போதும் செண்டி மென்ட்ஸ் நீ முதல குழந்தைக்கு பால் கொடுத்துட்டியாடி என்றாள் அஞ்சலி ,இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடுத்தேன் என்றாள் சுவாதி ,நல்லது என்று சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு ம்ம் அப்புறம் இவனோட அப்பா கிட்ட சொன்னியா என அஞ்சலி கேட்டாள் ,
அக்கா இன்னைக்கு ஒரு நாள் ஆச்சும் என் குழந்தைய தவிர வேற எதையும் நினைக்காத மாதிரி இருக்க விடுங்க அக்கா ப்ளிஸ் என்றாள் சுவாதி ,ஓகே சந்தோசமா இரு ரெஸ்ட் எடு அண்ட் நான் இன்னைக்கு முழுக்க உன் கூட தான் இருப்பேன் நாளைக்கும் உன் கூட தான் என்றாள் அஞ்சலி ,தேங்க்ஸ் அக்கா என்றாள் சுவாதி ,இட்ஸ் ஓகேடி உனக்கு நான் இருக்காம யார் இருக்க போறா என்றாள் அஞ்சலி ,
அமெரிக்காவில் ஏண்டா குடிக்க சொன்னா இப்படியா குடிப்ப என்றார் அஜய் ,நான் என்ன பண்ண எனக்கு சோகம் குழப்பம் என்றான் விக்கி போதையில் ,சரி இப்ப நீ பேசுனா பேசி கிட்டே இருப்ப நான் நாளைக்கு காலைல வந்து பாக்குறேன் என்றார் அஜய் ,அண்ணே நாளைக்கு ஒரு வேல மறந்தாலும் மறந்துடுவேன் அதுனால இப்பவே என் முடிவ சொல்றேன் என்றான் விக்கி ,சரி சொல்லி தோல என்றான் அஜய் ,அண்ணே நான் முடிவு பண்ணிட்டேன் என்று மட்டும் சொல்லிட்டு அப்படியே நின்று கொண்டே தூங்கினான் ,
சரி அப்படியே யோசிச்சு கிட்டே இரு நான் போயிட்டு வரேன் என்றார் அஜய் ,அண்ணே அண்ணே இருங்க அண்ணே நான் சொல்றேன் என்று மறுபடியும் நிப்பாட்டினான் ,சரி சொல்லி தொலடா மூதெவி எனக்கு தூக்கம் வருது என்றான் அஜய் ,அண்ணே அந்த பொண்ணு கூடவெ இருக்க போறேன்னே என்றான் விக்கி ,எந்த பொண்ணு என்று கேட்கும் முன் விக்கி அந்த பொண்ணு அந்த பொண்ணு அவள நான் லவ் பண்றேன் லவ் பண்ணுவேன் பண்ணி கிட்டே இருப்பேன்னு சொல்லி கிட்டே தரைல டம்ம்னுன்னு போதைல விழுந்தான் ,
ரொம்ப நல்லது நான் போய்ட்டு வரேன் என்று அஜய் கிளம்பி தூங்க சென்றான் ,விக்கி அங்கயே புலம்பி கொண்டு இருந்தான் ,ஐ லவ் யு சுவாதி ஐ லவ் யு டியர் என்று தரைக்கு முத்தம் கொடுத்து கொண்டு இருந்தான் போதையில் ,மறு நாள் காலையில் பயங்கார ஹெங் ஓவரோடு தலை வலியுடன் எழுந்தான் .அஜய் வந்து கதவை தட்டினார் ,என்ன சார் ஹெங் ஓவருல இருக்கிங்களா என்றான் ,ஆமா என்றான் விக்கி ,
சரி சீக்கிரம் கிளம்பி வா டின்னர் சாப்பிட என்றான் அஜய் ,என்னது நான் நேத்து நைட்டு இருந்து இன்னைக்கு நைட் வரைக்கா தூங்கி இருக்கேன் என கேட்டான் விக்கி ,அட ஆமாங்க சார் சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க சாப்பிட என்றான் அஜய் .பின் விக்கி குளித்து விட்டு ஹோட்டலுக்கு சென்றான் ,
என்னன்னே இது ஹோட்டல் வித்தியாசமா இருக்கு என கேட்டான் விக்கி ,இது உனக்காக தான் சரக்கு கொடுக்காத ஹோட்டலா தேடி பிடிச்சு வந்து இருக்கேன் ஏன்னா நைட்டு நீ பண்ண அளும்புக்காக தான் இப்படி என்றான் அஜய் ,சரி விடுங்க அண்ணே ஏதோ ஒரு நாள் தெரியாம நடந்து போச்சு என்றான் விக்கி ,அப்படி எல்லாம் விட முடியாது நைட்டு நீ போதைல உலருனுத இப்ப சொல்லுடா தெளிவா என கேட்டார் அஜய் ,
நைட்டு நான் அப்படி என்ன உலருனேன் என்றான் விக்கி ,எனக்கு தெரியும்டா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று அஜய் சொல்லி கொண்டு இருக்க நான் அந்த பொண்ண லவ் பண்றேன் ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் என்றான் விக்கி ,டேய் அப்ப ஞாபகம் இருக்கா என அஜய் கேட்டான் ,எனக்கு எப்பவுமே ஒரு மாதிரி தான் இருக்கும் என்று சொல்லி சிரித்தான் ,
சரி எந்த பொண்ணுடா என கேட்டான் அஜய் ,அதான் ஒரு பொண்ணு என்னால கர்ப்பம் ஆச்சுன்னு சொன்னேன்னே அந்த பொண்ணு என்றான் விக்கி ,சரி ஓகே கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ தான் அந்த பொண்ணு மேல சந்தேகமா இருக்குன்னு சொன்ன என்றான் அஜய் ,நான் என்னைக்குமே அவள சந்தேக பட்டது இல்ல அவ வயித்துல வளருறது என் குழந்தை தான் ,ஒரு வேல அது என் குழந்தையா இல்லாட்டியும் நான் அவள தான் லவ் பண்றேன் அவ குழந்தைய இல்ல அதுனால அவ கிட்ட என் லவ்வ சொல்ல போறேன் என்றான் விக்கி ,
சூப்பர்டா இப்ப தாண்டா உன்னைய நினைச்சு ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு என்றான் அஜய் ,விக்கி சிரித்தான் ,சரி நேரத்த வேஸ்ட் பண்ணாத இப்பவே அவளுக்கு போன் பண்ணி உன் மனசுல இருக்குறத சொல்லு என்றான் அஜய் ,இல்லன்னே நான் அவ கிட்ட லவ் சொல்லும் போது அவ கண்ண பாத்து சொல்லணும் அப்புறம் இந்த இங்கிலிஸ் படத்துல வர மாதிரி லிப் கிஸ் அடிச்சு கிட்டே சொல்லணும் என்றான் விக்கி ,
ம்ம் ரொம்ப ரோமேண்டிக்கா தான் போற என்று அஜய் சொல்லி கொண்டு இருக்கும் போது விக்கிக்கு போன் வந்தது .விக்கி யார் அது என்று எடுத்தான் .ஹலோ பிளை பாய் என்று ஒரு ஆண் குரல் அது எங்கயோ கேட்டது போலவும் இருந்தது ..ஹலோ யாரு என்றான் விக்கி ,எப்படி என் குரல் எல்லாம் ஞாபகம் இருக்கும் நான் தானே உங்களுக்கு பிடிக்காத ஒரு ஆள் என்று எதிர்முனையில் சொல்ல விக்கி அது யார்ரென்று யோசித்து சொன்னான் டேவிட் ? என கேட்டான் ,
ம்ம் அதே டேவிட் தான் அதே டேவிட் தான் எப்படி சார் இருக்கீங்க என்று அவன் போதையோடு பேச விக்கி ஒரு மாதிரி ஆனான் அப்புறம் வாழ்த்துக்கள் அப்பாவாக போரிங்க்லாமே என்றான் டேவிட் போதையில் ,டேய் இல்லடா நானே உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா எப்படின்னு என்று விக்கி சொல்லும் முன் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்டா ஒண்ணுமே சொல்ல வேணாம் .நான் கூட நைட் முழுக்க உக்காந்து யோசிச்சேன் பேசாம உன் கிட்ட அந்த முண்ட வயித்துல வளருறது என் குழந்தை அப்படின்னு சொல்லி உன் நிம்மதிய கெடுக்கலாம்னு நினைச்சேன் ,
ஆனா அப்படி பண்ணா உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் அது மட்டும் இல்லாம கண்டவன் ஸ்பெர்ம்ல வந்த குழந்தைய எதுக்கு என் குழந்தைன்னு சொல்லணும் அதுனால நீ நல்லா இருன்னு மட்டும் சொல்ல தான் போன் அடிச்சேன் .அப்புறம் என் வீட்டுக்குள்ள உன்னைய விட மாட்டேன் இனி மேல் ஏன்னா எனக்குன்னு ஒருத்தி இருக்கா அவளையும் நீ லவட்டி கிட்டு போயிடுவ அதே மாதிரி மணி வீட்டுக்கும் போகாத பாவம் நான் ஆச்சும் நீ பண்ண தொரகம் தாங்கி கிட்டேன் ,
ஆனா நீ ஒரு வேல அவன் பொண்டாட்டிய ஐயோ அய்யோ பாவம் அப்புறம் அவன் தற்கொலையே பண்ணி கிடுவான் .டேய் அசிங்கமா பேசாதடா என்றான் விக்கி ,அசிங்காமா நடந்து கிறவேன் கிட்ட அசிங்காமா பேசாம பின்ன எப்படி பேச சொல்ற என்றான் டேவிட் ,டேய் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சு கோடா
Indha storiyoda balance elluthuvingala maattingalla