தபடியே படுத்துக்கொண்டான்

See also  பொம்மலாட்டம் - பாகம் 01 - மான்சி கதைகள்

வசந்தியிடம் அப்படி சொன்னாலும் அதன்பிறகு அவனால் ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்காமல் இருக்கமுடியவில்லை,, அவன் பார்த்துவிட்டு வரும் சமயங்களில், வசந்தி அவர்களை பற்றியே பேசி அவன் மனதில் அவர்களை பதியவைக்க முயன்றாள்,, சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரஞ்சனாவை பற்றி கேட்பாள்,, வசந்தியின் பார்வையை தவிர்த்தபடி அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வான்

அவனை எது தடுக்கிறது என்று வசந்தி யோசித்ததில் கண்டுபிடித்தது,, இத்தனை வருடம் அவர்கள் நடத்திய நிறைவான தாம்பத்தியம் தான் கிருபாவை இன்னும் ரஞ்சனா அருகில் நெருங்க விடாமல் தடுத்தது,, இது தானாக சரியாக வேண்டும் என்று நினைத்தாள் வசந்தி,, தன் புருஷனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுப்பது மனதுக்கு கடைமையான வலியை கொடுத்தாலும்,, கிருபாவின் கலப்படமற்ற அன்புக்கு ஈடாக இதை செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தாள்இப்போதெல்லாம் கிருபா தோட்டத்து வீட்டுக்கு சென்றால்,, ரஞ்சனாவிடம் அனிதாவின் எதிர்காலம் பற்றி நிறைய பேசினான், நடக்க ஆரம்பித்த குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு மணிக்கணக்காக கொஞ்சினான்,, சின்னச்சின்ன தொடுகைகள் மூலமாக தன் மனதை ரஞ்சனாவுக்கு சொல்ல முற்ப்பட்டான்,, தலை குளித்து வரும் ரஞ்சனாவின் ஈரக்கூந்தலில் கைவிட்டு “ இன்னும் ஈரம் காயலை, நல்லா தொடைக்க வேண்டியதுதானே” என்ற சின்னச்சின்ன வார்த்தைகள் மூலமாக தனது அன்பை வெளிப்படுத்தினான்,,

ஒருநாள் கிருபா வீட்டுக்குள் நுழையும்போதே அப்பா என்று தத்தித்தத்தி ஓடிவந்து அனிதா இவன் காலை கட்டிக்கொள்ள, அவளை வாரியெடுத்து அவளின் குண்டு கன்னத்தில் முத்தமாறி பொழிந்தான் கிருபா., இன்றுதான் முதன்முதலாக அனிதா அப்பா என்று கூப்பிடுகிறாள்,, அந்த அழைப்பில் தனது உள்ளத்து கவலை எல்லாம் மறந்து போய்விட்டதாக உணர்ந்தான்

குழந்தையின் பின்னாலேயே வந்த ரஞ்சனா அவனருகில் வந்து “ அன்னம்மா பண்ணவேலை, காலையிலேர்ந்து அப்பா சொல்லு அப்பா சொல்லுன்னு கத்துக்குடுத்துட்டாங்க,என்னால எதுவும் மறுத்து பேசமுடியலை மன்னிச்சுடுங்க” என்றபடி அவனிடமிருந்து குழந்தையை வாங்க முயல

அவள் கையை பற்றிக்கொண்ட கிருபா “ அப்படின்னா நான் அனிதாவுக்கு என்ன உறவு ரஞ்சனா?” என்று நேரடியாக கேட்டான்அவன் கேள்விக்கு பதில் தெரியாதவள் போல அவன் முகத்தையே பார்க்க,,

“ நான் அனிதாவுக்கு நான்தான் அப்பான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன், அதுல உனக்கு ஏதாவது மாற்று கருத்து இருக்கா ரஞ்சனா?” என்று அவள் கண்களைப் பார்த்து கிருபா கேட்க

உடனடியாக இல்லையென்று அவள் தலையசைந்தது

“ சரி அப்படின்னா போய் எனக்கு ஒரு கப் காபி எடுத்துக்கிட்டு வா, நான் என் மககூட கொஞ்சம் பேசனும்” என்று உரிமையுடன் அவளுக்கு உத்தரவிட்டு விட்டு குழந்தையுடன் சோபாவில் அமர்ந்துகொண்டான்

See also  பொம்மலாட்டம் - பாகம் 11 - மான்சி தொடர் கதைகள்

ரஞ்சனா உள்ளே போனதும் அங்கே வந்த அன்னம்மாள் “ சின்னராசா உங்ககிட்ட ஒரு சமாச்சாரம் பேசனும்”என்று அனுமதி கேட்க

“ கேளுங்க அன்னம்மா என்ன விஷயம்” என்று கேட்டான் கிருபா

“ ஏன் ராசா, குழந்தையும் அப்பான்னு கூப்பிடுற அளவுக்கு வளர்ந்து போச்சு, இன்னும் இப்புடியே விட்டு வச்சா என்ன அர்த்தம்,, அம்மனி கழுத்துல ஒரு தாலியை கட்டுனா, இந்த குழந்தையாவது மத்தவங்க ஏச்சுப் பேச்சுல இருந்து தப்பிக்குமே ராசா” என்று கெஞ்சுவது போல அன்னம்மாள் சொல்ல…

கிருபாவின் நெற்றி சுருங்க,, புருவங்கள் முடிச்சிட “ அப்படின்னா இது வரைக்கும் யாருன்னா ரஞ்சனாவை ஏசினாங்களா அன்னம்மா” என்று கேட்டான்” அதையேன் கேட்கிற ராசா,, கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியாம அந்த புள்ள தவிக்கிற தவிப்பு ரொம்ப கொடுமை ராசா,, அம்மனி இதனாலேயே இப்பல்லாம் வீட்டைவிட்டு எதுக்குமே வெளிய வர்றதில்லை” என அன்னம்மா கவலையுடன் கூறினார்

சிந்தனையுடன் ” சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்” என்றான் கிருபா

ரஞ்சனா எடுத்து வந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு ” நான் கிளம்புறேன் ” என்று புறப்பட்டவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள் ரஞ்சனா

இவ்வளவு நேரம் சந்தோஷமாக குழந்தையை கொஞ்சியவனுக்கு இப்போது என்ன ஆனது என்று புரியாமலேயே அவனை வழியனுப்பி வைத்தாள்

காரை ஓட்டிக்கொண்டிருந்த கிருபாவின் மனதில் ஆயிரம் குழப்பங்கள்,, வசந்தியின் பேச்சு,, அன்னம்மா கூறிய செய்தி,, ரஞ்சனாவின் ஏமாற்றம் நிறைந்த பார்வை,, கள்ளமற்ற குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பு,, அத்தனையும் மாறிமாறி வந்து அவனை குழப்பியதுஇதையெல்லாம் விட பெரிய குழப்பமாக சத்யனின் எதிர் காலமும்,, சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தும் பயமுறுத்தியது,, என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தத்தளித்தான் கிருபா

” ஒரு பூவைப்போல மென்மையானது..

” ஒரு குழந்தை என்று நாம் உவமை கூறினாலும்..

” அதே குழந்தை ஒரு இரும்பு மனதையும்..

” உருகவைக்கும் சக்தி கொண்டது! 

” எவ்வளவு பெரிய மனிதனின் இதயத்தையும்..

” தன் கைகளில் ஏந்தி கபடமற்று விளையாடும்!

” நாம் தொடத்தொட குழந்தை சிரித்தாலும்..

” அந்த தொடுகையால் மலர்வது நமது இதயம்தான்! 

” நம் கவலைகளை மறக்க வைக்கும் நிகழ்காலம்தான் குழந்தை!

” நமக்கு சொர்க்கத்தின் சுகத்தை காட்டும் எதிர்காலம்தான் குழந்தை! 

error: read more !!